search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    பொதுமக்களுக்கு போலீசார் விழிப்புணர்வு
    X

    பொதுமக்களுக்கு சேதராப்பட்டு போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்திய காட்சி.

    பொதுமக்களுக்கு போலீசார் விழிப்புணர்வு

    • புதுவையைடுத்த தமிழக பகுதியான திருச்சிற்றம்பலம் கூட்ரோடு அருகே உள்ள புளிச்சம்பள்ளம் கிராமத்தில் ஒரு கும்பல் அந்த கிராமத்திற்கு நுழைந்து மூதாட்டியிடம் 3 பவுன் நகையை பறித்து சென்றது.
    • இது குறித்து வானூர் போலீசார் வழக்கு பதிவு செய்து கொள்ளை கும்பலை தேடி வருகின்றனர்.

    புதுச்சேரி:

    புதுவையைடுத்த தமிழக பகுதியான திருச்சிற்றம்பலம் கூட்ரோடு அருகே உள்ள புளிச்சம்பள்ளம் கிராமத்தில் ஒரு கும்பல் அந்த கிராமத்திற்கு நுழைந்து மூதாட்டியிடம் 3 பவுன் நகையை பறித்து சென்றது.

    மேலும் அதே பகுதியில் 3-க்கும் மேற்பட்ட வீடுகளில் அடுத்தடுத்து கொள்ளையடித்து தப்பிச் சென்றது. இது குறித்து வானூர் போலீசார் வழக்கு பதிவு செய்து கொள்ளை கும்பலை தேடி வருகின்றனர்.

    இந்நிலையில், கோரிமேடு இன்ஸ்பெக்டர் பாலமுருகன் தலைமையில் சேதராப்பட்டு சப்-இன்ஸ்பெக்டர் ராஜேஷ் மற்றும் குற்ற தடுப்பு பிரிவு போலீசார் சேதராப்பட்டு, கரசூர், துத்திப்பட்டு கிராமத்தில் முக்கிய பகுதிகளுக்கு சென்று திருட்டு, வழிப்பறி, கொள்ளை சம்பவங்களில் இருந்து பொதுமக்கள் எவ்வாறு உஷாராக தங்களை பாதுகாக்க வேண்டும், சந்தேகப்படும்படியான நபர்கள் யாரேனும் ஊருக்கு வந்தால் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர்.

    மேலும் அவசர உதவி எண் 100-க்கு போன் செய்து தகவலை தெரியப்படுத்தவும். வசதி வாய்ப்புடையோர் வீடுகளில் ஒன்றுக்கு மேற்பட்ட பூட்டுகளை பூட்ட வேண்டும் நீண்ட நாள் வெளியூர் செல்வதாக இருந்தால் சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தில் தகவல் தெரிவித்து செல்ல வேண்டும் என அறிவுரை வழங்கினர்.

    தமிழகத்தில் நடந்த கொள்ளை சம்பவத்தையடுத்து புதுவை போலீசார் பொதுமக்கள் மத்தியில் கிராம மக்களிடையே விழிப்புணர்வு உஷார் படுத்தியது வரவேற்பு பெற்றுள்ளது.

    Next Story
    ×