என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    மாற்று திறனாளிகளுக்கு சலுகைகள் வழங்க வேண்டும்-தி.மு.க. வலியுறுத்தல்
    X

    கோப்பு படம்.

    மாற்று திறனாளிகளுக்கு சலுகைகள் வழங்க வேண்டும்-தி.மு.க. வலியுறுத்தல்

    • புதுவையில் மாற்றுத்திற னாளி களுக்கான பணிகள் அனைத்திலும் சுணக்கம் ஏற்பட்டுள்ளது. அவர்க ளுக்கான உரிமைகள் ஏதும் தரப்படுவதில்லை.
    • எனவே அவர்களுக்கு மாதாந்திர உதவித்தொகையை 5-ந் தேதிக்குள் வழங்க வேண்டும். மேலும் அவர்களுக்கான அரிசியையும் வழங்க வேண்டும்.

    புதுச்சேரி:

    புதுவை சட்டமன்ற எதிர்கட்சி தலைவர் சிவா வெளியிட்டுள்ள அறிக்கை யில் கூறியிருப்பதாவது:-

    புதுவையில் மாற்றுத்திறனாளிகளுக்கான பணிகள் அனைத்திலும் சுணக்கம் ஏற்பட்டுள்ளது. அவர்களுக்கான உரிமைகள் ஏதும் தரப்படுவதில்லை. வேலைவாய்ப்பில் தமிழகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு 4 சதவீதம் தரப்படுகிறது. ஆனால் புதுவையில் 3 சதவீதம் அறிவிக்கப்பட்டு, அதுவும் வழங்கப்படாமல் உள்ளது.

    எனவே புதுவையிலும் 4 சதவீதம் வேலை வாய்ப்பு மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்பட வேண்டும். அதுபோல் புதுவையில் மாற்றுத்திறனாளிக ளுக்கான நலத்திட்டங்கள் காலத்தோடு தரப்படுவதில்லை. மாதாந்திர உதவித்தொகை 20-ந் தேதிக்கு மேல்தான் வழங்கப்படுகிறது.

    அவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த இலவச அரிசி நிறுத்தப்பட்டுள்ளது. எனவே அவர்களுக்கு மாதாந்திர உதவித்தொகையை 5-ந் தேதிக்குள் வழங்க வேண்டும். மேலும் அவர்களுக்கான அரிசியையும் வழங்க வேண்டும்.

    சிறிய மாநிலமான புதுவையில் வீடு தேடிச் சென்று கூட அரிசியை வழங்கச் செய்யலாம். அரசுப்பள்ளிகளில் நீண்ட காலமாக நியமிக்கப்படாமல் உள்ள சிறப்பு ஆசிரியர்களை நியமிக்க வேண்டும்.

    அதுபோல் புதுவை மெரினாவில் மாற்றுத்திறனாளிகள் கடற்கரையை அருகில் சென்று பார்க்கும் வகையில் அவர்களுக்கான சரிவுப்பாதை அமைத்துத்தர வேண்டும். அப்போதுதான் புதுவைக்கு வரும் சுற்றுலாப்பயணிகளில் உள்ள மாற்றுத் திறனாளி களும்கூட கடற்கரைக்கு அருகில் சென்று கடலை ரசிக்க முடியும்.

    அரசு வழங்கும் மனைப்பட்டா, அடுக்குமாடி குடியிருப்பு ஆகியவற்றில் மாற்றுத் திறனாளிகளுக்கு 4 சதவீதத்தை வழங்க வேண்டும். அனைத்து அரசு அலுவலகங்களில் பமாற்றுத்திறனாளிகள் செல்வதற்கு சரிவுப்பாதை அமைக்க வேண்டும். சட்டசபை பின்பக்கம் செயல்படாமல் உள்ள அந்த சரிவுப்பாதையை, முன்பக்கம் அமைத்து மாற்றுத்திறனாளிகள் சுலபமாக முதல்-அமைச்சர், அமைச்சர்களை சந்திக்க ஏற்பாடு செய்ய வேண்டும். மாற்றுத்திறனாளிகள் குறித்து கணக்கெடுப்பு நடத்தி அவர்களுக்கான உரிமைகள், சலுகைகள் அனைத்தையும் விரைந்து கிடைக்கச் செய்ய வேண்டும்.

    இவ்வாறு சிவா எம்.எல்.ஏ. அறிக்கையில் கூறியுள்ளார்.

    Next Story
    ×