என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    • திருக்கனூர் லயன்ஸ் சங்கம் சார்பில் மண்ணாடிப்பட்டு, திருக்கனூர், கூனிச்சம்பட்டு பள்ளி மாணவர்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி அந்தந்தபள்ளி வளாகங்களில் நடந்தது.
    • இந்த விளை யாட்டு உபகரணங்களை பயன்படுத்திமாணவர்கள் கல்வி மட்டுமல்லாது உடல் ஆரோக்கியத்தையும் பேணி காக்க வேண்டும்.என லயன்ஸ் சங்க நிர்வாகிகள் கூறினர்.

    புதுச்சேரி:

    திருக்கனூர் லயன்ஸ் சங்கம் சார்பில் மண்ணாடிப்பட்டு, திருக்கனூர், கூனிச்சம்பட்டு பள்ளி மாணவர்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி அந்தந்தபள்ளி வளாகங்களில் நடந்தது.

    நிகழ்ச்சிக்கு திருக்கனூர் லயன்ஸ் சங்க தலைவர் தமிழ்மணி, செயலாளர் அசாருதீன், பொருளாளர் இளங்கோவன் ஆகியோர் தலைமைதாங்கினர். மாவட்ட தலைவர் ஜானகிராமன், பரந்தாமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    நிகழ்ச்சியில் ரூ.75 ஆயிரம் மதிப்புள்ள கிரிக்கெட் மட்டை , கேரம் போர்டு, இறகுப்பந்து உள்ளிட்ட பல்வேறு விளையாட்டு உபகரணங்கள் பள்ளி மாணவர்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டன.

    இந்த விளை யாட்டு உபகரணங்களை பயன்படுத்திமாணவர்கள் கல்வி மட்டுமல்லாது உடல் ஆரோக்கியத்தையும் பேணி காக்க வேண்டும்.என லயன்ஸ் சங்க நிர்வாகிகள் கூறினர்.

    நிகழ்ச்சியில் திருக்கனூர் லயன்ஸ் சங்க நிர்வாகிகள்சையது, சேகர் செல்வகுமார், சலீம், லட்சுமணன், பள்ளி ஆசிரியர்கள், மாணவ-மாணவிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • இஸ்ரோ முன்னாள் இயக்குனர் மயில்சாமி அண்ணாதுரை புதுவை வந்தார். இங்குள்ள அமலோற்பவம் மேல்நிலைப்பள்ளி மற்றும் லூர்து அகாடமி மாணவர்களுடன் பள்ளி வளாகத்தில் உள்ள கருத்தரங்க அறையில் கலந்துரையாடினார்.
    • விழாவில் மயில்சாமி அண்ணாதுரைக்கு, அமலோற்பவம் மேல்நிலைப்பள்ளி, லூர்து அகாடமி கல்வி நிறுவனங்களின் தாளாளரும், முதுநிலை முதல்வருமான லூர்துசாமி சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.

    புதுச்சேரி:

    இஸ்ரோ முன்னாள் இயக்குனர் மயில்சாமி அண்ணாதுரை புதுவை வந்தார். இங்குள்ள அமலோற்பவம் மேல்நிலைப்பள்ளி மற்றும் லூர்து அகாடமி மாணவர்களுடன் பள்ளி வளாகத்தில் உள்ள கருத்தரங்க அறையில் கலந்துரையாடினார்.

    அப்போது அவர் பேசுகையில் 'இயற்கையில் நடக்கும் ஒவ்வொரு நிகழ்வுக்கும் ஒரு காரணம் உண்டு என்பதை கவனித்து அந்த காரணத்தை அறியவேண்டும். இயற்கையின் ஆயிரக்கணக்கான அதிசயம் தொடர்பாக பல்லாயிரம் வினாக்களுக்கு விடை காணப்படவில்லை . மாணவர்கள் இது தொடர்பாக ஆராய்ந்து ஏன்? எதற்கு? எப்படி? என்பது போன்ற அறிவார்ந்த வினாக்களை எழுப்ப வேண்டும். இதுபோன்ற மன நிலை மட்டுமே அவர்களின் அறிவை வார்த்தெடுத்து புதுப்புது கண்டுபிடிப்புகளை நோக்கி உந்தித்தள்ளும் என்றார். தொடர்ந்து மாணவர்களின் பல்வேறு கேள்விகளுக்கு விடையளித்தார்.

