என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    மத்திய அரசின் அமைப்புகளின் ஆலோசனை கூட்டம்
    X

    கூட்டத்தில் டாக்டர் ரவி பேசிய காட்சி. அருகில் டாக்டர் உஷாரவி உள்ளார்.

    மத்திய அரசின் அமைப்புகளின் ஆலோசனை கூட்டம்

    • திருவனந்தபுரத்தில் நடைபெற்ற கூட்டத்திற்கு பி.எஸ்.எஸ். சேர்மன் டாக்டர் பாலகிருஷ்ணன் தலைமை தாங்கினார்.
    • முதன்மை செயல் அதிகாரி ராஜீவ்மேத்ரு மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    புதுச்சேரி:

    மத்திய அரசின் அமைப்பான பாரத் சேவாக் சமாஜ் மற்றும் எம்.எஸ்.டி.இ., என்.எஸ்.டி.சி., என்.சி.வி.இ.டி. ஆகியவற்றுடன் இணைந்து செயல்படுவது குறித்தும், வேலைவாய்ப்புகள், வெளிநாட்டு வேலைவாய்ப்புகள் குறித்து கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் நடைபெற்ற கூட்டத்திற்கு பி.எஸ்.எஸ். சேர்மன் டாக்டர் பாலகிருஷ்ணன் தலைமை தாங்கினார்.

    பி.எஸ்.எஸ். தலைமை வழிகாட்டி டார்லி கேசே மற்றும் பி.எஸ்.எஸ். மாற்று மருத்துவ வேந்தர் சுசான்லி டாக்டர் ரவி, டாக்டர் உஷாரவி, ஸ்கில் இண்டியன முதன்மை செயல் அதிகாரி ராஜீவ்மேத்ரு மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    அக்குபஞ்சர் தெரபிஸ்ட்கள் வெளிநாட்டிற்கு சென்று வேலை செய்யும் வாய்பினை மத்திய அரசின் பி.எஸ்.எஸ். உள்ளிட்ட அமைப்புகள் முன்னெடுத்துள்ளன. இத்துடன் 100-க்கும் மேற்பட்ட பட்டய பயிற்சிகள் முடித்துள்ளவர்கள் மத்திய அரசின் முத்திரையுடன் கூடிய சான்றிதழை பெறுவதற்கான பயிற்சி வகுப்புகளின் வழிகாட்டுதல் ஆலோசிக்கப்பட்டது.

    டிப்ளமோ நர்சிங், உள்ளிட்ட பராமெடிக்கல்ஸ், அக்குபஞ்சர் தெரபிஸ்ட், பேஷன் டெக்னாலஜீ உள்ளிட்டவர்களுக்கு சுவிடன், ஆஸ்திரேலியா, கனடா, ஐஸ்லாந்து, சிங்கப்பூர், அமெரிக்கா உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பி.எஸ்.எஸ். வழிகாட்டுதல்படி செல்வதற்கான வாய்ப்புகள் தெளிவாக விவாதிக்கப்பட்டது.

    மேலும் அக்குபஞ்சர் தெரபிஸ்ட்டுகள், பஞ்சகர்மா தெரபிஸ்ட், பிஸியோதெரபிஸ்ட், காஸ்மெடிக் தெரபிஸ்ட் உள்ளிட்டவர்களுக்கு அரசு சான்றிதழ் பயிற்சி, வெளிநாட்டிற்கு செல்வதற்கான வழிமுறைகள் குறித்து டாக்டர் ரவி, டாக்டர் உஷாரவி விவரித்தனர். முடிவில் சங்கர் நன்றி கூறினார்.

    Next Story
    ×