என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    அதிகாரிகளுடன் ஏ.கே.டி.ஆறுமுகம் ஆலோசனை
    X

    புதுவை சட்டசபையில் புயலின் தாக்கத்தை எதிர்கொள்வதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து ஆலோசனை கூட்டம் அரசு கொறடா ஏ.கே.டி. ஆறுமுகம் தலைமையில் நடைபெற்ற காட்சி.

    அதிகாரிகளுடன் ஏ.கே.டி.ஆறுமுகம் ஆலோசனை

    • இந்திரா நகர் தொகுதியில் மாண்டஸ் புயலின் தாக்கத்தை எதிர்கொள்வதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து தொகுதி எம்.எல்.ஏ.வும் அரசு கொறடாவுமான ஏ.கே.டி.ஆறுமுகம் அரசு துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
    • புயலால் ஏற்படும் பாதிப்புகளை தவிர்க்க மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள், மீட்பு பணிகள் குறித்து அதிகாரிகளுக்கு ஆலோ சனை வழங்கப்பட்டது.

    புதுச்சேரி:

    இந்திரா நகர் தொகுதியில் மாண்டஸ் புயலின் தாக்கத்தை எதிர்கொள்வதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து தொகுதி எம்.எல்.ஏ.வும் அரசு கொறடாவுமான அரசு ெகாறடா ஏ.கே.டி.ஆறுமுகம் அரசு துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

    இதில் துணை கலெக்டர் (வடக்கு) கந்தசாமி, உழவர்கரை நகராட்சி ஆணையர் சுரேஷ் ராஜ், போலீஸ் சூப்பிரண்டு பக்தவச்சலம் மற்றும் பொதுப்பணித்துறை, மின்துைற அதிகாரிகள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் மாண்டஸ் புயலின் தாக்கத்திலிருந்து விடுபட முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்தும், மக்களின் நலன் காக்கும் பணிகள் குறித்தும், இந்திரா நகர் தொகுதியில் மேற்கொள்ள வேண்டிய போர்க்கால நடவடிக்கைகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.

    புயலால் ஏற்படும் பாதிப்புகளை தவிர்க்க மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள், மீட்பு பணிகள் குறித்து அதிகாரிகளுக்கு ஆலோ சனை வழங்கப்பட்டது.

    Next Story
    ×