என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    • தென்மண்டல சி.பி.எஸ்.இ. பள்ளிகள் அளவிலான ஜூடோ போட்டிகள் திருப்பூர் பாரதி வித்யா பவன் பள்ளியில் நடந்தது.
    • இதில் தமிழகம், புதுவை, அந்தமான் நிகோபார், தெலுங்கானா, ஆந்திராவை சேர்ந்த மாணவ-மாணவிகள் கலந்துகொண்டனர்.

    புதுச்சேரி:

    தென்மண்டல சி.பி.எஸ்.இ. பள்ளிகள் அளவிலான ஜூடோ போட்டிகள் திருப்பூர் பாரதி வித்யா பவன் பள்ளியில் நடந்தது.

    இதில் தமிழகம், புதுவை, அந்தமான் நிகோபார், தெலுங்கானா, ஆந்திராவை சேர்ந்த மாணவ-மாணவிகள் கலந்துகொண்டனர். போட்டிகளில் 36 கிலோ எடை பிரிவில் புதுவையை சேர்ந்த தி ஸ்டடி பள்ளி மாணவர் ரக்ஷன் திறமையை வெளிப்படுத்தி முதல் பரிசாக தங்கம் வென்று சாதனை படைத்தார்.

    மாணவரின் சாதனையை தலைமை ஜூடோ பயிற்சியாளர் சென்சாய் ராமமூர்த்தி, பெற்றோர்கள், பள்ளி ஆசிரியர்கள் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.

    • உலக நாடுகளின் அங்கீகரிக்கப்பட்ட தேசிய கீதங்களாக 193 உள்ளன.
    • 196 நாடுகளின் தேசிய கீதங்களை பாடும் சிறுமியின் முயற்சியை உலக சாதனையில் இடம்பெற அவரது பெற்றோர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

    புதுச்சேரி:

    சென்னையை சேர்ந்த ஹேமந்த் - மோகனப்பிரியா தம்பதியின் மகள் சுபிக்ஷா. 12 வயதான சுபிக்ஷாவை பாடகராக்க வேண்டும் என பெற்றோர் விரும்பினர். பல நாடுகளின் தேசிய கீதத்தை சொல்லி கொடுத்தனர்.

    உலக நாடுகளின் அங்கீகரிக்கப்பட்ட தேசிய கீதங்களாக 193 உள்ளன. சிறுமி அதையும் தாண்டி கூடுதலாக 3 நாடுகளின் தேசிய கீதங்களையும் சேர்த்து 196 தேசிய கீதங்களை சரளமாக பாடி அசத்தி வருகிறார். புதுவை வந்த இந்த சிறுமி தனது பெற்றோருடன் முதலமைச்சர் ரங்கசாமியை சட்டப்பேரவையில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.

    அப்போது முதலமைச்சர் ரங்கசாமி முன்னிலையில் ஒரு சில நாடுகளின் தேசிய கீதங்களை பாடினார். இதைக்கேட்ட முதலமைச்சர் ரங்கசாமி சிறுமியின் திறமையை பாராட்டி வாழ்த்துக்களை கூறினார்.

    196 நாடுகளின் தேசிய கீதங்களை பாடும் சிறுமியின் முயற்சியை உலக சாதனையில் இடம்பெற அவரது பெற்றோர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்த சந்திப்பின்போது பத்மஸ்ரீ டெரகோட்டா முனுசாமி உடனிருந்தார்.

    • காரைக்கால் மாவட்டத்தில் மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்லவில்லை.
    • காரைக்கால் கடலில் இன்று வழக்கத்தை விட கடல் சீற்றம் அதிகமாக உள்ளது.

    காரைக்கால்:

    வங்க கடலில் புதிய புயல் சின்னம் உருவாகி உள்ளதால் மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்ல கூடாது என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்து உள்ளது.

    அதன்படி காரைக்கால் மாவட்ட மீன்வளத்துறை அதிகாரிகள் காரைக்கால் பகுதியை சேர்ந்த 11 கிராமங்களில் உள்ள மீனவர்களுக்கு யாரும் கடலுக்கு செல்ல கூடாது என எச்சரிக்கை விடுத்து உள்ளனர்.

    இதையொட்டி காரைக்கால் மாவட்டத்தில் மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்லவில்லை. இந்த பகுதியில் 8 ஆயிரம் மீனவர்கள் கடலுக்கு செல்லாததால் விசை படகுகள் அனைத்தும் துறைமுக பகுதியில் நிறுத்தப்பட்டு உள்ளது.

