என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    • கம்யூனிஸ்டு (எம்எல்) புதுவை மாவட்ட மாநாடு தமிழ் சங்கத்தில் நடந்தது. மாநாட்டிற்கு சக்திவேல், விசாலாட்சி, குமார் ஆகியோர் தலைமை தாங்கினர். முருகன் வரவேற்றார்.
    • புதிய மதுபான ஆலைகளுக்கு அனுமதி வழங்கக் கூடாது.

    புதுச்சேரி:

    கம்யூனிஸ்டு (எம்எல்) புதுவை மாவட்ட மாநாடு தமிழ் சங்கத்தில் நடந்தது.

    மாநாட்டிற்கு சக்திவேல், விசாலாட்சி, குமார் ஆகியோர் தலைமை தாங்கினர். முருகன் வரவேற்றார். மாநில செயலாளர் சோ.பாலசுப்பிரமணியன் தொடங்கி வைத்து பேசினார்.

    மாநாட்டில், மூடப்பட்ட பஞ்சாலை, கூட்டுறவு சர்க்கரை ஆலையை திறந்து இயக்க வேண்டும். மின்துறை தனியார் மயத்தை நிறுத்த வேண்டும். அரசு மருத்துவமனைகளில் தட்டுப்பாடின்றி மருந்துகள் கிடைக்க நடவடிக்கை வேண்டும்.

    பிரதம மந்திரி வீடு கட்டும் திட்ட மானியத்தை ரூ.7 லட்சமாக உயர்த்த வேண்டும். புதிய மதுபான ஆலைகளுக்கு அனுமதி வழங்கக் கூடாது. மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதி திட்ட. தினக்கூலியை ரூ.600 ஆக உயர்த்த வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    • புதுவையில் உறவினரை தாக்கியதை தட்டிக்கேட்ட இறைச்சி கடைக்காரரை பீர்பாட்டிலால் குத்திய கும்பலை போலீசார் தேடி வருகிறார்கள்.
    • இதனால் ஆத்திரமடைந்த அமீர், தேவசந்திரன், சுனில், அருள் ஆகியோர் சதீஷ்குமாரை சரமாரியாக தாக்கினர்.

    புதுச்சேரி:

    புதுவையில் உறவினரை தாக்கியதை தட்டிக்கேட்ட இறைச்சி கடைக்காரரை பீர்பாட்டிலால் குத்திய கும்பலை போலீசார் தேடி வருகிறார்கள்.

    புதுவை ரோடியர்பேட் அங்குநாயக்கர் தோப்பு பகுதியை சேர்ந்தவர் சதீஷ்குமார்(வயது29). இவர் மாட்டிறைச்சி வியாபாரம் செய்து வருகிறார். அதே பகுதியை சேர்ந்த இவரது உறவினர் சஞ்சீவி. நேற்று மதியம் சஞ்சீவியை ரோடியர்பேட்டை சேர்ந்த அமீர் மற்றும் ஆட்டுப்பட்டியை சேர்ந்த தேவசந்திரன், சுனில், அருள் ஆகியோர் சேர்ந்து தாக்கினர்.

    இதையடுத்து சஞ்சீவி தனது உறவினரான சதீஷ்கு மாரிடம் முறையிட்டார். இதைத்தொடர்ந்து சதீஷ்குமார் சம்பவம் நடந்த இடத்துக்கு சஞ்சீவியை தாக்கிய கும்பலிடம் தட்டிக்கேட்டார்.

    இதனால் ஆத்திரமடைந்த அமீர், தேவசந்திரன், சுனில், அருள் ஆகியோர் சதீஷ்குமாரை சரமாரியாக தாக்கினர். மேலும் பீர் பாட்டிலால் குத்தினர். அதோடு கொலை செய்துவிடுவதாக மிரட்டல் விடுத்தனர்.

    இந்த தாக்குதலில் காயமடைந்த சதீஷ்குமார் புதுவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார்.

    பின்னர் இதுகுறித்து உருளையன்பேட்டை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து அமீர் உள்பட 4 பேரையும் தேடி வருகிறார்கள்.

