என் மலர்
புதுச்சேரி
- உப்பளம், நேத்தாஜி நகர் 3-ல் பழமை வாய்ந்த பெரியபாளையத்தம்மன் கோவில் உள்ளது.
- கோவில் மகா மண்டபம், அர்த்த மண்டபம், கருவறை கோபுர விமானம் கருங்கற்களால் அமைத்தல் மற்றும் கோவில் மண்டப விரிவாக்க பணிகளை அனிபால் கென்னடி எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.
புதுச்சேரி:
உப்பளம், நேத்தாஜி நகர் 3-ல் பழமை வாய்ந்த பெரியபாளையத்தம்மன் கோவில் உள்ளது.
இக்கோவிலில் கோபுர விமானம் அமைத்தல் மண்டப விரிவாக்க பணிகள் மயிலம் பொம்மபுர ஆதீனம் நல்ஆசியுடன் திருப்பணி ஆரம்ப விழா நடைபெற்றது.
கோவில் மகா மண்டபம், அர்த்த மண்டபம், கருவறை கோபுர விமானம் கருங்கற்களால் அமைத்தல் மற்றும் கோவில் மண்டப விரிவாக்க பணிகளை அனிபால் கென்னடி எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.
இதில் தி.மு.க. ஆதிதிராவிட துணை அமைப்பாளர் தங்கவேலு, கிளைச் செயலாளர் மனோஜ், ராகேஷ் கவுதமன், லாரன்ஸ், ரகுமான், மற்றும் உபயதாரர்கள், கலந்துகொண்டனர்.
- புதுவை மாநில குடிசை மாற்று வாரியத்தின் மூலமாக பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் திருபுவனை தொகுதிக்கு உட்பட்ட பயனாளிகளுக்கு வீடு கட்டுவதற்காக முதல் தவணையாக 9 பேருக்கு ரூ.1 லட்சத்து 20 ஆயிரம் தொகையினை தொகுதியின் எம்.எல்.ஏ. அங்காளன் வழங்கினார்.
- இந்நிகழ்ச்சியில் குடிசை மாற்று வாரியத்தின் நல ஆய்வாளர் வெங்கடேசன், ரவிச்சந்திரன், இளநிலை பொறியாளர் சத்தியவாணி முத்து, மற்றும் எம்.எல்.ஏ. ஆதரவாளர்கள் கலந்து கொண்டனர்.
புதுச்சேரி:
புதுவை மாநில குடிசை மாற்று வாரியத்தின் மூலமாக பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் திருபுவனை தொகுதிக்கு உட்பட்ட பயனாளிகளுக்கு வீடு கட்டுவதற்காக முதல் தவணையாக 9 பேருக்கு ரூ.1 லட்சத்து 20 ஆயிரம், 2-ம் தவணையாக 28 பேருக்கு 1 லட்சத்து 60 ஆயிரம், 3-ம் தவணையாக 17 பேருக்கு ரூ. 1 லட்சத்து 90 ஆயிரம் வீதம் என மொத்தம் 54 பேர்களுக்கு இத்திட்டத்தின் கீழ் தவணைத் தொகையினை தொகுதியின் எம்.எல்.ஏ. அங்காளன் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் குடிசை மாற்று வாரியத்தின் நல ஆய்வாளர் வெங்கடேசன், ரவிச்சந்திரன், இளநிலை பொறியாளர் சத்தியவாணி முத்து, மற்றும் எம்.எல்.ஏ. ஆதரவாளர்கள் கலந்து கொண்டனர்.
- புதுவையில் இன்று அதிகாலை முதல் மழை பெய்யத்தொடங்கியது.
- ஒரு சில சுற்றுலா பயணிகள் குடை பிடித்தவாறு கடற்கரை அழகை கண்டு ரசித்தனர்.
புதுச்சேரி:
வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக புதுவையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மழை பெய்தது.
அதன் பின் சில நாட்களாக மழை பெய்யவில்லை. இந்த நிலையில் நேற்று காலை புதுவையில் திடீரென மழை பெய்தது. பின்னர் வெயில் அடிக்கத் தொடங்கியது. இந்த நிலையில் புதுவையில் இன்று அதிகாலை முதல் மழை பெய்யத்தொடங்கியது. விட்டு விட்டு மழை பெய்தது.
