என் மலர்
புதுச்சேரி
- நெட்டப்பாக்கம் கொம்யூன் ஆணையாளராக இருந்து வருபவர் ஜெயக்குமார். இவர் நேற்று இரவு தனது மகனுடன் புதுவை ஏ.எப்.டி.மில் ரெயில்வே கேட் பகுதியில் வந்து கொண்டு இருந்தார்.
- அதன்பின்னர் வனத்துறை ஊழியர் சம்பவ டத்துக்கு விரைந்து வந்து ஆமையை மீட்டு வனத்துறைக்கு கொண்டு சென்றார்.
புதுச்சேரி:
நெட்டப்பாக்கம் கொம்யூன் ஆணையாளராக இருந்து வருபவர் ஜெயக்குமார். இவர் தனது மகனுடன் புதுவை ஏ.எப்.டி.மில் ரெயில்வே கேட் பகுதியில் வந்து கொண்டு இருந்தார்.
அப்போது ஒரு ஆமை சாலையை கடக்க முயன்றது இதனை பார்த்த கொம்யூன் ஆணையர் ஜெயக்குமார் வாகனம் மோதி ஆமை உயிருக்கு ஆபத்து ஏற்படாத வண்ணம் அதனை காப்பாற்றினர். பின்னர் வனத்துறையினரை தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்தார்.
அதற்கு நட்சத்திர ஆமையாக இருந்தால் மட்டுமே காப்பாற்றப்படும் என பதில் வந்தது.
இதை தொடர்ந்து வனத்துறை துணை இயக்குனர் குமாரவேலுவை கொம்யூன் ஆணையர் ஜெயக்குமார் செல்போனில் தொடர்பு கொண்டு ஆமையை காப்பாற்றும் படி கேட்டுக் கொண்டார்.
அதன்பின்னர் வனத்துறை ஊழியர் சம்பவ டத்துக்கு விரைந்து வந்து ஆமையை மீட்டு வனத்துறைக்கு கொண்டு சென்றார்.
இச்சம்பவத்தை நேரில் பார்த்த பொதுமக்கள் ஆணையர் செயலுக்கு பாராட்டு தெரிவித்தனர்.
- பாகூர் தொகுதி எம்.எல்.ஏ. செந்தில்குமாரின் தந்தை மற்றும் பழைய குருவிநத்தம் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ.வுமான ராமநாதன் மறைவையொட்டி 3-ம் ஆண்டு நினைவு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி குருவிநத்தத்தில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்றது.
- மேலும் தொகுதியில் உள்ள அனைத்து கிராமங்களிலும் தி.மு.க. மற்றும் ஆர்.ஆர். பேரவை சார்பில் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
புதுச்சேரி:
புதுவை முன்னாள் சபாநாயகர் மற்றும் முன்னாள் எம்.பி ராதாகிருஷ்ணன், பாகூர் தொகுதி எம்.எல்.ஏ. செந்தில்குமாரின் தந்தை மற்றும் பழைய குருவிநத்தம் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ.வுமான ராமநாதன் மறைவையொட்டி 3-ம் ஆண்டு நினைவு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி குருவிநத்தத்தில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்றது.
இதில் புதுவை எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் தி.மு.க. மாநில அமைப்பாளர் சிவா எம்.எல்.ஏ. கலந்துகொண்டு ராமநாதன் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். தொடர்ந்து அப்பகுதியில் அன்னதானம் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் எம்.எல்.ஏ.க்கள் அனிபால் கென்னடி, தி.மு.க. மாநில, மாவட்ட நிர்வாகிகள் பாகூர் தொகுதி பிரதிநிதிகள், அனைத்து கட்சி பிரமுகர்கள் கலந்துகொண்டு மலர் அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து குருவிநத்தம் அரசு பள்ளியில் மாணவர்களுக்கு இலவச நோட்டுபுத்தகம் வழங்கப்பட்டது.
மேலும் தொகுதியில் உள்ள அனைத்து கிராமங்களிலும் தி.மு.க. மற்றும் ஆர்.ஆர். பேரவை சார்பில் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் செந்தில்குமார் எம்.எல்.ஏ. முன்னாள் சபாநாயகர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
- புதுவையில் மாற்றுத்திற னாளி களுக்கான பணிகள் அனைத்திலும் சுணக்கம் ஏற்பட்டுள்ளது. அவர்க ளுக்கான உரிமைகள் ஏதும் தரப்படுவதில்லை.
