என் மலர்
புதுச்சேரி

கோப்பு படம்.
இறைச்சி வியாபாரிக்கு பீர்பாட்டில் குத்து
- புதுவையில் உறவினரை தாக்கியதை தட்டிக்கேட்ட இறைச்சி கடைக்காரரை பீர்பாட்டிலால் குத்திய கும்பலை போலீசார் தேடி வருகிறார்கள்.
- இதனால் ஆத்திரமடைந்த அமீர், தேவசந்திரன், சுனில், அருள் ஆகியோர் சதீஷ்குமாரை சரமாரியாக தாக்கினர்.
புதுச்சேரி:
புதுவையில் உறவினரை தாக்கியதை தட்டிக்கேட்ட இறைச்சி கடைக்காரரை பீர்பாட்டிலால் குத்திய கும்பலை போலீசார் தேடி வருகிறார்கள்.
புதுவை ரோடியர்பேட் அங்குநாயக்கர் தோப்பு பகுதியை சேர்ந்தவர் சதீஷ்குமார்(வயது29). இவர் மாட்டிறைச்சி வியாபாரம் செய்து வருகிறார். அதே பகுதியை சேர்ந்த இவரது உறவினர் சஞ்சீவி. நேற்று மதியம் சஞ்சீவியை ரோடியர்பேட்டை சேர்ந்த அமீர் மற்றும் ஆட்டுப்பட்டியை சேர்ந்த தேவசந்திரன், சுனில், அருள் ஆகியோர் சேர்ந்து தாக்கினர்.
இதையடுத்து சஞ்சீவி தனது உறவினரான சதீஷ்கு மாரிடம் முறையிட்டார். இதைத்தொடர்ந்து சதீஷ்குமார் சம்பவம் நடந்த இடத்துக்கு சஞ்சீவியை தாக்கிய கும்பலிடம் தட்டிக்கேட்டார்.
இதனால் ஆத்திரமடைந்த அமீர், தேவசந்திரன், சுனில், அருள் ஆகியோர் சதீஷ்குமாரை சரமாரியாக தாக்கினர். மேலும் பீர் பாட்டிலால் குத்தினர். அதோடு கொலை செய்துவிடுவதாக மிரட்டல் விடுத்தனர்.
இந்த தாக்குதலில் காயமடைந்த சதீஷ்குமார் புதுவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார்.
பின்னர் இதுகுறித்து உருளையன்பேட்டை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து அமீர் உள்பட 4 பேரையும் தேடி வருகிறார்கள்.