புதுவையில் வார இறுதி நாட்களான சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் தமிழகமட்டுமின்றி கேரளா, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களிலிருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வருவார்கள் அவர்கள் மணகுள விநாயகர் கோவில், பாண்டி மெரினா, புதுவை கடற்கரை உள்ளிட்ட பகுதிகளை சுற்றி பார்ப்பார்கள். மேலும் சுண்ணாம்பு ஆறு படகு குழாமில் படகில் சென்று பேரடைஸ் கடற்கரை சுற்றி பார்ப்பார்கள். இன்று தொடர்ந்து மழை பெய்து வந்ததால் சுற்றுலா பயணிகள் விடுதியிலேயே முடங்கினார்கள். இதனால் கடற்கரை பகுதி வெறிச்சோடி காணப்பட்டது.
ஒரு சில சுற்றுலா பயணிகள் குடை பிடித்தவாறு கடற்கரை அழகை கண்டு ரசித்தனர்.
- இறந்த மணக்குள விநாயகர் கோவில் யானை லட்சுமியின் சிற்பம் உருவாக்கப்பட்டு இருந்தது.
- இன்று அதிகாலை பெய்த மழையினால் தேர்தல் விழிப்புணர்வு மணல் சிற்பங்கள் கலைந்து விட்டது.
புதுச்சேரி:
இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தல்படி வாக்காளர் பட்டியல் திருத்த சிறப்பு முகாம் புதுவையில் 2 நாட்கள் நடக்கிறது.
வாக்காளர் திருத்த முகாம் குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த பாரதியார் பல்கலைக்கூட ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் மணல் சிற்பம் வடிவமைத்தனர். வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பாண்டி மெரினா கடற்கரை பகுதியில் மணல் சிற்பம் உருவாக்கப்பட்டது.
இதில் இறந்த மணக்குள விநாயகர் கோவில் யானை லட்சுமியின் சிற்பம் உருவாக்கப்பட்டு இருந்தது.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் தேர்தல்துறை அதிகாரிகள் யானை பகுஜன் சமாஜ் கட்சியின் சின்னம் என்பதால் யானை மணல் சிற்பம் இடம் பெறக்கூடாது என்று உத்தரவிட்டனர்.
இதையடுத்து 9 மணி நேரமாக உருவாக்கப்பட்ட லட்சுமி யானையின் மணல் சிற்பம் நள்ளிரவே கலைக்கப்பட்டு தேர்தல் தொடர்பான விழிப்புணர்வு சிற்பங்கள் மட்டுமே இடம்பெற்றது.
இந்த நிலையில் இன்று அதிகாலை பெய்த மழையினால் தேர்தல் விழிப்புணர்வு மணல் சிற்பங்கள் கலைந்து விட்டது.
யானை மணல் சிற்பம் கலைக்கப்பட்ட இடத்தில் தேர்தல் துறை என்ற வாசகம் எழுதப்பட்டது.
- மாநில அந்தஸ்து பெற புதுவையில் உள்ள சமூக அமைப்புகளை ஒன்று திரட்டி சுயேட்சை எம்.எல்.ஏ. நேரு தலைமையில் ஆலோசனை கூட்டம் கடந்த மாதம் 20-ந் தேதி நடந்தது.
- சிறப்பு விருந்தினராக காரைக்கால் மாவட்ட தி.மு.க. அமைப்பாளர் நாஜிம் பங்கேற்று பேசினார்.
புதுச்சேரி:
மாநில அந்தஸ்து பெற புதுவையில் உள்ள சமூக அமைப்புகளை ஒன்று திரட்டி சுயேட்சை எம்.எல்.ஏ. நேரு தலைமையில் ஆலோசனை கூட்டம் கடந்த மாதம் 20-ந் தேதி நடந்தது.
தொடர்ந்து காரைக்கால் திருநள்ளாறில் தனியார் ஒட்டலில் ஆலோசனை கூட்டம் நேரு எம்.எல்.ஏ. தலைமையில் நடந்தது. கூட்டத்தில் காரைக்கால் வளர்ச்சிக்காக பாடுபடும் சமூக அமைப்புகளை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர்.
