என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    பால்  விலையை உயர்த்தினால் போராட்டம்-அ.தி.மு.க. அறிவிப்பு
    X

    கோப்பு படம்.

    பால் விலையை உயர்த்தினால் போராட்டம்-அ.தி.மு.க. அறிவிப்பு

    • புதுவையில் சேவை நோக்கோடு தொடங்கப்பட்ட கூட்டுறவு நிறுவனங்களின் சீரழிவுக்கு சுயநலம் ஒன்றையே குறிக்கோளாக கொண்டவர்கள் ஏற்படுத்திய ஆட்கள் திணிப்பு, அதிகார துஷ்பிரயோகம், நிர்வாக சீர்கேடுகளே காரணமாகும்.
    • இதனால் புதுவையில் பாண்லே பாலுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து நடந்த ஆய்வு கூட்டத்தில், வாய் புளித்ததோ, மாங்காய் புளித்ததோ என்பது போல முதல்-அமைச்சர் பேசியிருப்பது கடும் கண்டனத்திற்குரியது.

    புதுச்சேரி:

    புதுவை மாநில அ.தி.மு.க. துணைசெயலாளர் வையாபுரி மணிகண்டன் வெளியிட்டுள்ள அறிக்கை யில் கூறியிருப்பதாவது:-

    புதுவையில் சேவை நோக்கோடு தொடங்கப்பட்ட கூட்டுறவு நிறுவனங்களின் சீரழிவுக்கு சுயநலம் ஒன்றையே குறிக்கோளாக கொண்டவர்கள் ஏற்படுத்திய ஆட்கள் திணிப்பு, அதிகார துஷ்பிரயோகம், நிர்வாக சீர்கேடுகளே காரணமாகும்.

    இதனாலேயே லாபத்தில் இயங்கிய பாண்லே நிர்வாகம் தற்போது பெரும் நஷ்டத்தை சந்தித்துள்ளது.

    பால் உற்பத்தியை பெருக்க எந்தவித தொலைநோக்கு திட்டங்க ளையும் செயல்படுத்தாத என்.ஆர். காங்கிரஸ் அரசால் புதுவையில் ஒரு லட்சம் லிட்டராக இருந்த பால் உற்பத்தி 35 ஆயிரம் லிட்டராக குறைந்தது.

    புதுவை மக்களின் தேவைக்காகக அண்டை மாநிலங்களில் கொள்முதல் செய்யப்பட்ட பாலுக்கான நிதியை வழங்காததால் அண்டை மாநில பால் உற்பத்தி யாளர்கள் புதுவைக்கு பால் வழங்குவதை நிறுத்திவிட்டனர்.

    இதனால் புதுவையில் பாண்லே பாலுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து நடந்த ஆய்வு கூட்டத்தில், வாய் புளித்ததோ, மாங்காய் புளித்ததோ என்பது போல முதல்-அமைச்சர் பேசியிருப்பது கடும் கண்டனத்திற்குரியது.உங்கள் வருவாயை நீங்கள்தான் பார்த்து க்கொள்ள வேண்டும், அனைத்திற்கும் அரசை எதிர் பார்க்கக்கூடாது என கை கழுவும் வகையில் முதல்- அமைச்சர் கூட்டத்தில் பேசியுள்ளார். இப்படி சொல்வது, அவர் வகிக்கும் பதவிக்கு அழகல்ல.

    அத்தியாவசிய தேவையான பாலை தங்கு தடையின்றி வழங்குவது மாநில அரசுகளின் தலையாய கடமையாகும். அனைத்தையும் சுயலாப கண் கொண்டு பார்ப்பவர்கள், சேவை நோக்கோடு தொடங்கப்பட்ட பாண்லே நிறுவனத்தையும் அதே அணுகுமுறையில் பார்ப்பது சரியானதல்ல.

    அரசின் நிர்வாக திறமையின்மை மற்றும் செயலற்றதன்மையால் பாண்லேயில் ஏற்படும் கூடுதல் செலவுகளை மக்கள் மீது திணிக்கக்கூடாது. பால் விற்பனை விலையை உயர்த்தாமல் மானியம் வழங்கி பால் விநியோகம் செய்ய முன்வர வேண்டும்.

    இதைவிடுத்து பால் விற்பனை விலையை உயர்த்தினால் கட்சி தலைமையின் அனுமதியோடு கடுமையான போராட்டங்களை அ.தி.மு.க. நடத்தும்.

    இவ்வாறு வையாபுரி மணிகண்டன் அறிக்கையில் கூறியுள்ளார்.

    Next Story
    ×