என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    • கடைகள், வர்த்தக நிறுவனங்கள், உணவக நிறுவனங்கள் மற்றும் மோட்டார் போக்குவரத்து நிறுவனங்கள் இணையதளம் மூலம் பதிவு மற்றும் புதுப்பித்தல் சிறப்பு முகாம் வர்த்தக சபையில் தொடங்கியது.
    • புதுப்பித்தலுக்கு கடை நிறுவன பதிவு சான்றிதழ் எடுத்து வர வேண்டும். இந்த சிறப்பு முகாமினை பயன்படுத்தி பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

    புதுச்சேரி:

    கடைகள், வர்த்தக நிறுவனங்கள், உணவக நிறுவனங்கள் மற்றும் மோட்டார் போக்குவரத்து நிறுவனங்கள் இணையதளம் மூலம் பதிவு மற்றும் புதுப்பித்தல் சிறப்பு முகாம் வர்த்தக சபையில் தொடங்கியது.

    வர்த்தக சபையின் தலைவர் குணசேகரன், தொழிலாளர் நல அதிகாரி கண்ணபிரான், வர்த்தக சபையின் துணைத்தலைவர் ரவி, பொதுச்செயலாளர ஆனந்தன், இணைச்செ யலாளர் முகம்மது சிராஜ், குழு உறுப்பினர்கள் ஞானசம்பந்தம், குமார், உறுப்பினர் ராஜா தண்டபாணி உள்ளிட்டர் கலந்து கொண்டனர்.

    முகாமுக்கு வரும் உரிமையாளர்கள் எடுத்து வர வேண்டிய ஆவணங்கள் குறித்து வர்த்தக சபை தலைவர் குணசேகரன் வெளியிட்டு ள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    நிறுவனங்களின் உரிமை யா ளர்கள்,வியாபாரிகள் புதிதாக பதிவு செய்யவும், புதுப்பிக்கவும் வரும்போது தவறாமல் கீழ்க்கண்ட அசல் ஆவணங்களை கொண்டு வர வேண்டும். கடை, நிறுவன உரிமையாளரின் அடையாளச் சான்று பான்கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுநர் உரிமம் போன்றவை கடை, நிறுவனத்தின் முகப்பு புகைப்படம். பெயர் பலகை தமிழில் இருக்க வேண்டும்.

    மேலும் கடை, நிறுவனத்தின் சட்டப்பூர்வ பயன்பாட்டிற்கான ஆதாரம் குத்தகை அல்லது வாடகை பத்திரம், தொழிலாளர்களின் பெயர், தந்தை பெயர், வயது, பணியில் சேர்ந்த தேதி, செய்யும் வேலை, வார விடுமுறை போன்றவை உரிய பதிவு கட்டணம்.

    புதுப்பித்தலுக்கு கடை நிறுவன பதிவு சான்றிதழ் எடுத்து வர வேண்டும். இந்த சிறப்பு முகாமினை பயன்படுத்தி பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

    இவ்வாறு குணசேகரன் அறிக்கையில் கூறியுள்ளார்.

    • சிறப்பு கூறு நிதியில் பாட்கோ நிறுவனத்துக்கு ரூ.25 கோடி ஒதுக்க வேண்டும் என்று தலித் இயக்கங்களின் ஜனநாயக முன்னணி முதல்-அமைச்சர் ரங்கசாமியிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
    • இதனால் ஏழை ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியின மக்கள் எவ்வித கடனும், மாநில உதவியும் பெறமுடியவில்லை.

    புதுச்சேரி:

    சிறப்பு கூறு நிதியில் பாட்கோ நிறுவனத்துக்கு ரூ.25 கோடி ஒதுக்க வேண்டும் என்று தலித் இயக்கங்களின் ஜனநாயக முன்னணி முதல்-அமைச்சர் ரங்கசாமியிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

    புதுவை தலித் இயக்கங்களின் ஜனநாயக முன்னணி சார்பில் அதன் நிர்வாகிகள் முதல்-அமைச்சர் ரங்கசாமியை சந்தித்தது ஒரு கோரிக்கை மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    புதுவை மாநிலத்தில் தங்களது தலைமையிலான அரசு ஆதி திராவிடர்கள் மற்றும் பழங்குடியின மக்களுக்கு பல்வேறு வளர்ச்சி திட்டங்களை செயல்படுத்தி நலத்திட்டங்களை வழங்கி வருவதற்கு பாராட்டு தெரிவித்துக்கொள்கிறோம்.