    பைபர் படகுகள் அரசலாற்றங்கரை மற்றும் துறைமுக பகுதியில் மீனவர்கள் நிறுத்தி உள்ளனர்.

    காரைக்காலில் கடலில் இன்று வழக்கத்தை விட கடல் சீற்றம் அதிகமாக உள்ளது. எனவே கடலுக்கு சென்ற மீனவர்கள் உடனே கரை திரும்பும்படி அறிவுறுத்தப்பட்டு உள்ளனர். அதன்படி மீனவர்கள் கரை திரும்பிய வண்ணம் உள்ளனர்.

    • மாநில அளவிலான அறிவியல் கண்காட்சியை காண களப்பயணம் மேற்கொண்டனர்.
    • இதில் 9-ம் வகுப்பு மாணவர்கள் மற்றும் 6,7,8ஆகிய வகுப்புகளில் இருந்து தலா 4பேர் வீதம் 12 பேர் சென்றனர்.

    புதுச்சேரி:

    பாகூர் கொம்யூன் கீழ்பரிக்கல் பட்டு அரசு உயர்நிலைப்பள்ளி மாணவ-மாணவிகள் புதுவை அரசு கல்வித்துறையின் மூலம் நடைபெற்ற மண்டல மற்றும் மாநில அளவிலான அறிவியல் கண்காட்சியை காண களப்பயணம் மேற்கொண்டனர்.

    இதில் 9-ம் வகுப்பு மாணவர்கள் மற்றும் 6,7,8ஆகிய வகுப்புகளில் இருந்து தலா 4பேர் வீதம் 12 பேர் சென்றனர்.

    மாணவர்களை பள்ளி தலைமை ஆசிரியர் ராமலிங்கம் வழியனுப்பி வைத்தார். அறிவியல் ஆசிரியை வரலட்சுமி, வில்லியம், பள்ளி பொறுப்பா சிரியர் துரைசாமி, உடற்கல்வி ஆசிரியை ஜெயபாரதி, சரண்யா ஆகியோர் மாணவர்களை அழைத்து சென்றனர்.

    • அயோடின் சத்து குறைவு நோய்கள் தடுப்பு திட்டம் மூலம் அயோடின் குறைபாடு, அதைப் போக்கும் வழிகள், மற்றும் குறைபாட்டினால் ஏற்படும் பாதிப்புகள் குறித்த கருத்தரங்கு நடைபெற்றது.
    • பள்ளியின் துணை முதல்வர் ஆஷா ராணி தலைமை தாங்கினார்.

    புதுச்சேரி:

    புதுவை கம்பன் அரசு மேல்நிலைப் பள்ளியில் புதுவை நல வழித்துறை சார்பாக அயோடின் சத்து குறைவு நோய்கள் தடுப்பு திட்டம் மூலம் அயோடின் குறைபாடு, அதைப் போக்கும் வழிகள், மற்றும் குறைபாட்டினால் ஏற்படும் பாதிப்புகள் குறித்த கருத்தரங்கு நடைபெற்றது.

    பள்ளியின் துணை முதல்வர் ஆஷா ராணி தலைமை தாங்கினார். பட்டதாரி ஆசிரியை விஜய சாமுண்டீஸ்வரி வரவேற்றார்.

    நெட்டப்பாக்கம் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அதிகாரி டாக்டர் அபர்ணாதேவி கலந்து கொண்டு அயோடின் குறைபாட்டால் ஏற்படும் உடல் உபாதைகள் போன்றவற்றை பற்றி மாணவர்களுக்கு விளக்கிக் கூறினார்.

    முடிவில் பள்ளி மாணவர்களுக்கு கட்டுரை போட்டி நடத்தப்பட்டு வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

    வரலாற்று விரிவு ரையாளர் கார்த்திகேயன் நன்றி கூறினார். விழா விற்கான ஏற்பாடுகளை உடற்கல்வி ஆசிரியர்கள் சதீஷ் சித்தானந்தம் தமிழ் பட்டதாரி ஆசிரியர்கள் கமலா, லதா மற்றும் நுண்கலை ஆசிரியர் ராஜாக்கண்ணு ஆகியோர் செய்திருந்தனர்.