- எனவே அவர்களுக்கு மாதாந்திர உதவித்தொகையை 5-ந் தேதிக்குள் வழங்க வேண்டும். மேலும் அவர்களுக்கான அரிசியையும் வழங்க வேண்டும்.
புதுச்சேரி:
புதுவை சட்டமன்ற எதிர்கட்சி தலைவர் சிவா வெளியிட்டுள்ள அறிக்கை யில் கூறியிருப்பதாவது:-
புதுவையில் மாற்றுத்திறனாளிகளுக்கான பணிகள் அனைத்திலும் சுணக்கம் ஏற்பட்டுள்ளது. அவர்களுக்கான உரிமைகள் ஏதும் தரப்படுவதில்லை. வேலைவாய்ப்பில் தமிழகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு 4 சதவீதம் தரப்படுகிறது. ஆனால் புதுவையில் 3 சதவீதம் அறிவிக்கப்பட்டு, அதுவும் வழங்கப்படாமல் உள்ளது.
எனவே புதுவையிலும் 4 சதவீதம் வேலை வாய்ப்பு மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்பட வேண்டும். அதுபோல் புதுவையில் மாற்றுத்திறனாளிக ளுக்கான நலத்திட்டங்கள் காலத்தோடு தரப்படுவதில்லை. மாதாந்திர உதவித்தொகை 20-ந் தேதிக்கு மேல்தான் வழங்கப்படுகிறது.
அவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த இலவச அரிசி நிறுத்தப்பட்டுள்ளது. எனவே அவர்களுக்கு மாதாந்திர உதவித்தொகையை 5-ந் தேதிக்குள் வழங்க வேண்டும். மேலும் அவர்களுக்கான அரிசியையும் வழங்க வேண்டும்.
சிறிய மாநிலமான புதுவையில் வீடு தேடிச் சென்று கூட அரிசியை வழங்கச் செய்யலாம். அரசுப்பள்ளிகளில் நீண்ட காலமாக நியமிக்கப்படாமல் உள்ள சிறப்பு ஆசிரியர்களை நியமிக்க வேண்டும்.
அதுபோல் புதுவை மெரினாவில் மாற்றுத்திறனாளிகள் கடற்கரையை அருகில் சென்று பார்க்கும் வகையில் அவர்களுக்கான சரிவுப்பாதை அமைத்துத்தர வேண்டும். அப்போதுதான் புதுவைக்கு வரும் சுற்றுலாப்பயணிகளில் உள்ள மாற்றுத் திறனாளி களும்கூட கடற்கரைக்கு அருகில் சென்று கடலை ரசிக்க முடியும்.
அரசு வழங்கும் மனைப்பட்டா, அடுக்குமாடி குடியிருப்பு ஆகியவற்றில் மாற்றுத் திறனாளிகளுக்கு 4 சதவீதத்தை வழங்க வேண்டும். அனைத்து அரசு அலுவலகங்களில் பமாற்றுத்திறனாளிகள் செல்வதற்கு சரிவுப்பாதை அமைக்க வேண்டும். சட்டசபை பின்பக்கம் செயல்படாமல் உள்ள அந்த சரிவுப்பாதையை, முன்பக்கம் அமைத்து மாற்றுத்திறனாளிகள் சுலபமாக முதல்-அமைச்சர், அமைச்சர்களை சந்திக்க ஏற்பாடு செய்ய வேண்டும். மாற்றுத்திறனாளிகள் குறித்து கணக்கெடுப்பு நடத்தி அவர்களுக்கான உரிமைகள், சலுகைகள் அனைத்தையும் விரைந்து கிடைக்கச் செய்ய வேண்டும்.
இவ்வாறு சிவா எம்.எல்.ஏ. அறிக்கையில் கூறியுள்ளார்.
- கடலூர்-புதுவை ரோடு பிள்ளையார் குப்பத்திலிருந்து பின்னாச்சிகுப்பம் பகுதி பாகூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிக்கு முக்கிய சாலையாக இருந்து வருகிறது.
