search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "new farmers"

    • கரிக்கலாம்பாக்கத்தில் நடந்த பயிர்காப்பீட்டு திட்ட சிறப்பு முகாமை வேளாண்துறை அமைச்சர் தேனீ.ஜெயக்குமார் தொடங்கி வைத்து விவசாயிகளுக்கு பயிர் காப்பீட்டு திட்ட அட்டையை வழங்கி பேசியதாவது:-
    • நிகழ்ச்சியில் தேசிய காப்பீட்டு மண்டல மேலாளர் சம்பா பருவத்தில் நெல் சாகுபடி செய்த விவசாயிகளுக்கு பயிர் காப்பீட்டு செய்வதன் முக்கியத்துவம் குறித்து விளக்கினார்.

    புதுச்சேரி:

    கரிக்கலாம்பாக்கத்தில் நடந்த பயிர்காப்பீட்டு திட்ட சிறப்பு முகாமை வேளாண்துறை அமைச்சர் தேனீ.ஜெயக்குமார் தொடங்கி வைத்து விவசாயிகளுக்கு பயிர் காப்பீட்டு திட்ட அட்டையை வழங்கி பேசியதாவது:-

    புதுவையில் இந்த ஆண்டு மலர்கண்காட்சி மற்றும் விவசாய திருவிழா நடத்தப்படும். விவசாயிகளுக்கு நாட்டு மாடுகள் வழங்குவதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். முதல் கட்டமாக 300 நாட்டுமாடுகள் வழங்கப்படும். புதுவையில் அனைத்து விவசாயிகளும் இயற்கை விவசாயத்துக்கு மாறுவதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம்.

    பால் கூட்டுறவு நிலையத்தில் பால் ஊற்றி வரும் விவசாயிகளுக்கு கூட்டுறவு சொசைட்டியின் மூலம் தீவனப்புல் வழங்குவதற்கான நடவடிக்கையும் எடுத்து வருகிறோம். இதன் மூலம் பால் உற்பத்தியை பெருக்க முடியும்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    நிகழ்ச்சியில் தேசிய காப்பீட்டு மண்டல மேலாளர் சம்பா பருவத்தில் நெல் சாகுபடி செய்த விவசாயிகளுக்கு பயிர் காப்பீட்டு செய்வதன் முக்கியத்துவம் குறித்து விளக்கினார்.

    முகாமில் வேளாண் இயக்குனர் பாலகாந்தி, கூடுதல் வேளாண் இயக்குனர் வசந்தகுமார், பயிர் காப்பீடு மண்டல மேலாளர் ராமச்சந்திரன் மற்றும் வேளாண்துறை ஊழியர்கள், விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர். 

    ×