என் மலர்
புதுச்சேரி
- மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
- தஞ்சாவூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளது
காரைக்கால்:
தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு அந்தமான் கடற்பகுதியில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றது. இது புயலாக வலுவடைந்து வட தமிழ்நாடு - தெற்கு ஆந்திரா இடையே கரையை கடக்க வாய்ப்பு உள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
புயல் சின்னம் காரணமாக 8ம் தேதி, 9ம் தேதி மற்றும் 10ம் தேதி தஞ்சாவூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதால் 'ஆரஞ்ச்' எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், புயல் சின்னம் காரணமாக கடல் சீற்றத்துடன் காணப்படுவதால் காரைக்கால் மீனவ கிராமங்களில் உள்ள மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என்று போலீசார் ஒலி பெருக்கி மூலம் எச்சரிக்கை விடுத்துள்ளனர். கடலுக்கு சென்ற மீனவர்கள் உடனே கரை திரும்புமாறும் மீனவ கிராமங்களில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மீனவ கிராமங்கள் பாதுகாப்பாக இருக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதற்கிடையே தமிழகத்தில் இருந்து ஆந்திர பிரதேச கடற்பகுதிக்கு மீன்பிடிக்க மீனவர்கள் சென்ற 43 படகுகளில் உரிய வழிகாட்டுதல் வழங்கப்பட்டு இதுவரை 31 படகுகள் வந்து சேர்ந்துள்ளதாகவும், 10 மாவட்டங்களில் பேரிடர் மீட்பு குழுக்கள் தயார் நிலையில் இருப்பதாகவும் அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
- புதுவை மாநில காங்கிரசில் மாநில தலைவர் ஏ.வி.சுப்பிரமணியன் தலைமையில் ஒரு அணியும், முன்னாள் அமைச்சர் கந்தசாமி தலைமையில் ஒரு அணியும் செயல்பட்டு வருகிறது.
- சட்டமன்ற தேர்தலுக்கு பின் மாநில தலைவர் ஏ.வி.சுப்பிரமணியனை மாற்ற வேண்டும் என எதிர்தரப்பினர் வலியுறுத்தி வருகின்றனர்.
புதுச்சேரி:
புதுவை மாநில காங்கிரசில் மாநில தலைவர் ஏ.வி.சுப்பிரமணியன் தலைமையில் ஒரு அணியும், முன்னாள் அமைச்சர் கந்தசாமி தலைமையில் ஒரு அணியும் செயல்பட்டு வருகிறது.
சட்டமன்ற தேர்தலுக்கு பின் மாநில தலைவர் ஏ.வி.சுப்பிரமணியனை மாற்ற வேண்டும் என எதிர்தரப்பினர் வலியுறுத்தி வருகின்றனர். இந்த நிலையில் புதுவை மாநில காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகள் அகில இந்திய தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவை சந்தித்தனர்.
அப்போது புதுவை மாநிலத்தில் காங்கிரசை வலுப்படுத்தவும், பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெறவும் உடனடியாக புதிய தலைவரை நியமிக்க வேண்டும் என வலியுறுத்தினர். இந்த சந்திப்பின் போது பொதுச்செயலாளர்கள் கருணாநிதி, ரகுமான், சிவசண்முகம், ஓ.பி.சி. அணி தலைவர் கண்ணன், செயலாளர்கள் சரவணன், பி.எம்.சரவணன், சூசைராஜ் ஆகியோர் உடனிருந்தனர்.
- திருவனந்தபுரத்தில் நடைபெற்ற கூட்டத்திற்கு பி.எஸ்.எஸ். சேர்மன் டாக்டர் பாலகிருஷ்ணன் தலைமை தாங்கினார்.
- முதன்மை செயல் அதிகாரி ராஜீவ்மேத்ரு மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
புதுச்சேரி:
மத்திய அரசின் அமைப்பான பாரத் சேவாக் சமாஜ் மற்றும் எம்.எஸ்.டி.இ., என்.எஸ்.டி.சி., என்.சி.வி.இ.டி. ஆகியவற்றுடன் இணைந்து செயல்படுவது குறித்தும், வேலைவாய்ப்புகள், வெளிநாட்டு வேலைவாய்ப்புகள் குறித்து கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் நடைபெற்ற கூட்டத்திற்கு பி.எஸ்.எஸ். சேர்மன் டாக்டர் பாலகிருஷ்ணன் தலைமை தாங்கினார்.