- இது சம்பந்தமாக போக்குவரத்து துறை மற்றும் கிருமாம்பாக்கம் போக்குவரத்து போலீசருக்கு புகார் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
புதுச்சேரி:
கடலூர்-புதுவை ரோடு பிள்ளையார் குப்பத்திலிருந்து பின்னாச்சிகுப்பம் பகுதி பாகூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிக்கு முக்கிய சாலையாக இருந்து வருகிறது.
இச்சாலை ஓரத்தில் தனியார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள் மற்றும் மாணவர்கள் சாலை ஓரத்தில் இரு புறங்களிலும் தங்களது வாகனங்களை நிறுத்தி விடுகின்றனர்.
இதனால் பாகூர் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் இருந்து வரும் மக்களுக்கு போக்குவரத்து இடையூறு அவ்வப்போது ஏற்படுகிறது.
இது சம்பந்தமாக போக்குவரத்து துறை மற்றும் கிருமாம்பாக்கம் போக்குவரத்து போலீசருக்கு புகார் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அதனால் அரசு உயர் அதிகாரிகள் இதில் கவனம் செலுத்தி சாலை ஓரத்தில் வாகனங்களை நிறுத்தாமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- அரசியல் அமைப்பு நாளையொட்டி புதுவை மாநில சட்டப்பணிகள் ஆணையம் சார்பில் இந்திய அரசியலமைப்பு சட்டம் என்ற தலைப்பில் வினாடி-வினா போட்டி சட்டப்பணிகள் ஆணைய வளாகத்தில் நடத்தப்பட்டது.
- வக்கீல் சங்க தலைவர் குமரன், செயலாளர் கதிர்வேல், மூத்த வக்கீல் சிரில் மத்தியாஸ்வின் சென்ட் ஆகியோர் பரிசுகளை வழங்கினர்.
புதுச்சேரி:
அரசியல் அமைப்பு நாளையொட்டி புதுவை மாநில சட்டப்பணிகள் ஆணையம் சார்பில் இந்திய அரசியலமைப்பு சட்டம் என்ற தலைப்பில் வினாடி-வினா போட்டி சட்டப்பணிகள் ஆணைய வளாகத்தில் நடத்தப்பட்டது.
இதில் கல்லூரி மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர். போட்டிகளை புதுவை பல்கலைக்கழக உதவி பேராசிரியர்கள் நடத்தி வெற்றியாளர்களை தேர்வு செய்தனர். மாலையில் பரிசளிப்பு விழா நடந்தது.
விழாவில் தலைமை நீதிபதி செல்வநாதன், சட்டப்பணிகள் ஆணைய உறுப்பினர் செயலர் செந்தில் குமார், புதுவை தொழிலாளர் நீதிபதி ஷோபனாதேவி, முதன்மை சார்பு நீதிபதி ராபர்ட் கென்னடி ரமேஷ், வக்கீல் சங்க தலைவர் குமரன், செயலாளர் கதிர்வேல், மூத்த வக்கீல் சிரில் மத்தியாஸ்வின் சென்ட் ஆகியோர் பரிசுகளை வழங்கினர்.
- புதுவை எதிர்கட்சி தலைவர் சிவா எம்.எல்.ஏ. தலைமையில் தி.மு.க., எம்.எல்.ஏ.க்கள் அனிபால் கென்னடி, சம்பத், செந்தில்குமார், உருளையன்பேட்டை தொகுதி பொறுப்பாளர் கோபால் ஆகியோர் பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் சத்தியமூர்த்தியை சந்தித்து பேசினர்.
- இந்த திட்டத்தை அமல்படுத்தினால் புதுவை மக்கள் அனைவருக்கும் நல்ல, சுகாதாரமான குடிநீர் கிடைக்கும்.
புதுச்சேரி:
புதுவை எதிர்கட்சி தலைவர் சிவா எம்.எல்.ஏ. தலைமையில் தி.மு.க., எம்.எல்.ஏ.க்கள் அனிபால் கென்னடி, சம்பத், செந்தில்குமார், உருளையன்பேட்டை தொகுதி பொறுப்பாளர் கோபால் ஆகியோர் பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் சத்தியமூர்த்தியை சந்தித்து பேசினர்.
அப்போது பொதுப்பணித்துறை மூலம் வில்லியனூர், உப்பளம், முதலியார்பேட்டை, பாகூர் ஆகிய தொகுதிகளில் மேற்கொள்ளப்படும் திட்டங்களை தாமதப்படு த்தாமல் விரைந்து மேற்கொள்ள வேண்டும்.