சிறப்பு விருந்தினராக காரைக்கால் மாவட்ட தி.மு.க. அமைப்பாளர் நாஜிம் பங்கேற்று பேசினார்.கூட்டத்தில் மாநில அந்தஸ்து பெற அடுத்த கட்டமாக செய்ய வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டது.
- கடந்த கால ஆட்சியில் புதுவையை சேர்ந்த 95 சதவீதம் பேர் அரசு வக்கீல்களாக சென்னை மற்றும் புதுவை கோர்ட்டுகளில் நிரப்பப்பட்டுள்ளது.
- கோவில், குடியிருப்பு, பள்ளி அருகில் விதிகளை மீறி 100-க்கும் மேற்பட்ட மதுபான கடைகளில் அமைக்க முதலமைச்சர் ரங்கசாமி அனுமதி அளித்துள்ளார்.
புதுச்சேரி:
புதுவை பிரதேச காங்கிரஸ் கமிட்டி கூட்டத்தில் காங்கிரஸ்தான் தான் புதுவையில் முதன்மையான கட்சி என்றும் மதசார்பற்ற கூட்டணி நடத்தும் போராட்டங்களுக்கு காங்கிரஸ் தான் தலைமை தாங்கும் என்று முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி கூறினார்.
இதற்கு புதுவை மாநில தி.மு.க. அமைப்பாளரும், எதிர்கட்சி தலைவருமான சிவா எம்.எல்.ஏ. கூறும்போது, நாங்கள் கொள்கையை கூறியே கட்சியை வளர்க்கிறோம். தி.மு.க.வுக்கு காங்கிரஸ் தலைமை தாங்க முடியாது என்றார். இது கூட்டணி கட்சிகளுக்கிடையே சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
குப்பை டெண்டரில் இமாலய ஊழல் நடந்துள்ளது என குற்றச்சாட்டு வைத்தேன். பெங்களூரு ஒப்பந்ததாரருக்கு 2 ஆண்டு காலம் உள்ள நிலையில் அவசர அவசரமாக டெண்டர் வைக்க காரணம் என்ன? குப்பை அள்ளும் டெண்டர் விவகாரத்தில் முதலமைச்சர் அலுவலகம் தலையிடவில்லை என்றால் நீதி விசாரணைக்கு முதலமைச்சர் உத்தரவிட வேண்டும்.
நிறுத்தப்பட்ட டெண்டருக்கு மேல் நடவடிக்கை எடுத்தால் நீதிமன்றத்துக்கு அரசு பதில் சொல்ல வேண்டிய நிலை ஏற்படும்.
கடந்த கால ஆட்சியில் புதுவையை சேர்ந்த 95 சதவீதம் பேர் அரசு வக்கீல்களாக சென்னை மற்றும் புதுவை கோர்ட்டுகளில் நிரப்பப்பட்டுள்ளது. சென்னை உயர்நீதிமன்றத்துக்கு 35 பேரில் 15 பேர் தவிர்த்து மீதமுள்ளவர்கள் வெளிமாநிலத்தை சார்ந்தவர்கள். கவர்னர் ஒப்புதல் அளித்துள்ளார்.
முதலமைச்சரின் பரிந்துரை காற்றில் பறக்கவிடப்பட்டுள்ளது. இந்த நியமனத்தில் கவர்னர் தனக்கு பங்கு இல்லை என கூறுவது உண்மைக்கு புறம்பானது. இதற்கு கவர்னர் பதில் சொல்ல வேண்டும்.
கோவில், குடியிருப்பு, பள்ளி அருகில் விதிகளை மீறி 100-க்கும் மேற்பட்ட மதுபான கடைகளை அமைக்க முதலமைச்சர் ரங்கசாமி அனுமதி அளித்துள்ளார். மனு கொடுக்க வந்த மக்களிடம் கூடுதலாக 100 மதுபான கடைகள் வைக்கப்போகிறது என பேசியிருக்கிறார்.
பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகள் தெரிவித்து வரும் நிலையில் முதலமைச்சர் எதற்கும் வாய் திறப்பதில்லை. மணக்குள விநாயகர் கோவில் யானைக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினோம். யானை உயிரிருந்த விவகாரம் தொடர்பாக விசாரணை வைக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளோம்.
பீட்டா அமைப்பு வழக்கு தொடர்ந்தபோது கடந்த கால ஆட்சியில் தகுந்த பாதுகாப்பு கொடுத்தோம். மக்கள் அனைவரின் எண்ணம் கோவிலுக்கு புதிய யானை வாங்க வேண்டும் என்பதுதான்.
தமிழகத்தில் மதசார்பற்ற கூட்டணிக்கு தி.மு.க. தான் தலைமை. ஆனால் புதுவையில் இந்த கூட்டணிக்கு காங்கிரஸ்தான் தலைமை. 10 சதவீத இடஒதுக்கீடுக்கு எதிராக நடைபெற்ற போராட்டம் காங்கிரஸ் தலைமையில்தான் நடைபெற்றது. எந்த கட்சியும் பெரியது, சிறியது இல்லை. எல்லா கட்சிகளுக்கும் பலம் உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
- புதுவை மாநிலத்தில் கடந்த 2 வருடங்களாக பயிர் காப்பீடு செய்த விவசாயிகளுக்கு காப்பீட்டுத் தொகை வழங்குவதில் கால தாமதம் ஏற்படுவதாக புகார்கள் எழுந்துள்ளது.
- கூட்டத்தில் பயிர் காப்பீட்டு திட்டத்தினை செயல்படுத்துவதில் உள்ள பிரச்சினைகள் விரிவாக விவாதிக்கப்பட்டது.
புதுச்சேரி:
புதுவை மாநிலத்தில் கடந்த 2 வருடங்களாக பயிர் காப்பீடு செய்த விவசாயிகளுக்கு காப்பீட்டுத் தொகை வழங்குவதில் கால தாமதம் ஏற்படுவதாக புகார்கள் எழுந்துள்ளது.
பயிர் காப்பீட்டு திட்டத்தினை செயல் படுத்துவதில் உள்ள நிர்வாக சிக்கல்களை களைந்து விவசாயிகளுக்கு காலத்தோடு இழப்பீடு தொகை வழங்கிட, வேளாண் துறை இயக்குநர் அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடந்தது.
வேளாண் இயக்குநர் பாலகாந்தி தலைமை தாங்கினார்.மத்திய வேளாண் அமைச்சகத்திலிருந்து பயிர் காப்பீட்டுத் துறையின் முதன்மை அதிகாரி பிந்து, தேசிய இன்சுரன்ஸ் கம்பெனியின் மண்டல இயக்குநர் நாகராஜன், முதுநிலை மண்டல மேலாளர் ராமசந்திரன், பொது சேவைமைய புதுவை மாவட்ட மேலாளர் இளந்திரையன், இணை வேளாண் இயக்குநர் ஜாகிர் உசேன் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் பயிர் காப்பீட்டு திட்டத்தினை செயல்படுத்துவதில் உள்ள பிரச்சினைகள் விரிவாக விவாதிக்கப்பட்டது. நிலுவையில் உள்ள இழப்பீட்டு தொகையினை டிசம்பர் மாதத்திற்குள் வழங்கிட இன்சுரன்ஸ் கம்பெனிக்கு மத்திய அரசின் முதன்மை அதிகாரி அறிவுறுத்தினார்.
- புதுவையில் சேவை நோக்கோடு தொடங்கப்பட்ட கூட்டுறவு நிறுவனங்களின் சீரழிவுக்கு சுயநலம் ஒன்றையே குறிக்கோளாக கொண்டவர்கள் ஏற்படுத்திய ஆட்கள் திணிப்பு, அதிகார துஷ்பிரயோகம், நிர்வாக சீர்கேடுகளே காரணமாகும்.
- இதனால் புதுவையில் பாண்லே பாலுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து நடந்த ஆய்வு கூட்டத்தில், வாய் புளித்ததோ, மாங்காய் புளித்ததோ என்பது போல முதல்-அமைச்சர் பேசியிருப்பது கடும் கண்டனத்திற்குரியது.