    • புஸ்சி வீதியில் மிதமான மழைக்காலங்களிலே தண்ணீர் பெருமளவில் தேங்கி நிற்கிறது.
    • இதனால் அப்பகுதி குடியிருப்புகளில் தண்ணீர் சென்று பெரும் பாதிப்பு ஏற்படுகிறது.

    புதுச்சேரி:

    புஸ்சி வீதியில் மிதமான மழைக்காலங்களிலே தண்ணீர் பெருமளவில் தேங்கி நிற்கிறது. இதனால் அப்பகுதி குடியிருப்புகளில் தண்ணீர் சென்று பெரும் பாதிப்பு ஏற்படுகிறது.

    முன்பு இந்திராகாந்தி சதுக்கத்தில் மழைநீர் தேங்கி நிற்கும். ஆனால் பொதுப்பணித்துறை சிறப்பு கவனம் செலுத்தி இப்போது மழைநீர் தேங்காத வண்ணம் வடிக்கால் சீரமைப்பு பணிகள் மேற்கொண்டது போல் புஸ்சி வீதியிலும் மழைநீர் தேங்காத வண்ணம் வடிக்கால் சீரமைக்கும் பணிகள் மேற்கொண்டும் வருகிற நாட்களில் மக்களுக்கு எந்தவித பாதிப்பும் மழைக்கால ங்களில் ஏற்படாத வகையில் பணிகளை முடித்துக் கொடுக்க வேண்டும் என்று பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் வல்லவனிடம் அனிபால்கென்னடி எம்.எல்.ஏ. நேரில் சந்தித்து கோரிக்கை வைத்தார்.

    அதற்கு அதிகாரி கண்டிப்பாக வரும் மழைக்காலங்களில் மழைநீர் தேங்காத வகையில் பணிகளை முடித்து தருவதாக உறுதியளித்தார்.

    அதனைத் தொடர்ந்து டாக்டர் அம்பேத்கரின் 66-வது நினைவு தினத்தை முன்னிட்டு உப்பளம் டாக்டர் அம்பேத்கர் சாலையில் அமைந்துள்ள டாக்டர் அம்பேத்கர் பூங்காவை முறைப்படுத்தும் படியும், சேதமடைந்த படிக்கட்டுகளை சீர் செய்யும் படியும் கென்னடி எம்.எல்.ஏ. செயற்பொறியாளரிடம் கோரிக்கை வைத்திருந்தார். அதன் தொடர்ச்சியாக பூங்கா சுத்தம் செய்யப்பட்டு படிக்கட்டுகள் சரி செய்யப்பட்டது. அதனை எம்.எல்.ஏ. நேரில் சென்று ஆய்வு செய்தார்.

    • மத்திய சமையல் கூடத்தில் முட்டை அவிக்கப்பட்டு 293 பள்ளிகளில் உள்ள 50 ஆயிரம் மாணவர்களுக்கு ஒரு லட்சம் முட்டை அனுப்பும் பணி இன்று மீண்டும் தொடங்கியது.
    • அரசு மற்றும் தனியார் பள்ளி, கல்லூரிகளில் பயிலும் மாணவர்கள் பஸ்களில் இலவச பயணம் செய்யலாம்.

    புதுச்சேரி:

    புதுவை அரசு கல்வித்துறை சார்பில் அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு வாரத்திற்கு 2 முட்டை மதிய உணவில் வழங்கப்பட்டு வந்தது.

    கொரோனா காலத்தில் பள்ளிகள் மூடப்பட்டது. இதனால் மாணவர்களுக்கு மதிய உணவுக்கு பதிலாக அரிசியும், பணமும் வழங்கப்பட்டது. கொரோனாவுக்கு பிறகு பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டது. ஆனால் முட்டை வழங்கப்படவில்லை.

    இதனிடையே பள்ளி மாணவர்களுக்கு மதிய உணவு வழங்கும் திட்டத்தை அக்சயா என்ற தன்னார்வ நிறுவனம் ஏற்றுக்கொண்டது. இந்த தன்னார்வ நிறுவனம் சைவ உணவை மட்டும்தான் வழங்கி வருகிறது. இதனால் மாணவர்களுக்கு முட்டை கிடைக்கவில்லை. அதேநேரத்தில் பள்ளி மாணவர்களுக்கு முட்டையுடன் மதிய உணவு வழங்க அரசியல் கட்சியினர் வலியுறுத்தினர்.