    விழாவில் மயில்சாமி அண்ணாதுரைக்கு, அமலோற்பவம் மேல்நிலைப்பள்ளி, லூர்து அகாடமி கல்வி நிறுவனங்களின் தாளாளரும், முதுநிலை முதல்வருமான லூர்துசாமி சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.

    • புதுவை ஆதித்யாஸ் இன்ஸ்டிடியூட் ஆப் ஓட்டல் மேனேஜ் மெண்டில் கிறிஸ்துேஸ் கேக் தயாரிப்பதற்காக பழங்கள்ஊற வைக்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது.
    • இந்த ஊறலானது கிறிஸ்துமஸ் கேக் தயாரிக்கும் போது சேர்க்கப்படுகிறது.

    புதுச்சேரி:

    புதுவை ஆதித்யாஸ் இன்ஸ்டிடியூட் ஆப் ஓட்டல் மேனேஜ் மெண்டில் கிறிஸ்துமஸ் கேக் தயாரிப்பதற்காக பழங்கள்ஊற வைக்கும் நிகழ்ச்சி நடந்தது.

    நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் ஸ்ரீதர் தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில் துணை முதல்வர் பூங்குழலி ஸ்ரீதர் உள்பட பலர் கலந்து கொண்டனர். தொடர்ந்து உலர்ந்த பழங்கள் மற்றும் நட்ஸ் வகைகள் ஒயினில் கலந்து ஊறவைக்கப்பட்டன.

    இந்த ஊறலானது கிறிஸ்துமஸ் கேக் தயாரிக்கும் போது சேர்க்கப்படுகிறது.

    இவ்வாறு தயாரிக்கபடும் கேக் சிறப்பாக வரும்போது அந்த ஆண்டும் சிறப்பாக அமையும் என்று கூறப்படுகிறது.

    • மத்திய மின் அமைச்சக ஒருங்கிணைப்புடன், புதுவை அரசின் புதுப்பிக்கவல்ல எரிசக்தி முகமை மற்றும் மின்துறை ஒருங்கிணைந்து மின்சார வாகன கண்காட்சியை நடத்துகிறது.
    • வங்கிகளும், நிதி நிறுவனங்களும் கண்காட்சியில் பங்கேற்று அரங்குகள் அமைத்துள்ளன.

    புதுச்சேரி:

    மத்திய மின் அமைச்சக ஒருங்கிணைப்புடன், புதுவை அரசின் புதுப்பிக்கவல்ல எரிசக்தி முகமை மற்றும் மின்துறை ஒருங்கிணைந்து மின்சார வாகன கண்காட்சியை நடத்துகிறது.

    மின்சார வாகனங்களின் பயன்பாடை ஊக்குவிக்கும் வகையில் 5 நாட்கள் நடைபெறும் கண்காட்சியின் தொடக்க விழா  காமராஜர் மணி மண்டபத்தில் நடந்தது. விழாவுக்கு முதல்- அமைச்சர் ரங்கசாமி தலைமை வகித்து குத்து விளக்கேற்றி கண்காட்சியை தொடங்கி வைத்தார்.