    • புதுவை மாநில காங்கிரஸ் கட்சியில் 57 வட்டார தலைவர்கள் உள்ளனர். இதில் 33 பேர் பெங்களூரு சென்று புதுவை மாநில பொறுப்பாளர் தினேஷ்குண்டுராவை சந்தித்து பேசினர்.
    • காங்கிரசின் கோட்டையான புதுவையில் வருகிற லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர்தான் நிற்க வேண்டும்.

    புதுச்சேரி:

    புதுவை மாநில காங்கிரஸ் கட்சியில் 57 வட்டார தலைவர்கள் உள்ளனர்.

    இதில் 33 பேர் பெங்களூரு சென்று புதுவை மாநில பொறுப்பாளர் தினேஷ்குண்டுராவை சந்தித்து பேசினர். அப்போது புதுவை மாநில காங்கிரஸ் தலைவர் தொடர்பாக கருத்து கேட்கப்பட்டது. ஆனால் மாநில தலைவர் யார்? என கட்சித்தலைமை அறிவிக்கவில்லை. இது கட்சியில் பிளவை ஏற்படுத்தியுள்ளது.

    தனித்தனியே டெல்லிக்கு சென்று கட்சித் தலைவர்களை சந்திக்கின்றனர். இது நிர்வாகிகளிடையே சோர்வை ஏற்படுத்தியுள்ளது.

    புதுவையில் கட்சி தலைவர்களை அழைத்து பேசி ஒருமித்த தலைமையை ஏற்படுத்த வேண்டும். காங்கிரசின் கோட்டையான புதுவையில் வருகிற லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர்தான் நிற்க வேண்டும். இதுகுறித்தும் காங்கிரஸ் தலைவர்களிடம் பேச வேண்டும் என வலியுறுத்தினர்.

    • கிருமாம்பாக்கம் விநாயகா மிஷன் செவிலியர் கல்லூரியில் 13-வது பட்டமளிப்பு விழா கல்லூரி வளாகத்தில் நடந்தது.
    • கல்லூரி முதல்வர் சாரதா ரமேஷ் உறுதிமொழி வாசித்தார். மாணவர்கள் கையில் விளக்கேற்றி உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

    புதுச்சேரி:

    கிருமாம்பாக்கம் விநாயகா மிஷன் செவிலியர் கல்லூரியில் 13-வது பட்டமளிப்பு விழா கல்லூரி வளாகத்தில் நடந்தது. விநாயகா மிஷன் ரிசர்ச் பவுண்டேசன் வேந்தர் டாக்டர் கணேசன் வழிகாட்டுதலின்படி நடைபெற்ற இந்த விழாவிற்கு கல்லூரி இயக்குனர் டாக்டர் அனுராதா கணேசன் தலைமை தாங்கினார்.

    தமிழ்நாடு செவிலியர்கள் சங்க பதிவாளர் அனிகிரேஸ் கலைமதி கலந்து ெகாண்டு, பி.எஸ்சி., நர்சிங் மாணவர்கள் 63 பேருக்கும், முதுநிலை மாணவர்கள் 10 பேருக்கும் பட்டங்களை வழங்கி பேசினார்.

    விழாவில் அறுபடை வீடு மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவ மனை டீன் டாக்டர் கொட்டூர் கலந்து கொண்டு மருத்துவ துறையில் செவிலியர்கள் பங்கு என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார். கல்லூரி முதல்வர் சாரதா ரமே ஷ் உறுதிமொழி வாசித்தார். மாணவர்கள் கையில் விளக்கேற்றி உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். ெதாடர்ந்து பாடவாரியாக முதலிடம் பெற்ற மாணவர்களுக்கு பதக்கங்கள் வழங்கப்பட்டன.

    விழாவில் விநாயகா மிஷன் ரிசர்ச் பவுண்டேசன் நிர்வாக குழு உறுப்பினர் சுரேஷ் சாமுவே ல், மருத்துவ கல்வி பிரிவு டீன் டாக்டர் மகாலட்சுமி, இயக்குனர் டாக்டர் விஷ்ணுபட், கண்காணிப்பாளர் டாக்டர் ஜெய்சிங் மற்றும் கல்லூரி பேராசிரியர்கள், மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.