    இதையடுத்து இன்று முதல் மாணவர்களுக்கு பள்ளிகளில் முட்டை வழங்கப்பட்டது. மத்திய சமையல் கூடத்தில் முட்டை அவிக்கப்பட்டு 293 பள்ளிகளில் உள்ள 50 ஆயிரம் மாணவர்களுக்கு ஒரு லட்சம் முட்டை அனுப்பும் பணி இன்று மீண்டும் தொடங்கியது.

    இதற்கான பணியை பள்ளி கல்வித்துறை துணை இயக்குனர் கொஞ்சிமொழி குமரன் நேரில் பார்வையிட்டு அனைத்து பள்ளிகளுக்கும் அனுப்பி வைக்கும் பணியை தொடங்கி வைத்தார்.

    வாரத்தில் 2 நாட்கள் முட்டை வழங்கப்படுகிறது. முதல் நாள் 147 பள்ளி மாணவர்களுக்கும் அடுத்து 146 பள்ளி மாணவர்களுக்கும் என சுழற்சி முறையில் கொடுக்கப்பட உள்ளது.

    இதேபோல கொரோனா முடிவுற்று பள்ளி தொடங்கிய பிறகு மாணவர்களுக்கு இயக்கப்படும் ஒரு ரூபாய் கட்டண பஸ் இயக்கப்படவில்லை. இதனால் பள்ளி மாணவர்கள் கட்டணம் செலுத்தி பள்ளி, கல்லூரிக்கு சென்று வந்தனர். பஸ்களை மீண்டும் இயக்க வேண்டும் என அரசியல் கட்சிகள், இயக்கங்கள் வலியுறுத்தி வந்தன.

    இதையடுத்து பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு கட்டணமின்றி இலவச பஸ் இயக்கப்படும் என கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் அறிவித்தார். இதன்படி இன்று முதல் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு இலவச பஸ் இயக்கப்படுகிறது.

    இந்த இலவச பஸ் சேவையை பிற்பகலில் கவர்னர் தமிழிசை தொடங்கி வைத்தார். அரசு மற்றும் தனியார் பள்ளி, கல்லூரிகளில் பயிலும் மாணவர்கள் பஸ்களில் இலவச பயணம் செய்யலாம்.

    நிகழ்ச்சியில் முதல்-அமைச்சர் ரங்கசாமி, அமைச்சர்கள் நமச்சிவாயம், லட்சுமிநாராயணன், சாய்.ஜெ.சரவணன்குமார் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

    புதுவை அரசின் செய்தி விளம்பரத்துறை சார்பில் மோடி 20, அம்பேத்கரும், மோடியும் என்ற 2 புத்தக வெளியீட்டு விழா காமராஜர் மணிமண்டபத்தில் நடந்தது.

    புதுச்சேரி:

    புதுவை அரசின் செய்தி விளம்பரத்துறை சார்பில் மோடி 20, அம்பேத்கரும், மோடியும் என்ற 2 புத்தக வெளியீட்டு விழா காமராஜர் மணிமண்டபத்தில் நடந்தது.

    விழாவில் அரசு செயலர் வல்லவன் வரவேற்றார். மத்திய மந்திரி எல்.முருகன் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். புதுவை கவர்னர் தமிழிசை நூல்களை வெளியிட, முதல்-அமைச்சர் ரங்கசாமி பெற்றுக் கொண்டார்.

    விழாவில் சபாநாயகர் ஏம்பலம் செல்வம், அமைச்சர்கள் நமச்சிவாயம், லட்சுமிநாராயணன், தேனீ.ஜெயக்குமார், சாய்.ஜெ.சரவணன்குமார், துணை சபாநாயகர் ராஜவேலு, எம்.எல்.ஏ.க்கள் கல்யாணசுந்தரம், ஜான்குமார், ரிச்சர்ட், அசோக்பாபு, தலைமை செயலர் ராஜீவ்வர்மா உட்பட பலர் கலந்துகொண்டனர்.

    விழாவில் முதல்-அமைச்சர் ரங்கசாமி பேசியதாவது:-

    ஆங்கிலத்தில் எழுதப்பட்ட புத்தகத்தை எல்லோரும் படிக்க முடியாது. எனவே நாமெல்லாம் படிப்பதற்காக தமிழில் மொழி பெயர்த்து வழங்கியுள்ளனர். 2001-ல் குஜராத் முதல்-அமைச்சராக மோடி இருந்தார். அப்போது நான் புதுவையின் முதல்-அமைச்சராக காங்கிரஸ் சார்பில் இருந்தேன்.

