என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    இயற்கை உணவு திருவிழா
    X

    இயற்கை உணவு திருவிழாவில் சிறப்பு விருந்தினர் டாக்டர் வசந்தி நேரு மற்றும் கோஜூரியோ கராத்தே சங்க செயலாளர் கராத்தே சுந்தரராஜன் ஆகியோர் பங்கேற்று மாணவர்களை பாராட்டிய காட்சி.

    இயற்கை உணவு திருவிழா

    • புதுவை தந்தை பெரியார் நகரில் அமைந்துள்ள நியூ லிட்டில் கிட்ஸ் மழலையர் பள்ளியில் பாரம்பரிய இயற்கை உணவு திருவிழா நடைபெற்றது.
    • பள்ளி முதல்வர் கவிதா சுந்தர்ராஜன் விழாவிற்கு முன்னிலை வகித்தார்.

    புதுச்சேரி:

    புதுவை தந்தை பெரியார் நகரில் அமைந்துள்ள நியூ லிட்டில் கிட்ஸ் மழலையர் பள்ளியில் பாரம்பரிய இயற்கை உணவு திருவிழா நடைபெற்றது.

    விழாவிற்கு டாக்டர் வசந்தி நேரு தலைமை விருந்தினராக கலந்து கொண்டு மழலையர்களின் பாரம்பரியமான இயற்கை உணவுகளை சுவைத்து பாராட்டினார்.

    புதுவை மாநில கோஜூரியோ கராத்தே சங்க மாநில செயலாளர் கராத்தே சுந்தர்ராஜன், லைன்ஸ் கிளப் உறுப்பினர் தேவிகா ஆகியோர் கலந்து கொண்டு மழலையர்களுக்கு இயற்கை உணவின் அவசியத்தை விளக்கி கூறினர்.

    பள்ளி முதல்வர் கவிதா சுந்தர்ராஜன் விழாவிற்கு முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக மழலையர்கள் கொண்டு வந்த இயற்கை பாரம்பரி யமான உணவுகளை காட்சிப்படுத்தினர். இது அனைவரையும் கவர்ந்தது.

    விழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் நியூ லிட்டில் கிட்ஸ் மழலையர் பள்ளி ஆசிரியைகள் லட்சுமி பிரியா , மகாலட்சுமி , சோனியா , சித்ரா ஆகியோர் செய்திருந்தனர்.

    Next Story
    ×