என் மலர்
புதுச்சேரி
- ஒரு வார காலமாக அச்சுறுத்திக் கொண்டிருந்த மாண்டஸ் புயல் ஒரு வழியாக கரை ஏறி இருக்கிறது.
- அதே நேரத்தில் புயல் புதுவை மற்றும் காரைக்கால் மீனவ கிராமங்களையும் மீனவர்களையும் பல்வேறு வகைகளில் பாதித்துள்ளது.
புதுச்சேரி:
புதுவை முன்னாள் எம்.பி. ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
ஒரு வார காலமாக அச்சுறுத்திக் கொண்டிருந்த மாண்டஸ் புயல் ஒரு வழியாக கரை ஏறி இருக்கிறது. புயலில் இருந்து மக்களை பாதுகாக்க அரசு எடுத்திருந்த முன்னேற்பாடு எச்சரிக்கை நடவடிக்கைகள் பாராட்டுக்குரியது.
அதே நேரத்தில் புயல் புதுவை மற்றும் காரைக்கால் மீனவ கிராமங்களையும் மீனவர்களையும் பல்வேறு வகைகளில் பாதித்துள்ளது. சாதாரண நிலைக்கு மேல் அலை பல அடி உயரம் சீறிப்பாய்ந்து மீனவ மக்களை பயமுறுத்தி உள்ளதோடு கிராமங்களில் கடல் அரிப்பு ஆங்காங்கே ஏற்பட்டுள்ளது.
பிள்ளை சாவடியில் 13 வீடுகள் இடிந்து விழுந்து உள்ளன. அங்கு ஏற்கனவே ஏற்படுத்தப்பட்டுள்ள கற்சாலை சரிவர அமைக்கப்படாததால் வீடுகள் இடிந்து விழுந்ததற்கு மற்றொரு காரணம் என்று சொல்லப்படுகிறது.
காரைக்கால் பட்டினச்சேரியிலும் கடல் நீர் உட்புகுந்து சேதங்களை ஏற்படுத்தி உள்ளது. புயல் வரப்போகிறது என்று எச்சரிக்கை விடுத்த நாளிலிருந்து மீனவர்கள் தொழிலுக்குச் செல்லவில்லை. புயல் ஓய்ந்த 3 நாட்கள் தயாரிப்பிற்கு பின்பு தான் தொழிலுக்குச் செல்ல இயலும். அவர்கள் தங்கள் வாழ்வாதாரத்தை சீரமைக்க குறைந்தபட்சம் 10 நாட்களாகும். எனவே, மீனவர்களுக்கு நிவாரணத் தொகை வழங்க வேண்டும்.
வலை கட்டுமரம் படகுகள் சேதம் அடைந்திருந்தால் அவற்றிற்கும் நிவாரணம் வழங்க வேண்டும். வழங்க வேண்டிய நிவாரணத்தை சரியாக மதிப்பிட்டு பாதிக்கப்பட்ட அனைவருக்கும் உடனடியாக வழங்க வேண்டும்.
இவ்வாறு ராமதாஸ் அறிக்கையில் கூறியுள்ளார்.
- யூ.டி.சி. பணிக்கு போட் டித் தேர்வு மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
- பணிக்கு விண்ணப் பித்தவ ர்களுக்கு, தொழிலா ளர் துறை வேலை வாய்ப்பகம் சார்பில் போட்டி தேர்வுக்கு இலவச பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
புதுச்சேரி:
புதுவை அரசின் பல் வேறு துறைகளில் காலி யாக உள்ள 116 யூ.டி.சி., பணியிடங்கள் நேரடி நிய மன முறையில் நிரப்பபட உள்ளது.
யூ.டி.சி. பணிக்கு போட் டித் தேர்வு மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். பணிக்கு விண்ணப் பித்தவ ர்களுக்கு, தொழிலா ளர் துறை வேலை வாய்ப்பகம் சார்பில் போட்டி தேர்வுக்கு இலவச பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
இதற்கான தகுதி தேர்வு பாரதிதாசன் அரசு மகளிர் கல்லுாரியில் இன்று காலை 10.15 மணிக்கு தொடங்கியது. இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட இளைஞர்ள் பங்கேற்றனர். மதியம் 12.15 மணி வரை தேர்வு நடந்தது. தேர்விற்கு, தொழி லாளர்துறை இணையதளத் தில் விண்ணப்பித்தவர்கள் கலந்து கொண்டனர்.
