என் மலர்
புதுச்சேரி

தொழிற்சங்ச நிர்வாகிகளுக்கு என்.ஆர்.இலக்கிய பேரவை தலைவர் தனசேகரன் சால்வை அணிவித்து வாழ்த்திய காட்சி. அருகில் என்.ஆர்.காங்கிரஸ் மாநில செயலாளர் என்.எஸ்.ஜே.ஜெயபால் உள்ளார்.
இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது
- குருமாம்பட்டு வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் என்.ஆர்.டி.யு.சி. தொழிற்சங்க பெயர் பலகை திறப்பு விழா நடைபெற்றது.
- இதில் என்.ஆர். காங்கிரஸ் மாநில செயலாளர் என்.எஸ்.ஜெ.ஜெயபால் பெயர் பலகையை திறந்து வைத்தார்.
புதுச்சேரி:
குருமாம்பட்டு வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் என்.ஆர்.டி.யு.சி. தொழிற்சங்க பெயர் பலகை திறப்பு விழா நடைபெற்றது. இதில் என்.ஆர். காங்கிரஸ் மாநில செயலாளர் என்.எஸ்.ஜெ.ஜெயபால் பெயர் பலகையை திறந்து வைத்தார்.
விழாவில் என்.ஆர்.காங்கிரஸ் பிரமுகர் அழகு, தொழிற்சங்க தலைவர் அன்பு அப்பாஸ், தலைவர் பாபு, செயலாளர் குமார், பொருளாளர் புகழேந்தி, குணா, தேவராஜ், சோமு, வினோத்குமார் மற்றும் பலர் கலந்து கெண்டனர்.
விழாவில் என்.ஆர். இலக்கிய பேரவை தலைவர் தனசேகரன் பேசியதாவது:-
என்.ஆர்.காங்கிரசும், என்.ஆர்.டி.யு.சி.யும் இரட்டை குதிரை பூட்டிய தேரை போன்றது. ஒருபுறம் மக்களை காப்பதிலும், மறுபுறம் தொழிலாளர் நலனைக் காப்பதிலும் மிகுந்த அக்கறையோடு செயல்பட்டு வருகிறது. மற்ற கட்சிகளைப் போல் அல்லாமல் என்.ஆர்.காங்கிரஸ் மாநில அந்தஸ்து பெறுவதற்காகவே தொடங்கப்பட்ட இயக்கம்.
கரசூர் சிறப்பு பொருளாதார மண்டலத்தில் புதிய தொழிற்சாலைகள் கொண்டு வர அண்மையில் மத்திய அரசு அனுமதி அளித்துள்ள நிலையில், ஏராளமான தொழிற்சாலைகளை கொண்டு வந்து இளைஞ ர்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்த அரசு திட்டமிட்டு ள்ளது.
குறிப்பாக ஐ.டி. தொழிற்சாலைகளை அதிக அளவில் கொண்டு வர அரசு திட்டமிட்டுள்ளது. இது ஒரு புறம் இருக்க, தொழிற்சாலைகளுக்கு அதிக சலுகைகளை வழங்க வும், அரசு ஆலோசித்து வருகிறது.
இதுபோன்ற அரசின் முயற்சி புதுவை இளைஞர்களுக்கும், தொழிலாளர்களுக்கும் நன்மை பயக்கும் என்பதில் சந்தேகமும் இல்லை. இவ்வாறு அவர் பேசினார்.






