என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    பா.ஜனதா இளைஞர் அணி பயிற்சி முகாம்
    X

    பயிற்சி முகாமினை மாநில தலைவர் சாமிநாதன் குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்த காட்சி.

    பா.ஜனதா இளைஞர் அணி பயிற்சி முகாம்

    பா.ஜனதா கட்சியின் இளைஞர் அணி 3 நாள் பயிற்சி முகாம் புதுவை முத்தியால்பேட்டையில் உள்ள தனியார் பள்ளியில் தொடங்கியது.

    புதுச்சேரி:

    பா.ஜனதா கட்சியின் இளைஞர் அணி 3 நாள் பயிற்சி முகாம் புதுவை முத்தியால்பேட்டையில் உள்ள தனியார் பள்ளியில் தொடங்கியது.

    பயிற்சி முகாமினை மாநில தலைவர் சாமிநாதன் குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார். இளைஞர் அணி மாநில தலைவர் கோவேந்தன் கோபதி தலைமை தாங்கினார்.மாநில துணைத்தலைவர் மற்றும் இளைஞர் அணியின் பொறுப்பாளருமான ரவிச்சந்திரன் மாநில பொதுச் செயலாளர் மோகன் குமார் இளைஞர் அணியின் தேசிய செயற்குழு உறுப்பினரும் புதுவை மாநில பொறுப்பாளருமான டாக்டர் பிரியதர்ஷினி மற்றும் தேசிய செயற்குழு உறுப்பினர் ராகவேந்திரா கணேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    மாநில மாவட்ட தொகுதி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இந்த பயிற்சி முகாமிற்கான ஏற்பாடுகளை புதுவை இளைஞரணியின் மாநில கொள்கை ஆராய்ச்சி மற்றும் பயிற்சி பொறுப்பாளர் தமிழரசன் செய்திருந்தார்.

    Next Story
    ×