இ-மெயிலில் ஹால்டிக் கெட் கிடைக்காத சிலர் நேரடியாக புகைப்படத் துடன் தேர்வு மையத்தினை அணுகி பங்கேற்றனர்.
- கர்லா கட்டை சுற்றும் கின்னஸ் சாதனை நிகழ்ச்சி புதுவை கடற்கரை காந்தி திடலில் (திங் கட்கிழமை ) காலை 7 மணி அளவில் நடக்கிறது.
- கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் சிறப்பு அழைப்பாளராக கலந் து கொண்டு சாதனை நிகழ்ச்சியை தொடங்கி வைக்கிறார்.
புதுச்சேரி:
சர்வதேச கர்லாகட்டைதினத்தையொட்டி 100 பேர் ஒரே இடத்தில் கர்லா கட்டை சுற்றும் கின்னஸ் சாதனை நிகழ்ச்சி புதுவை கடற்கரை காந்தி திடலில் (திங் கட்கிழமை ) காலை 7 மணி அளவில் நடக்கிறது. பூரணாங்குப்பம் ஜோதி சிலம்பம் சத்திரிய குருகுலம் ஏற்பாடு செய்துள்ள இந்த நிகழ்ச்சிக்கு அதன் நிறுவனரும் சத்திரிய சேனா சேவக நிறுவனருமான ஜோதி செந்தில் கண்ணன் தலைமை தாங்குகிறார்.
கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் சிறப்பு அழைப்பாளராக கலந் து கொண்டு சாதனை நிகழ்ச்சியை தொடங்கி வைக்கிறார். இதில் முதல்-அமைச்சர் ரங்க சாமி, சபாநாயகர் செல்வம், அமைச்சர்கள் நமச்சிவாயம், லட்சுமி நாராயணன், தேனீ.ஜெயக்குமார், சந்திரபிரியங்கா, சாய்.ஜெ.சரவணன்குமார், செல்வகணபதி எம்.பி. மற்றும் எம்.எல்.ஏ.க்கள் கலந்து கொள்கின்றனர்.
முன்னதாக சத்திரிய சேனா சேவக பொதுச்செயலாளர் வெற்றிச்செல்வம் அனைவரையும் வரவேற்கிறார். அதனைத் தொடர்ந்து காலை 10 மணியளவில் பூரணாங்குப்பத்தில் உள்ள ஜோதி சிலம்பம் சத்திரிய குருகுலத்தில் புதுவை, சென்னை, கோவை, பெங்களூரு, ஐதராபாத், பீகாரை சேர்ந்த 10 பேர் மற்றும் ஆஸ்திரேலிய நாட்டை சேர்ந்த 2 பேர் என மொத்தம் 12 பேர் தனித்தனியாக கர்லா கட்டை சுற்றும் சாதனை நிகழ்ச்சியும் நடக்கிறது.
- இந்திராநகர் தொகுதியில் புயல் மற்றும் மழை பாதிப்புகளை அரசு கொறடா ஆறுமுகம் ஆய்வு செய்தார்.
- புதுவையை அச்சுறுத்திய மாண்டஸ் புயல் மாமல்லபுரம் அருகே கரையை கடந்தது.
புதுச்சேரி:
இந்திராநகர் தொகுதியில் புயல் மற்றும் மழை பாதிப்புகளை அரசு கொறடா ஆறுமுகம் ஆய்வு செய்தார்.
புதுவையை அச்சுறுத்திய மாண்டஸ் புயல் மாமல்லபுரம் அருகே கரையை கடந்தது. அப்போது புதுவை பகுதியில் பலத்த காற்று வீதியதில் ஆங்காங்கே சிறு, சிறு பாதிப்பு ஏற்பட்டது.
அதில் இந்திராநகர் தொகுதியில் ஞானதியாகுநகர், மாதா கோவில் வீதி, சாணாரப்பேட்டை, தருமபுரி, கோவிந்தபேட்டை, அய்யங்குட்டிப்பாளையம், காமராஜர் நகர் உள்ளிட்ட பகுதிகளில் ஏற்பட்ட பாதிப்புகளை அரசு கொறடா ஆறுமுகம் பார்வையிட்டார். பின்னர் புயல் மற்றும் மழையால் பாதித்த மக்களுக்கு மதிய உணவு வழங்கினார்.
- புதுவை கோரிமேடு இஸ்ரவேல் நகரை சேர்ந்த வர் அய்யனார்
- திருக்கனூர் அருகே சந்தை புதுகுப்பத்தில் உள்ள மாமியார் வீட்டுக்கு சென்றார்.
