என் மலர்
புதுச்சேரி
- யூனியன் பிரதேசமான புதுவையில் மற்ற மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களை போல அரசு பணியாளர் தேர்வாணையம் இல்லை என்பதை இங்கு கவனத்தில் கொண்டு வருகிறேன்.
- வெளிமாநிலங்களில் இருந்து வருபவர்களுக்கு மொழி மிகப்பெரிய தடையாக உள்ளது.
புதுச்சேரி:
டெல்லியில் நாடாளுமன்ற மாநிலங்களவை கூட்டத்தில் புதுவை எம்.பி. செல்வகணபதி பேசியதாவது:-
யூனியன் பிரதேசமான புதுவையில் மற்ற மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களை போல அரசு பணியாளர் தேர்வாணையம் இல்லை என்பதை இங்கு கவனத்தில் கொண்டு வருகிறேன்.
அரசு பணிகளில் குரூப் 'ஏ' மற்றும் குரூப் 'பி' பிரிவுகளில் உள்ள பல்வேறு பதவிகளுக்கு தேர்ந்தெடுக்கப்படும் போது உள்ளூர் மக்களுக்கு பயனிக்கும் இதை அண்டை மாநிலங்களில் உள்ள அரசு பணியாளர் தேர்வாணயம் உறுதி செய்கிறது. ஆனால் புதுவை யூனியன் பிரதேசத்தை சேர்ந்தவர் குரூப் ஏ மற்றும் பி பிரிவுகளில் பணியிடங்களை பெறுவதில் மிகுந்த சிரமம் ஏற்படுகிறது.
இதற்கு காரணம் புதுவைக்கு தனி அரசு பணியாளர் தேர்வாணயம் இல்லாததே ஆகும். புதிதாக சுகாதாரத்துறை மருத்துவர்கள், வல்லுனர்கள், உயர் மற்றும் தொழில்நுட்ப கல்வித்துறை பேராசிரியர்கள் உள்ளிட்ட பணியிடங்கள் நிரப்பப்படும் போது யு.பி.எஸ்.சி.யிடம் ஒப்படைக்கப்படுகிறது.
அவர்கள் அகில இந்திய அடிப்படையில் தான் ஆட்களை தேர்வு செய்கிறார்கள். பரிசீலிக்க வேண்டும் தே சிய அளவில் தேர்வுகள் நடத்தப்படுவதால் புதுவை இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகள் குறைவாக உள்ளது. அவர்கள் தங்கள் சொந்த ஊரில் அரசு வேலைக்காக அகில இந்திய அளவில் போட்டி போட வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. வெளிமாநிலங்களில் இருந்து வருபவர்களுக்கு மொழி மிகப்பெரிய தடையாக உள்ளது.
பள்ளி முதல்வர்களாக வருபவர்களுக்கு உள்ளூர் மொழி தெரியாததால் மாணவர்கள், பெற்றோர்களிடம் எவ்வாறு பேசுவார்கள். இது வெற்றிடத்தை உருவாக்குகிறது.
எனவே புதுவை யூனியன் பிரதேசத்தில் அரசு பணியா ளர் தேர்வாணையம் அமைக்க மத்திய உள்துறை அமை ச்சகம் பரிசீலிக்க வேண்டும்.
இவ்வாறு செல்வகணபதி எம்.பி. பேசினார்.
- விசுவ ஹிந்து பரிஷத்தின் அகில பாரத இணை செயலாளர் நாகராஜன் புதுவை வந்தார். அவர் நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
- திருக்கோவில்களை ஹிந்து சமய அறநிலைய துறை வியாபார நோக்கோடு அணுகிவருகிறது.
புதுச்சேரி:
விசுவ ஹிந்து பரிஷத்தின் அகில பாரத இணை செயலாளர் நாகராஜன் புதுவை வந்தார். அவர் நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை நடத்தினார். அப்போது அவர் கூறியதாவது:-
விசுவ ஹிந்து பரிஷத் அமைப்பு உலகெங்கிலும் உள்ள ஹிந்து மக்களை ஒற்றுமைப்படுத்தவும், ஹிந்து பண்பாடு மற்றும் கலாச்சாரத்தை காக்கவும் பணியாற்றி வருகிறது.
ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் ஜல்லிக்கட்டு விழா இந்த ஆண்டும் அரசியல் தலையீடு இல்லாமல் சிறப்பாக நடைபெற வேண்டும். நம்நாட்டில் ஹிந்து சமயத்தில் உள்ள பாரம்பரியமான விஷயங்களை சீர்குலைக்கும் வகையில் பீட்டா என்ற அமைப்பு செயல்பட்டு வருகிறது.
இவர்கள் நோக்கம் மிருகங்களை காக்க வேண்டும் என்பது அல்ல. மாறாக தமிழர்களின் பண்பாடு மற்றும் பாரம்பரியத்தை சீர்குலைக்கும் விதமாக செயல்பட்டு வருகிறது.
நம்நாட்டில் பசுவதை தடை சட்டம் இயற்ற வேண்டும், எந்தவித தடங்களும் இல்லாமல் ஜல்லிக்கட்டு சிறப்பாக நடைபெற மத்திய, மாநில அரசுகள் ஆவண செய்ய வேண்டும்.
திருக்கோவில்களை ஹிந்து சமய அறநிலைய துறை வியாபார நோக்கோடு அணுகிவருகிறது. ஆலய நிர்வாகத்தில் ஆன்மீகத்தில் நம்பிக்கையும், நாட்டமும் உள்ளவர்களையே நியமிக்க வேண்டும். ஹிந்து சயம அறநிலைய துறையை உத்தரகாண்ட் மற்றும் கர்நாடக மாநில அரசுகள் தனிவாரியமாக அறிவித்ததை விசுவ ஹிந்து பரிஷத் வரவேற்கிறது. இது போன்ற தமிழக மற்றும் புதுவை அரசுகளும் அறிவிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
இந்நிகழ்ச்சியின் போது வட தமிழ்நாடு அமைப்பு செயலாளர் ராமன் மாநில மேலிட பொறுப்பாளர் வேல்முருகன், புதுவை தலைவர் ரவிக்குமார், துணைத்தலைவர் இளங்கோவன், பொருலாளர் கோவிந்தன் நகர தலைவர் சத்யமூர்த்தி மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
- இந்திரா நகர் தொகுதியில் மாண்டஸ் புயலின் தாக்கத்தை எதிர்கொள்வதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து தொகுதி எம்.எல்.ஏ.வும் அரசு கொறடாவுமான ஏ.கே.டி.ஆறுமுகம் அரசு துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
- புயலால் ஏற்படும் பாதிப்புகளை தவிர்க்க மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள், மீட்பு பணிகள் குறித்து அதிகாரிகளுக்கு ஆலோ சனை வழங்கப்பட்டது.
புதுச்சேரி:
இந்திரா நகர் தொகுதியில் மாண்டஸ் புயலின் தாக்கத்தை எதிர்கொள்வதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து தொகுதி எம்.எல்.ஏ.வும் அரசு கொறடாவுமான அரசு ெகாறடா ஏ.கே.டி.ஆறுமுகம் அரசு துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
இதில் துணை கலெக்டர் (வடக்கு) கந்தசாமி, உழவர்கரை நகராட்சி ஆணையர் சுரேஷ் ராஜ், போலீஸ் சூப்பிரண்டு பக்தவச்சலம் மற்றும் பொதுப்பணித்துறை, மின்துைற அதிகாரிகள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் மாண்டஸ் புயலின் தாக்கத்திலிருந்து விடுபட முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்தும், மக்களின் நலன் காக்கும் பணிகள் குறித்தும், இந்திரா நகர் தொகுதியில் மேற்கொள்ள வேண்டிய போர்க்கால நடவடிக்கைகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.
புயலால் ஏற்படும் பாதிப்புகளை தவிர்க்க மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள், மீட்பு பணிகள் குறித்து அதிகாரிகளுக்கு ஆலோ சனை வழங்கப்பட்டது.
- வங்கக்கடலில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு மண்டலம், புயலாக உருவெடுத்துள்ளது.
- கடலில் அலைகள் சீற்றத்துடன் காணப்படுகிறது. புதுவை துறைமுகத்தில் 2-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
புதுச்சேரி:
வங்கக்கடலில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு மண்டலம், புயலாக உருவெடுத்துள்ளது.
