என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    அரசு குடியிருப்புகளில் புனரமைப்பு பணிகள்  நேரு எம்.எல்.ஏ. ஆய்வு
    X

    அரசு குடியிருப்புகளில் புனரமைப்பு பணிகளை நேரு எம்.எல்.ஏ.ஆய்வு செய்த காட்சி.

    அரசு குடியிருப்புகளில் புனரமைப்பு பணிகள் நேரு எம்.எல்.ஏ. ஆய்வு

    • புதுவை உருளையன்பேட்டை தொ குதிக்குட்பட்ட கண்டாக்டர் தோட்டம் பிரியதர்ஷினி நகர் பகுதியில் குடிசை மாற்று வாரிய அரசு குடியிருப்புகள் உள்ளது.
    • பணிகளில் ஏதேனும் குறைகள் இருந்தால் உடனே தெரிவிக்கும்படி பொதுமக்களிடம் நேரு எம்.எல்.ஏ. அறிவுறுத்தினார்.

    புதுச்சேரி:

    புதுவை உருளையன்பேட்டை தொ குதிக்குட்பட்ட கண்டாக்டர் தோட்டம் பிரியதர்ஷினி நகர் பகுதியில் குடிசை மாற்று வாரிய அரசு குடியிருப்புகள் உள்ளது.

    இங்கு புனரமைப்பு பணிகள், குடிநீர் மற்றும் கழிவு குழாய்களை மாற்றி புதிய குழாய்களாக அமைக்கும் பணிகள் ஸ்மார்ட் சிட்டி திட்ட நிதி உதவியுடன் நடத்தப்பட்டு வருகிறது.

    பொதுப்பணித்துறை சிறப்பு கட்டிட பிரிவு மூலம் இந்த பணிகள் நடைபெற்று வருகிறது. இப்பணிகளை உருளையன்பேட்டை தொகுதி எம்.எல்.ஏ. நேரு ஆய்வுசெய்து, அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

    பணிகளில் ஏதேனும் குறைகள் இருந்தால் உடனே தெரிவிக்கும்படி பொதுமக்களிடம் நேரு எம்.எல்.ஏ. அறிவுறுத்தினார். ஆய்வின்போது பொதுப்பணித்துறை சிறப்பு கட்டிடப் பிரிவு செயற்பொறியாளர் மாணிக்கவாசகம், ஸ்மார்ட் சிட்டி திட்ட தொழில்நுட்ப அதிகாரி திருஞானம், இளநிலை பொறியாளர் உதயகுமார், அதிகாரிகள், பொதுமக்கள், மனிதநேய மக்கள் சேவை இயக்கத்தை சேர்ந்த பிரமுகர்கள் பலர் உடனிருந்தனர்.

    Next Story
    ×