பி.எஸ்.எஸ். தலைமை வழிகாட்டி டார்லி கேசே மற்றும் பி.எஸ்.எஸ். மாற்று மருத்துவ வேந்தர் சுசான்லி டாக்டர் ரவி, டாக்டர் உஷாரவி, ஸ்கில் இண்டியன முதன்மை செயல் அதிகாரி ராஜீவ்மேத்ரு மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
அக்குபஞ்சர் தெரபிஸ்ட்கள் வெளிநாட்டிற்கு சென்று வேலை செய்யும் வாய்பினை மத்திய அரசின் பி.எஸ்.எஸ். உள்ளிட்ட அமைப்புகள் முன்னெடுத்துள்ளன. இத்துடன் 100-க்கும் மேற்பட்ட பட்டய பயிற்சிகள் முடித்துள்ளவர்கள் மத்திய அரசின் முத்திரையுடன் கூடிய சான்றிதழை பெறுவதற்கான பயிற்சி வகுப்புகளின் வழிகாட்டுதல் ஆலோசிக்கப்பட்டது.
டிப்ளமோ நர்சிங், உள்ளிட்ட பராமெடிக்கல்ஸ், அக்குபஞ்சர் தெரபிஸ்ட், பேஷன் டெக்னாலஜீ உள்ளிட்டவர்களுக்கு சுவிடன், ஆஸ்திரேலியா, கனடா, ஐஸ்லாந்து, சிங்கப்பூர், அமெரிக்கா உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பி.எஸ்.எஸ். வழிகாட்டுதல்படி செல்வதற்கான வாய்ப்புகள் தெளிவாக விவாதிக்கப்பட்டது.
மேலும் அக்குபஞ்சர் தெரபிஸ்ட்டுகள், பஞ்சகர்மா தெரபிஸ்ட், பிஸியோதெரபிஸ்ட், காஸ்மெடிக் தெரபிஸ்ட் உள்ளிட்டவர்களுக்கு அரசு சான்றிதழ் பயிற்சி, வெளிநாட்டிற்கு செல்வதற்கான வழிமுறைகள் குறித்து டாக்டர் ரவி, டாக்டர் உஷாரவி விவரித்தனர். முடிவில் சங்கர் நன்றி கூறினார்.
- மங்கலம் அரசு உயர்நிலை பள்ளியில் ஜூனியர் ரெட் கிராஸ் தொடக்க விழா நடந்தது.
- இந்தியன் ரெட் கிராஸ் புதுவை கிளை தலைவர் டாக்டர் லட்சுமிபத ரெட் கிராஸ் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
புதுச்சேரி:
மங்கலம் அரசு உயர்நிலை பள்ளியில் ஜூனியர் ரெட் கிராஸ் தொடக்க விழா நடந்தது.
முதன்மைக் கல்வி அலுவலர் ஜூனியர் ரெட் கிராஸ் பெயர்ப் பலகையைத் திறந்து வைத்தார். இந்தியன் ரெட் கிராஸ் புதுவை கிளை தலைவர் டாக்டர் லட்சுமிபத ரெட் கிராஸ் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
நிகழ்வில் இந்தியன் ரெட் கிராஸ், புதுவை கிளை நிர்வாக குழு உறுப்பினர்கள் ராமன், அய்யனார், அலுவலகப் பணியாளர், ஆளவந்தார், ஆதிமூலம், மங்கலம் அரசு தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் ஜான் சேவியர் ராஜா ஆகியோர் வாழ்த்தினர். பள்ளியின் தலைமை ஆசிரியர் சீனு மோகன்தாஸ் தலைமை உரை ஆற்றினார். பொறுப்பாசிரியை சாந்தி வரவேற்றார்.
நுண்கலை ஆசிரியர் வேலாயுதம் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். மாணவர்களுக்கு பற்பொடி, பற்பசை வழங்கப்பட்டது.