    அதேவேளையில் புதுவை அரசு ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் மேம்பாட்டிற்காக மத்திய அரசின் வழிகாட்டுதலின் படி சிறுப்புகூறு நிதியை அரசு பட்ஜெட்டில் ஒதுக்கி வருகிறது.

    நடப்பாண்டு ரூ.396 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு 20 துறைகளுக்கு பிரித்து அளிக்கப்படுகிறது. ஆனால் கடந்த 5 ஆண்டுகளாக ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியின மேம்பாட்டு கழகத்துக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை.

    இதனால் ஏழை ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியின மக்கள் எவ்வித கடனும், மாநில உதவியும் பெறமுடியவில்லை. மேலும் சிறப்பு கூறு நிதியை பல்வேறு துறைகள் கடந்த அக்டோபர் மாதம் வரை 30 சதவீதம் மட்டுமே செலவு செய்தது.

    எனவே துறைகளில் செலவிடப்படாமல் உள்ள சிறப்பு கூறு நிதியில் ரூ.25 கோடி நிதியை பாட்கோ நிறுவனத்தின் வளர்ச்சி திட்டங்களுக்கு ஒதுக்கி தரவேண்டும்.

    இவ்வாறு அந்த மனுவில் கூறியிருந்தனர்.

    இந்த சந்திப்பின் போது நிர்வாகிகள் பாலசுந்தரம், சிவகுமார், வீரமுத்து, தவமணி, சுப்பிரமணியன், பாஸ்கர், சேகர், தண்டபாணி, மணிபாலன், அன்புசெல்வன், சிவசங்கரன் மற்றும் பலர் உடன் இருந்தனர்.

    • புதுவை அரசு சார்பு நிறுவனமான பாண்லேநிறுவனத்தை பாதுகாக்க வேண்டும்.
    • போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன், மேலாண் இயக்குனர் முரளி, நிர்வாக மேலாளர் குப்புசாமிபேச்சுவார்த்தை நடத்தினர்.

    புதுச்சேரி:

    புதுவை அரசு சார்பு நிறுவனமான பாண்லேநிறுவனத்தை பாதுகாக்க வேண்டும்.

    நிர்வாக சீர்கேடுகளை தடுத்து, நிறுவனத்தை பாதுகாக்க வேண்டும் என வலியுறுத்தி குருமாம்பேட்டில் உள்ள பாண்லே தொழிற்சாலை நுழைவு வாயிலில் உண்ணாவிரத போராட்டம் நடந்தது.

    2-வது நாளாக உண்ணாவிரத போராட்டம் தொடர்ந்தது போராட்டத்தில் நாம் தமிழர் தொழிலாளர் நலச்சங்கத்தின் மாநில தலைவர் தமிழ்ச்செல்வன், மாநில செயலாளர் ரமேசு, பாண்லே தொழிலாளர்கள் அழகப்பன், வாசுதேவன், ஞானமூர்த்தி, கணபதி, அரவிந்த், பக்தவத்சலம், அன்பரசன், செல்வம், ஏ.ஐ.யூ.டி.யூ.சி. சிவக்குமார், விடுதலை சிறுத்தைகள் கட்சி முருகையன், தொழிலாளர் முன்னணி விஜயன், நாம் தமிழர் செயக்குமார் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

    போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன், மேலாண் இயக்குனர் முரளி, நிர்வாக மேலாளர் குப்புசாமிபேச்சுவார்த்தை நடத்தினர். பாண்லே குறைபாடுகள் அனைத்தும் களையப்படும் என அவர்கள் உறுதியளித்தனர். இதையடுத்து உண்ணாவிரத போராட்டம் கைவிடப்பட்டது.

