என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    முதியவர் தற்கொலை
    X

    கோப்பு படம்,

    முதியவர் தற்கொலை

    • பெரிய காலாப்பட்டில் முதியவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    • கடந்த 5 ஆண்டுகளாக உடல்நிலை பாதிக்கப்பட்டு வேலைக்கு எதுவும் செல்லாமல் வீட்டிலேயே இருந்து வந்தார்.

    புதுச்சேரி:

    பெரிய காலாப்பட்டில் முதியவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    புதுவை பெரிய காலாப்பட்டு முருகர் கோவில் தெருவை சேர்ந்தவர் பொன்னுசாமி கூலி தொழி லாளி. இவருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்து வந்ததால் கடந்த 5 ஆண்டுகளாக உடல்நிலை பாதிக்கப்பட்டு வேலைக்கு எதுவும் செல்லாமல் வீட்டிலேயே இருந்து வந்தார். மேலும் அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார்.

    பொன்னுசாமி தனக்கு வயிறு வலிப்பதாக கூறினார். அதற்கு அவரது குடும்பத்தினர் தற்போது பணம் இல்லாததால் காலையில் யாரிடமாவது பணம் வாங்கி ஆஸ்பத்தி ரிக்கு அழைத்து செல்வதாக கூறினர். பின்னர் அனை வரும் தூங்க சென்ற விட்டனர்.

    இந்தநிலையில் வீட்டின் மாடியில் உள்ள கூரையில் இரும்பு பைப்பில் பொன்னுசாமி கயிற்றால் தூக்கு போட்டு பிணமாக தொங்குவதை கண்டு குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்தனர்.

    இதுகுறித்து அவரது மகன் அருள்நாதன் கொடுத்த புகாரின் பேரில் காலாப்பட்டு போலீசார் வழக்கு பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×