    மத்திய அரசு சார்பில் நடந்த கூட்டங்களில் நானும், அவரும் பங்கேற்றுள்ளோம். கூட்டத்திற்கு வரும்போது மிக சாதாரணமாகவும், எளிமையாகவும் வருவார். தனக்கான நேரம் வரும்போது ஆணித்தரமாகவும், அச்சமின்றியும் பேசுவார். அப்போது காங்கிரஸ் ஆட்சி இருந்ததால் கூட்டத்தில் பங்கேற்பவர்கள் நீங்கள் பிரதமராகி இதையெல்லாம் செய்யுங்கள் என சொல்வார்கள்.

    13 ஆண்டுக்கு பிறகு அது நிறைவேறிவிட்டது. குஜராத் மாநிலத்தின் வளர்ச்சிக்காக அவர் செய்த திட்டங்கள், அவரை பிரதமராக உயர்த்தியுள்ளது. பிரதமராக உயர்ந்த பிறகும் நாட்டின் வளர்ச்சிக்கு பாடுபட்டுள்ளார். நாட்டின் உள்கட்டமைப்பை மேம்படுத்த அதிக கவனம் செலுத்துகிறார்.

    இன்றைக்கு உலகிற்கே தலைமை தாங்கும் நாடாக இந்தியாவை கொண்டு வந்துள்ளார். அவரின் கடின உழைப்பு, பக்திதான் இதற்கு காரணம். குஜராத்தில் சட்டமன்ற தேர்தல் நடந்தபோது காங்கிரஸ் சார்பில் அவர் தொகுதியில்நான் பிரச்சாரம் செய்தேன்.

    அடுத்து நடந்த மத்திய அரசு கூட்டத்தில் நான் பங்கேற்ற போது அதை சுட்டிக்காட்டி என் முதுகில் தட்டி உன் கட்சி வேலையை செய்தாய் என கூறினார்.

    அவருக்கு என் மீது பிரியம் உண்டு. அவரை சந்திக்கும்போதெல்லாம் புதுவைக்கு மாநில அந்தஸ்து வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வருகிறேன். அவர் மாநில அந்தஸ்தை நிச்சயமாக வழங்குவார் என்ற நம்பிக்கை உள்ளது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • தமிழக முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் 6-ம் ஆண்டு நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது.
    • இதேபோல, முன்னாள் எம்.எல்.ஏ. ஓம்சக்தி சேகர் தலைமையில் முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா நினைவுநாள் அனுசரிக்கப்பட்டது.

    புதுச்சேரி:

    தமிழக முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் 6-ம் ஆண்டு நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது.

    புதுவை மாநில அ.தி.மு.க. சார்பில் உப்பளம் தலைமை அலுவலகத்தில் அவைத்தலைவர் அன்பானந்தம் முன்னிலையில் மாநில செயலாளர் அன்பழகன் தலைமையில் ஜெயலலிதா உருவப்படத்திற்கு

    அ.தி.மு.க.வினர் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.

    பின்னர் அங்கிருந்து ஊர்வலமாக புறப்பட்டு கடற்கரை சாலையில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த ஜெயலலிதா படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.

    நிகழ்ச்சியில் முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் பாஸ்கர், நடராசன், நிர்வாகிகள் வீரம்மாள், கணேசன், மகாதேவி, திருநாவுக்கரசு, ராஜாராமன், பொருளாளர் ரவிபாண்டுரங்கன், அன்பழக உடையார், கணேசன், எம்.ஏ.கே. கருணாநிதி, மூர்த்தி, கிருஷ்ணமூர்த்தி, சிவாலயா இளங்கோ, மருதமலையப்பன், பாப்புசாமி உட்பட பலர் கலந்துகொண்டனர்.

    இதேபோல, முன்னாள் எம்.எல்.ஏ. ஓம்சக்தி சேகர் தலைமையில் முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா நினைவுநாள் அனுசரிக்கப்பட்டது. 100 அடி சாலையில் உள்ள அவரின் சிலைக்கு ஓம்சக்திசேகர் மாலை அணிவித்து உருவப்படத்திற்கு அஞ்சலி செலுத்தினார்.