    • காலாப்பட்டு தொகுதி பிள்ளை சாவடி மீனவர் கிராமத்தில் கடல் அரிப்பால் 20 வீடுகள் முற்றிலுமாக சேதம் அடைந்தது.
    • கடற்கரை மண் அரிப்பை தடுப்பதற்கு தூண்டில் முள் வடிவத்தில் கற்களை கொட்ட வேண்டும். மண்ணரிப்பை தடுப்பதற்கு நிதி ஒதிக்கியும் இதுநாள் வரையும் வேலை நடைபெறவில்லை.

    புதுச்சேரி:

    காலாப்பட்டு தொகுதி பிள்ளை சாவடி மீனவர் கிராமத்தில் கடல் அரிப்பால் 20 வீடுகள் முற்றிலுமாக சேதம் அடைந்தது. இதை அறிந்து பா.ம.க. மாநில அமைப்பாளர் கணபதி பாதிக்கப்பட்ட மீனவ பகுதிகளை பார்வையிட்டு பாதிக்கப் பட்ட மீனவர்களுக்கு ஆறுதல் கூறினார்.

    பின்னர் அவர் கூறியதாவது:-

    புதுவை அரசு உடனடியாக பாதிக்கப்பட்ட வீடுகளுக்கு முதல் கட்ட நிவாரணமாக ரூ.10 லட்சம் வழங்க வேண்டும். கடல் அரிப்பை தடுப்பதற்காக கருங்கல் கொட்டப்பட்டு இருந்தது. இது ஒரு தலை தலைபட்சமாக குறிப்பிட்ட பகுதியில் மட்டும் கொட்டியுள்ளனர்.

    கடற்கரை மண் அரிப்பை தடுப்பதற்கு தூண்டில் முள் வடிவத்தில் கற்களை கொட்ட வேண்டும். மண்ணரிப்பை தடுப்பதற்கு நிதி ஒதிக்கியும் இதுநாள் வரையும் வேலை நடைபெறவில்லை. இதனால் தான் இந்த பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

    இந்த நிலை தொடரக்கூடாது அரசு மக்கள் நலனின் போதிய கவனம் செலுத்த வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுனார்.

    நிகழ்ச்சியின் போது மாநில பாட்டாளி மீனவர் சங்க தலைவர் உத்தராடம், மாநில தொழிற்சங்க துணைத் தலைவர் துரைக்கண்ணு, காலாப்பட்டு தொகுதி தலைவர் மணிகண்டன், மாநில வன்னியர் சங்க செயலாளர் முருகன், நகர தலைவர் தமிழ்ச்செல்வன் மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

    • மாண்டஸ் புயல் காரணமாக பிள்ளைச் சாவடி கிராமத்தில் உள்ள 6 வீடுகள் முழுமையாக கடல் அலையில் அடித்து சென்று விட்டன.
    • முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பிள்ளைச்சாவடி கிராம மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டனர்.

    புதுச்சேரி:

    புதுவை காலாப்பட்டு அருகே கிழக்கு கடற்கரை சாலை பகுதியில் பிள்ளைச்சாவடி மீனவ கிராமம் உள்ளது. இதன் ஒரு பகுதி புதுவையைச் சேர்ந்ததாகவும் மற்றொரு பகுதி தமிழக பகுதியை சேர்ந்ததாகவும் உள்ளது.

    இந்த நிலையில் மாண்டஸ் புயல் காரணமாக பிள்ளைச் சாவடி கிராமத்தில் உள்ள 6 வீடுகள் முழுமையாக கடல் அலையில் அடித்து சென்று விட்டன. 3-க்கும் மேற்பட்ட படகுகளையும் அலைகள் இழுத்து சென்றது. 20-க்கும் மேற்பட்ட தென்னை மரங்களும் அலைகளில் சிக்கி வேரோடு முறிந்து விழுந்தது.

    முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பிள்ளைச்சாவடி கிராம மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டனர்.

    அவர்களுக்கு அரசு சார்பில் உணவு தயாரித்து வழங்கப்பட்டது.