மாண்டஸ் என பெயர் சூட்டப்பட்டுள்ள புயல் மகாபலிபுரம் அருகே கரையை கடக்கும் என வானிலை மையம் அறிவித்துள்ளது. புயல் கரையை கடக்கும்போது 90 கி.மீ. வேகத்தில் பலத்த காற்றுடன் கனமழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. கனமழை பெய்யக்கூடிய இடங்க ளில் பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கும்படி மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
இதன்படி புதுவையி லும் புயல் கரையை கடக்கும்போது கனமழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் அரசின் அனைத்து துறைகளும் உஷார்படுத்தப்பட்டுள்ளது. பொதுமக்களுக்கு வழிகாட்டுதல்களும் வெளியிட ப்பட்டுள்ளது.
காற்றினால் கட்-அவுட், பேனர்கள் சரிந்து விழுவதை தடுக்க 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. நகர், புறநகரில் பேனர், கட்அவுட்டுகள் அகற்றப்பட்டுள்ளது. தா ழ்வான பகுதிகளில் மழை வெள்ளம் தேங்கினால் அப்பகுதி மக்களை தங்க வைக்க முகாம்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டு ள்ளது. அவர்களுக்கு உணவு தயாரித்து வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் கடந்த 2 நாட்களாக வானிலை முழுமையாக மாறி, குளிர்ந்த காற்றுடன் இருண்டு காணப்படுகிறது. முதல் சாரல் மழை பெய்து வருகிறது. கடலில் அலைகள் சீற்றத்துடன் காணப்படுகிறது. புதுவை துறைமுகத்தில் 2-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
மீனவர்கள் யாரும் மீன்பிடிக்க கடலுக்கு செல்லவில்லை. தேசிய பேரிடர் மீட்புக்குழுவினர் புதுவைக்கு வரவழை க்கப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். மாவட்ட நிர்வாகம் புயல், மழையை எதிர்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
- புதுவை தொண்ட மாநத்தம் தனியார் கண்ணாடி தொழிற்சாலையில் 30 ஆண்டுக்கும் மேல் தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.
- சி.ஐ.டி.யூ. தொழிலாளர் நலச்சங்கம் சார்பில் 30-வது நாளாக தொழிலாளர்கள் இந்த போராட்டதை தொடர்ந்து வருகின்றனர்.
புதுச்சேரி:
புதுவை தொண்ட மாநத்தம் தனியார் கண்ணாடி தொழிற்சாலையில் 30 ஆண்டுக்கும் மேல் தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.
இவர்களுக்கு 8 ஆண்டாக சம்பள உயர்வு தராமல் தொழிற்சாலை நிர்வாகம் ஏமாற்றி வருகிறது. கழிவுநீரை சுத்திகரிப்பு செய்யாமல், அரசு உத்தரவுகளை மதிக்காமல் நிர்வாகம் செயல்பட்டு வருவதை கண்டித்தும், புதுவை அரசு உத்தரவுகளை நிறைவேற்ற வலியுறுத்தியும் தொழிலாளர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
சி.ஐ.டி.யூ. தொழிலாளர் நலச்சங்கம் சார்பில் 30-வது நாளாக தொழிலாளர்கள் இந்த போராட்டதை தொடர்ந்து வருகின்றனர்.
- சென்னையில் இருந்து நாகப்பட்டினம் 4 வழி சாலை பணி தற்போது நடைபெற்று வருகிறது. இந்த பணிக்காக கெங்க ராம் பாளையத்திலிருந்து எம்.என்.குப்பம் வரை பழைய சாலைகள் அப்பு றப்படுத்தப்பட்டு புதிய பாலங்கள் அமைக்கப்பட்டு புதிய 4 வழி சாலை போடும்படி பணி தற்போது நடைபெற்று வருகிறது.
- இதையடுத்து அவர் தொகுதிக்குட்பட்ட இடங்க ளுக்கு நேரில்செ ன்று பொது மக்களின் கோரிக்கைகளை கேட்டு அதனை சரி செய்து வருகிறார்.
புதுச்சேரி:
சென்னையில் இருந்து நாகப்பட்டினம் 4 வழி சாலை பணி தற்போது நடைபெற்று வருகிறது.
இந்த பணிக்காக கெங்க ராம் பாளையத்திலிருந்து எம்.என்.குப்பம் வரை பழைய சாலைகள் அப்பு றப்படுத்தப்பட்டு புதிய பாலங்கள் அமைக்கப்பட்டு புதிய 4 வழி சாலை போடும்படி பணி தற்போது நடைபெற்று வருகிறது.
