search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    100 நாட்கள் வேலை வழங்க முடியாதது வேதனை அளிக்கிறது-செந்தில்குமார் எம்.எல்.ஏ. பேச்சு
    X

    பாகூர் பேட் பகுதியில் நடந்த நிகழ்ச்சியில் செந்தில்குமார் எம்.எல்.ஏ. பொதுமக்களிடம் பேசிய காட்சி.

    100 நாட்கள் வேலை வழங்க முடியாதது வேதனை அளிக்கிறது-செந்தில்குமார் எம்.எல்.ஏ. பேச்சு

    • பாகூர் தொகுதியில், அரியாங்குப்பம் வட்டார வளர்ச்சி அலுவலகம் சார்பில் கிழக்கு கிராம பஞ்சாயத்துக்கு உட்பட்ட மணப்பட்டு தாங்கல் வாய்க்காலை தூர்வாரி ஆழப்படுத்தும் பணிக்கான தொடக்க நிகழ்ச்சி நடைபெற்றது.
    • மேலும் அப்பகுதியில் உள்ள சாந்தி நகருக்கு சாலை வசதி ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர்.

    புதுச்சேரி:

    பாகூர் தொகுதியில், அரியாங்குப்பம் வட்டார வளர்ச்சி அலுவலகம் சார்பில் கிழக்கு கிராம பஞ்சாயத்துக்கு உட்பட்ட மணப்பட்டு தாங்கல் வாய்க்காலை தூர்வாரி ஆழப்படுத்தும் பணிக்கான தொடக்க நிகழ்ச்சி நடைபெற்றது.

    இந்தப் பணி திட்ட மதிப்பீடு ரூ.10 லட்சத்து 78 ஆயிரம் செலவில் 3858 வேலை நாட்களாகும்.

    இப்பணியை செந்தில்குமார் எம்.எல்.ஏ.வுமான தலைமை தாங்கி பணியை ெதாடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் வட்டார வளர்ச்சி அதிகாரி காசிநாதன், இளநிலை பொறியாளர் சிவப்பிரகாசம், கிராம முக்கிய பிரமுகர்கள் மற்றும் வேலை வாய்ப்பு திட்ட‌ பயனாளிகள் பலர் கலந்து கொண்டனர்.

    இந்நிகழ்ச்சியின் போது அங்கிருந்த பொதுமக்கள், நீண்ட நாள் கோரிக்கையாக இருக்கும் ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை 100 நாட்களும் வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.

    மேலும் அப்பகுதியில் உள்ள சாந்தி நகருக்கு சாலை வசதி ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர்.

    இதற்கு பதில் அளித்து பேசிய செந்தில்குமார் எம்‌.எல்‌.ஏ., திட்டத்தின் பெயரை 100 நாள் வேலை வாய்ப்பு திட்டம் பெயருக்குத்தான் இருக்கிறது என வேதனையுடன் தெரிவித்தார்.

    நமது வீடுகளில் பிள்ளைகளுக்கு பெயர் வைப்பது போல திட்டத்தில் பெயரும் ஒரு நாள் வேலை வாய்ப்பு திட்டமாகும். இருந்த போதும் தொடர்ந்து வேலை வழங்க ஏற்பாடு செய்து தருவதாக உறுதி அளித்தார்.

    தொடர்ந்து பாகூர் மேற்கு கிராம பஞ்சாயத்துக்கு உட்பட்ட படப்பன் குளத்தை ரூ.2.41 லட்சத்தில் குளத்தை பராமரிப்பு பணியை தொடங்கி வைக்கப்பட்டது‌. இந்த பணிக்கான நாட்கள் 838 ஆகும். தொடர்ந்து சட்டமன்ற அலுவலகத்தில் 24பயனாளிகளுக்கு ரூ.20 ஆயிரத்தை மானியத்தில் கழிவறை கட்ட பணியானை செந்தில்குமார் எம்.எல்.ஏ. வழங்கினார்.

    Next Story
    ×