- மதகடிப்பட்டு உழவர் உதவியகத்தில் பயிர்காப்பீட்டு திட்ட வார விழா நிகழ்ச்சி நடைபெற்றது.
- இதில் அப்பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டது.
புதுச்சேரி:
மதகடிப்பட்டு உழவர் உதவியகத்தில் பயிர்காப்பீட்டு திட்ட வார விழா நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் அப்பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டது. நிகழ்ச்சியில் கலந்து கொண்ட விவசாயிகள் பயிர் காப்பீடு திட்டத்தில் உள்ள குளறுபடிகளை நீக்க வேண்டும், காலத்தோடு பயிர் காப்பீடு விண்ணப்பத்தை பதிவு செய்ய வேண்டும். ஒவ்வொரு பயிருக்கும் உண்டான பயிர் காப்பீட்டு தேதியை வெளிப்படையாக அறிவித்து செயல்படுத்த வேண்டும்.
வேளாண்துறை அதிகாரியை உடனடியாக மாற்றக் கோரியும் விவசாயிகள் நிகழ்ச்சியை புறக்கணித்து பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
- புதுவை பால் உற்பத்தியாளர்கள் சங்கம் சார்பில் அண்ணாசிலை அருகே இன்று ஆர்ப்பாட்டம் நடந்தது.
- ஆர்ப்பாட்டத்துக்கு சங்க தலைவர் பத்மநாபன் தலைமை தாங்கினார்.
புதுச்சேரி:
புதுவை பால் உற்பத்தியாளர்கள் சங்கம் சார்பில் அண்ணாசிலை அருகே இன்று ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்டத்துக்கு சங்க தலைவர் பத்மநாபன் தலைமை தாங்கினார். செயலாளர் அன்புமணி முன்னிலை வகித்தார். மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு பிரதேச செயலாளர் ராஜாங்கம், சி.ஐ.டி.யூ. பொதுச்செயலாளர் சீனுவாசன், விவசாய சங்க செயலாளர் சங்கர், இந்தியன் காபி ஹவுஸ் சங்க நிர்வாகி ராமச்சந்திரன் ஆகியோர் வாழ்த்தி பேசினர்.
பால் கொள்முதல் விலையை லிட்டருக்கு ரூ.45 என நிர்ணயித்து உயர்த்த வேண்டும். மானியத்துடன் கறவை மாடுகள் வழங்கி பால் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய வேண்டும். ஊழலுக்கு வழி வகுக்கும் வெளிமாநில பால் கொள்முதலை நிறுத்த வேண்டும். ஊழல் பாண்லே அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- புதுவை - கடலூர் சாலையில் ஆயிரத்திற்கு மேற்பட்ட வாகனங்கள் தினமும் சென்று வருகின்றன.
- போக்குவரத்து முக்கியத்துவம் வாய்ந்த இந்த சாலை கடந்த சில ஆண்டுகளாக முறையாக பராமரிக்கப்படாமல் இருந்து வருகிறது.
புதுச்சேரி:
புதுவை - கடலூர் சாலையில் ஆயிரத்திற்கு மேற்பட்ட வாகனங்கள் தினமும் சென்று வருகின்றன. போக்குவரத்து முக்கியத்துவம் வாய்ந்த இந்த சாலை கடந்த சில ஆண்டுகளாக முறையாக பராமரிக்கப்படாமல் இருந்து வருகிறது.
