என் மலர்
புதுச்சேரி
- பயிற்சி நிறுவனம் இணைந்து புதுவை மீனவர்களுக்கு பல்வேறு திறன் மேம்பாட்டு பயிற்சிகளை அளித்து வருகிறது.
- மீனவர்களுக்கு பாதுகாப்பு கருவிகளின் பயன்பாடு குறித்து 3 நாள் பயிற்சி முகாம் தொடங்கியது.
புதுச்சேரி:
புதுவை மீன்வளத்துறை, மத்திய மீன்வள கடல்சார் பொறியியல் பயிற்சி நிறுவனம் இணைந்து புதுவை மீனவர்களுக்கு பல்வேறு திறன் மேம்பாட்டு பயிற்சிகளை அளித்து வருகிறது.
ஆழ்கடல் செல்லும் மீனவர்களுக்கு பாதுகாப்பு கருவிகளின் பயன்பாடு குறித்து 3 நாள் பயிற்சி முகாம் தொடங்கியது. மீன்வளத்துறையில் நடந்த பயிற்சி முகாமை துறை இயக்குனர் பாலாஜி தொடங்கி வைத்தார்.
மத்திய கடல்சார் பொறியியல் பயிற்சி நிறுவன அதிகாரிகள் நவீன தொழில்நுட்ப கருவிகளை கையாளும் விதம் குறித்து விளக்கம் அளித்தனர்.
- ஒருங்கிணைந்த ஆதிதிராவிடர் இயக்கங்களின் கூட்டமைப்பு மாநில அளவிலான மாணவர் அணி கூட்டம் தவளக்குப்பம் தலைமை அலுவலகத்தில் நடந்தது.
- கூட்டத்துக்கு மாணவ அணி தலைவர் மகேந்திரவேலன் தலைமை தாங்கினார்.
புதுச்சேரி:
ஒருங்கிணைந்த ஆதிதிராவிடர் இயக்கங்களின் கூட்டமைப்பு மாநில அளவிலான மாணவர் அணி கூட்டம் தவளக்குப்பம் தலைமை அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்துக்கு மாணவ அணி தலைவர் மகேந்திரவேலன் தலைமை தாங்கினார்.
கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக கூட்டமைப்பு மாநில தலைவர் ரோக.அருள்தாஸ், பொதுச் செயலாளர் கலைமணி, கவுரவ தலைவர் திருமால், பேரவை தலைவர் முருகையன், அமைப்பு செயலர் பொன்னிவேல், நகர செயலாளர் முனியன், மாநில செயலாளர் கண்ணன், அமைப்பாளர் நாகமுத்து, துணை பொதுச் செயலாளர் பாலச்சந்திரன், தொண்டரணி தலைவர் மாயகிருஷ்ணன், இளவேந்தன், முத்துக்குமரன் ஆகியோர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் நிறை வேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-
புதுவை தனியார் மருத்துவ கல்லூரிகள் அரசுக்கு இட ஒதுக்கீடு வழங்கி வருகின்றது. ஆனால் புதுவையில் இடம், மின்சாரம், நீர் போன்றவற்றை அனுபவித்து கொண்டு வரும் நிகர் நிலை பல்கலைக்கழகத்தில் மருத்துவ படிப்புகளுக்கு புதுவையை சேர்ந்த மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு இருந்தும் பல ஆண்டுகளாக பெறாமல் இருப்பதை என்.ஆர். அரசு பெற்று தரவேண்டும். வழங்காத பட்சத்தில் அரசே நீதிமன்றங்களுக்கு செல்லவேண்டும்.
ஜிப்மரில் வேலைவாய்ப்பு மற்றும் பதவி உயர்வில் புதுவை மக்களுக்கு 50 சதவீத இடஒதுக்கீடு வழங்க மத்திய அரசை வலியுறுத்த வேண்டும். மேற்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. முடிவில் பொருளார் வேல்முருகன் நன்றி கூறினார்.
- மருத்துவ அறிவியலின் பங்கு என்ற தலைப்பில் 3-வது சர்வதே மாநாடு இணையவழியில் நடைபெற்றது.