    அதனை தொடர்ந்து மாநில நிர்வாகிகளும் தொண்டர்களும், பொதுமக்களும், அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து கட்சி அலுவலகத்தில் ெஜயலலிதா உருவப்படத்திற்கு தூவி அஞ்சலி செலுத்தினார்.

    நிகழ்ச்சியில் நிர்வாகிகள் சதாசிவம், கணேசன், கோவிந்தம்மாள், சங்கர் உடையார், மாசிலா குப்புசாமி, மலை செல்வராஜ், முருகதாஸ், லட்சுமணன், வெரோனிகா, புகழ் பாரி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    முத்தியால்பேட்டை தலைமை அலுவலகத்தில் அ.தி.மு.க. மாநில துணை செயலாளர் வையாபுரி மணிகண்டன் தலைமையில் ஜெயலலிதா உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. பின்னர் அங்கிருந்து கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள், ஊர்பிரமுகர்கள் ஊர்வலமாக காந்தி வீதியில் உள்ள திருக்குறள் மணிக்கூண்டுக்கு வந்தனர்.

    அங்கு வண்ண மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த ஜெயலலிதா உருவப்படத்திற்கு வையாபுரி மணிகண்டன் மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தினார். தொடர்ந்து நிர்வாகிகள், தொண்டர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின்னர் ஏழைகளுக்கு வையாபுரி மணிகண்டன் அன்னதானம் வழங்கினார்.

    தொடர்ந்து வில்லியனுரில் வண்ண மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த ெஜயலலிதாவின் உருவப்ப டத்துக்கு வையாபுரி மணிகண்டன், தலைமையில் நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தனர்.நிகழ்ச்சியில் அதிமுக கிழக்கு மாநில நிர்வாகிகள் பழனிசாமி, கஜேந்திரன், உதயசூரியன், மோகன், முருகேசன், விஸ்வநாதன், அந்துவான், மேற்கு மாநில நிர்வாகிகள் வில்லியனூர் முன்னாள் தொகுதி செயலாளர் மணி, இளைஞரணி செயலாளர் விக்னேஷ் காசிநாதன், பொதுக்குழு உறுப்பினர் செல்வம், தொகுதி கழக செயலாளர் கோபால், தர்மலிங்கம், மாநில பாசறை துணை செயலாளர் அஜய் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

    காக்கையன்தோப்பு கிளை அ.தி.மு.க. சார்பில் அங்குள்ள எம்.ஜி.ஆர். சிலை அருகே அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த ஜெயலலிதா உருவபடத்துக்கு எம்.ஜி.ஆர். அமைப்பு குழு தலைவர் மாசிலா குப்புசாமி தலைமையில் மலரஞ்சலி செலுத்தப்பட்டது.

    நிகழ்ச்சியில் முன்னாள் தொகுதி அவைத்தலைவர் குமரன், எம்.ஜி.ஆர். சிலை அமைப்பு குழு நிர்வாகி சரவணன், கதிர்வேல், ஜெயலட்சுமி, நடராஜன், சுப்புராயன், காண்டீபன், ராஜலட்சுமி ராமசாமி, சேகர் என்ற வீரப்பன், மோகன்ராஜ், மகாலிங்கம், பரமசிவம், ராமசந்திரன், சாந்தநாயகி, வேல்முருகன், ஜெயசந்திரன், கோவிந்தன், ஆறுமுகம், வார்டு நிர்வாகிகள் குணாளன், முருகன், அஞ்சான், பழனியம்மாள், சாம்சிவம், தேவராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • மனைவி-குழந்தைகளை பார்க்க முடியாத வேதனை யில் கட்டிட தொழிலாளி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    • இதனால் மனமுடைந்த கார்த்திகேயன் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார். அவரது தாயார் வெளியே சென்றிருந்த நேரத்தில் கார்த்திகேயன் சேலையால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    புதுச்சேரி:

    மனைவி-குழந்தைகளை பார்க்க முடியாத வேதனை யில் கட்டிட தொழிலாளி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    வில்லியனூர் அம்மா நகரை சேர்ந்தவர் கார்த்தி கேயன்(வயது38). கட்டிட தொழிலாளி. இவருக்கு விஜயலட்சுமி என்ற மனைவியும், 2 மகன்களும் உள்ளனர்.

