என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    திட்டப்பணிகளை கென்னடி எம்.எல்.ஏ. ஆய்வு
    X

    திட்டப்பணிகளை அதிகாரிகளுடன் கென்னடி எம்.எல்.ஏ. ஆய்வு செய்த காட்சி.

    திட்டப்பணிகளை கென்னடி எம்.எல்.ஏ. ஆய்வு

    • உப்பளம் தொகுதிக்கு உட்பட்ட நேதாஜி நகர் 3 அறப்பணி அவ்வை தோட்டத்தில் நகராட்சி இடத்தில் ஆக்கிரமிப்பு செய்துள்ளவர்களை நகராட்சி அப்புறப்படுத்த நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
    • அதனைத் தொடர்ந்து திப்புராயப்பேட்டையில் கட்டிக் கொண்டிருக்கும் அடுக்குமாடி குடியிருப்பு வடக்குபுறமும் தெற்குபுறமும் 10 அடி சாலையை விட்டு கட்டும்படி அறிவுறுத்தினார்.

    புதுச்சேரி:

    உப்பளம் தொகுதிக்கு உட்பட்ட நேதாஜி நகர் 3 அறப்பணி அவ்வை தோட்டத்தில் நகராட்சி இடத்தில் ஆக்கிரமிப்பு செய்துள்ளவர்களை நகராட்சி அப்புறப்படுத்த நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

    ஆதலால் அவர்களுக்கு பட்டா வழங்குவது சம்பந்தமாக அனிபால் கென்னடி எம்.எல்.ஏ. அதிகாரிகளுடன் நேரில் ஆய்வு செய்தார். மேலும் அப்பகுதியில் சாலை திருத்தம் மற்றும் ப-வடிவ, யூ-வடிவ வாய்க்கால்களை ஆய்வு மேற்கொண்டு அதனை சட்டமன்ற நிதியின் கீழ் பணி மேற்கொள்ளும்படி அதிகாரியிடம் கூறினார்.

    அவ்வை நகர் மெயின் ரோடு மற்றும் திருமூலர் நகர், ஜீவானந்தம்மாள் வீதி, மற்றும் முதல், 2-வது குறுக்குத் தெருக்களில் வாய்க்கால்களையும் சாலை திருத்த பணிகளையும் மேற்கொள்ள கூறினார்.

    அதனைத் தொடர்ந்து தமிழ்த்தாய் நகரில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் நடைபெற்றுக் கொண்டி ருக்கும் குளம் மேம்படுத்துதல் பணியினையும் ஆய்வு செய்து பின்னர் அங்குள்ள சாலைகளையும், வாய்க்கால்களையும் சீர் செய்து கொடுக்கும்படி கூறினார்.

    அதனைத் தொடர்ந்து திப்புராயப்பேட்டையில் கட்டிக் கொண்டிருக்கும் அடுக்குமாடி குடியிருப்பு வடக்குபுறமும் தெற்குபுறமும் 10 அடி சாலையை விட்டு கட்டும்படி அறிவுறுத்தினார்.

    மேலும் ஆய்வு செய்த பகுதிகளில் எரியாத மின்விளக்குகளை சீர் செய்து கொடுக்கும்படி மின்துறை அதிகாரிகளிடம் அலைபேசியில் தெரிவித்தார், மேலும் மலேரியா, டெங்கு போன்ற கொசுக்களால் பரவக்கூடிய கிருமிகள் பொதுமக்களுக்கு பரவாமல் இருக்க விரைந்து கொசு மருந்து தெளிக்கும்படி சுகாதாரத்துறை அதிகாரி யிடம் அனிபால்கென்னடி எம்.எல்.ஏ. கேட்டுக்கொ ண்டார்.

    இதில் நகராட்சி உதவி பொறியாளர்பிரபாகரன், இளநிலை பொறியாளர் சண்முகம், தொகுதி செயலாளர் சக்திவேல், ஆதிதிராவிடர் துணை அமைப்பாளர் தங்கவேல், கிளைச் செயலாளர் காலப்பன், மற்றும் தி.மு.க. நிர்வாகிகள் ரவி, வடிவேலன், மோரிஸ், ரகுமான், கார்த்திக் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×