என் மலர்
நீங்கள் தேடியது "Panle workers"
- புதுவை அரசு சார்பு நிறுவனமான பாண்லேநிறுவனத்தை பாதுகாக்க வேண்டும்.
- போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன், மேலாண் இயக்குனர் முரளி, நிர்வாக மேலாளர் குப்புசாமிபேச்சுவார்த்தை நடத்தினர்.
புதுச்சேரி:
புதுவை அரசு சார்பு நிறுவனமான பாண்லேநிறுவனத்தை பாதுகாக்க வேண்டும்.
நிர்வாக சீர்கேடுகளை தடுத்து, நிறுவனத்தை பாதுகாக்க வேண்டும் என வலியுறுத்தி குருமாம்பேட்டில் உள்ள பாண்லே தொழிற்சாலை நுழைவு வாயிலில் உண்ணாவிரத போராட்டம் நடந்தது.
2-வது நாளாக உண்ணாவிரத போராட்டம் தொடர்ந்தது போராட்டத்தில் நாம் தமிழர் தொழிலாளர் நலச்சங்கத்தின் மாநில தலைவர் தமிழ்ச்செல்வன், மாநில செயலாளர் ரமேசு, பாண்லே தொழிலாளர்கள் அழகப்பன், வாசுதேவன், ஞானமூர்த்தி, கணபதி, அரவிந்த், பக்தவத்சலம், அன்பரசன், செல்வம், ஏ.ஐ.யூ.டி.யூ.சி. சிவக்குமார், விடுதலை சிறுத்தைகள் கட்சி முருகையன், தொழிலாளர் முன்னணி விஜயன், நாம் தமிழர் செயக்குமார் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன், மேலாண் இயக்குனர் முரளி, நிர்வாக மேலாளர் குப்புசாமிபேச்சுவார்த்தை நடத்தினர். பாண்லே குறைபாடுகள் அனைத்தும் களையப்படும் என அவர்கள் உறுதியளித்தனர். இதையடுத்து உண்ணாவிரத போராட்டம் கைவிடப்பட்டது.