    திருமணமான முதல் கார்த்திகேயன் குடு ம்பத்துடன் கூடப்பாக்கத்தில் உள்ள மாமியார் வீட்டில் வசித்து வந்தார்.

    இதற்கிடையே கார்த்திகேயனுக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்து வந்தது. இதனை அவரது மனைவி கண்டித்து வந்தார். ஆனாலும் அவர் மது பழக்கத்தை கைவிடவில்லை. கடந்த 5 மாதத்துக்கு முன்பு கார்த்திகேயன் மது குடித்து விட்டு வந்ததால் அவரிடம் இனிமேல் மது குடித்து விட்டு வந்தால் வீட்டுக்கு வரக்கூடாது என்று கண்டித்தார்.

    இதனால் மனைவியிடம் கோபித்துக்கொண்டு வில்லியனூர் அம்மாநகரில் உள்ள தனது தாய் வீட்டில் கார்த்திகேயன் இருந்து வந்தார். தினமும் மனைவி-மகன்களை பார்க்க முடியாமல் கார்த்திகேயன் மனவருத்தத்தில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

    இதனால் மனமுடைந்த கார்த்திகேயன் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார். அவரது தாயார் வெளியே சென்றிருந்த நேரத்தில் கார்த்திகேயன் சேலையால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இதுகுறித்து அவரது மனைவி விஜயலட்சுமி கொடுத்த புகாரின் பேரில் வில்லியனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • உத்தரபிரதேசம் மாநில லக்னோவில் 17-வது இந்திய ஜூனியர் சாப்ட் டென்னிஸ் சாம்பியன் ஷிப் போட்டி வருகிற 9-ந் தேதி தொடங்கி 13-ந் தேதி வரை 5 நாட்கள் நடக்கிறது.
    • புதுவை மாநில ரோகிட் பந்து கழக செயலாளருமான புருசோத்தமன் ஆகியோர் கலந்து கொண்டு வீரர்களுக்கு சீருடைய வழங்கி வாழ்த்தி வழியனுப்பி வைத்தனர்.

    புதுச்சேரி:

    உத்தரபிரதேசம் மாநில லக்னோவில் 17-வது இந்திய ஜூனியர் சாப்ட் டென்னிஸ் சாம்பியன் ஷிப் போட்டி வருகிற 9-ந் தேதி தொடங்கி 13-ந் தேதி வரை 5 நாட்கள் நடக்கிறது.

    இப்போட்டியில் பங்கேற்க புதுவை வீரர்கள் உத்தரபிரதேசம் புறப்பட்டு சென்றனர். இவர்களை வாழ்த்தி வழியனுப்பி வைக்கும் விழா கவுண்டன்பாளையம் முத்து ரத்தினம் அரங்கம் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது.

    விழாவில் அணியினருக்கு புதுவை கோஜூரியோ கராத்தே சங்க மாநில செயலாளர் கராத்தே சுந்தர்ரராஜன், சாப்ட் டென்னிஸ் சங்க செயலாளர் ரத்தினபாண்டியன், பயிற்சியாளரும், புதுவை மாநில ரோகிட் பந்து கழக செயலாளருமான புருசோத்தமன் ஆகியோர் கலந்து கொண்டு வீரர்களுக்கு சீருடைய வழங்கி வாழ்த்தி வழியனுப்பி வைத்தனர்.

    • உலக அளவில் அதிக ரசிகர்களை கொண்ட கால்பந்து உலககோப்பை போட்டிகள் கத்தார் நாட்டில் நடந்து வருகிறது.
    • பிபா இட்லி புதுவை மக்களிடம் பிரபலமாகி வருகிறது.

    புதுச்சேரி:

    உலக அளவில் அதிக ரசிகர்களை கொண்ட கால்பந்து உலககோப்பை போட்டிகள் கத்தார் நாட்டில் நடந்து வருகிறது.

    கால்பந்து போட்டியை வரவேற்கவும், ரசிகர்களை உற்சாகப்படுத்தவும் புதுவை பிரபல சைவ ஓட்டலில் பிபா இட்லி என்ற கால்பந்து இட்லி வழங்கப்படுகிறது.ரூ.90-க்கு விற்கப்படும் இட்லியை கால்பந்தாட்ட ரசிகர்கள் ருசித்து வருகின்றனர். பிபா இட்லி புதுவை மக்களிடம் பிரபலமாகி வருகிறது.

    ×