என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    புயல்-மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு
    X

    மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசு கொறடா ஏ.கே.டி. ஆறுமுகம் உணவு வழங்கிய காட்சி.

    புயல்-மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு

    • இந்திராநகர் தொகுதியில் புயல் மற்றும் மழை பாதிப்புகளை அரசு கொறடா ஆறுமுகம் ஆய்வு செய்தார்.
    • புதுவையை அச்சுறுத்திய மாண்டஸ் புயல் மாமல்லபுரம் அருகே கரையை கடந்தது.

    புதுச்சேரி:

    இந்திராநகர் தொகுதியில் புயல் மற்றும் மழை பாதிப்புகளை அரசு கொறடா ஆறுமுகம் ஆய்வு செய்தார்.

    புதுவையை அச்சுறுத்திய மாண்டஸ் புயல் மாமல்லபுரம் அருகே கரையை கடந்தது. அப்போது புதுவை பகுதியில் பலத்த காற்று வீதியதில் ஆங்காங்கே சிறு, சிறு பாதிப்பு ஏற்பட்டது.

    அதில் இந்திராநகர் தொகுதியில் ஞானதியாகுநகர், மாதா கோவில் வீதி, சாணாரப்பேட்டை, தருமபுரி, கோவிந்தபேட்டை, அய்யங்குட்டிப்பாளையம், காமராஜர் நகர் உள்ளிட்ட பகுதிகளில் ஏற்பட்ட பாதிப்புகளை அரசு கொறடா ஆறுமுகம் பார்வையிட்டார். பின்னர் புயல் மற்றும் மழையால் பாதித்த மக்களுக்கு மதிய உணவு வழங்கினார்.

    Next Story
    ×