என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    பால் உற்பத்தியாளர்கள் போராட்டம்
    X

    ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பால் உற்பத்தியாளர்கள் தரையில் பாலை கொட்டி நூதனமாக போராட்டம் செய்தனர்.

    பால் உற்பத்தியாளர்கள் போராட்டம்

    • புதுவை பால் உற்பத்தியாளர்கள் சங்கம் சார்பில் அண்ணாசிலை அருகே இன்று ஆர்ப்பாட்டம் நடந்தது.
    • ஆர்ப்பாட்டத்துக்கு சங்க தலைவர் பத்மநாபன் தலைமை தாங்கினார்.

    புதுச்சேரி:

    புதுவை பால் உற்பத்தியாளர்கள் சங்கம் சார்பில் அண்ணாசிலை அருகே இன்று ஆர்ப்பாட்டம் நடந்தது.

    ஆர்ப்பாட்டத்துக்கு சங்க தலைவர் பத்மநாபன் தலைமை தாங்கினார். செயலாளர் அன்புமணி முன்னிலை வகித்தார். மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு பிரதேச செயலாளர் ராஜாங்கம், சி.ஐ.டி.யூ. பொதுச்செயலாளர் சீனுவாசன், விவசாய சங்க செயலாளர் சங்கர், இந்தியன் காபி ஹவுஸ் சங்க நிர்வாகி ராமச்சந்திரன் ஆகியோர் வாழ்த்தி பேசினர்.

    பால் கொள்முதல் விலையை லிட்டருக்கு ரூ.45 என நிர்ணயித்து உயர்த்த வேண்டும். மானியத்துடன் கறவை மாடுகள் வழங்கி பால் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய வேண்டும். ஊழலுக்கு வழி வகுக்கும் வெளிமாநில பால் கொள்முதலை நிறுத்த வேண்டும். ஊழல் பாண்லே அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    Next Story
    ×