புதுச்சேரி:
புதுவை கோரிமேடு இஸ்ரவேல் நகரை சேர்ந்த வர் அய்யனார் (வயது31). இவரது மனைவி ஐஸ்வர்யா (21). நேற்று அய்யனார் தனது மனைவியுடன் திருக்கனூர் அருகே சந்தை புதுகுப்பத்தில் உள்ள மாமியார் வீட்டுக்கு சென்றார்.
அப்போது அங்கிருந்த ஐஸ்வர்யாவின் அக்காள் கணவரான முத்தால்ராயன் என்பவர் அய்யனாரை தகாத வார்த்தைகளால் திட்டி ஏன் இங்கு வந்தாய் என்று கேட்டார். இதனை அய்யனார் தட்டிக்கேட்ட போது அவரை முத்தால்ராயன் அங்கிருந்த தடியை எடுத்து அய்யனாரை தாக்கினார்.
இதனை தடுக்க முயன்ற போது ஐஸ்வர்யாவையும் அவர் தாக்கினார். இந்த தாக்குதலில் காயமடைந்த அய்யனார் அவரது மனைவி ஐஸ்வர்யா ஆகியோர் கதிர்காமம் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றனர்.
பின்னர் இதுகுறித்து அய்யனார் காட்டேரிக்குப்பம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- வீடுகளை பாதுகாத்து கொள்ள தார் பாய் வழங்க வேண்டும்
- முன்னாள் எம்.எல்.ஏ.வுமான வையாபுரி மணிகண்டனிடம் கோரிக்கை வைத்தனர்.
புதுச்சேரி:
மாண்டஸ் புயல் மற்றும் மழை காரணமாக முத்தியால்பேட்டை சோலை நகரை சேர்ந்த பாதிக்கப்பட்ட மீனவ சமுதாய மக்கள் தங்களது வீடுகளை பாதுகாத்து கொள்ள தார் பாய் வழங்க வேண்டும் என்று அ.தி.மு.க. மாநில செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான வையாபுரி மணிகண்டனிடம் கோரிக்கை வைத்தனர். இதனையேற்று பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு தார் பாய்களை வையாபுரி மணிகண்டன் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் அ.தி.மு.க. கிழக்கு மாநில நிர்வாகிகள் உதயசூரியன், ஆறுமுகம், கமல், மணிகண்டன், பெயிண்டர் ஆறுமுகம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- மாண்டஸ் புயல் காரணமாக புதுவையில் வானிலை முற்றிலும் மாறி அவ்வப்போது மழைபெய்து வந்தது.
- மேலும் கடந்த 2 நாட்களாக பலத்த காற்றும் வீசி வந்தது.
புதுச்சேரி:
மாண்டஸ் புயல் காரணமாக புதுவையில் வானிலை முற்றிலும் மாறி அவ்வப்போது மழைபெய்து வந்தது. மேலும் கடந்த 2 நாட்களாக பலத்த காற்றும் வீசி வந்தது. இதனால் உப்பளம் தொகுதியை சேர்ந்த தினக்கூலி தொழிலாளர்கள் வேலைக்கு செல்ல முடியாமல் வீட்டிலேயே முடங்கி உள்ளனர்.
இதையடுத்து தொகுதி எம்.எல்.ஏ.வான கென்னடி நேற்று முன் தினம் உணவு தயாரித்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கினார். நேற்று 2-வது நாளாக தொகுதி தி.மு.க. நிர்வாகிகளுடன் கென்னடி எம்.எல்.ஏ. உப்பளம் தொகுதிக்குட்பட்ட பகுதி மக்களுக்கு உணவு வழங்கினார். மேலும் குடிசை வீடுகளுக்கு தார்பாய் போன்ற நிவாரண உதவிகளையும் அளித்தார்.
உடன் அவைத் தலைவர் ரவி, திமுக பிரமுகர் நோயல், மாநில இளைஞரணி ராஜி, கிளைச் செயலாளர்கள் செல்வம், காலப்பன், மணிகண்டன், ஆறுமுகம், மாயவன், ஜெயசீலன், ரவி, மணிமாறன் மற்றும் ராகேஷ் கௌதமன், கழக சகோதரர்கள் ரகுமான், மோரிஸ், லாரன்ஸ், சிரஞ்சீவி, மதி, சித்தார்த்தன், திருநாவுக்கரசு, சக்தி ஆகியோர் உடன் இருந்தனர்.