    இதற்கிடையே நேற்று மதியம் பலத்த சூறை காற்றினால் கிழக்கு கடற்கரை சாலையில் பல இடங்களில் மரங்கள் சாய்ந்தன. இதையடுத்து அவ்வழியே பஸ் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.

    கோட்டக்குப்பம் ரவுண்டானாவில் தடுப்பு கட்டைகள் அமைக்கப்பட்டு போக்குவரத்து மாற்றிவிடப்பட்டது.

    இன்று காலை மழை மற்றும் காற்றின் வேகம் குறைந்ததால் கிழக்கு கடற்கரை சாலையில் விழுந்த மரங்கள் அப்புறப்படுத்தப்பட்டு மீண்டும் பஸ் போக்குவரத்து தொடங்கியது.

    • திடீர் சாலை மறியலால் கிழக்கு கடற்கரை சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
    • நடுக்குப்பம் பகுதியில் கரையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த படகுகள் கடல் சீற்றத்தால் சேதம்

    சேதராப்பட்டு.

    மாண்டஸ் புயல் கரையை கடந்து வரும் நிலையில் கோட்டக்குப்பம் மற்றும் சுற்றுவட்டார கடற்கரை பகுதியில் கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது.

    இதனால் சின்னமுதலியார் சாவடி, தந்திராயன்குப்பம், பொம்மையார்பாளையம், நடுக்குப்பம் உள்ளிட்ட 19 கிராமங்களை சேர்ந்த மீனவர்கள் 3-ம் நாளாக கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லவில்லை. இதனால், 1000-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள், 4000 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பைபர் மற்றும் நாட்டு படகுகள் மேடான பாதுகாப்பாக இடங்களில் கொண்டு செல்லும் பணியில் மீனவர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

    நடுக்குப்பம் பகுதியில் கரையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த படகுகள் கடல் சீற்றத்தால் சேதம் அடைந்தது. இதற்கிடையில் விழுப்புரம் மாவட்ட கலெக்டர் மோகன் புதுவை பிள்ளைச்சாவடி மீனவ பகுதியில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது மீனவர்களின் கோரிக்கையை கேட்டறிந்தார். பொம்மையார் பாளையத்தில் உள்ள புயல் பாதுகாப்பு மையத்தில் ஆய்வு நடத்திய கலெக்டர் மோகன் 24 மணி நேரமும் பேரிடர் மீட்பு குழு மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் மாண்டஸ் புயலை எதிர்கொள்ள தயாராக இருப்பதாக தெரிவித்தார்.

    இந்நிலையில் புதுவை பகுதியான பிள்ளைச்சாவடி மீனவ கிராமத்தில் ஊருக்குள் வந்த கடல் நீரால் அங்கு வசிக்கும் மீனவர்கள் அச்சத்தில் வாழ்ந்து வருகின்றனர்.

    ராட்சத அலையால் கடல்நீர் ஊருக்குள் புகுந்ததையடுத்து ஊர் மக்கள் மற்றும் மீனவ குப்பத்து மக்கள் இணைந்து புதுவை சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    புதுவைப் பகுதியில் தூண்டில் வளைவு அமைத்தால் மட்டுமே கடல் சீற்றத்திலிருந்து கடலோரப் பகுதியில் வசிக்கும் மக்களை காப்பாற்ற முடியும் என கோரிக்கை வைத்தனர்.

    காலாப்பட்டு போலீசார் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியதின் அடிப்படையில் மறியல் கைவிடப்பட்டது. இந்த திடீர் சாலை மறியலால் கிழக்கு கடற்கரை சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    • கடந்த 2 நாட்களாக புதுவையில் வானிலை முற்றிலுமாக மாறியுள்ளது.
    • புயல் எச்சரிக்கையால் பெரும்பாலான மக்கள் வீடுகளிலேயே முடங்கினர்.

    புதுச்சேரி:

    வங்கக்கடலில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு நிலை மாண்டஸ் புயலாக உருவெடுத்தது.

    மாண்டஸ் புயல் இன்று நள்ளிரவு அல்லது நாளை அதிகாலையில் மாமல்லபுரம் அருகே கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

    புயல் கரையை கடக்கும்போது கன மழையுடன் பலத்த காற்றும் வீசும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2 நாட்களாக புதுவையில் வானிலை முற்றிலுமாக மாறியுள்ளது. குளிர்ந்த காற்றுடன் சாரல் மழையும் பெய்து வருகிறது.