    • அரசின் சார்பில் அரசு ஊழியர்கள் நடத்தை விதிகளின்படி வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
    • கோரிக்கைகளை விளக்கி செந்தில்குமார், சிவக்குமார், மணிகண்டன், சக்கரவர்த்தி, ராமமூர்த்தி, இளமுருகன், அன்பரசன் பேசினர்.

    புதுச்சேரி:

    புதுவை அமைச்சக பணியாளர்களுக்கான கூட்டு நடவடிக்கைக்குழுவினர் உதவியாளர்களை நேரடி நியமனம் மூலம் பணியில் சேர்க்காமல் பதவி உயர்வு மூலம் நியமிக்கக்கோரி ஒட்டுமொத்த விடுப்பு போராட்டம் நடத்த அறிவித்திருந்தனர்.

    இதையடுத்து அரசின் சார்பில் அரசு ஊழியர்கள் நடத்தை விதிகளின்படி வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

    ஆனால் எச்சரிக்கையையும் மீறி அமைச்சக ஊழியர்கள் விடுப்பு எடுத்து மிஷன் வீதியில் தர்ணா போராட்டம் நடத்தினர்.

    இந்த போராட்டத்துக்கு சங்க நிர்வாகி முருகவேல் வரவேற்றார். சேஷாச்சலம் தலைமை வகித்தார். செல்வம், அருள்தாஸ் வாழ்த்தி பேசினர். ஆனந்தராசன், கோவிந்தராஜ் சிறப்புரையாற்றினர். பரசுராமன், பிரபாகண்ணன் முன்னிலை வகித்தனர்.

    கோரிக்கைகளை விளக்கி செந்தில்குமார், சிவக்குமார், மணிகண்டன், சக்கரவர்த்தி, ராமமூர்த்தி, இளமுருகன், அன்பரசன் பேசினர். விஜயகுமார் நன்றி கூறினார்.

    • கோட்டக்குப்பம் போலீஸ் நிலையத்திற்கு உள்பட்ட ஓட்டல் லாட்ஜ் உரிமையாளர்கள் ஆலோசனைக் கூட்டம் அங்குள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடந்தது.
    • சரியான அடையாள அட்டை சமர்ப்பிக்காத போலி நபர்கள் குறித்து உடனடியாக கோட்டகுப்பம் போலீஸ் நிலையத்திற்கு சம்பந்தப்பட்ட உரிமையாளர்கள் தகவல் தெரிவிக்க வேண்டும்.

    புதுச்சேரி:

    கோட்டக்குப்பம் போலீஸ் நிலையத்திற்கு உள்பட்ட ஓட்டல் லாட்ஜ் உரிமையாளர்கள் ஆலோசனைக் கூட்டம் அங்குள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடந்தது. கூட்டத்துக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் ராபின்சன் தலைமை தாங்கினார்.

    சிறப்பு அழைப்பாளராக கோட்டக்குப்பம் துணை போலீஸ் சூப்பிரண்டு (பொறுப்பு) வகிக்கும் வெங்கடேசன் கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது:-

    கோட்டக்குப்பம் பகுதியில் உள்ள ஓட்டல் லாட்ஜ் மற்றும் ரிசார்டுகளில் தங்கும் சுற்றுலா பயணிகளின் விவரங்களை உரிமையாளர்கள் வாடிக்கையாளரின் இந்திய தேசிய அடையாள அட்டையுடன் பொருத்தி அடையாளம் காண வேண்டும்.

    சரியான அடையாள அட்டை சமர்ப்பிக்காத போலி நபர்கள் குறித்து உடனடியாக கோட்டகுப்பம் போலீஸ் நிலையத்திற்கு சம்பந்தப்பட்ட உரிமையாளர்கள் தகவல் தெரிவிக்க வேண்டும். தங்கும் விடுதியில் சுற்றுலாப் பயணிகள் என்று தங்கும் நபர் காலம் 1-ல் கண்ட விதிமுறைகளை பின்பற்றாவிட்டால் அல்லது அதனை உரிமையாளர்கள் தெரிந்து மறைத்தால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

    ஓட்டல் மற்றும் லாட்ஜூகளை சுத்தமாகவும் சுகாதாரமாகவும் வைத்துக் கொள்ள வேண்டும். தங்குமிடத்தில் கஞ்சா, போதை ஊசி வஸ்துகள் பயன்படுத்தியதற்கு அனுமதி இல்லை. அதனை வாடிக்கையாளர்கள் பயன்படுத்தினால் உரிமை யாளர்களே அதற்கு பொறுப்பு.