புதுச்சேரி:
புதுவை மாநில அ.தி.மு.க. துணைசெயலாளர் வையாபுரி மணிகண்டன் வெளியிட்டுள்ள அறிக்கை யில் கூறியிருப்பதாவது:-
புதுவையில் சேவை நோக்கோடு தொடங்கப்பட்ட கூட்டுறவு நிறுவனங்களின் சீரழிவுக்கு சுயநலம் ஒன்றையே குறிக்கோளாக கொண்டவர்கள் ஏற்படுத்திய ஆட்கள் திணிப்பு, அதிகார துஷ்பிரயோகம், நிர்வாக சீர்கேடுகளே காரணமாகும்.
இதனாலேயே லாபத்தில் இயங்கிய பாண்லே நிர்வாகம் தற்போது பெரும் நஷ்டத்தை சந்தித்துள்ளது.
பால் உற்பத்தியை பெருக்க எந்தவித தொலைநோக்கு திட்டங்க ளையும் செயல்படுத்தாத என்.ஆர். காங்கிரஸ் அரசால் புதுவையில் ஒரு லட்சம் லிட்டராக இருந்த பால் உற்பத்தி 35 ஆயிரம் லிட்டராக குறைந்தது.
புதுவை மக்களின் தேவைக்காகக அண்டை மாநிலங்களில் கொள்முதல் செய்யப்பட்ட பாலுக்கான நிதியை வழங்காததால் அண்டை மாநில பால் உற்பத்தி யாளர்கள் புதுவைக்கு பால் வழங்குவதை நிறுத்திவிட்டனர்.
இதனால் புதுவையில் பாண்லே பாலுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து நடந்த ஆய்வு கூட்டத்தில், வாய் புளித்ததோ, மாங்காய் புளித்ததோ என்பது போல முதல்-அமைச்சர் பேசியிருப்பது கடும் கண்டனத்திற்குரியது.உங்கள் வருவாயை நீங்கள்தான் பார்த்து க்கொள்ள வேண்டும், அனைத்திற்கும் அரசை எதிர் பார்க்கக்கூடாது என கை கழுவும் வகையில் முதல்- அமைச்சர் கூட்டத்தில் பேசியுள்ளார். இப்படி சொல்வது, அவர் வகிக்கும் பதவிக்கு அழகல்ல.
அத்தியாவசிய தேவையான பாலை தங்கு தடையின்றி வழங்குவது மாநில அரசுகளின் தலையாய கடமையாகும். அனைத்தையும் சுயலாப கண் கொண்டு பார்ப்பவர்கள், சேவை நோக்கோடு தொடங்கப்பட்ட பாண்லே நிறுவனத்தையும் அதே அணுகுமுறையில் பார்ப்பது சரியானதல்ல.
அரசின் நிர்வாக திறமையின்மை மற்றும் செயலற்றதன்மையால் பாண்லேயில் ஏற்படும் கூடுதல் செலவுகளை மக்கள் மீது திணிக்கக்கூடாது. பால் விற்பனை விலையை உயர்த்தாமல் மானியம் வழங்கி பால் விநியோகம் செய்ய முன்வர வேண்டும்.
இதைவிடுத்து பால் விற்பனை விலையை உயர்த்தினால் கட்சி தலைமையின் அனுமதியோடு கடுமையான போராட்டங்களை அ.தி.மு.க. நடத்தும்.
இவ்வாறு வையாபுரி மணிகண்டன் அறிக்கையில் கூறியுள்ளார்.
- உப்பளம் தொகுதிக்கு உட்பட்ட நேதாஜி நகர் 3 அறப்பணி அவ்வை தோட்டத்தில் நகராட்சி இடத்தில் ஆக்கிரமிப்பு செய்துள்ளவர்களை நகராட்சி அப்புறப்படுத்த நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
- அதனைத் தொடர்ந்து திப்புராயப்பேட்டையில் கட்டிக் கொண்டிருக்கும் அடுக்குமாடி குடியிருப்பு வடக்குபுறமும் தெற்குபுறமும் 10 அடி சாலையை விட்டு கட்டும்படி அறிவுறுத்தினார்.