கிராமப்பகுதிகளில் கூட தற்போது உப்புநீர் புகுந்து புதுவை மக்களுக்கு நல்ல குடிநீர் என்பதே கானல் நீராக உள்ளது. கடந்த ஆட்சியில் பிரெஞ்ச் அரசு நிதி ரூ.534 கோடி உதவியுடன் அறிவிக்கப்பட்ட குடிநீர் திட்டத்தை செயல்படுத்த அரசு ரூ.79 கோடி நிதி திரட்ட வேண்டும்.
ஆனால் இந்த நிதியை மாநில அரசு திரட்டாததால் பிரெஞ்ச் அரசிடம் இருந்து ரூ.455 கோடி நிதி பெற்று திட்டத்தை அமல்படுத்த முடியவில்லை.
இந்த திட்டத்தை அமல்படுத்தினால் புதுவை மக்கள் அனைவருக்கும் நல்ல, சுகாதாரமான குடிநீர் கிடைக்கும்.ஒட்டுமொத்த புதுவை மக்களின் அத்தியாவசிய தேவையான குடிநீர் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் பிரெஞ்ச் அரசின் ஏ.எப்.டி திட்டத்தை உடனடியாக செய்து முடிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.
- கடலூர் கிழக்கு மாவட்ட விஜய் மக்கள் இயக்கம் சார்பில் புதுப்பாளையம் ஓயாசிஸ் தொண்டு நிறுவனத்தில் உள்ள குழந்தைகளுக்கு விஜயின் விலையில்லா ரொட்டிபால் வழங்கும் திட்டத்தை அகில இந்திய பொதுசெயலாளர் புஸ்ஸி ஆனந்து தொடங்கிவைத்தார்.
- இந்நிகழ்ச்சியில் கடலூர் கிழக்கு மாவட்ட தலைவர் சீனு, உட்பட மாவட்ட, நகர, ஒன்றிய, இளைஞரணி, தொண்டரணி, மாணவரணி, விவசாய அணி மற்றும் விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
புதுச்சேரி:
கடலூர் கிழக்கு மாவட்ட விஜய் மக்கள் இயக்கம் சார்பில் புதுப்பாளையம் ஓயாசிஸ் தொண்டு நிறுவனத்தில் உள்ள குழந்தைகளுக்கு விஜயின் விலையில்லா ரொட்டிபால் வழங்கும் திட்டத்தை அகில இந்திய பொதுசெயலாளர் புஸ்ஸி ஆனந்து தொடங்கிவைத்தார்.
மேலும், பனி மற்றும் குளிர்காலத்தை முன்னிட்டு கடலூர் பாடலீஸ்வரர் கோவில் மண்டபத்தில் உள்ள 100 ஆதரவற்றவர்களுக்கு போர்வை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியை கடலூர் மேற்கு மாவட்ட தலைவர் ராஜசேகர் கடலூர் கிழக்கு மாவட்ட இளைஞரணி தலைவர் ராஜ்குமார் ஆகியோர் ஏற்பாடு செய்திருந்தினர்.
இந்நிகழ்ச்சியில் கடலூர் கிழக்கு மாவட்ட தலைவர் சீனு, உட்பட மாவட்ட, நகர, ஒன்றிய, இளைஞரணி, தொண்டரணி, மாணவரணி, விவசாய அணி மற்றும் விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
புதுவை ரெயில் நிலையம், நேதாஜி நகர் பகுதி சாலை ஓரம் வசிக்கும் ஆதரவற்ற பொதுமக்களுக்கும், மற்றும் புதுவை ரெயின்போ டிரஸ்டில் உள்ள ஆதரவற்ற குழந்தைகளுக்கும் அகில இந்திய விஜய் மக்கள் இயக்க பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்து சுமார் 200 போர்வைகள் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் புதுவை மாநில செயலாளர் சரவணன், மாநில நிர்வாகிகள் பொன்முடி, புதியவன், நிரேஷ், மற்றும் தொகுதி தலைவர்கள் இளைஞரணி தலைவர்கள் தொண்டராணி தலைவர்கள், மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
- புதுவை, கலிதீர்த்தாள் குப்பத்தில் உள்ள மணக்குள விநாயகர் தொழில் நுட்பக்கல்லூரி மற்றும் எம்கியூப் அகாடமி நிறுவனத்திற்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது.