    பெரியளவில் மழை பெய்யவில்லை. நேற்று இரவில் காற்றின் வேகம் அதிகரித்தது. புயல் எச்சரிக்கையாக 5-ம் எண் கூண்டு ஏற்றப்பட்டது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நகர், புறநகர் பகுதிகளில் பேனர்கள், கட்அவுட்கள் அகற்றப்பட்டிருந்தது.

    இரவு முழுவதும் பலத்த சத்தத்துடன் காற்று வீசியது. இதனால் பல இடங்களில் மரங்களின் கிளைகள் முறிந்து விழுந்தது. சாலைகள் மரங்களின் இலைகளால் இறைந்து கிடந்தது. பல இடங்களில் மின்வயர்கள் அறுந்து விழுந்தது.

    புயல் காரணமாக புதுவையில் இன்றும், நாளையும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதனால் காலையில் வழக்கமான மக்கள் நடமாட்டம் இல்லை. பள்ளி செல்லும் வாகனங்கள், பெற்றோர்கள் இன்றி சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டது.

    இன்று காலை முதல் காற்றின் வேகம் மேலும் அதிகரித்துள்ளது. கடலில் அலைகளின் சீற்றம் அதிகளவு இருந்தது. அலைகள் சுமார் 10 அடி உயரத்திற்கு எழும்பி கரையில் மோதின.

    பழைய துறைமுகத்திலிருந்து கடலுக்குள் செல்லும் பழைய பாலம் சில மாதம் முன்பு உடைந்தது. இன்று அலையின் சீற்றம் காரணமாக பாலத்தின் ஒரு பகுதி முழுமையாக சேதமடைந்தது.

    புயல் கரையை கடக்கும்போது பாலம் தப்பிக்குமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. இன்று காலை முதல் கடல் அலைகளின் சீற்றத்தை வேடிக்கை பார்க்க புதுவை மக்கள் குவிந்தனர்.

    வார இறுதி விடுமுறை என்பதால் சுற்றுலா பயணிகளும் வந்திருந்தனர். அதில் ஒரு சிலர் கடலில் மணல்பரப்பில் இறங்கி அலைகளில் காலை நனைத்து விளையாடினர்.

    அப்போது போலீசார் கடலில் இறங்கி விளையாடிய சுற்றுலா பயணிகளை எச்சரித்து வெளியேற்றினர். கடல் அலைகள் கரையை தாக்கும்போது அங்கு நின்று பலரும் செல்பி எடுத்தனர். அவர்களையும் போலீசார் எச்சரித்தனர். மணல் பரப்பில் இறங்காமல் கடலை பார்த்து செல்ல போலீசார் அறிவுறுத்தினர்.

    இந்த நிலையில் காலை 11 மணியளவில் முதலமைச்சர் ரங்கசாமி கடலோர பகுதிகளை பார்வையிட்டார். அவர் கடற்கரை சாலைக்கு வந்தார். காரில் இருந்தபடியே கடலின் சீற்றத்தை பார்த்தார். பின்னர் பழைய துறைமுகத்துக்கு வந்து இடிந்து நின்ற பாலத்தை பார்வையிட்டார். அங்கிருந்த போலீசாரிடம், கடல் மணல்பரப்பில் மக்கள் இறங்காமல் தடுக்க உத்தரவிட்டார்.

    தொடர்ந்து போலீசார் பைக் மூலம் கடற்கரை சாலையில் மக்கள் வெளியேறும்படி எச்சரிக்கை விடுத்து அப்புறப்படுத்தினர். புதுவையில் குறைந்த அளவிலான கடைகள் மட்டுமே திறக்கப்பட்டிருந்தது. புயல் எச்சரிக்கையால் பெரும்பாலான மக்கள் வீடுகளிலேயே முடங்கினர்.