    விழாவில் சபாநாயகர் ஏம்பலம் செல்வம், அமைச்சர் நமச்சிவாயம், செல்வகணபதி எம்.பி., கல்யாணசுந்தரம் எம்.எல்.ஏ., போக்குவரத்து செயலர் முத்தம்மா, மின்துறை செயலர் அருண், மின்துணை கண்காணிப்பு பொறியாளர் சண்முகம், எரிசக்தி முகமை தொழில்நுட்ப உதவியாளர் குமரேன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    இந்த கண்காட்சி  தொடங்கி வருகிற 4-ந் தேதி வரை நடக்கிறது. கண்காட்சியில் 25-க்கும் மேற்பட்ட இரு, 3 சக்கர வாகன விற்பனையாளர்கள், கார் டீலர்கள் தங்கள் தயாரிப்புகளை பொதுமக்கள் பார்வைக்காக காட்சிப் படுத்தியிருந்தனர். வங்கிகளும், நிதி நிறுவனங்களும் கண்காட்சியில் பங்கேற்று அரங்குகள் அமைத்துள்ளன.

    கண்காட்சியை தொடங்கி வைத்த முதல்-அமைச்சர் ரங்கசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-

    மின்சார வாகன கண்காட்சியில் 20 நிறுவனங்கள் பங்கேற்றுள்ளன. சுற்றுச்சூழல் பாதுகாப்பு, புகையில்லாத சூழலை இந்த வாகனங்கள் உருவாக்கும். சுற்றுலா நகரமாக உருவாகும் புதுவையில் புகையில்லாத நிலையை உருவாக்க வேண்டும்.

    மத்திய அரசு வழிகாட்டுதலின்படி மின் வாகன கண்காட்சியை நடத்துகிறோம். இந்த வாகனங்களில் பராமரிப்பு செலவு குறைவு. குறைந்த மெகாவாட்டில் அதிக தூரம் செல்லும். பாதுகாப்பான உணர்வு இருக்கும். புதுவையில் மின் வாகன விற்பனை அதிகரித்துள்ளது.

    இதை மேலும் அதிகரிக்க வங்கிகள் மூலம் எளிதாக கடன் வாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது. மக்கள் மின் வாகனங்களை பயன்படுத்தி புதுவையை புகையில்லாத நகரமாக மாற்ற பொதுமக்கள் முன்வர வேண்டும்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • புதுவை பிரதேச காங்கிரஸ் நிர்வாகிகள் கூட்டம் 45 அடி சாலையிலுள்ள பிரின்ஸ் அரங்கில் நடந்தது. காங்கிரஸ் தலைவர் ஏ.வி. சுப்பிரமணியன் தலைமை வகித்தார்.
    • கூட்டத்தில் காங்கிரசார் பேசும்போது, புதுவையில் முதன்மையான கட்சி காங்கிரஸ்தான். சமீப காலமாக கூட்டணி க்கட்சியான தி.மு.க.வால் காங்கிரஸ் பின்னுக்குத் தள்ளப்படுகிறது.

    புதுச்சேரி:

    புதுவை பிரதேச காங்கிரஸ் நிர்வாகிகள் கூட்டம் 45 அடி சாலையிலுள்ள பிரின்ஸ் அரங்கில் நடந்தது.

    காங்கிரஸ் தலைவர் ஏ.வி. சுப்பிரமணியன் தலைமை வகித்தார். முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி, வைத்திலிங்கம் எம்.பி., வைத்தியநாதன் எம்.எல்.ஏ., முன்னாள் அமைச்சர்கள் கந்தசாமி, ஷாஜகான், கமலக்கண்ணன், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் அனந்தராமன், கார்த்திகேயன், நீல கங்காதரன், காங்கிரஸ் சீனியர் துணைத்தலைவர் தேவதாஸ், பொதுச்செ யலர்கள் சங்கர், கருணாநிதி, மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர்.

    கூட்டத்தில் காங்கிரசார் பேசும்போது, புதுவையில் முதன்மையான கட்சி காங்கிரஸ்தான். சமீப காலமாக கூட்டணி க்கட்சியான தி.மு.க.வால் காங்கிரஸ் பின்னுக்குத் தள்ளப்படுகிறது. இதை ஏற்கக்கூடாது. நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில்கூட வாக்குவங்கி அடிப்படையில் காங்கிரஸ்தான் முதலிடத்தில் இருக்கிறது. இது கூட்டணிக்கட்சியினரை உணர செய்ய வேண்டும்" என்று பேசினர்.