- மேலாண்மைத்துறை தலைவர் பாஸ்கரன் மற்றும் உதவி பேராசிரியர் பைக் மண்சூர் இப்ராஹிம் ஆகியோர் இப்புரிந்துணர்வு ஒப்பந்தத்தி ற்க்கான நோக்கத்தை எடுத்துரை த்தனர்.
புதுச்சேரி:
புதுவை, கலிதீர்த்தாள் குப்பத்தில் உள்ள மணக்குள விநாயகர் தொழில் நுட்பக்கல்லூரி மற்றும் எம்கியூப் அகாடமி நிறுவனத்திற்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது.
புரிந்துணர்வு ஒப்பந்தம் கையொப்பமிடும் நிகழ்ச்சியில் மணக்குள விநாயகர் கல்விக் குழுமத்தின் தலைவரும் நிர்வாக இயக்குனருமான தனசேகரன், துணைத்தலைவர் சுகுமாறன், செயலாளர் டாக்டர். நாராயணசாமி கேசவன் ஆகியோர் தலைமை தாங்கினர்.
புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கல்லூரியின் சார்பாக முதல்வர் மலர்க்கண் மற்றும் எம்கியூப் அகாடமி நிறுவனத்தின் இயக்குனர் ஜெயபிரகாஷ் ஆகியோர் கையொப்பமிட்டு ஒப்பந்த பரிமாற்றம் செய்துகொண்டனர்.
மேலாண்மைத்துறை தலைவர் பாஸ்கரன் மற்றும் உதவி பேராசிரியர் பைக் மண்சூர் இப்ராஹிம் ஆகியோர் இப்புரிந்துணர்வு ஒப்பந்தத்தி ற்க்கான நோக்கத்தை எடுத்துரை த்தனர். வேலை வாய்ப்புத் துறை அதிகாரி ஜெயக்குமார் மற்றும் அனைத்து துறைத்தலைவர்களும் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மேலா ண்மை துறையின் இணைநிலை பேராசிரியர் வைத்தீஸ்வரன் மற்றும் உதவிப்பேராசிரியர்கள் செய்திருந்தனர்.
- மணவெளி தொகுதி சுடலை வீதி பகுதியில் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தொகுதி எம்.எல்.ஏ.வும் சபாநாயகருமான ஏம்பலம் செல்வம் கலந்து கொண்டு அப்பகுதி மக்களின் குறைகளை கேட்டறிந்தார்.
- மேலும் மின்துறை அதிகாரியை தொடர்பு கொண்டு அப்பகுதியில் புதிய மின்கம்பங்கள் நட்டு தெரு மின்விளக்குகள் அமைக்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டார்.
புதுச்சேரி:
மணவெளி தொகுதி சுடலை வீதி பகுதியில் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் தொகுதி எம்.எல்.ஏ.வும் சபாநாயகருமான ஏம்பலம் செல்வம் கலந்து கொண்டு அப்பகுதி மக்களின் குறைகளை கேட்டறிந்தார்.
குறிப்பாக அப்பகுதிக்கு புதிய தார் சாலை வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என்றும் புதிய மின் கம்பங்கள் அமைத்து தெருவிளக்குகள் அமைத்து தர வேண்டும் என்றும் கழிவு நீர் வாய்க்கால் வசதி ஏற்படுத்தித் தர வேண்டும் என்றும் அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்தனர்.
அதற்க்கு சபாநாயகர் ஏம்பலம் செல்வம் பதில் அளிக்கும் போது அப்பகுதியில் கழிவு நீர் வாய்க்கால் வசதியுடன் கூடிய புதிய தார் சாலை அமைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது எனவும் விரைவில் சாலை அமைக்கும் பணி தொடங்கும் எனவும் தெரிவித்தார். மேலும் மின்துறை அதிகாரியை தொடர்பு கொண்டு அப்பகுதியில் புதிய மின்கம்பங்கள் நட்டு தெரு மின்விளக்குகள் அமைக்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டார்.
சபாநாயகர் ஏம்பலம் செல்வத்தின் துரித நடவடிக்கைகளுக்கு அப்பகுதி மக்கள் பாராட்டு தெரிவித்தனர்.
இந்த மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.