    • புயல் மழை எச்சரிக்கையையொட்டி புதுவை கடற்கரை பகுதிகளில் முதல்-அமைச்சர் ரங்கசாமி பார்வையிட்டார்.
    • ஏற்கனவே பிள்ளைச்சாவடியில் கடல் அரிப்பை தடுக்க கற்கள் கொட்ட ரூ.5 கோடி நிதி ஒதுக்கியுள்ளோம். இதற்கான பணி ஏற்கனவே தொடங்கி கற்கள் கொட்டப்பட்டு வருகிறது.

    புதுச்சேரி:

    புயல் மழை எச்சரிக்கையையொட்டி புதுவை கடற்கரை பகுதிகளில் முதல்-அமைச்சர் ரங்கசாமி பார்வையிட்டார்.

    பிள்ளைச்சாவடி பகுதியில் கடல் அரிப்பால் அங்கிருந்த வீடுகள் சேதமடைந்துள்ளது. இந்த வீடுகளை முதல்-அமைச்சர் ரங்கசாமி பார்வையிட்டார். அவருடன் அமைச்சர் லட்சுமிநாராயணன், கல்யாணசுந்தரம் எம்.எல்.ஏ., ஊர் பஞ்சாயத்தார் உடனிருந்தனர்.

    முதல்-அமைச்சர் ரங்கசாமி கூறும்போது, கடல் அரிப்பால் சேதமடைந்த வீடுகளுக்கு நிவாரணம் வழங்கப்படும்.

    ஏற்கனவே பிள்ளைச்சாவடியில் கடல் அரிப்பை தடுக்க கற்கள் கொட்ட ரூ.5 கோடி நிதி ஒதுக்கியுள்ளோம். இதற்கான பணி ஏற்கனவே தொடங்கி கற்கள் கொட்டப்பட்டு வருகிறது.

    கடல் சீற்றம் காரணமாக அரிப்பு ஏற்பட்டுள்ளது. மழை நின்றவுடன் கடல் அரிப்பை தடுக்க கற்கள் கொட்டும் பணி மீண்டும் தொடங்கும் என்று கூறினார்.

    • பாகூர் பகுதியில் மாண்டஸ் புயல் காரணமாக முதல் பலத்த காற்று மற்றும் மழை பல இடங்களில் இருந்துவந்தது.
    • இதன் கரையோர பகுதியில் உள்ள சுமார் 100வீடுகள் பாதிப்பு அடையும் என தெரிவிக்கின்றனர்.

    புதுச்சேரி:

    பாகூர் பகுதியில் மாண்டஸ் புயல் காரணமாக முதல் பலத்த காற்று மற்றும் மழை பல இடங்களில் இருந்துவந்தது.

    இந்த நிலையில் மேலும் காற்றின் வேகம் அதிகமாக வீசியது. மழை, சாரல் காற்று வீசுவதால் பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதித்தது. குறிப்பாக விவசாயம், கட்டுமானம், மீன் பிடி தொழில் பாதிப்படைந்தது.

    பல இடங்களில் மரக்கிளைகள் உடைந்து விழுந்தன. மீனவ கிராமங்களான மூ. புதுக்குப்பம், நரம்பை, பனித்திட்டு பகுதியில் சுமார் 15அடி அளவுக்கு அலை சீற்றம் எழுந்தது. இதனால் கரை அரிப்பு ஏற்பட்டு கரையே இல்லாதபடி தண்ணீர் புகுந்தது. இந்த அலை சீற்றம் மேலும் அதிகரிப்பு ஏற்பட்டால் கடல் நீர் ஊருக்குள் புகுந்துவிடும் என மீனவர்கள் தெரிவிக்கின்றனர். இதன் கரையோர பகுதியில் உள்ள சுமார் 100வீடுகள் பாதிப்பு அடையும் என தெரிவிக்கின்றனர்.

    கரைஅரிப்பு ஏற்பட்டதால் கடற்கரையில் இருந்த 300-க்கும் மேற்பட்ட படகுகளை கரையில் இருந்து தென்னந் தோப்புகளிலும், ஆற்றங் கரைகளிலும் நிறுத்தி உள்ளனர். மேலும் வலைகளை ரோட்டில் வைத்து வருகின்றனர்.

    ஏற்கனவே புயல் காரணமாக மீனவர்கள் கடலுக்கு செல்ல முடியாததால் வாழ்வாதாரம் இல்லாமல் தவிக்கின்றனர்.