இதனால் தினந்தோறும் சாலை விபத்துகளில் பலர் காயமடைந்தும், உறுப்புகளையும், உயிரையும் இழந்து வருகின்றனர். இந்நிலையில், குண்டும் குழியுமான சாலையை செப்பனிட தவறிய புதுவை பொதுப்பணித்துறை அதிகாரிகள், அமைச்சர்கள், ஆட்சியாளர்களை கண்டித்தும், அவர்களின் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்ய வலியுறுத்தி, மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியினர் இன்று கிருமாம்பாக்கம் போலீஸ் நிலையம் முன்பாக கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்திற்கு கொம்யூன் செயலாளர் சரவணன் தலைமை தாங்கினார். மாநில செயற்குழு பெருமாள் கண்டன உரையாற்றினார். மாநில குழு கலியன், கொம்யூன் குழு வடிவேலு, கவுசிகன் கன்னியக்கோவில் கிளை செயலாளர் வீரப்பன், வெங்கடேசன், சண்முகம், கல்கி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து, கிருமாம்பாக்கம் போலீஸ் நிலையத்தில் புகார் மனு அளித்தனர். அந்த மனுவில், புதுவை-கடலூர் சாலை மற்றும் பாகூர் கொம்யூனுக்கு உட்பட சாலைகள் வழியாக தினமும் லட்சக்கணக்கான வாகனங்கள் செல்கின்றன. குண்டும் குழியுமான சாலைகளை போர்க்கால அடிப்படையில் சீரமைக்க வேண்டும். சாலையில் சீரமைக்கப்படாமல் இரு சக்கர வாகனத்தில் வருப வர்களிடம் ஹெல்மெட் கட்டாயம் என்று அபராதம் விதிப்பது ஏன்?
குண்டும், குழியுமான சாலையால், வாகன ஓட்டிகளுக்கு, உடல் நலக் கோளாறு, விபத்து ஏற்படுகிறது.
இதற்கு காரணமான புதுவை பொதுப்பணித்துறை அதிகாரிகள், அமைச்சர்கள் மற்றும் ஆட்சியாளர்கள் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்ய வலியுறுத்தி புகார் மனுவை போலீஸ் இன்ஸ்பெக்டர் கணேசன், சப்-இன்ஸ்பெக்டர் விஜயகுமார் ஆகியோரிடம் அளித்தனர்.
- புதுவை குருமாம்பேட்டில் ராஜீவ் காந்தி அரசு கால்நடை மருத்துவக் கல்லூரியில் 12 ஆண்டுகளுக்கு மேலாக குறைந்த ஊதியத்தில் தற்காலிக ஊழியராக 79 பேர் பணியாற்றி வருகின்றனர்.
- ஏற்கனவே முதல்-அமைச்சர் ரங்கசாமி அறிவித்த குறைந்தபட்ச ஊதியம் ரூ.10 ஆயிரம் பல துறைகளில் பணியாற்றும் தற்காலிக ஊழியர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.
புதுச்சேரி:
புதுவை குருமாம்பேட்டில் ராஜீவ் காந்தி அரசு கால்நடை மருத்துவக் கல்லூரியில் 12 ஆண்டுகளுக்கு மேலாக குறைந்த ஊதியத்தில் தற்காலிக ஊழியராக 79 பேர் பணியாற்றி வருகின்றனர்.
ஏற்கனவே முதல்-அமைச்சர் ரங்கசாமி அறிவித்த குறைந்தபட்ச ஊதியம் ரூ.10 ஆயிரம் பல துறைகளில் பணியாற்றும் தற்காலிக ஊழியர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் ராஜீவ் காந்தி கால்நடை அரசு மருத்துவக் கல்லூரியில் பணியாற்றும் தற்காலிக ஊழியர் பெண்கள் உள்ளிட்ட 79 பேருக்கு முதல்-அமைச்சர் அறிவித்த குறைந்தபட்ச ஊதியம் ரூ. 10 ஆயிரத்தை வழங்காமல் இழுத்தடிக்க செய்யும் கல்லூரி முதல்வர் செழியனை கண்டித்து தற்காலிக ஊழியர்கள் அரசு பணியாளர்கள் நல கூட்டமைப்பு தலைவர் சரவணன் தலைமையில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் முதல்-அமைச்சர் அறிவித்ததை நிறைவேற்றாத கல்லூரி நிர்வாகத்தை கண்டித்து தொடர் முற்றுகை போராட்டம் அதிகாரிகளை சிறை பிடித்து போராட்டம் நடக்கும் என எச்சரிக்கை விடுத்தனர்.
- சட்டமன்ற தேர்தலுக்கு பின் மாநில தலைவர் ஏ.வி.சுப்பிரமணியனை மாற்ற வேண்டும் என எதிர்தரப்பினர் வலியுறுத்தி வருகின்றனர்.