- கராத்தே இந்திய ஆர்கனைசேஷன் சார்பில் தேசிய இண்டர் சோனல் மற்றும் சப்-ஜூனியர் கராத்தே போட்டி டெல்லியில் நடந்தது.
- இதில், பாரத் கராத்தே ஆர்கனைசேஷன் ஆப் புதுவை அமைப்பு சார்பில் புதுவை அணியினர் பங்கேற்றனர். இந்த போட்டியில், சாமரன் தங்கப்பதக்கத்தையும், நித்தியபிரதாப் வெண்கல பதக்கமும் வென்று சாதனை படைத்தனர்.
புதுச்சேரி:
கராத்தே இந்திய ஆர்கனைசேஷன் சார்பில் தேசிய இண்டர் சோனல் மற்றும் சப்-ஜூனியர் கராத்தே போட்டி டெல்லியில் நடந்தது.
இதில், பாரத் கராத்தே ஆர்கனைசேஷன் ஆப் புதுவை அமைப்பு சார்பில் புதுவை அணியினர் பங்கேற்றனர். இந்த போட்டியில், சாமரன் தங்கப்பதக்கத்தையும், நித்தியபிரதாப் வெண்கல பதக்கமும் வென்று சாதனை படைத்தனர்.
இவர்களுக்கு, பாரத் கராத்தே ஆர்கனைசேஷன் ஆப் புதுவை சார்பில் சிறப்பானவரவேற்பு அளிக்கப்பட்டது. இதில், மூத்த பயிற்சியாளர் ஜோதிமணி, அமைப்பு தலைவர் அழகப்பன், பொது மேலாளர் பாலமுரளி, பொருளாளர் குமரன் ஆகியோர் மாணவர்களை வாழ்த்தினர்.
ஆசிய கராத்தே நடுவர் பழனி வேல், துணை செயலாளர் சங்கர், நிர்வாகிகள் தர்மபிரகாஷ், புருஷோத்தமன் உடனிருந்தனர்.
- புதுவை பிள்ளைச்சாவடி மீனவ கிராமத்தில் புயலால் ஏற்பட்ட கடல் சீற்றத்தால் ஏற்பட்ட பாதிப்புகளை புதுவை கிழக்கு மாநில அ.தி.மு.க. செயலாளர் அன்பழகன் பார்வையிட்டார்.
- அதேபோன்று சேதமடைந்த வலை,படகு உள்ளிட்ட மீன்பிடி சாதனங்கள் பாதிக்கப்பட்டிருந்தால் அதற்குரிய நிவாரண உதவியை கணக்கெடுத்து வழங்க வேண்டும்.
புதுச்சேரி:
புதுவை பிள்ளைச்சாவடி மீனவ கிராமத்தில் புயலால் ஏற்பட்ட கடல் சீற்றத்தால் ஏற்பட்ட பாதிப்புகளை புதுவை கிழக்கு மாநில அ.தி.மு.க. செயலாளர் அன்பழகன் பார்வையிட்டார்.
பின்னர், வீடுகளை இழந்த மக்களுக்கு ஆறுதல் கூறிய அ.தி.மு.க. செயலாளர் அன்பழகன் நிருபர்களிடம் கூறியதாவது:-
கடற்கரையில் கல் கொட்டுதல் சம்பந்தமாக சரியான புரிதல் இல்லாமல் தலைமை செயலகம் உள்ளிட்ட ஒரு சில இடங்களில் கற்களை கொட்டி செயற்கை மணற்பரப்பை உருவாக்குவதால் அதற்கு அடுத்துள்ள பல மீனவ கிராமங்கள் கடல் சீற்றத்தால் காணாமல் போகும் நிலை ஏற்பட்டுள்ளது.
கடந்த தி.மு.க., காங்கிரஸ் ஆட்சியில் சரியான திட்டமிடுதலின்றி சில இடங்களில் கொட்டப்பட்ட கற்களால் கனக செட்டிகுளம், பிள்ளைச் சாவடி, காலாப்பட்டு உள்ளிட்ட இடங்களில் கடல் அரிப்பு ஏற்படுகிறது. புயலால் 50-க்கும் மேற்பட்ட வீடுகள் கடலோடு அடித்து செல்லப்பட்டன.
வீடு, வாசல், வீட்டு உபயோக பொருட்கள், மீன்பிடி சாதனங்கள் உள்ளிட்ட தனது உடைமைகளை முழுமையாக இழந்து நிற்கதியாய் பல மீனவர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.கடலில் மூழ்கிய ஒவ்வொரு வீட்டிற்கும் உரிய நிவாரணத் தொகை வழங்கப்படும் என முதல்-அமைச்சர் ரங்கசாமி அறிவித்துள்ளார்.