    இந்த நிலையில் ஏம்பலம் தொகுதிக்கு உட்பட்ட பனித்திட்டு, நரம்பை மீனவ கிராம மக்கள் தவித்து வருவதை அறிந்த லட்சுமி காந்தன் எம் எல் ஏ. சம்பஇடத்திற்கு சென்று நேரில் பார்வையிட்டு மீனவர்களுக்கு ஆறுதல் கூறினார். மேலும் தாழ்வான பகுதியில் உள்ளவர்கள் பாதுகாப்பான இடங்களில் சென்று தங்க பொதுமக்களை கேட்டுக்கொண்டார்.

    அப்போது நரம்பை மீனவ கிராம மக்கள், கடந்த ஒரு வார காலமாக மீன்பிடிக்க கடலுக்கு செல்ல முடியாததால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு வருகிறோம். ஆனால் புதுவை அரசு மீன் வளத் துறை மற்றும் வருவாய் துறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. உடனடியாக உணவு மற்றும் மீனவர் ஒவ்வொருவருக்கும் நாள் ஒன்றுக்கு தலா ரூ.1000 நிவாரணம் வழங்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்தனர்.

    இந்த நிலையில் தேசிய பேரிடர் மீட்புப் குழு, கமெண்டர் ரவீந்தர் தலைமையில் வந்துள்ளனர். மீட்பு குழூவுடன் பாகூர் தாசில்தார் பிரதீவ்ராஜ், துணை தாசில்தார் விமலன், பாகூர், கிருமாம்பாக்கம் போலீசார் தீவிர கண்காணிப்பில் உள்ளனர்.

    • திருக்கனூர் அருகே உள்ள லிங்காரெட்டிப்பாளையம் கூட்டுறவு சர்க்கரை ஆலை நிர்வாகத்தின் கீழ் இயங்கும் பாண்கோஸ் மேல்நிலைப்பள்ளியில் 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு இலவச மழை அங்கி (ரெயின் கோட்) வழங்கும் நிகழ்ச்சி நடததது.
    • நாராயணசாமி ஆட்சி காலத்தில் எல்லாவற்றை யும் சிறப்பாக செய்திருந் தால் அவர் தேர்தலில் போட்டியிருக்க வேண் டியதுதானே? ஏன் தேர்தலில் நிற்காமல் பயந்து ஓடினார்?

    புதுச்சேரி:

    திருக்கனூர் அருகே உள்ள லிங்காரெட்டிப்பாளையம் கூட்டுறவு சர்க்கரை ஆலை நிர்வாகத்தின் கீழ் இயங்கும் பாண்கோஸ் மேல்நிலைப்பள்ளியில் 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு இலவச மழை அங்கி (ரெயின் கோட்) வழங்கும் நிகழ்ச்சி நடததது.

    மாணவர்களுக்கு ரெயின் கோட் வழங்கினார். முன்னாள் எம்.எல்.ஏ. அருள்முருகன் தலைமை ஆசிரியா் சிவகங்கை மற்றும் ஆசி ரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.

    பின்னர் அமைச்சர் நமச்சிவாயம் நிருபர்களி டம் கூறியதாவது:-

    தேசிய் ஜனநாயக கூட்டணி அரசு செயல்படுத்து கின்ற நலத்திட்டங்களை பார்த்து முன்னாள் முதல்-அமைச்சர் நாராயண சாமி வயிற்றெரிச்சலில் பேசி கொண்டிருக்கிறார். அவர் முதல் அமைச்சராக இருந்த. காலத்தில் என்ன திட்டங் களை செயல்படுத்தினார்?

    இப்போது என்னென்ன திட்டங்கள் செயல்படுத் தப்படுகிறது என்பது மக் களுக்கு நன்றாக தெரியும்.

    நாராயணசாமி அரசிய லில் இருப்பதை காட்டிக் கொள்ளவும், காங்கிரஸ கட்சியிலும் கூட்டணி யிலும் இருக்கின்ற பிரச்சினை களை மறைப்பதற்காகவும், ஆளுங்கட்சியின் மீது பொய்யான குற்றச்சாட்டு களை கூறி கொண்டிருக் கிறார்.

