என் மலர்
புதுச்சேரி

கோப்பு படம்.
மீனவர்களுக்கு நிவாரணம் - முன்னாள் எம்.பி. ராமதாஸ் வலியுறுத்தல்
- ஒரு வார காலமாக அச்சுறுத்திக் கொண்டிருந்த மாண்டஸ் புயல் ஒரு வழியாக கரை ஏறி இருக்கிறது.
- அதே நேரத்தில் புயல் புதுவை மற்றும் காரைக்கால் மீனவ கிராமங்களையும் மீனவர்களையும் பல்வேறு வகைகளில் பாதித்துள்ளது.
புதுச்சேரி:
புதுவை முன்னாள் எம்.பி. ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
ஒரு வார காலமாக அச்சுறுத்திக் கொண்டிருந்த மாண்டஸ் புயல் ஒரு வழியாக கரை ஏறி இருக்கிறது. புயலில் இருந்து மக்களை பாதுகாக்க அரசு எடுத்திருந்த முன்னேற்பாடு எச்சரிக்கை நடவடிக்கைகள் பாராட்டுக்குரியது.
அதே நேரத்தில் புயல் புதுவை மற்றும் காரைக்கால் மீனவ கிராமங்களையும் மீனவர்களையும் பல்வேறு வகைகளில் பாதித்துள்ளது. சாதாரண நிலைக்கு மேல் அலை பல அடி உயரம் சீறிப்பாய்ந்து மீனவ மக்களை பயமுறுத்தி உள்ளதோடு கிராமங்களில் கடல் அரிப்பு ஆங்காங்கே ஏற்பட்டுள்ளது.
பிள்ளை சாவடியில் 13 வீடுகள் இடிந்து விழுந்து உள்ளன. அங்கு ஏற்கனவே ஏற்படுத்தப்பட்டுள்ள கற்சாலை சரிவர அமைக்கப்படாததால் வீடுகள் இடிந்து விழுந்ததற்கு மற்றொரு காரணம் என்று சொல்லப்படுகிறது.
காரைக்கால் பட்டினச்சேரியிலும் கடல் நீர் உட்புகுந்து சேதங்களை ஏற்படுத்தி உள்ளது. புயல் வரப்போகிறது என்று எச்சரிக்கை விடுத்த நாளிலிருந்து மீனவர்கள் தொழிலுக்குச் செல்லவில்லை. புயல் ஓய்ந்த 3 நாட்கள் தயாரிப்பிற்கு பின்பு தான் தொழிலுக்குச் செல்ல இயலும். அவர்கள் தங்கள் வாழ்வாதாரத்தை சீரமைக்க குறைந்தபட்சம் 10 நாட்களாகும். எனவே, மீனவர்களுக்கு நிவாரணத் தொகை வழங்க வேண்டும்.
வலை கட்டுமரம் படகுகள் சேதம் அடைந்திருந்தால் அவற்றிற்கும் நிவாரணம் வழங்க வேண்டும். வழங்க வேண்டிய நிவாரணத்தை சரியாக மதிப்பிட்டு பாதிக்கப்பட்ட அனைவருக்கும் உடனடியாக வழங்க வேண்டும்.
இவ்வாறு ராமதாஸ் அறிக்கையில் கூறியுள்ளார்.