இயற்கை பேரிடர் நிவாரண நிதியிலிருந்து முழுமையாக பாதிக்கப்பட்ட வீடுகளுக்கு ரூ.15 லட்சமும், பகுதி பாதிக்கப்பட்ட வீடுகளுக்கு ரூ.8 லட்சமும் இழப்பீடாக அரசு வழங்கும் அறிவிப்பை முதல்-அமைச்சர் வெளியிட வேண்டும். அதேபோன்று சேதமடைந்த வலை,படகு உள்ளிட்ட மீன்பிடி சாதனங்கள் பாதிக்கப்பட்டிருந்தால் அதற்குரிய நிவாரண உதவியை கணக்கெடுத்து வழங்க வேண்டும்.
இவ்வாறு அன்பழகன் கூறினார்.
நிகழ்ச்சியில் மாநில அவைத் தலைவர் அன்பானந்தம், மாநில துணை தலைவர் ராஜாராமன், மாநில பொருளாளர் ரவி பாண்டுரங்கன், மாநில துணை செயலாளர் நாகமணி, நகர செயலாளர் அன்பழகன் உடையார், மேற்கு மாநில ஜெ.பேரவை செயலாளர் சுத்துக்கேணி பாஸ்கரன், மாநில அண்ணா தொழிற்சங்கப் பேரவை செயலாளர் பாப்புசாமி, மணவெளி தொகுதி செயலாளர் பாஸ்கரன் ஆகியோர் உடனிருந்தனர்.
- புதுவை போக்குவரத்துத்துறை சார்பில் ராஜா தியேட்டர் வழியாக செல்லும் டெம்போக்களுக்கு புதுவையில் அனைத்து பகுதியிலும் இயக்க புதிய உரிமம் வழங்கப்பட்டுள்ளது.
- டெம்போக்களை போக்குவரத்து துறை அலுவலக வளாகத்திலேயே நிறுத்தினர். இந்த போராட்டம் 2-வது நாளாக தொடர்ந்தது.
புதுச்சேரி:
புதுவை போக்குவரத்துத்துறை சார்பில் ராஜா தியேட்டர் வழியாக செல்லும் டெம்போக்களுக்கு புதுவையில் அனைத்து பகுதியிலும் இயக்க புதிய உரிமம் வழங்கப்பட்டுள்ளது.
இதற்கு பிற வழித்தட டெம்போ டிரைவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அனைத்து வழித்தடங்களில் இயக்க வழங்கப்பட்ட உரிமத்தை ரத்து செய்ய கோரிக்கை வைத்துள்ளனர். இதை வலியுறுத்தி நேற்று ராஜா தியேட்டர் வழித்தடம் தவிர்த்து மற்ற வழித்தட டெம்போ டிரைவர்கள் வேலைநிறுத்தம் செய்து, போக்குவரத்துத்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
டெம்போக்களை போக்குவரத்து துறை அலுவலக வளாகத்திலேயே நிறுத்தினர். இந்த போராட்டம் 2-வது நாளாக தொடர்ந்தது. அவர்கள் டெம்போக்களை இயக்கவில்லை. புதிய பஸ்நிலையம் முன்பு ஒன்று திரண்ட டெம்போ டிரைவர்கள் அங்கு திடீரென மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதையடுத்து போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையை தொடர்ந்து டிரைவர்கள் மறியலை கைவிட்டனர். இருப்பினும் உரிமம் ரத்து செய்யப்படும் வரை ஸ்டிரைக் தொடரும் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.
- கடலின் கரை சகதியாகவும், அலை சீற்றத்துடன் காணப்பட்டதால் எதிர்பாராத விதமாக கடல் அலையில் சிக்கிக் கொண்டார்.
- கிருமாம்பாக்கம் போலீஸ் உதவி சப்-இன்ஸ்பெக்டர் லூர்து நாதன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
பாகூர்:
மாண்டஸ் புயல் காரணமாக புதுவை கடலில் அலை சீற்றம் அதிகமாக காணப்படுகிறது. இதனால் ராட்சத அலைகள் உருவாகி கரையையே ஆக்கிரமித்து உள்ளது.