- புதுவை மாநில காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகள் அகில இந்திய தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவை சந்தித்தனர்.
புதுச்சேரி:
புதுவை மாநில காங்கிரசில் மாநில தலைவர் ஏ.வி.சுப்பிரமணியன் தலைமையில் ஒரு அணியும், முன்னாள் அமைச்சர் கந்தசாமி தலைமையில் ஒரு அணியும் செயல்பட்டு வருகிறது.
சட்டமன்ற தேர்தலுக்கு பின் மாநில தலைவர் ஏ.வி.சுப்பிரமணியனை மாற்ற வேண்டும் என எதிர்தரப்பினர் வலியுறுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் புதுவை மாநில காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகள் அகில இந்திய தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவை சந்தித்தனர்.
அப்போது புதுவை மாநிலத்தில் காங்கிரசை வலுப்படுத்தவும், பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெறவும் உடனடியாக புதிய தலைவரை நியமிக்க வேண்டும் என வலியுறுத்தினர்.
இந்த சந்திப்பின் போது பொதுச்செயலாளர்கள் கருணாநிதி, ரகுமான், சிவசண்முகம், ஓ.பி.சி. அணி தலைவர் கண்ணன், செயலாளர்கள் சரவணன், பி.எம்.சரவணன், சூசைராஜ் ஆகியோர் உடனிருந்தனர்.
- துவை பிள்ளைச்சாவடி மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் நாகலிங்கம்.
- ராகினி தனது மகன் மற்றும் மகளை மாமியாரிடம் ஒப்படைத்து விட்டு தனது பெற்றோர் வீட்டில் இருந்து வந்தார்.
புதுச்சேரி:
புதுவை பிள்ளைச்சாவடி மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் நாகலிங்கம். ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இவரது மகள் ராகினி (வயது40). இவருக்கும் வில்லியனூரை சேர்ந்த பெக்கோலன் என்பவருக்கும் கடந்த 22 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர்.
கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு பெக்கோலன் இறந்து விட்டார். இதையடுத்து ராகினி தனது மகன் மற்றும் மகளை மாமியாரிடம் ஒப்படைத்து விட்டு தனது பெற்றோர் வீட்டில் இருந்து வந்தார்.
இந்த நிலையில் ராகினி காக்கையன்தோப்பை சேர்ந்த ராஜசேகர் என்பவரிடம் பணம் கடன் கொடுத்திருந்ததாக கூறப்படுகிறது. அந்த பணத்தை ராகினி திருப்பி கேட்ட போது ராஜசேகர் கொடுக்க மறுத்து விட்டதாக கூறப்படுகிறது.
இதனால் மனஉளைச்சல் அடைந்த ராகினி தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்து சம்பவத்தன்று எலி மருந்தை எடுத்து தின்று விட்டார். இதில் உடல்நிலை பாதிக்கப்பட்ட ராகினியை அவரது பெற்றோர் மீட்டு புதுவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று காலை ராகினி பரிதாபமாக இறந்து போனார்.
இதுகுறித்து அவரது தந்தை நாகலிங்கம் அரியாங்குப்பம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகிறார்கள்.
- புதுவை ஏ.ஐ.டி.யூ.சி.யின் 20-வது மாநில மாநாடு இன்று வள்ளலார் சாலை பிரின்ஸ் அரங்கில் நடந்தது.
- மாநாட்டுக்கு மாநில செயல்தலைவர் அபிஷேகம், மாநில தலைவர் தினேஷ்பொன்னையா தலைமை வகித்தனர்.
புதுச்சேரி:
புதுவை ஏ.ஐ.டி.யூ.சி.யின் 20-வது மாநில மாநாடு இன்று வள்ளலார் சாலை பிரின்ஸ் அரங்கில் நடந்தது.
மாநாட்டுக்கு மாநில செயல்தலைவர் அபிஷேகம், மாநில தலைவர் தினேஷ்பொன்னையா தலைமை வகித்தனர். மாநாட்டு கொடியை முன்னாள் அமைச்சர் விஸ்வநாதன் ஏற்றினார். அகில இந்திய ஏ.ஐ.டி.யூ.சி.துணைத்தலைவர் எம்.பி.சுப்பராயன் மாநாட்டை தொடக்கவுரையாற்றினார்.