    தொடர்ந்து முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி பேசியதாவது:-

    காங்கிரஸ் ஆட்சி காலத்தில் என்ன நடந்ததோ, அதுதான் ரங்கசாமி ஆட்சியிலும் நடக்கிறது. இதில் பெரிய மாற்றம் ஏதுமில்லை. ரங்கசாமி ஆட்சியில் ஊழல் தலைவிரித்து ஆடுகிறது. இதை மக்களிடம் காங்கிரசார் கொண்டு போய் சேர்க்கவேண்டும். புதுவையில் காங்கிரஸ்தான் முதன்மையான கட்சி. இதில் மாற்றுக்கருத்து ஏதுமில்லை. சமீப காலமாக மதசார்பற்ற கூட்டணி சார்பில் நடக்கும் போராட்டங்களில் தி.மு.க.வினர்தான் தலைமை என்று செய்தி வெளியாகிறது.

    போராட்டத்துக்கு காங்கிரஸ்தான் தலைமை தாங்க வேண்டும்.இல்லாவிட்டால் நாம் பங்கேற்க வேண்டிய அவசியமில்லை. மாதந்தோறும் புதுவையில் நிலவும் பிரச்சினைகளை முன்வைத்து போராட்டம் நடத்தவேண்டும். இதற்காக காங்கிரஸ் கட்சியில் குழு அமைக்க வேண்டும். கூட்டணிக்கட்சி ஒத்துழைக்காவிட்டால் காங்கிரஸ் சார்பில் தனித்து போராட்டங்களை முன் எடுக்க வேண்டும்."

    இவ்வாறு நாராயணசாமி பேசினார். 

    • ஆண்டுதோறும் டிசம்பர் 3-ந் தேதி உலக மாற்றுத்திறனாளிகள் தின விழா கொண்டாடப் படுகிறது. புதுவை சமூக நலதுறை சார்பில் இந்த ஆண்டு நடைபெறும்.
    • விருதுக்கு உரியவர்களை இறுதி தேர்வு செய்யும் நிகழ்வு அமைச்சர் தேனீ.ஜெயக்குமார் தலைமையில் தட்டாஞ்சாவடியில் நடந்தது.

    புதுச்சேரி:

    ஆண்டுதோறும் டிசம்பர் 3-ந் தேதி உலக மாற்றுத்திறனாளிகள் தின விழா கொண்டாடப் படுகிறது.

    புதுவை சமூக நலதுறை சார்பில் இந்த ஆண்டு நடைபெறும் விழாவில் மாற்றுத்திறனாளி சாதனையாளர்கள், மாற்றுத் திறனாளிகளுக்கு சேவை செய்யும் சாதனை யாளர்கள், மாற்றுத் திறனாளிகளுக்கு வேலை வாய்ப்பு அளிக்கும் தொழிற்சாலைகள், சிறப்பாக சுயதொழில் செய்யும் மாற்றுத்திறனாளிகள், அரசு துறையில் சிறப்பாக பணிபுரியும் மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு விருதுகள் வழங்கப்படுகிறது.