    உரிமையாளர்கள் மீது மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். விடுதிகளில் பணியாற்றும் நிறுவனத்தில் ஊழியர்கள் வாடிக்கையாளர்களுக்கு எந்தவிதமான மது வஸ்துகளை வாங்கி தருவதாக தெரிய வந்தால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் இவ்வாறு பேசினார்.

    இந்த ஆலோசனை கூட்டத்தில் கோட்டக்குப்பம் போலீஸ் நிலைய அதிகாரிகள் மற்றும் போலீசார் ஓட்டல், லாட்ஜ் மற்றும் ரிசார்ட் உரிமையாளர்கள், ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

    • உருளையன்பேட்டை தொகுதிட்பட்ட பகுதிகளில் மின்துறை மூலம் செயல்படுத்த வேண்டிய பணிகள் குறித்து ஆலோசனை கூட்டம் நேரு எம்.எல்.ஏ. தலைமையில் மின்துறை தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது.
    • அடிக்கடி மின்தடை ஏற்படும் பகுதிகளில் புதிய மின் மாற்றிகள் அமைத்தல், தெரு விளக்குகள் பராமரித்தல் போன்ற பணிகள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது.

    புதுச்சேரி:

    உருளையன்பேட்டை தொகுதிட்பட்ட பகுதிகளில் மின்துறை மூலம் செயல்படுத்த வேண்டிய பணிகள் குறித்து ஆலோசனை கூட்டம் நேரு எம்.எல்.ஏ. தலைமையில் மின்துறை தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது.

    மின்துறை கண்காணிப்பு பொறியாளர் சண்முகம், ஸ்ரீதர், ராஜேஷ் சென்னிஹியால், செயற்பொறியாளர்கள் கனியமுது, செந்தில்குமார், உதவி பொறியாளர்கள் கண்ணன், திலகராஜ், ஜானகிதேவி, இளநிலை பொறியாளர்கள் கார்த்தி கேயன், அச்சிதானந்தம், சுரேஷ், சந்திரசேகர் மற்றும் மின்துறை உயர் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

    ஆலோசனையின் போது தொகுதியில் மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகளான புதைவிட மின் கேபிள்கள் அமைப்பது, அடிக்கடி மின்தடை ஏற்படும் பகுதிகளில் புதிய மின் மாற்றிகள் அமைத்தல், தெரு விளக்குகள் பராமரித்தல் போன்ற பணிகள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது.

    • நெடுங்காடு காவல் நிலைய இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் மாவட்டம் முழுவதும் உள்ள தமிழக மற்றும் காரைக்கால் எல்லைகளில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
    • பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் மோப்ப நாய் மற்றும் மெட்டல் டிடெக்டர் மூலம் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    காரைக்கால்:

    கோவையில் நடந்த கார் குண்டுவெடிப்பை அடுத்து, பெங்களூருவில் குக்கர் வெடிவிபத்து கடந்த சில தினங்களுக்கு முன்பு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இந்நிலையில் அம்மாநிலத்தில் குண்டு வெடிப்பை ஏற்படுத்தியவர்கள், அண்டை மாநிலமான தமிழகம், புதுச்சேரியில் அடைக்கலமாகலாம் என்ற முன்னெச்சரிக்கை அடிப்படையில், புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின் ஒரு பகுதியாக உள்ள காரைக்கால் மாவட்ட எல்லைகளில், சாலைகளில், காரைக்கால் திரு.பட்டினம் போலீசார், போலீஸ் சூப்பிரண்ட் சுப்பிரமணியன் உத்தரவின் பேரில், இன்ஸ்பெக்டர் லெனின் பாரதி மற்றும் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    அதேபோல், காரைக்கால் நகர காவல் நிலைய இன்ஸ்பெக்டர் சண்முகம், திருநள்ளாறு காவல் நிலைய இன்ஸ்பெக்டர் அறிவிச்செல்வன், நெடுங்காடு காவல் நிலைய இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் மாவட்டம் முழுவதும் உள்ள தமிழக மற்றும் காரைக்கால் எல்லைகளில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    மேலும் மாவட்டத்தில் உள்ள திருநள்ளாறு சனீஸ்வரர் கோவில், காரைக்கால் அம்மையார் கோவில், பள்ளிவாசல்கள், தேவாலயங்கள், லாட்ஜ்கள் மற்றும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் மோப்ப நாய் மற்றும் மெட்டல் டிடெக்டர் மூலம் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    மாணவர்களுக்கான "தொழில் அதிபர் ஆக விருப்பப்படுங்கள்" எனும் தலைப்பில் தொழில் முனைவோர் ஊக்குவிப்பு நிகழ்ச்சி நடந்தது.