- பல்கலைக்கழகத்தின் சுகாதார விரிவான காயம் பராமரிப்பு மையத்தின் நிர்வாக இயக்குனருமான டாக்டர் சந்தன் கேசென் தொடங்கி வைத்தார்.
புதுச்சேரி:
புதுவை கிருமாம்பாக்கம் ஆறுபடைவீடு மருத்துவக் கல்லூரியில் கல்வி, நோயறிதல் மற்றும் ஆராய்ச்சி முன்னேற்றத்தில் அடிப்படை மருத்துவ அறிவியலின் பங்கு என்ற தலைப்பில் 3-வது சர்வதே மாநாடு இணையவழியில் நடைபெற்றது.
இம்மாநாட்டை, ஜே. ஸ்டான்லி பேட்டர்ஸ்பை தலைவரும், இந்தியானா பல்கலைக்கழகத்தின் சுகாதார விரிவான காயம் பராமரிப்பு மையத்தின் நிர்வாக இயக்குனருமான டாக்டர் சந்தன் கேசென் தொடங்கி வைத்தார். சேலம் விநாயகா மிஷன் ரிசர்ச் பவுண்டேஷன் வேந்தர் கணேசன் முன்னிலை வகித்தார். விநாயகா மிஷன் ரிசர்ச் பவுண்டேஷன் உறுப்பினர் சுரேஷ் சாமுவேல் நினைவுப் பரிசு வழங்கினார்.
ஆன்லைன் வழியாக 3 நாட்கள் நடைபெற்ற இந்த மாநாட்டில், புதிய நோயறிதல், சிகிச்சை விருப்பங்களின் வளர்ச்சி மற்றும் ஆராய்ச்சி முன்னேற்றங்களில் அதன் பங்கு ஆகியவற்றின் மூலம் படுக்கையாக உள்ளவர்களுக்கு பயன்படுத்துவது பற்றி விவரிக்கப்பட்டது.
மேலும், இம்மாநாட்டில், இளம் ஆராய்ச்சி அறிஞர் விருது மற்றும் ஆசிரிய, முதுகலை முனைவர் பட்டத்திற்கான பலர் ஆய்வறிக்கையை வீடியோ கான்பரசிங் மூலமாக சமர்பித்தனர்.
இதில் சிறப்பான ஆய்வறிக்கை சமர்பித்த வருக்கு, இளம் ஆராய்ச்சி அறிஞர் விருது வழங்கப்பட்டது. இத்தகவலை, ஆறுபடை வீடு மருத்துவ கல்லுாரி டீன் டாக்டர் கோட்டூர், மாநாட்டின் செயலர் டாக்டர் லட்சுமி ஜாட்டியா ஆகியோர் தெரிவித்துள்ளனர்.
- கூட்டுறவு மற்றும் அரசு சார்ந்த நிறுவனங்கள் அனைத்தும் நஷ்டத்தில் இயங்க ஊழியர்களே காரணம் என முதல்- அமைச்சர் ரங்கசாமி குற்றம் சாட்டியுள்ளார்.
- ஆட்சி பொறுப்பில் கூட்டுறவு இலாக்காவை தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்த முதல்-அமைச்சர் தனது பொறுப்பை உணராமல் பேசியது கண்டனத்து க்குறியது.
புதுச்சேரி:
ஏ.ஐ.டி.யூ.சி. மாநில பொதுச்செயலாளர் சேதுசெல்வம் வெளியி ட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
கூட்டுறவு மற்றும் அரசு சார்ந்த நிறுவனங்கள் அனைத்தும் நஷ்டத்தில் இயங்க ஊழியர்களே காரணம் என முதல்- அமைச்சர் ரங்கசாமி குற்றம் சாட்டியுள்ளார். ஆட்சி பொறுப்பில் கூட்டுறவு இலாக்காவை தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்த முதல்-அமைச்சர் தனது பொறுப்பை உணராமல் பேசியது கண்டனத்து க்குறியது.
