என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
புதுச்சேரி
உடல் பரிசோதனை முகாம்
- புதுவை ஈ.சி.ஆர் மெயின் ரோடு லாஸ்பேட்டையில் அமைந்துள்ள எம் வி ஆர் மருத்துவ மையத்தில் வருடம்தோறும் நவம்பர் 14-ம் தேதி உலக நீரிழிவு நோய் தினத்தை முன்னிட்டு மாபெரும் உடல் நல பரிசோதனை முகாம் நடைபெறும்.
- நரம்பு மற்றும் ரத்த ஓட்ட பரிசோதனைகள் அனைத்தும் ரூ.9 ஆயிரம் மதிப்புள்ள பரிசோதனைகள் சிறப்பு கட்டணச்சலுகையில் ரூ.4 ஆயிரம் கட்டண த்திற்கே செய்யப்படுகிறது.
புதுச்சேரி:
புதுவை ஈ.சி.ஆர் மெயின் ரோடு லாஸ்பேட்டையில் அமைந்துள்ள எம்.வி.ஆர் மருத்துவ மையத்தில் வருடம்தோறும் நவம்பர் 14-ம் தேதி உலக நீரிழிவு நோய் தினத்தை முன்னிட்டு மாபெரும் உடல் நல பரிசோதனை முகாம் நடைபெறும் அதனையொட்டி இந்த ஆண்டும் மருத்துவ முகாம் கடந்த 1-ந் தேதி தொடங்கி 30-ந் தேதி வரை நடைபெறுகிறது.
இது குறித்து எம்.வி.ஆர். மருத்துவமைய மருத்துவ இயக்குனர் டாக்டர் எம்.ஆர்.வித்யா கூறியதாவது:-
இம்முகாமில் ரத்த சர்க்கரை அளவு, ரத்த கொழுப்பு அளவு, ரத்த சோகை பரிசோதனை, ரத்தத்தில் வைட்டமின் டி அளவு, சிறுநீரக ரத்தப் பரிசோதனை, கல்லீரல் ரத்தப் பரிசோதனை, இருதய பரிசோதனை, மார்பு எக்ஸ் ரே, வயிற்றுப்பகுதிக்கான ஸ்கேன், கண் விழித்திரை புகைப்படம், பல், நரம்பு மற்றும் ரத்த ஓட்ட பரிசோதனைகள் அனைத்தும் ரூ.9 ஆயிரம் மதிப்புள்ள பரிசோதனைகள் சிறப்பு கட்டணச்சலுகையில் ரூ.4 ஆயிரம் கட்டண த்திற்கே செய்யப்படுகிறது.
இம்முகாமில் பரிசோதனைகள் செய்துகொள்ளும் 70 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களுக்கு முதுநிலை சர்க்கரை நோய் குறித்து ஆலோசனை இலவசமாக வழங்கப்படுகிறது. முகாமில் பரிசோதனைகள் கொள்பவர்களுக்கு காலை உணவு இலவசமாக வழங்கப்படுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
இம்முகாமிற்கான ஏற்பாட்டினை எம்.வி.ஆர் மருத்துவ மையத்தின் இணை மருத்துவ இயக்குனர் தேவநாதன் வாசு மற்றும் மேலாளர் தேவதாஸ் ஆகியோர் செய்து வருகின்றனர்.