    புதுச்சேரி:

    புதுவை கலிதீர்த்தாள் குப்பதில் உள்ள மணக்குள விநாயகர் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி கல்லூரி (எம்.ஐ.டி. கல்லூரி), பாண்டிச்சேரி என்ஜினீயரிங் கல்லூரி அடல் தொழில் அபிவிருத்தி, ஊக்குவிப்பு மற்றும் ஆதரவு மைய (இன்குபேஷன் சென்டர்) அறக்கட்டளையுடன் இணைந்து கல்லூரி மாணவர்களுக்கான "தொழில் அதிபர் ஆக விருப்பப்படுங்கள்" எனும் தலைப்பில் தொழில் முனைவோர் ஊக்குவிப்பு நிகழ்ச்சி நடந்தது.

    நிகழ்ச்சியில் தலைமை விருந்தினராக பாண்டிச்சேரி என்ஜினீயரிங் கல்லூரி அடல் தொழில் அபிவிருத்தி மைய தலைமை நிர்வாக அதிகாரி விஷ்ணுவர்தன், கலந்து கொண்டார்.

    நிகழ்ச்சியில் பாண்டிச்சேரி என்ஜினீயரிங் கல்லூரி அடல் தொழில் அபிவிருத்தி மையத்தின் ஆதரவுடன் செயல்படும் ஸ்டார்ட்டப் நிறுவனங்கள் எக்ஸார் ரோபோயிக்ஸ் நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி அருணன்,, கார்க்கி மொபிலிட்டி சர்வீசஸ் நிறுவனர் அப்துல்லா மற்றும் முதலீட்டாளர் பத்ரி நாராயணன் ஆகியோர் கலந்துரையாடினர்.

    நிகழ்ச்சிக்கு கல்லூரி தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் தனசேகரன், துணை தலைவர் சுகுமாறன், மற்றும் செயலாளர் டாக்டர். நாராயணசாமி கேசவன் ஆகியோர் தலைமை தாங்கினர்.

    நிகழ்ச்சியில் முன்னதாக எம்.ஐ.டி. கல்லூரி முதல்வர் மலர்க்கண், வரவேற்புரை ஆற்றினார். கல்லூரி தொழில் முனைவோர் மேம்பாட்டு துறை ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் வைத்தீஸ்வரன், கல்லூரி தொழில் முனைவோர் மேம்பாட்டு துறையின் செயல்பாடுகள் பற்றி விளக்கவுரை வாசித்தார். கல்லூரி டெக்னாலஜி பிசினஸ் இன்குபேட்டர் ஒருங்கிணைப்பாளர் மெய்யப்பன், அந்த துறையின் செயல்பாடுகள் பற்றி விளக்கினார்.

    முடிவில் இயற்பியல் துறை பேராசிரியர் ஆனந்த் நன்றியுரை ஆற்றினார்.

    இந்த நிகழ்ச்சியில் அனைத்து துறை தலைவர்கள் மற்றும் பேராசிரியர்கள் கலந்து கொண்டனர்.

    நிகழ்ச்சி ஏற்பாடுகளை அடல் தொழில் அபிவிருத்தி மைய இன்குபேஷன் மேலாளர் காமேஸ்வரன் மற்றும் கல்லூரி தொழில் முனைவோர் மேம்பாட்டுத் துறை பேராசிரியர்கள் செய்திருந்தனர்.

