என் மலர்
புதுச்சேரி

ஆமையை மீட்ட கொம்யூன் ஆணையர் ஜெயக்குமார்
ரோட்டில் திரிந்த ஆமையை மீட்டு வனத்துறையிடம் ஒப்படைப்பு
- நெட்டப்பாக்கம் கொம்யூன் ஆணையாளராக இருந்து வருபவர் ஜெயக்குமார். இவர் நேற்று இரவு தனது மகனுடன் புதுவை ஏ.எப்.டி.மில் ரெயில்வே கேட் பகுதியில் வந்து கொண்டு இருந்தார்.
- அதன்பின்னர் வனத்துறை ஊழியர் சம்பவ டத்துக்கு விரைந்து வந்து ஆமையை மீட்டு வனத்துறைக்கு கொண்டு சென்றார்.
புதுச்சேரி:
நெட்டப்பாக்கம் கொம்யூன் ஆணையாளராக இருந்து வருபவர் ஜெயக்குமார். இவர் தனது மகனுடன் புதுவை ஏ.எப்.டி.மில் ரெயில்வே கேட் பகுதியில் வந்து கொண்டு இருந்தார்.
அப்போது ஒரு ஆமை சாலையை கடக்க முயன்றது இதனை பார்த்த கொம்யூன் ஆணையர் ஜெயக்குமார் வாகனம் மோதி ஆமை உயிருக்கு ஆபத்து ஏற்படாத வண்ணம் அதனை காப்பாற்றினர். பின்னர் வனத்துறையினரை தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்தார்.
அதற்கு நட்சத்திர ஆமையாக இருந்தால் மட்டுமே காப்பாற்றப்படும் என பதில் வந்தது.
இதை தொடர்ந்து வனத்துறை துணை இயக்குனர் குமாரவேலுவை கொம்யூன் ஆணையர் ஜெயக்குமார் செல்போனில் தொடர்பு கொண்டு ஆமையை காப்பாற்றும் படி கேட்டுக் கொண்டார்.
அதன்பின்னர் வனத்துறை ஊழியர் சம்பவ டத்துக்கு விரைந்து வந்து ஆமையை மீட்டு வனத்துறைக்கு கொண்டு சென்றார்.
இச்சம்பவத்தை நேரில் பார்த்த பொதுமக்கள் ஆணையர் செயலுக்கு பாராட்டு தெரிவித்தனர்.