    விருதுக்கு உரியவர்களை இறுதி தேர்வு செய்யும் நிகழ்வு அமைச்சர் தேனீ.ஜெயக்குமார் தலைமையில் தட்டாஞ்சாவடியில் நடந்தது. இதில் சமூகநல துறை செயலாளர் உதயகுமார், இயக்குனர் பத்மாவதி, துணை இயக்குனர், மாற்றுத்திறனாளிகள் பிரதிநிதி, மருத்துவ அதிகாரிகள் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    • ஊசுடு தொகுதிக்குட்பட்ட துத்திப்பட்டு கிராமத்தில் அமைந்துள்ள, அரசு தொடக்கப்பள்ளி மதில் சுவரானது, ஒரு பக்கத்தில் விரிசல் ஏற்பட்டு மற்றொரு பக்கம் சுவர் இடிந்து விழும் தருவாயில் உள்ளதால், பள்ளிக்கு புதியதாக மதில் சுவர் அமைத்து தர வேண்டும் என்று பொது மக்கள் வலியுறுத்தி வந்தனர்.
    • அமைச்சரின் தீவிர முயற்சியால் புதிய மதில் சுவர் அமைக்கும் பணியானது ரூ.11.70 லட்சம் மதிப்பீட்டில் பூமி பூஜை செய்து தொடங்கி வைக்கப்பட்டது.

    புதுச்சேரி:

    ஊசுடு தொகுதிக்குட்பட்ட துத்திப்பட்டு கிராமத்தில் அமைந்துள்ள, அரசு தொடக்கப்பள்ளி மதில் சுவரானது, ஒரு பக்கத்தில் விரிசல் ஏற்பட்டு மற்றொரு பக்கம் சுவர் இடிந்து விழும் தருவாயில் உள்ளதால், பள்ளிக்கு புதியதாக மதில் சுவர் அமைத்து தர வேண்டும் என்று பொது மக்கள் வலியுறுத்தி வந்தனர்.

    இது குறித்து அப்பள்ளி தலைமை ஆசிரியரும் பொதுமக்களும், ஊசுடு தொகுதி எம்.எல்.ஏ.வும், குடிமை பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் விவகாரங்கள் துறை அமைச்சருமான சாய்.ஜெ. சரவணன்குமாரை நேரில் சந்தித்து கோரிக்கை வைத்தனர்.

    அமைச்சரின் தீவிர முயற்சியால் புதிய மதில் சுவர் அமைக்கும் பணியானது ரூ.11.70 லட்சம் மதிப்பீட்டில் பூமி பூஜை செய்து தொடங்கி வைக்கப்பட்டது, இந்நிகழ்ச்சியில் பொதுப்ப ணித்துறை சிறப்பு கட்டிட கோட்டம் செயற்பொ றியாளர் மாணிக்கவாசகம், கல்வித்துறை முதன்மை அதிகாரி தனச்செல்வன் நேரு, கல்வித்துறை துணை ஆய்வாளர் (வட்டம்-5) ராபர்ட் கென்னடி, பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் கஜலட்சுமி, இளநிலை பொறியாளர் சுந்தர்ராஜு, பள்ளி தலைமை ஆசிரியர் பாலமுருகன், பள்ளி ஆசிரியர்கள், கட்டிட ஒப்பந்ததாரர் சபாஸ்டின் மார்ஷல், ஊர் பொதுமக்கள், பா.ஜனதா தொகுதி தலைவர் சாய் தியாகராஜன், கட்சி நிர்வாகிகளும் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.

    • லட்சுமியின் உடல் மீது உப்பு, மஞ்சள், திருநீறு கொட்டப்பட்டது.
    • மண் கொட்டப்பட்டு லட்சுமியின் உடல் அடக்கம் செய்யப்பட்டது. ஆயிரக்கணக்கான மக்கள் கண்ணீருடன் லட்சுமிக்கு பிரியா விடையளித்தனர்.

    புதுச்சேரி:

    புதுவையில் பிரசித்தி பெற்ற மணக்குள விநாயகர் கோவிலில் யானை லட்சுமி இருந்தது.

    27 ஆண்டுகளாக கோவிலில் இருந்த யானை லட்சுமி புதுவை மக்கள், கோவிலுக்கு வருகிற பக்தர்கள், சுற்றுலா பயணிகள், குழந்தைகளின் அன்பை பெற்றிருந்தது. கடந்த 2 வாரமாக யானை லட்சுமிக்கு ஓய்வு அளிக்கப்பட்டிருந்தது. ஆனாலும் வழக்கம்போல காலை நேரத்தில் யானைப்பாகன் லட்சுமியை நடை பயிற்சிக்கு அழைத்து செல்வார்.

