என் மலர்
நீங்கள் தேடியது "B.M.G. Emphasis"
- காலாப்பட்டு தொகுதி பிள்ளை சாவடி மீனவர் கிராமத்தில் கடல் அரிப்பால் 20 வீடுகள் முற்றிலுமாக சேதம் அடைந்தது.
- கடற்கரை மண் அரிப்பை தடுப்பதற்கு தூண்டில் முள் வடிவத்தில் கற்களை கொட்ட வேண்டும். மண்ணரிப்பை தடுப்பதற்கு நிதி ஒதிக்கியும் இதுநாள் வரையும் வேலை நடைபெறவில்லை.
புதுச்சேரி:
காலாப்பட்டு தொகுதி பிள்ளை சாவடி மீனவர் கிராமத்தில் கடல் அரிப்பால் 20 வீடுகள் முற்றிலுமாக சேதம் அடைந்தது. இதை அறிந்து பா.ம.க. மாநில அமைப்பாளர் கணபதி பாதிக்கப்பட்ட மீனவ பகுதிகளை பார்வையிட்டு பாதிக்கப் பட்ட மீனவர்களுக்கு ஆறுதல் கூறினார்.
பின்னர் அவர் கூறியதாவது:-
புதுவை அரசு உடனடியாக பாதிக்கப்பட்ட வீடுகளுக்கு முதல் கட்ட நிவாரணமாக ரூ.10 லட்சம் வழங்க வேண்டும். கடல் அரிப்பை தடுப்பதற்காக கருங்கல் கொட்டப்பட்டு இருந்தது. இது ஒரு தலை தலைபட்சமாக குறிப்பிட்ட பகுதியில் மட்டும் கொட்டியுள்ளனர்.
கடற்கரை மண் அரிப்பை தடுப்பதற்கு தூண்டில் முள் வடிவத்தில் கற்களை கொட்ட வேண்டும். மண்ணரிப்பை தடுப்பதற்கு நிதி ஒதிக்கியும் இதுநாள் வரையும் வேலை நடைபெறவில்லை. இதனால் தான் இந்த பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த நிலை தொடரக்கூடாது அரசு மக்கள் நலனின் போதிய கவனம் செலுத்த வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுனார்.
நிகழ்ச்சியின் போது மாநில பாட்டாளி மீனவர் சங்க தலைவர் உத்தராடம், மாநில தொழிற்சங்க துணைத் தலைவர் துரைக்கண்ணு, காலாப்பட்டு தொகுதி தலைவர் மணிகண்டன், மாநில வன்னியர் சங்க செயலாளர் முருகன், நகர தலைவர் தமிழ்ச்செல்வன் மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.