இதே நிலையே கிருமாம்பாக்கத்தையடுத்த பனித்திட்டு, நரம்பை, மு.புதுகுப்பம், தவளக்குப்பம் அருகே நல்லவாடு, சின்ன வீராம்பட்டினம், வீராம்பட்டினம் பகுதியிலும் நிலவுகிறது.
புயல் கடந்த நிலையிலும் இன்று காலை கடலின் சீற்றம் அதிகமாக இருந்து வருகிறது.
இந்த நிலையில் பனித்திட்டு பகுதியை சேர்ந்தவர் பாண்டு (வயது 62). இவர் போலீஸ் உதவி சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். இன்று காலை இவர் அப்பகுதியில் உள்ள கடற்கரையில் உடற்பயிற்சி மேற்கொண்டார். பின்னர் கடற்கரையை அலை சீற்றத்தை காண சென்றார்.
இந்த நிலையில் கடலின் கரை சகதியாகவும், அலை சீற்றத்துடன் காணப்பட்டதால் எதிர்பாராத விதமாக கடல் அலையில் சிக்கிக் கொண்டார்.
தகவல் அறிந்த அப்பகுதி மீனவர்கள் சம்பவ இடத்திற்கு சென்று அவரை மயங்கிய நிலையில் மீட்டனர். மீட்கப்பட்ட பாண்டுவை கிருமாம்பாக்கம் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.
அங்கு பரிசோதித்த டாக்டர்கள் பாண்டு வரும் வழிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து கிருமாம்பாக்கம் போலீஸ் உதவி சப்-இன்ஸ்பெக்டர் லூர்து நாதன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
கடற்கரைக்கு உடற்பயிற்சி செய்ய சென்ற ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரி கடல் அலை சீற்றத்தில் சிக்கி பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
- புதுவை மாநில பா.ஜனதா மற்றும் லே புதுவை ஹாக்கி அமைப்பு இணைந்து நடத்தும் 3 நாள் தொடர் ஹாக்கி போட்டி லாஸ்பேட்டை உள் விளையாட்டரங்கில் தொடங்கியது.
- இதற்கான ஏற்பாடுகள், வீரர்களுக்கு பரிசு தொகையை மாநில செயற்குழு உறுப்பினர் லட்சுமிநாராயணன் வழங்குகிறார்.
புதுச்சேரி:
புதுவை மாநில பா.ஜனதா மற்றும் லே புதுவை ஹாக்கி அமைப்பு இணைந்து நடத்தும் 3 நாள் தொடர் ஹாக்கி போட்டி லாஸ்பேட்டை உள் விளையாட்டரங்கில் தொடங்கியது.
பா.ஜனதா மாநில தலைவர் சாமிநாதன் தலைமை தாங்கினார். அமைச்சர் சாய்.ஜெ.சரவணக்குமார் போட்டியை தொடங்கி வைத்தார். சபாநாயகர் ஏம்பலம் செல்வம், எம்.எல்.ஏ.க்கள் கல்யாணசுந்தரம், வி.பி.ராமலிங்கம், வெங்கடேசன், பா.ஜனதா துணைத்தலைவர் செல்வம், விவசாய அணி செயற்குழு உறுப்பினர் பாரதிமோகன், பயிற்சி பிரிவு அமைப்பாளர் பாலாஜி, மாவட்ட தலைவர் நாகேஸ்வரன், தொகுதி பொறுப்பாளர் தண்டபாணி உட்பட பலர் கலந்துகொண்டனர்.
போட்டியில் தமிழ்நாடு, புதுவை, கர்நாடகா, ஆந்திரா, கேரளாவை சேர்ந்த 22 அணிகள் பங்கேற்கின்றனர். போட்டியில் வெற்றி பெறும் அணிகளுக்கு முதல் பரிசாக ரூ.50 ஆயிரம், 2-ம் பரிசாக ரூ.30 ஆயிரம், 3-ம் பரிசாக ரூ.20 ஆயிரம், 4-ம் பரிசாக ரூ.10 ஆயிரம், வெற்றி கோப்பை வழங்கப்பட உள்ளது.
இதற்கான ஏற்பாடுகள், வீரர்களுக்கு பரிசு தொகையை மாநில செயற்குழு உறுப்பினர் லட்சுமிநாராயணன் வழங்குகிறார். போட்டியை ஹாக்கி சங்க தலைவர் செந்தில், பொதுச்செயலாளர் அன்பழகன், துணை த்தலைவர் சந்திரசேகர் மற்றும் நிர்வாகிகள் ஒருங்கிணைத்தனர்.