    நேற்று காலை நடைபயிற்சிக்கு சென்றபோது கல்வே கல்லூரி அருகே திடீரென யானை லட்சுமி மயங்கி விழுந்து இறந்தது. யானை திடீரென மரணமடைந்தது புதுவை மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும்,சோகத்தையும் ஏற்படுத்தியது.

    யானை இறந்த தகவலறிந்த ஆயிரக்கணக்கான மக்கள் அங்கு திரண்டனர். அங்கேயே மாலை அணிவித்தனர், கண்ணீர் விட்டு கதறியழுதனர்.

    பின்னர் யானை கிரேன் மூலம் திறந்த லாரியில் ஏற்றப்பட்டு மணக்குளவிநாயகர் கோவில் முன்பு பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. இங்கு கவர்னர் தமிழிசை, அரசியல்கட்சி தலைவர்கள், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், புதுவையின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த மக்கள் நீண்ட வரிசையில் நின்று மாலை அணிவித்து, மலர்த்தூவி கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.

    மாலை 3 மணியளவில் யானை லட்சுமியின் இறுதி ஊர்வலம் நடந்தது. ஊர்வலம் நேருவீதி, அண்ணாசாலை, மறைமலை அடிகள் சாலை வழியாக வனத்துறை அலுவலகத்தின் பின்புறம் உள்ள காளத்தீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான இடத்துக்கு கொண்டுவரப்பட்டது. ஊர்வலத்தில் ஆயிரக்கணக்கான ஆண், பெண் பக்தர்கள் பங்கேற்றனர்.

    வழிநெடுகிலும் லட்சுமிக்கு பிரியாவிடை தரும் வகையில் மக்கள் நின்று மலர்களை தூவி அஞ்சலி செலுத்தினர். ஊர்வலத்துக்கு முன்பு சிவவாத்தியங்கள் முழங்க உடல் கொண்டு செல்லப்பட்டது.

    அங்கு தோண்டப்பட்டிருந்த பள்ளத்தில் ராட்சத எந்திரங்கள் மூலம் லட்சுமியின் உடல் வைக்கப்பட்டது. அங்கு மணக்குள விநாயகர் அர்ச்சகர்கள் கஜபூஜை செய்தனர். பின்னர் லட்சுமியின் உடற்கூராய்வு நடத்தப்பட்டது. 15-க்கும் மேற்பட்ட டாக்டர்கள் உடற்கூராய்வு செய்தனர். 2 மணி நேரம் இந்த உடற்கூராய்வு நடந்தது. உடற்கூராய்வின் போது லட்சுமியின் தந்தம் வெட்டி எடுக்கப்பட்டு, வனத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டது.

    இதைத்தொடர்ந்து லட்சுமியின் உடல் மீது உப்பு, மஞ்சள், திருநீறு கொட்டப்பட்டது. பின்னர் மண் கொட்டப்பட்டு லட்சுமியின் உடல் அடக்கம் செய்யப்பட்டது. ஆயிரக்கணக்கான மக்கள் கண்ணீருடன் லட்சுமிக்கு பிரியா விடையளித்தனர்.

    இன்று லட்சுமியின் நினைவிடத்தில் மணக்குள விநாயகர் கோவில் அர்ச்சகர்கள் வந்து பால் ஊற்றி, மலர்தூவி பூஜை செய்தனர். இதை தொடர்ந்து காலை முதல் பொதுமக்கள் லட்சுமியின் நினைவிடத்தில் பால் ஊற்றி, மலர்தூவி லட்சுமிக்கு பிடித்த உணவுப்பொருட்களை வைத்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

    • புதுவை கருவடி க்குப்பத்தில் நரிக்குறவர் மற்றும் ஒட்டர் பழங்குடியின மக்களுக்கு தன்னார்வ தொண்டு நிறுவனம் சார்பில் இலவச மருத்துவ முகாம் நடந்தது.
    • முகாமிற்கான ஏற்பாடு களை தன்னார்வ தொண்டு நிறுவன பொறுப்பாளர்கள் அனிதா மற்றும் நந்தினி வேல்முருகன் ஆகியோர் செய்திருந்தனர்.