    • பா.ஜனதா புதுவை நகரமாவட்ட ஆலோசனை கூட்டம் அண்ணாசாலையில் உள்ள தனியார் ஓட்டலில் நடை பெற்றது. கூட்டத்திற்கு நகர மாவட்ட தலைவர் அசோக் பாபு எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார்.
    • மேலும் புதுவை மாநிலத்தின் தற்போதைய அரசியல் நிலை குறித்து கட்சி நிர்வாகி களிடம் கேட்டறிந்தார். கட்சியை பலப்படுத்த தேவை யான அறிவுரை களை வழங்கினார்.

    புதுச்சேரி:

    பா.ஜனதா புதுவை நகரமாவட்ட ஆலோசனை கூட்டம் அண்ணாசாலையில் உள்ள தனியார் ஓட்டலில் நடை பெற்றது.

    கூட்டத்திற்கு நகர மாவட்ட தலைவர் அசோக் பாபு எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக பா.ஜனதா தேசிய பொதுச்செயலாளர் அருண் சிங் கலந்துகொண்டு பேசினார். அவர் பேசியதாவது:-

    மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து கிளைகளையும் பலப்படுத்த வேண்டும். பிரதமர் மோடி கொண்டு வந்துள்ள அனை த்து திட்டங்களையும் மக்களுக்கு தெரிவிக்கவேண்டும். புதுவை மாநிலத்தின் செயல்பாடுகளை பிரதமர் மோடி கண்காணித்து வருகிறார். இவ்வாறு அவர் பேசினார்.

    மேலும் புதுவை மாநிலத்தின் தற்போதைய அரசியல் நிலை குறித்து கட்சி நிர்வாகி களிடம் கேட்டறிந்தார். கட்சியை பலப்படுத்த தேவை யான அறிவுரை களை வழங்கினார்.

    கூட்டத்தில் பா.ஜனதா மாநில தலைவர் சாமிநாதன், அமைச்சர்கள் நமச்சிவாயம், சாய்.ஜெ.சரவணன்குமார், செல்வகணபதி எம்.பி., எம்.எல். ஏ.க்கள் ரிச்சர்ட் ஜான்குமார், வி.பி.ராமலிங்கம், வெங்கடேசன், கட்சியின் பொதுச்செயலாளர் மோகன் குமார், நகரமாவட்ட பொறுப்பாளர் ரத்னவே ல் உள்பட பலர் கலந்து கொண்டனர். மாவட்ட பொது செயலாளர் ஆனந்த கண்ணன் வரவேற்புரை நிகழ்த்தினார். நிகழ்ச்சி க்கான ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகிகள் விஜயரங்கம், விஜய், விமலா, ஜெயக்குமார், ஆறுமுகம் ஆகியோர் செய்து இருந்தனர்.

    • முதல்-அமைச்சர் ரங்கசாமியின் சீர்திருத்த நடவடி க்கை தொடரவேண்டும் என்று என்.ஆர். இலக்கிய பேரவை தலைவர் தனசேகரன் கூறியுள்ளார்.
    • மக்கள் வரிப்பணத்தில் சம்பளம் பெறும் அதிகாரிகளும், அலுவல ர்களும் இப்படி செயல்ப ட்டால் அரசு இயந்திரம் எப்படி இயங்கும்? மாநில வளர்ச்சி என்பது எட்டாக் கனியா கத்தானே இருக்கும்.

    புதுச்சேரி:

    முதல்-அமைச்சர் ரங்கசாமியின் சீர்திருத்த நடவடி க்கை தொடரவேண்டும் என்று என்.ஆர். இலக்கிய பேரவை தலைவர் தனசேகரன் கூறியுள்ளார்.

    என்.ஆர்.இலக்கிய பேரவை தலைவர் தனசேகரன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    மாநிலத்தின் மொத்த வருவாயில் 50 சதவீதத்துக்கு அதிகமாகவே அரசு ஊழியர்களுக்கு ஊதியமாக வழங்கப்படுகிறது. அதில் ஒவ்வொரு ஊழியரும் ரூ.50 ஆயிரத்துக்கும் குறைவில்லாமல் பெறுகின்றார்கள். அவ்வாறு ஊதியம் பெறும் அரசு ஊழியர்கள் காலத்தோடு அலுவலகத்துக்கு வருவதில்லை.