இதில் மதகடிப்பட்டு பகுதியும் அடங்கும். இந்த சாலை அருகில்தான் திருபுவனை சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் அமைந்துள்ளது. இந்த அலுவலகத்திற்கு இந்த தேசிய நெடுஞ்சாலை வழியாகவே செல்ல முடியும்.
தற்பொழுது சாலை பணியில் ஈடுபடும் தொழிலாளர்கள் எம்.எல்.ஏ. அலுவலகத்திற்கு வாகனங்கள் செல்லமுடியாதவாறு பள்ளங்களை தோண்டினர்.
கடந்த 4 மாதங்களாக அந்த இடத்தில் பணி செய்யாமல் தொழிலாளர்கள் விட்டு விட்டனர். இதனால் சட்டமன்ற அலுவலகத்திற்கு வர முடியாமல் அங்காளன் எம்.எல்.ஏ. தவித்து வருகிறார்.
இதையடுத்து அவர் தொகுதிக்குட்பட்ட இடங்களுக்கு நேரில்சென்று பொது மக்களின் கோரிக்கைகளை கேட்டு அதனை சரி செய்து வருகிறார்.
ஆனாலும் பொதுமக்கள் எம்.எல்.ஏ.வை சிரமம் இன்றி பார்ப்பதற்கும் தங்கள் குறைகளை உடனுக்குடன் தெரிவிப்பதற்கும் வழிவகை இல்லாமல் தற்போது உள்ளனர்.
இதனை சுட்டிக்காட்டிய அங்காளன் எம்.எல்.ஏ. சாலை போடும் ஒப்பந்ததாரரிடம் தனது அலுவலகத்திற்கு செல்லும் வகையில் உடனடியாக சாலை பணியை முடித்து தர வேண்டுமென கோரிக்கை விடுத்தார்.
ஆனால் இன்றுவரை அப்பணி சரி செய்யப்படா மலே உள்ளது, இதனால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி யுள்ளனர். சம்பந்தப்பட்ட நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் தலையிட்டு உடனடியாக அந்தப்
பகுதியில் சாலை வசதி செய்து மக்கள் சிரமம் இன்றி சட்டமன்ற அலுவலகத்திற்கு சென்று வர நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- பாகூர் கொம்யூன் பஞ்சாயத்து சார்பில், காட்டுக்குப்பம் கிராமத்தில், வடிகால் வாய்க்கால் அமைக்க ரூ.21 லட்சத்து 54 ஆயிரம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
- இதற்கான பூமி பூஜை விழா நடைபெற்றது. இதில், செந்தில்குமார் எம்.எல்.ஏ., கலந்து கொண்டு பூமி பூஜை செய்து வைத்து, பணியை தொடங்கி வைத்தார்.
புதுச்சேரி:
பாகூர் கொம்யூன் பஞ்சாயத்து சார்பில், காட்டுக்குப்பம் கிராமத்தில், வடிகால் வாய்க்கால் அமைக்க ரூ.21 லட்சத்து 54 ஆயிரம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதேபோல், எம்.எல்.ஏ.தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் பாகூர் பேட் புதுநகர் உட்புற வீதிகளுக்கு ரூ.9 லட்சத்து 24 ஆயிரத்து 700 செலவில் வடிகால் வசதி அமைக்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த பணியின் மொத்த மதிப்பு ரூ.30லட்சத்து 70 ஆயிரம் ஆகும்.
இதற்கான பூமி பூஜை விழா நடைபெற்றது. இதில், செந்தில்குமார் எம்.எல்.ஏ., கலந்து கொண்டு பூமி பூஜை செய்து வைத்து, பணியை தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில், பாகூர் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் கார்த்திகேயன், உதவி பொறியாளர் முத்துசிவம், இளநிலைபொறியாளர்கள் பிரதீப் குமார், புனிதவதி மற்றும் பொது மக்கள் பலர் கலந்து கொண்டனர்.
- பிம்ஸ் மருத்துவமனையில் கிறிஸ்துமஸ் விழாவை முன்னிட்டு பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகள் நாள்தோறும் நடைபெறுகிறது.
- 25- க்கும் மேற்பட்ட உணவு ஸ்டால்களில் பல்வேறு விதமாக உணவுகளை தயாரித்திருந்தனர்.
புதுச்சேரி:
பிம்ஸ் மருத்துவமனையில் கிறிஸ்துமஸ் விழாவை முன்னிட்டு பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகள் நாள்தோறும் நடைபெறுகிறது.