    அவர்கள் போராட்டம் செய்வதால்தான் வேண் டியது கிடைக்கிறது என்ற ஒரு மாயத்தோற்றத்தை உருவாக்க இதுபோன்ற போராட்டங்களை செய்கி ன்றனர்.மாணவர்க ளுக்கு இலவச பஸ், மதிய உணவோடு 2 முட்டை கொடுக்கப்படுகிறது.அனைத்து பள்ளிகளில்லும் ரெயின் கோட் வழங்கப்படுகிறது.வெகு விரைவாவாக 'குடை கொடுக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது நாராயணசாமி முதல்-அமைச்சராக இருந்தபோது எத்தனை பேருக்கு சீருடை சைக்கிள் கொடுத்துள்ளார்? என்று சொல்ல சொல்லுங் கள் அனைத்து திட்டத்தை யும் நிறுத்திவிட்டு சென்றவர் அவர்தான்.

    நாராயணசாமி ஆட்சி காலத்தில் எல்லாவற்றை யும் சிறப்பாக செய்திருந் தால் அவர் தேர்தலில் போட்டியிருக்க வேண் டியதுதானே? ஏன் தேர்தலில் நிற்காமல் பயந்து ஓடினார்.? அவருடைய ஆட்சி காலத்தில் எதையும் செய்யாததால் அவருக்கு மக்கள் வாக்களிக்க மாட்டார்கள் என தெரிந்துதான் தேர்தலில் போட் டியிடவில்லை.

    எனவே, அரசின் மீது தேவையற்ற பழியை சுமத்த பொய்யான குற்றச்சாட்டுகளை கூறி வருகிறார்.போராட்டம் செய்வது நாராயண்சாமிக்கு கைவந்த கலை. ஆளும் கட் சியாக இருந்தாலும், எதிர்க கட்சியாக இருந்தாலும் போராட்டம் செய்வார். கூட்டுறவு சர்க்கரை ஆலை இயக்குவதற்கு தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகி றோம். பொதுமக்கள், விவ சாயிகளின் கருத்துக்களை கேட்டறிந்து அதற்கேற்ப ஆலையை வெகு விரைவில் இயக்குவோம்.

    இவ்வாறு அவர் கூறினார். 

    • புதுவை தேர்தல் துறை சார்பில் புதிய வாக்காளர்கள் சேர்த்தல், நீக்கல் மற்றும் முகவரி மாற்றம் போன்ற பணிகள் சிறப்பு முகாம்கள் மூலம் நடைபெற்று வருகிறது.
    • மேலும் ஆன்லைன் மூலம் பதிவு முறை பற்றி தே ர்தல் துறை அதிகாரிகள் விளக்கினர்.

    புதுச்சேரி:

    புதுவை தேர்தல் துறை சார்பில் புதிய வாக்காளர்கள் சேர்த்தல், நீக்கல் மற்றும் முகவரி மாற்றம் போன்ற பணிகள் சிறப்பு முகாம்கள் மூலம் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் பாகூர் பகுதியில் உள்ள தனியார் மருத்துவம், செவிலியர், என்ஜினீயரிங் கல்லூரிகளில் வாக்காளர் பதிவு சிறப்பு முகாம் மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

    கிருமாம்பாக்கம் ஆறுபடை வீடு மருத்துவக் கல்லூரியில் உள்ள விநாயகா மிஷன் நர்சிங் கல்லூரியில் நடந்த முகாமில் பாகூர் தாசில்தார் மற்றும் தேர்தல் பதிவு அதிகாரி பிரதீவ்ராஜ் மாணவர்களுக்கு வாக்காளர் பதிவு படிவம் வழங்கினார்.

    மேலும் ஆன்லைன் மூலம் பதிவு முறை பற்றி தே ர்தல் துறை அதிகாரிகள் விளக்கினர். இந்த முகாமில் ஆறுபடை வீடு மருத்துவக் கல்லூரி துணை பதிவாளர் பெருமாள், கல்லூரி முதல்வர் சாரதா ஆகியோர் பங்கேற்றனர்.

    ×