    மதியம் உணவு இடைவேளைக்கு செல்பவர்கள் கூடமாலை 3 அல்லது 3.30 மணிக்குத்தான் மீண்டும் அலுவலகம் வருகிறார்கள். அப்படி வந்தவர்கள் மாலை 4 மணிக்கு பள்ளியில் உள்ள தங்களின் பிள்ளைகளை அழைத்துவர சென்று விடுகிறார்கள். இப்படித்தான் அரசு ஊழியர்களின் அன்றாட செயல்பாடுகளாய் இருந்து வருகிறது.

    இதனால் கிராமப் புறங்களிலிருந்து அலுவலர்களை சந்திக்க வரும் பொது மக்களுக்கு ஏமாற்றமே மிஞ்சுகிறது.

    மக்கள் வரிப்பணத்தில் சம்பளம் பெறும் அதிகாரிகளும், அலுவல ர்களும் இப்படி செயல்ப ட்டால் அரசு இயந்திரம் எப்படி இயங்கும்? மாநில வளர்ச்சி என்பது எட்டாக் கனியா கத்தானே இருக்கும்.

    அரசு ஊழியர்களு க்கான சங்கத்தில் இணைந்து கொண்டு ஊதிய உயர்வு மற்றும் இதர சலுகைகள் கேட்டு போரா டுவது அல்லது துறைசார்ந்த உயர் பதவிகளில் இருப்பவ ரோடும், அரசியல் தலைவர்க ளோடும் நெருக்கும் காடடிக் கொண்டு தங்கள் பதவிக்கு பாதுகாப்பை ஏற்படுத்திக் கொள்வது.

    இப்படிப்பட்ட நிலைகள் தொடர்வதை அறிந்த முதல்-அமைச்சர் ரங்கசாமி தன்னுடைய துணிச்சலான நடவடிக்கை யின் பயனாய் இன்று மாநில நிர்வாக சீர்திருத்தத்துறை தனிப்படை அமைத்து அனைத்து அரசு அலுவலகங்களிலும் வருகை பதிவேடு மற்றும் இதர நடவடிக்கை களை கண்காணிப்பது பொதுமக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.

    இந்த நிலை தொடரவேண்டும். இப்படிப்பட்ட சீர்திருத்த அதிரடி நடவடிக்கையால் மட்டுமே நமது மாநில வளர்ச்சி என்ற சிகரத்தை தொடமுடியும். நமது முதல்-அமைச்சரின் இந்த சீரிய செயலுக்கு என்.ஆர்.இலக்கிய பேரவை பாராட்டுகளை தெரிவித்துக்கொள்கிறது.

    இவ்வாறு அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.

    • புதுவை கிழக்கு மாநில அ.தி.மு.க. செயலாளர் அன்பழகன் முதல்-அமைச்சர் ரங்கசாமியை அவரது அலுவலகத்தில் நேரில் சந்தித்து மனு அளித்தார்.
    • ஜிப்மரில் காலியாக உள்ள 433 செவிலியர்கள் பணியிடங்கள் நிரப்ப அரசாணை வெளியி டப்பட்டுள்ளது.

    புதுச்சேரி:

    புதுவை கிழக்கு மாநில அ.தி.மு.க. செயலாளர் அன்பழகன் முதல்-அமைச்சர் ரங்கசாமியை அவரது அலுவலகத்தில் நேரில் சந்தித்து மனு அளித்தார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    ஜிப்மரில் காலியாக உள்ள 433 செவிலியர்கள் பணியிடங்கள் நிரப்ப அரசாணை வெளியி டப்பட்டுள்ளது. அகில இந்திய அளவில் இதற்காக 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் இதுவரை பெறப்பட்டுள்ளது. இதனால், நம் மாநிலத்தில் செவிலியர் படித்த மாணவர்களுக்கு வேலை கிடைக்க வாய்ப்புகள் குறைவாக இருக்கும்.