மருத்துவ மாணவ-மாணவிகள் பங்கேற்ற உணவு திருவிழா மற்றும் கிறிஸ்துமஸ் சிறப்பு விழாவுக்கு பிம்ஸ் முதன்மை நிர்வாக ஆலோசகர் பாபு டேனியல் தலைமை தாங்கினார். கல்லூரி முதல்வர் அனில் பூர்த்தி, மருத்துவ கண்காணிப்பாளர் பீட்டர் மனோகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு விருந்தினர் மெட்ராஸ் மறை மாவட்ட மலங்கரா ஆர்தோடக்ஸ் சர்ச் பேராயர் ஜீவர்கீஸ் மார் பிலாக்செனோஸ் தலைமையில் சிறப்பு பிரார்த்தனை நடைப்பெற்றது.
பின்னர் மருத்துவ மாணவர்களின் ஆராதனை பாடல் இயேசு கிறிஸ்து குறுநாடகம் நடைபெற்றது. குறிப்பாக மருத்துவ மற்றும் செவிலியர்கள் மற்றும் கல்லூரி ஊழியர்களின் உணவு திருவிழா அனைவரையும் கவர்ந்தது.
25- க்கும் மேற்பட்ட உணவு ஸ்டால்களில் பல்வேறு விதமாக உணவுகளை தயாரித்திருந்தனர். இதன் மூலம் கிடைத்த நிதியினை தொண்டு இல்லங்களுக்கு உதவுவதாக கல்லூரி துணை முதல்வர் மேகி முருகன் தெரிவித்தார்.
நிகழ்ச்சியில் பிம்ஸ் அருட் தந்தை ஜோபி ஜார்ஜ், துணை முதல்வர் டாக்டர் சுனில் சுப்பிரமணியன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
- திருபுவனை தொகுதிக்குட்பட்ட செல்லிப்பட்டு முதல் கலிதீர்த்தாள்குப்பம் வரை தார் சாலைகள் கடுமையாக சேதமடைந்துள்ளது.
- இளநிலை பொறியாளர் மனோகரன் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் மற்றும் எம்.எல்.ஏ.ஆதரவாளர்கள் கலந்து கொண்டனர்.
புதுச்சேரி:
திருபுவனை தொகுதிக்குட்பட்ட செல்லிப்பட்டு முதல் கலிதீர்த்தாள்குப்பம் வரை தார் சாலைகள் கடுமையாக சேதமடைந்துள்ளது.
எனவே சேதுமடைந்த சாலையினை சரி செய்வதற்காக காலமுறை புதுப்பிக்கும் பணியினை செய்திட மார்க்கிங் பெயிண்ட் மேற்கொள்ளப்பட உள்ளது. இப்பணிக்கான பூமி பூஜையினை திருபுவனை தொகுதி எம்.எல்.ஏ. அங்காளன் தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் தேசிய நெடுஞ்சாலை கோட்ட செயற்பொறியாளர் பாலசுப்பிரமணியன், உதவி பொறியாளர் ஜெயராஜ், இளநிலை பொறியாளர் மனோகரன் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் மற்றும் எம்.எல்.ஏ.ஆதரவாளர்கள் கலந்து கொண்டனர்.
- உலக எய்ட்ஸ் தினத்தை முன்னிட்டு புதுவை சாரதா கங்காதரன் கல்லூரியின் செஞ்சுருள் சங்கம், இளைஞர் செஞ்சிலுவைச் சங்கம் மற்றும் நாட்டுநலப்பணித்திட்டம் இணைந்து இலவச ரத்ததான முகாமினை கல்லூரியின் கருத்தரங்க அறையில் நடத்தியது.
- மாணவர்களுடன் சேர்ந்து முதுகலை வணிகவியல் துறை பேராசிரியர் ஜெயக்குமார் மற்றும் கணினி அறிவியல் துறை பேராசிரியர் கோபிநாத் உள்பட 75 பேர் ரத்ததானம் செய்தனர்.
புதுச்சேரி:
உலக எய்ட்ஸ் தினத்தை முன்னிட்டு புதுவை சாரதா கங்காதரன் கல்லூரியின் செஞ்சுருள் சங்கம், இளைஞர் செஞ்சிலுவைச் சங்கம் மற்றும் நாட்டுநலப்பணித்திட்டம் இணைந்து இலவச ரத்ததான முகாமினை கல்லூரியின் கருத்தரங்க அறையில் நடத்தியது. கல்லூரியின் முதல்வர் கா.உதயசூரியன், முன்னாள் இளைஞர் செஞ் சிலுவைச் சங்கத்தின் தலைவர் சிவராமச்சந்திரன் ஆகியோர் முகாமினை தொடங்கி வைத்தனர்.