- கரிக்கலாம்பாக்கத்தில் நடந்த பயிர்காப்பீட்டு திட்ட சிறப்பு முகாமை வேளாண்துறை அமைச்சர் தேனீ.ஜெயக்குமார் தொடங்கி வைத்து விவசாயிகளுக்கு பயிர் காப்பீட்டு திட்ட அட்டையை வழங்கி பேசியதாவது:-
- நிகழ்ச்சியில் தேசிய காப்பீட்டு மண்டல மேலாளர் சம்பா பருவத்தில் நெல் சாகுபடி செய்த விவசாயிகளுக்கு பயிர் காப்பீட்டு செய்வதன் முக்கியத்துவம் குறித்து விளக்கினார்.
புதுச்சேரி:
கரிக்கலாம்பாக்கத்தில் நடந்த பயிர்காப்பீட்டு திட்ட சிறப்பு முகாமை வேளாண்துறை அமைச்சர் தேனீ.ஜெயக்குமார் தொடங்கி வைத்து விவசாயிகளுக்கு பயிர் காப்பீட்டு திட்ட அட்டையை வழங்கி பேசியதாவது:-
புதுவையில் இந்த ஆண்டு மலர்கண்காட்சி மற்றும் விவசாய திருவிழா நடத்தப்படும். விவசாயிகளுக்கு நாட்டு மாடுகள் வழங்குவதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். முதல் கட்டமாக 300 நாட்டுமாடுகள் வழங்கப்படும். புதுவையில் அனைத்து விவசாயிகளும் இயற்கை விவசாயத்துக்கு மாறுவதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம்.
பால் கூட்டுறவு நிலையத்தில் பால் ஊற்றி வரும் விவசாயிகளுக்கு கூட்டுறவு சொசைட்டியின் மூலம் தீவனப்புல் வழங்குவதற்கான நடவடிக்கையும் எடுத்து வருகிறோம். இதன் மூலம் பால் உற்பத்தியை பெருக்க முடியும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
நிகழ்ச்சியில் தேசிய காப்பீட்டு மண்டல மேலாளர் சம்பா பருவத்தில் நெல் சாகுபடி செய்த விவசாயிகளுக்கு பயிர் காப்பீட்டு செய்வதன் முக்கியத்துவம் குறித்து விளக்கினார்.
முகாமில் வேளாண் இயக்குனர் பாலகாந்தி, கூடுதல் வேளாண் இயக்குனர் வசந்தகுமார், பயிர் காப்பீடு மண்டல மேலாளர் ராமச்சந்திரன் மற்றும் வேளாண்துறை ஊழியர்கள், விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர்.
- பாகூர் தொகுதியில், அரியாங்குப்பம் வட்டார வளர்ச்சி அலுவலகம் சார்பில் கிழக்கு கிராம பஞ்சாயத்துக்கு உட்பட்ட மணப்பட்டு தாங்கல் வாய்க்காலை தூர்வாரி ஆழப்படுத்தும் பணிக்கான தொடக்க நிகழ்ச்சி நடைபெற்றது.
- மேலும் அப்பகுதியில் உள்ள சாந்தி நகருக்கு சாலை வசதி ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர்.
புதுச்சேரி:
பாகூர் தொகுதியில், அரியாங்குப்பம் வட்டார வளர்ச்சி அலுவலகம் சார்பில் கிழக்கு கிராம பஞ்சாயத்துக்கு உட்பட்ட மணப்பட்டு தாங்கல் வாய்க்காலை தூர்வாரி ஆழப்படுத்தும் பணிக்கான தொடக்க நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்தப் பணி திட்ட மதிப்பீடு ரூ.10 லட்சத்து 78 ஆயிரம் செலவில் 3858 வேலை நாட்களாகும்.
இப்பணியை செந்தில்குமார் எம்.எல்.ஏ.வுமான தலைமை தாங்கி பணியை ெதாடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் வட்டார வளர்ச்சி அதிகாரி காசிநாதன், இளநிலை பொறியாளர் சிவப்பிரகாசம், கிராம முக்கிய பிரமுகர்கள் மற்றும் வேலை வாய்ப்பு திட்ட பயனாளிகள் பலர் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சியின் போது அங்கிருந்த பொதுமக்கள், நீண்ட நாள் கோரிக்கையாக இருக்கும் ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை 100 நாட்களும் வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.