    மருத்துவக் கல்லூரியில் 26.5 சதவீத இட ஒதுக்கீடு போன்று, வேலை வாய்ப்பிலும் 26.5 சதவீத இடஒதுக்கீடு வழங்கினால் நம் மாநிலத்தில் நர்சிங் படித்த சுமார் 115 நபர்களுக்கு செவிலியர் பணி கிடைக்கும்.

    மேலும், செவிலியர் பணி என்பது மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளிடம் நேரிடையாக தொடர்புடைய பணியாகும். மருத்துவமனைக்கு வரும் தமிழ் மொழி பேசும் நோயாளிகளிடம் வட நாட்டிலிருந்து தேர்வாகும் செவிலியர்கள் எந்த மொழியில் நோயாளிகளிடம் பேசுவார்கள் என்பது கூட உணராமல் அகில இந்திய அளவில் செவிலியர் தேர்வு நடத்துவது என்பது தவறான ஒன்றாகும்.

    ஜிப்மர் நிர்வாகத்தில் வேலை வாய்ப்பில் 26.5 சதவீத இட ஒதுக்கீடு என்பது நம் மாநில உரிமையாகும். மாநில உரிமையை பெற வேண்டியது தங்களது தலையாய கடமையாகும்.

    எனவே அமைச்சரவை கூட்டத்தை கூட்டி, ஜிப்மரில் வேலை வாய்ப்பில் நமக்குரிய இடஒதுக்கீடு குறித்து தீர்மானம் நிறைவேற்றி தலைமை செயலர் மற்றும் சுகாதாரத்துறை செயலர் ஆகியோர் டெல்லிக்கு நேரில் சென்று மத்திய உள்துறை அமைச்சர் மற்றும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சரிடம் அமைச்சர வையின் தீர்மானத்தை நேரில் அளிக்க தாங்கள் உரிய நடவடிக்கையை எடுக்க வேண்டும். அதுவரை ஜிப்மர் செவிலியர் தேர்வை ரத்து செய்ய வேண்டும்.

    இவ்வாறு அவர் அந்த கடிதத்தில் கூறியுள்ளார்.

    சந்திப்பின் போது மாநில பொருளாளர் ரவி பாண்டுரங்கன், மாநில துணைச் செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, நகர செயலாளர் அன்பழகன் உடையார், மேற்கு மாநில ஜெயலலிதா பேரவை செயலாளர் சுத்துக்கேணி பாஸ்கர், அண்ணா தொழிற்சங்க பேரவை செயலாளர் பாப்புசாமி ஆகியோர் உடனிருந்தனர்.

    • பெரிய காலாப்பட்டில் முதியவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    • கடந்த 5 ஆண்டுகளாக உடல்நிலை பாதிக்கப்பட்டு வேலைக்கு எதுவும் செல்லாமல் வீட்டிலேயே இருந்து வந்தார்.

    புதுச்சேரி:

    பெரிய காலாப்பட்டில் முதியவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    புதுவை பெரிய காலாப்பட்டு முருகர் கோவில் தெருவை சேர்ந்தவர் பொன்னுசாமி கூலி தொழி லாளி. இவருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்து வந்ததால் கடந்த 5 ஆண்டுகளாக உடல்நிலை பாதிக்கப்பட்டு வேலைக்கு எதுவும் செல்லாமல் வீட்டிலேயே இருந்து வந்தார். மேலும் அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார்.

    பொன்னுசாமி தனக்கு வயிறு வலிப்பதாக கூறினார். அதற்கு அவரது குடும்பத்தினர் தற்போது பணம் இல்லாததால் காலையில் யாரிடமாவது பணம் வாங்கி ஆஸ்பத்தி ரிக்கு அழைத்து செல்வதாக கூறினர். பின்னர் அனை வரும் தூங்க சென்ற விட்டனர்.

    இந்தநிலையில்  வீட்டின் மாடியில் உள்ள கூரையில் இரும்பு பைப்பில் பொன்னுசாமி கயிற்றால் தூக்கு போட்டு பிணமாக தொங்குவதை கண்டு குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்தனர்.

    இதுகுறித்து அவரது மகன் அருள்நாதன் கொடுத்த புகாரின் பேரில் காலாப்பட்டு போலீசார் வழக்கு பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகிறார்கள்.

    ×