புதுவை ஜிப்மர் மருத்துவமனையின் ரத்த வங்கிப் பிரிவு மருத்துவ அலுவலர் டாக்டர் வடிவேலு மற்றும் அவரது மருத்துவக் குழுவினரும் ரத்த தான முகாமினை நடத்தினர். மாணவர்களுடன் சேர்ந்து முதுகலை வணிகவியல் துறை பேராசிரியர் ஜெயக்குமார் மற்றும் கணினி அறிவியல் துறை பேராசிரியர் கோபிநாத் உள்பட 75 பேர் ரத்ததானம் செய்தனர். கல்லூரியின் செஞ்சுருள் சங்கம் மற்றும் இளைஞர் செஞ்சிலுவைச் சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் மகேஸ்வரி, இணை ஒருங்கிணைப்பாளர் கணேஷ், நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் மரியசெல்வம் ஆகியோர் முகாமிற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
- திருக்கனூர் லயன்ஸ் சங்கத்தின் சார்பில் திருக்கனூர் சுப்பிரமணிய பாரதிமேல் நிலைப்பள்ளி வளாகத்தில் இலவச கண் சிகிச்சை முகாம் நடந்தது.
- 2 நாட்கள் நடந்த இந்த முகாமில் 700-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.
புதுச்சேரி:
திருக்கனூர் லயன்ஸ் சங்கத்தின் சார்பில் திருக்கனூர் சுப்பிரமணிய பாரதிமேல் நிலைப்பள்ளி வளாகத்தில் இலவச கண் சிகிச்சை முகாம் நடந்தது.
முகாமிற்கு திருக்கனூர் லயன்ஸ் சங்க தலைவர் தமிழ் மணி, செயலாளர் முகமது அசாருதீன், பொருளாளர் இளங்கோவன் ஆகியோர் தலைமை தாங்கினர். பள்ளியின் தாளாளர் சம்பத் முன்னிலை வகித்தார்.
புதுவை அகர்வால் கண் மருத்துவமனை சார்பில் பள்ளி மாணவர்களுக்கு கண் பரிசோதனை செய்யப்பட்டு ஆலோசனை வழங்கப்பட்டது. 2 நாட்கள் நடந்த இந்த முகாமில் 700-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.
நிகழ்ச்சியில் மாவட்ட தலைவர்கள் ஜானகிராமன், சை யது, பரந்தாமன், ஜீவா பாஸ்கரன் உள்பட திருக்கனூர் லயன்ஸ் சங்க நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
- மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
- தஞ்சாவூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளது
காரைக்கால்:
தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு அந்தமான் கடற்பகுதியில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றது. இது புயலாக வலுவடைந்து வட தமிழ்நாடு - தெற்கு ஆந்திரா இடையே கரையை கடக்க வாய்ப்பு உள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
புயல் சின்னம் காரணமாக 8ம் தேதி, 9ம் தேதி மற்றும் 10ம் தேதி தஞ்சாவூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதால் 'ஆரஞ்ச்' எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், புயல் சின்னம் காரணமாக கடல் சீற்றத்துடன் காணப்படுவதால் காரைக்கால் மீனவ கிராமங்களில் உள்ள மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என்று போலீசார் ஒலி பெருக்கி மூலம் எச்சரிக்கை விடுத்துள்ளனர். கடலுக்கு சென்ற மீனவர்கள் உடனே கரை திரும்புமாறும் மீனவ கிராமங்களில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மீனவ கிராமங்கள் பாதுகாப்பாக இருக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதற்கிடையே தமிழகத்தில் இருந்து ஆந்திர பிரதேச கடற்பகுதிக்கு மீன்பிடிக்க மீனவர்கள் சென்ற 43 படகுகளில் உரிய வழிகாட்டுதல் வழங்கப்பட்டு இதுவரை 31 படகுகள் வந்து சேர்ந்துள்ளதாகவும், 10 மாவட்டங்களில் பேரிடர் மீட்பு குழுக்கள் தயார் நிலையில் இருப்பதாகவும் அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.