மேலும் அப்பகுதியில் உள்ள சாந்தி நகருக்கு சாலை வசதி ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர்.
இதற்கு பதில் அளித்து பேசிய செந்தில்குமார் எம்.எல்.ஏ., திட்டத்தின் பெயரை 100 நாள் வேலை வாய்ப்பு திட்டம் பெயருக்குத்தான் இருக்கிறது என வேதனையுடன் தெரிவித்தார்.
நமது வீடுகளில் பிள்ளைகளுக்கு பெயர் வைப்பது போல திட்டத்தில் பெயரும் ஒரு நாள் வேலை வாய்ப்பு திட்டமாகும். இருந்த போதும் தொடர்ந்து வேலை வழங்க ஏற்பாடு செய்து தருவதாக உறுதி அளித்தார்.
தொடர்ந்து பாகூர் மேற்கு கிராம பஞ்சாயத்துக்கு உட்பட்ட படப்பன் குளத்தை ரூ.2.41 லட்சத்தில் குளத்தை பராமரிப்பு பணியை தொடங்கி வைக்கப்பட்டது. இந்த பணிக்கான நாட்கள் 838 ஆகும். தொடர்ந்து சட்டமன்ற அலுவலகத்தில் 24பயனாளிகளுக்கு ரூ.20 ஆயிரத்தை மானியத்தில் கழிவறை கட்ட பணியானை செந்தில்குமார் எம்.எல்.ஏ. வழங்கினார்.
- திருச்சிற்றம்பலம் கூட்ரோட்டில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி தொடங்குவதாக 2020-ம் ஆண்டு சட்டசபையில் அறிவிக்கப்பட்டது.
- தமிழ்,ஆங்கிலம் கம்ப்யூட்டர் சயின்ஸ், கணக்கு, வணிகவியல் ஆகிய 5 இளங்கலை பாடப்பிரிவுகளில் சுமார் 600 மாணவ- மாணவிகள் படித்து வருகின்றனர்.
புதுச்சேரி:
திருச்சிற்றம்பலம் கூட்ரோட்டில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி தொடங்குவதாக 2020-ம் ஆண்டு சட்டசபையில் அறிவிக்கப்பட்டது.
திருச்சிற்றம்பலம் கூட்ரோடு சேதராப்பட்டு செல்லும் சாலையில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி கட்டுவதற்கான இடம் தேர்வு செய்யப்பட்டது. இதற்கிடையில் திருச்சிற்றம்பலம் கூட்ரோட்டில் உள்ள காந்தி மேல்நிலைப் பள்ளியில் கலை மற்றும் அறிவியல் பாடப் பிரிவுக்கான மாணவர் சேர்க்கை தொடங்கப்பட்டு பள்ளியின் ஒரு பகுதி கட்டிடத்தில் கல்லூரி இயங்கி வருகிறது.
தமிழ்,ஆங்கிலம் கம்ப்யூட்டர் சயின்ஸ், கணக்கு, வணிகவியல் ஆகிய 5 இளங்கலை பாடப்பிரிவுகளில் சுமார் 600 மாணவ- மாணவிகள் படித்து வருகின்றனர். இந்நிலையில், ரூ. 11 கோடியில் கல்லூரி கட்டிடம் கட்டுவதற்கான பூமி பூஜை திருச்சிற்றம்பலம் கூட் ரோடு சேதராப்பட்டு செல்லும் சாலையில் நடந்தது.
இந்நிகழ்ச்சியில் சக்கரபாணி எம்.எல்.ஏ, வானூர் ஒன்றிய சேர்மன் உஷா பி.கே.டி. முரளி ஆகியோர் கலந்து கொண்டு பூமி பூஜை செய்து பணியை தொடங்கி வைத்தனர். இதில் துணை சேர்மன் பருவகீர்த்தனா விநாயகமூர்த்தி, ஊராட்சி மன்ற தலைவர் வெங்கடேசன், தி.மு.க. கவுன்சிலர்கள் புவனேஸ்வரி ராமதாஸ், காமாட்சி விஜயரங்கன் கல்லூரி முதல்வர் முஜிரா பாத்திமா, முன்னாள் முதல்வர் வில்லியம், காந்தி மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ஜெயராமன், கல்லூரி பேராசிரியர்கள் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.