    புதுச்சேரி:

    புதுவை கருவடி க்குப்பத்தில் நரிக்குறவர் மற்றும் ஒட்டர் பழங்குடியின மக்களுக்கு தன்னார்வ தொண்டு நிறுவனம் சார்பில் இலவச மருத்துவ முகாம் நடந்தது.

    முகாமை கல்யாண சுந்தரம் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார். பிம்ஸ் மருத்துவமனையை சேர்ந்த டாக்டர்கள் குழுவினர் பழங்குடியின மக்களுக்கு இலவச மருத்துவ பரிசோதனைகளை செய்து மருந்துகள் வழங்கினர்.

    முகாமிற்கான ஏற்பாடுகளை தன்னார்வ தொண்டு நிறுவன பொறுப்பாளர்கள் அனிதா மற்றும் நந்தினி வேல்முருகன் ஆகியோர் செய்திருந்தனர்.முகாமில் 200-க்கும் மேற்பட்ட பழங்குடி மக்கள் பயனடைந்தனர்.

    • உப்பளம் தொகுதிக்கு உட்பட்ட இந்திரா காந்தி விளையாட்டு அரங்கில் புதுவை அரசு சமூக நலத்துறை சார்பில் மாநில அளவிலான மாற்றுத்திறனாளி களுக்கான விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றது.
    • 3 சக்கர மோட்டார் சைக்கிள் பந்தயம், ஓட்டப்பந்தயம், பந்து எறிதல், கிரிக்கெட் உள்ளிட்ட விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டன.

    புதுச்சேரி:

    உப்பளம் தொகுதிக்கு உட்பட்ட இந்திரா காந்தி விளையாட்டு அரங்கில் புதுவை அரசு சமூக நலத்துறை சார்பில் மாநில அளவிலான மாற்றுத்திற னாளி களுக்கான விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றது.

    இதனை உப்பளம் தொகுதி எம்.எல்.ஏ. அனிபால் கென்னடி தொடங்கி வைத்தார். நலத்துறை செயலர் உதயகுமார், இயக்குனர் பத்மாவதி மற்றும் பலர் இதில் கலந்து கொண்டனர். பார்வையற்றோர், செவித்திறன் குறையுடையோர், கை கால் பாதிக்கப்பட்டோர் ஆகியோருக்கு தனித்தனியாக விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டது.

    3 சக்கர மோட்டார் சைக்கிள் பந்தயம், ஓட்டப்பந்தயம், பந்து எறிதல், கிரிக்கெட் உள்ளிட்ட விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் 100-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

    • மத்திய வேளாண் மற்றும் விவசாயநலத்துறை அமைச்சகம் பயிர் காப்பீட்டு திட்டத்தில் முகாம் நடத்த அறிவுறுத்தியுள்ளது.
    • இந்த முகாமின் நோக்கம் பயிர்காப்பீட்டு திட்டத்தில் எனது காப்பீடு என் கையில் என்ற குறிக்கோளுடன் விவசாயிகளுக்குபயிர் காப்பீடு திட்டத்தை விவரித்தல், சம்பா பருவத்தில் நெல் சாகுபடி செய்த விவசாயிகள் காப்பீடு செய்ய அறிவுறுத்தல்,

    புதுச்சேரி:

    மத்திய வேளாண் மற்றும் விவசாயநலத்துறை அமைச்சகம் பயிர் காப்பீட்டு திட்டத்தில் முகாம் நடத்த அறிவுறுத்தியுள்ளது.