மாநில செயலாளர் சலீம், அகில இந்திய செயலாளர் வகிதா நிஜாம் சிறப்புரையாற்றினர். ஏ.ஐ.டி.யூ.சி. பொதுச்செயலாளர் சேதுசெல்வம் மாநாடு அறிக்கை சமர்பித்தார். முன்னாள் எம்.எல்.ஏ. நாரா.கலைநாதன், ராமமூர்த்தி, ரவி, அந்தோணி, எழிலன் வாழ்த்தி பேசினர். தொடர்ந்து வரவு செலவு அறிக்கை சமர்பிக்கப்பட்டு, புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டது. மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-
கட்டுமானம் மற்றும் அமைப்புசாரா தொழிலில் புலம்பெயர் தொழிலாளர்கள் சட்டத்தை அமல்படுத்த வேண்டும். கட்டுமான தொழிலாளர் நல வாரியத்தை தன்னாட்சி அதிகாரம் கொண்ட முத்தரப்பு வாரியமாக மாற்ற வேண்டும். புதுவையில் ஏ.எப்.டி., சுதேசி, பாரதி உட்பட அனைத்து மில்களையும் இயக்க வேண்டும். அனைத்து தொழில்களுக்கும் குறைந்தபட்ச சம்பளத்தை காலத்திற்கேற்ப நிர்ணயம் செய்ய வேண்டும்.
புதுவை கூட்டுறவு சர்க்கரை ஆலையை திறந்து நடத்த வேண்டும் என்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மேலும் புதுவை அரசின் தொழிலாளர் விரோத போக்கை கண்டித்து தொடர் போராட்டங்களை நடத்துவது எனவும் முடிவு செய்யப்பட்டது.
முன்னதாக பழைய பேருந்து நிலையத்திலிருந்து தொழிலாளர்கள் பேரணி நடந்தது. அண்ணாசாலை, காமராஜர் சாலை, வள்ளலார் சாலை வழியாக வந்த பேரணி மாநாட்டு அரங்கத்தில் நிறைவு பெற்றது.
- சென்னையை சேர்ந்த ஹேமந்த் - மோகனப்பிரியா தம்பதியின் மகள் சுபிக்ஷா. 12 வயதான சுபிக்ஷாவை பாடகராக்க வேண்டும் என பெற்றோர் விரும்பினர்.
- பல நாடுகளின் தேசிய கீதத்தை சொல்லி கொடுத்தனர்.
புதுச்சேரி:
சென்னையை சேர்ந்த ஹேமந்த் - மோகனப்பிரியா தம்பதியின் மகள் சுபிக்ஷா. 12 வயதான சுபிக்ஷாவை பாடகராக்க வேண்டும் என பெற்றோர் விரும்பினர். பல நாடுகளின் தேசிய கீதத்தை சொல்லி கொடுத்தனர்.
உலக நாடுகளின் அங்கீகரிக்கப்பட்ட தேசிய கீதங்களாக 193 உள்ளன. சிறுமி அதையும் தாண்டி கூடுதலாக 3 நாடுகளின் தேசிய கீதங்களையும் சேர்த்து 196 தேசிய கீதங்களை சரளமாக பாடி அசத்தி வருகிறார். புதுவை வந்த இந்த சிறுமி தனது பெற்றோருடன் முதல்-அமைச்சர் ரங்கசாமியை சட்டப்பேரவையில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.
அப்போது முதல்- அமைச்சர் ரங்கசாமி முன்னிலையில் ஒரு சில நாடுகளின் தேசிய கீதங்களை பாடினார். இதைக்கேட்ட முதல்- அமைச்சர் ரங்கசாமி சிறுமியின் திறமையை பாராட்டி வாழ்த்துக்களை கூறினார்.
196 நாடுகளின் தேசிய கீதங்களை பாடும் சிறுமியின் முயற்சியை உலக சாதனையில் இடம்பெற அவரது பெற்றோர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்த சந்திப்பின் போது பத்மஸ்ரீ டெரகோட்டா முனுசாமி உடனிருந்தார்.