புதுச்சேரி:
உப்பளம் தொகுதிக்கு உட்பட்ட நேதாஜி நகர் 3 அறப்பணி அவ்வை தோட்டத்தில் நகராட்சி இடத்தில் ஆக்கிரமிப்பு செய்துள்ளவர்களை நகராட்சி அப்புறப்படுத்த நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
ஆதலால் அவர்களுக்கு பட்டா வழங்குவது சம்பந்தமாக அனிபால் கென்னடி எம்.எல்.ஏ. அதிகாரிகளுடன் நேரில் ஆய்வு செய்தார். மேலும் அப்பகுதியில் சாலை திருத்தம் மற்றும் ப-வடிவ, யூ-வடிவ வாய்க்கால்களை ஆய்வு மேற்கொண்டு அதனை சட்டமன்ற நிதியின் கீழ் பணி மேற்கொள்ளும்படி அதிகாரியிடம் கூறினார்.
அவ்வை நகர் மெயின் ரோடு மற்றும் திருமூலர் நகர், ஜீவானந்தம்மாள் வீதி, மற்றும் முதல், 2-வது குறுக்குத் தெருக்களில் வாய்க்கால்களையும் சாலை திருத்த பணிகளையும் மேற்கொள்ள கூறினார்.
அதனைத் தொடர்ந்து தமிழ்த்தாய் நகரில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் நடைபெற்றுக் கொண்டி ருக்கும் குளம் மேம்படுத்துதல் பணியினையும் ஆய்வு செய்து பின்னர் அங்குள்ள சாலைகளையும், வாய்க்கால்களையும் சீர் செய்து கொடுக்கும்படி கூறினார்.
அதனைத் தொடர்ந்து திப்புராயப்பேட்டையில் கட்டிக் கொண்டிருக்கும் அடுக்குமாடி குடியிருப்பு வடக்குபுறமும் தெற்குபுறமும் 10 அடி சாலையை விட்டு கட்டும்படி அறிவுறுத்தினார்.
மேலும் ஆய்வு செய்த பகுதிகளில் எரியாத மின்விளக்குகளை சீர் செய்து கொடுக்கும்படி மின்துறை அதிகாரிகளிடம் அலைபேசியில் தெரிவித்தார், மேலும் மலேரியா, டெங்கு போன்ற கொசுக்களால் பரவக்கூடிய கிருமிகள் பொதுமக்களுக்கு பரவாமல் இருக்க விரைந்து கொசு மருந்து தெளிக்கும்படி சுகாதாரத்துறை அதிகாரி யிடம் அனிபால்கென்னடி எம்.எல்.ஏ. கேட்டுக்கொ ண்டார்.
இதில் நகராட்சி உதவி பொறியாளர்பிரபாகரன், இளநிலை பொறியாளர் சண்முகம், தொகுதி செயலாளர் சக்திவேல், ஆதிதிராவிடர் துணை அமைப்பாளர் தங்கவேல், கிளைச் செயலாளர் காலப்பன், மற்றும் தி.மு.க. நிர்வாகிகள் ரவி, வடிவேலன், மோரிஸ், ரகுமான், கார்த்திக் ஆகியோர் கலந்து கொண்டனர்.
- புதுவை தந்தை பெரியார் நகரில் அமைந்துள்ள நியூ லிட்டில் கிட்ஸ் மழலையர் பள்ளியில் பாரம்பரிய இயற்கை உணவு திருவிழா நடைபெற்றது.
- பள்ளி முதல்வர் கவிதா சுந்தர்ராஜன் விழாவிற்கு முன்னிலை வகித்தார்.
புதுச்சேரி:
புதுவை தந்தை பெரியார் நகரில் அமைந்துள்ள நியூ லிட்டில் கிட்ஸ் மழலையர் பள்ளியில் பாரம்பரிய இயற்கை உணவு திருவிழா நடைபெற்றது.
விழாவிற்கு டாக்டர் வசந்தி நேரு தலைமை விருந்தினராக கலந்து கொண்டு மழலையர்களின் பாரம்பரியமான இயற்கை உணவுகளை சுவைத்து பாராட்டினார்.
