என் மலர்
புதுச்சேரி

கோப்பு படம்.
நிதி நிர்வாகத்தை செம்மைப்படுத்த வேண்டும்- தி.மு.க. கோரிக்கை
- நடப்பு நிதியாண்டில் 5 மாதம் கழித்துத்தான் முழுமையான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. நடப்பு நிதியாண்டில் மீதியுள்ளது. அரசு நிர்வாகத்தில் கடைசி 2 மாதங்கள் ஒன்றுமே செலவு செய்ய மாட்டார்கள்.
- எனவே நிதித்துறை பொறுப்பு வகிக்கும் முதல்-அமைச்சர் ரங்கசாமி அரசின் நிதி நிலை குறித்து வெள்ளை அறிக்கையை வெளியிட வேண்டும்.
புதுச்சேரி:
புதுவை எதிர்கட்சி தலைவர் சிவா எம்.எல்.ஏ. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியி–ருப்பதாவது:-
நடப்பு நிதியாண்டில் 5 மாதம் கழித்துத்தான் முழுமையான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. நடப்பு நிதியாண்டில் மீதியுள்ளது. அரசு நிர்வாகத்தில் கடைசி 2 மாதங்கள் ஒன்றுமே செலவு செய்ய மாட்டார்கள். இப்படி கணக்கிட்டு பார்த்தால் நடப்பு நிதியாண்டில் மீதியுள்ளது இன்னும் 2 மாதங்கள்தான் ஆனால் பல்வேறு அரசுத்துறைகளில் பட்ஜெட்டில் ஒதுக்கி யபடி நிதி செலவு செய்யப்படவில்லை.
ஆதிதிராவிடர் நலத்துறையில் இதுவரை 23 சதவீதம் மட்டுமே செலவு செய்யப்பட்டுள்ளது. அனைத்து துறைகளிலும் அறிவித்த திட்டங்கள் எதுவும் செயல்படுத்தப்படவில்லை.
நிதி நிர்வாகத்தில் புதுவையை ஆளும் என்.ஆர்.காங். பா.ஜனதா கூட்டணி அரசு முழு தோல்வி அடைந்து விட்டதாகவே தெரிகிறது. எனவே நிதித்துறை பொறுப்பு வகிக்கும் முதல்-அமைச்சர் ரங்கசாமி அரசின் நிதி நிலை குறித்து வெள்ளை அறிக்கையை வெளியிட வேண்டும். அதாவது பட்ஜெட்டில் அறிவித்தபடி எவ்வளவு நிதியை மாநில அரசு திரட்டியுள்ளது, மத்திய அரசு எவ்வளவு நிதி வழங்கியுள்ளது,
அரசுத்துறைகள் ஒவ்வொன்றிலும் பட்ஜெட்டில் அறிவித்த திட்டங்கள் என்னென்ன செய்யப்பட்டுள்ளது? ஒதுக்கப்பட்ட நிதியில் எத்தனை சதவீதம் செலவிடப்பட்டுள்ளது? என்பது குறித்த விவரங்களை வெளியிட வேண்டும்.
வல்லுனர் குழுவை அமைத்து ஆலோசனை பெற்று நிதி நிர்வாகத்தை செம்மைப்படுத்தி பட்ஜெட்டில் அறிவித்த அனைத்து திட்டங்களை நிறைவேற்றுவதுடன், 100 சதவீத நிதியையும் திரட்டி செலவிட வேண்டும்.
இவ்வாறு சிவா எம்.எல்.ஏ. அறிக்கையில் கூறியுள்ளார்.






