என் மலர்

  நீங்கள் தேடியது "State hockey tournament"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • புதுவை மாநில பா.ஜனதா மற்றும் லே புதுவை ஹாக்கி அமைப்பு இணைந்து நடத்தும் 3 நாள் தொடர் ஹாக்கி போட்டி லாஸ்பேட்டை உள் விளையாட்டரங்கில் தொடங்கியது.
  • இதற்கான ஏற்பாடுகள், வீரர்களுக்கு பரிசு தொகையை மாநில செயற்குழு உறுப்பினர் லட்சுமிநாராயணன் வழங்குகிறார்.

  புதுச்சேரி:

  புதுவை மாநில பா.ஜனதா மற்றும் லே புதுவை ஹாக்கி அமைப்பு இணைந்து நடத்தும் 3 நாள் தொடர் ஹாக்கி போட்டி லாஸ்பேட்டை உள் விளையாட்டரங்கில் தொடங்கியது.

  பா.ஜனதா மாநில தலைவர் சாமிநாதன் தலைமை தாங்கினார். அமைச்சர் சாய்.ஜெ.சரவணக்குமார் போட்டியை தொடங்கி வைத்தார். சபாநாயகர் ஏம்பலம் செல்வம், எம்.எல்.ஏ.க்கள் கல்யாணசுந்தரம், வி.பி.ராமலிங்கம், வெங்கடேசன், பா.ஜனதா துணைத்தலைவர் செல்வம், விவசாய அணி செயற்குழு உறுப்பினர் பாரதிமோகன், பயிற்சி பிரிவு அமைப்பாளர் பாலாஜி, மாவட்ட தலைவர் நாகேஸ்வரன், தொகுதி பொறுப்பாளர் தண்டபாணி உட்பட பலர் கலந்துகொண்டனர்.

  போட்டியில் தமிழ்நாடு, புதுவை, கர்நாடகா, ஆந்திரா, கேரளாவை சேர்ந்த 22 அணிகள் பங்கேற்கின்றனர். போட்டியில் வெற்றி பெறும் அணிகளுக்கு முதல் பரிசாக ரூ.50 ஆயிரம், 2-ம் பரிசாக ரூ.30 ஆயிரம், 3-ம் பரிசாக ரூ.20 ஆயிரம், 4-ம் பரிசாக ரூ.10 ஆயிரம், வெற்றி கோப்பை வழங்கப்பட உள்ளது.

  இதற்கான ஏற்பாடுகள், வீரர்களுக்கு பரிசு தொகையை மாநில செயற்குழு உறுப்பினர் லட்சுமிநாராயணன் வழங்குகிறார். போட்டியை ஹாக்கி சங்க தலைவர் செந்தில், பொதுச்செயலாளர் அன்பழகன், துணை த்தலைவர் சந்திரசேகர் மற்றும் நிர்வாகிகள் ஒருங்கிணைத்தனர்.

  ×