புதுவை மாநில கோஜூரியோ கராத்தே சங்க மாநில செயலாளர் கராத்தே சுந்தர்ராஜன், லைன்ஸ் கிளப் உறுப்பினர் தேவிகா ஆகியோர் கலந்து கொண்டு மழலையர்களுக்கு இயற்கை உணவின் அவசியத்தை விளக்கி கூறினர்.
பள்ளி முதல்வர் கவிதா சுந்தர்ராஜன் விழாவிற்கு முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக மழலையர்கள் கொண்டு வந்த இயற்கை பாரம்பரி யமான உணவுகளை காட்சிப்படுத்தினர். இது அனைவரையும் கவர்ந்தது.
விழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் நியூ லிட்டில் கிட்ஸ் மழலையர் பள்ளி ஆசிரியைகள் லட்சுமி பிரியா , மகாலட்சுமி , சோனியா , சித்ரா ஆகியோர் செய்திருந்தனர்.
- கோட்டக்குப்பம் நகராட்சிக்குட்பட்ட பர்கத் நகர் அங்கன்வாடி மையத்தில் மின்னட்டை ஆதார் எண்ணுடன் இணைக்கும் முகாம் நடந்தது. முகாமை கோட்டக்குப்பம் நகர் மன்ற தலைவர் எஸ்.எஸ்.ஜெயமூர்த்தி தொடங்கி வைத்தார்.
- முகாமில் அப்பகுதி சேர்ந்த பொதுமக்கள் ஏராளமானோர் முகாமில் கலந்து கொண்டு பயன்பெற்று வருகின்றனர்.
புதுச்சேரி:
கோட்டக்குப்பம் நகராட்சிக்குட்பட்ட பர்கத் நகர் அங்கன்வாடி மையத்தில் மின்னட்டை ஆதார் எண்ணுடன் இணைக்கும் முகாம் நடந்தது. முகாமை கோட்டக்குப்பம் நகர் மன்ற தலைவர் எஸ்.எஸ்.ஜெயமூர்த்தி தொடங்கி வைத்தார்.
கோட்டக்குப்பம் மின்வாரிய இளமின் என்ஜினீயர் ஆதிமூலம் தலைமை வகித்தார். நிகழ்ச்சி ஏற்பாட்டினை 22-வது வார்டு உறுப்பினர் நாசர் அலி, மற்றும் வார்டு செயலாளர் கமால் ஹசேன் செய்திருந்தனர்.
முகாமில் அப்பகுதி சேர்ந்த பொதுமக்கள் ஏராளமானோர் முகாமில் கலந்து கொண்டு பயன்பெற்று வருகின்றனர்.
- திருக்காஞ்சியில் பிரசித்தி பெற்ற கங்கை வராக நதீஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஒரு கோடி முறை பஞ்சாட்சர மந்திர பாராயணம் நிகழ்ச்சி கடந்த ஒரு மாத காலமாக நடந்து வந்தது.
- விழாவில் பஞ்சாட்சர மந்திரம் கூறிய சிவனடியார்களுக்கு சான்றிதழ் மற்றும் சால்வை அணிவித்து பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
புதுச்சேரி:
திருக்காஞ்சியில் பிரசித்தி பெற்ற கங்கை வராக நதீஸ்வரர் கோவில் உள்ளது.
இந்த கோவிலில் ஒரு கோடி முறை பஞ்சாட்சர மந்திர பாராயணம் நிகழ்ச்சி கடந்த ஒரு மாத காலமாக நடந்து வந்தது. அதன் நிறை வு விழா கோவிலில் நடந்தது. விழாவில் பஞ்சாட்சர மந்திரம் கூறிய சிவனடியார்களுக்கு சான்றிதழ் மற்றும் சால்வை அணிவித்து பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
நிகழ்ச்சியில் கோவில் சிறப்பு அதிகாரி சீதாராமன், செ யல் அதிகாரி சதீஷ், தலைமை அர்ச்சகர் சரவண சிவாச்சாரியார் மற்றும் முக்கிய பிரமுகர்கள் சக்தி முருகன், மோகன், நடராஜன் மணிமாறன், பன்னீர்செ ல்வம் உள்பட பலர் கலந்து கொ ண்டனர்.