    இதன்படி நாடு முழுவதும் பயிர் காப்பீட்டு வாரம் என்ற தலைப்பில்  முதல் 7-ந் தேதி வரை சிறப்பு முகாம் நடத்தி விவசாயிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த திட்டமிட ப்பட்டுள்ளது.

    புதுவையில் கரிக்கலாம்பாக்கம் லட்சுமி திருமண மண்டபத்தில் பயிர் காப்பீடு திட்ட சிறப்பு முகாம்  தொடங்கியது.

    முகாமை வேளா ண்துறை அமைச்சர் தேனீ.ஜெயக்குமார் தொடங்கி வைத்தார். இந்த சிறப்பு முகாம் உறுவையாறு, ராமநாதபுரம், 3-ந் தேதி பண்டசோழநல்லூர், திருக்காஞ்சி, 4-ந் தேதி டி.என்.பாளையம், மண்ணாடிப்பட்டு, 5-ந் தேதி அரங்கனூர் , அரியூர், 6-ந் தேதி மணமேடு, சந்தைபுதுக்குப்பம், 7-ந் தேதி உச்சிமேடு, மதகடிப்பட்டு ஆகிய இடங்களில் நடக்கிறது.

    இந்த முகாமின் நோக்கம் பயிர்காப்பீட்டு திட்டத்தில் எனது காப்பீடு என் கையில் என்ற குறிக்கோளுடன் விவசாயிகளுக்குபயிர் காப்பீடு திட்டத்தை விவரித்தல், சம்பா பருவத்தில் நெல் சாகுபடி செய்த விவசாயிகள் காப்பீடு செய்ய அறிவுறுத்தல், சான்றிதழ் வழங்குதல், பயிர் காப்பீடு செயலிபதிவிறக்கம், பயன்பாடு உட்பட பல்வேறு சேவைகள் அளிக்கப்படுகிறது.

    • புதுவை மதகடிபட்டு மணக்குள விநாயகர் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி (எம்.ஐ.டி) கல்லூரியில், முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு தடகள விளையாட்டு போட்டி 2 நாட்கள் நடைபெற்றது.
    • இந்த போட்டியில் கல்லூரியின் அனைத்து துறையை சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.

    புதுச்சேரி:

    புதுவை மதகடிபட்டு மணக்குள விநாயகர் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி (எம்.ஐ.டி) கல்லூரியில், முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு தடகள விளையாட்டு போட்டி 2 நாட்கள் நடைபெற்றது.

    மணக்குள விநாயகர் கல்வி அறக்கட்டளையின் தலைவரும், நிர்வாக இயக்குனருமான தனசேகரன், துணைத் தலைவர் சுகுமாறன், செயலாளர் டாக்டர் நாராயணசாமி ஆகியோர் நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கினார்கள்.

    மணக்குள விநாயகர் தொழில்நுட்பக் கல்லூரி முதல்வர் மலர்கண் வரவேற்புரையாற்றினார். இந்த போட்டியில் கல்லூரியின் அனைத்து துறையை சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.

    இதில் முதல் இடத்தை மின்னணு மற்றும் தகவல் தொடர்பு பொறியியல் துறையின் மாணவர்கள் தட்டி சென்றனர். வெற்றிபெற்ற அணிகளுக்கு கல்லூரியின் முதல்வர் மலர்கண் பரிசுக்கோப்பை மற்றும் சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.

    பரிசளிப்பு நிகழ்ச்சியில் வேலை வாய்ப்பு துறை அதிகாரி ஜெயக்குமார், முதலாம் ஆண்டு துறை தலைவர்கள் டாக்டர் பூங்குழலி, சுமித்ரா, மற்றும் பலர் கலந்துகொண்டனர். இந்நிகழ்ச்சகான ஏற்பாடுகளை உடற்கல்வி துறை இயக்குனர் மோகன் செய்திருந்தார்.

    ×