கூட்டுறவு நிறுவனங்களில் ரங்கசாமி தன்னுடைய தொகுதியை சார்ந்தவர்களை வேலைக்கு அமர்த்தி பெரும் சுமையை ஏற்படுத்தினார். அதிகாரிகளும், முதல்- அமைசரின் உத்தரவை கேட்டு அனுப்பிய ஆட்களை எல்லாம் பணியில் அமர்த்தி அலுவலகத்தில் இடம் இல்லாமல் மரத்தடியிலும், படிக்கட்டுகளிலும் உட்காரவைத்து சம்பளம் வழங்கினர்.
மேலும், கொள்முதல் செய்த பொருட்களுக்கு உரிய பணத்தை வழங்காமல் இழுத்ததடித்தது யார்.?
வாரியத் தலைவர்கள் நியமித்து அலுவலக செலவு, சம்பளம், கார் மற்றும் பெட்ரோல், டி.ஏ. என கொடுத்து அழகு பார்த்தது யார்? பல்வேறு வகையில் நஷ்டத்தை ஏற்படுத்தி நிறுவனங்களை முடக்கியது யார்?
கூட்டுறவு மற்றும் அரசு துறை நிறுவனங்களின் அவலநிலைக்கு ரங்கசாமி மற்றும் அதிகாரிகளின் நிர்வாக திறமையின்மையே காரணம் என்பது தான் நிதர்சனமான உண்மை. இவைகளை எல்லாம் மறைப்பதற்கு ஊழியர்களின் மீது குற்றம் சுமத்துவதை வன்மையாக கண்டிக்கிறோம்.
இவ்வாறு சேதுசெல்வம் அறிக்கையில் கூறியுள்ளார்.
- மக்கள் வாழ்வுரிமை இயக்க செயலாளர் ஜெக ன்நாதன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது
- புதுவை காவல்துறையில் பணியாற்றும் காவலர்கள் சப்-இன்ஸ்பெக்டர் காலி பணியிட தேர்வுகளில் பங்கேற்க முடியாத நிலை உள்ளது.
புதுச்சேரி:
மக்கள் வாழ்வுரிமை இயக்க செயலாளர் ஜெக ன்நாதன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்ப தாவது:-
புதுவை காவல்துறையில் பணியாற்றும் காவலர்கள் சப்-இன்ஸ்பெக்டர் காலி பணியிட தேர்வுகளில் பங்கேற்க முடியாத நிலை உள்ளது.
தமிழக காவல்துறையில் சப்-இன்ஸ்பெக்டர் பணி நியமனத்தில் காவலர்களுக்கு தனி ஒதுக்கீடு உள்ளது. அதனை பின்பற்றி புதுவை காவல்துறை சப்- இன்ஸ்பெக்டர் தேர்வில் காவலர்கள் போட்டியிட நியமன அறிவிக்கை மற்றும் அரசாணையில் திருத்தம் செய்து, தேர்வுக்கான அறிவிக்கை வெளியிட வேண்டும்.இவ்வாறு ஜெகன்நாதன் அறிக்கையில் கூறியுள்ளார்.
- மயிலம் நர்சிங் கல்லூரி, துணை செவிலியர் படிப்பு மற்றும் சுகாதார ஆய்வாளர் ஆகிய பிரிவுகளில் 4-ம் ஆண்டு மாணவர்கள் அறிமுக விழா நடைபெற்றது.
- கல்லூரி இயக்குனர் செந்தில் சிறப்புரை ஆற்றினார்,
புதுச்சேரி:
மயிலம் கல்வி குழுமத்தின் ஒரு அங்கமான மயிலம் நர்சிங் கல்லூரி, துணை செவிலியர் படிப்பு மற்றும் சுகாதார ஆய்வாளர் ஆகிய பிரிவுகளில் 4-ம் ஆண்டு மாணவர்கள் அறிமுக விழா நடைபெற்றது.
மயிலம் சுப்ரமணிய சுவாமி கல்வி அறக்கட்டளை தலைவர் மற்றும் மேலாண் இயக்குனர் தனசேகரன் தலைமை தாங்கினார். துணை தலைவர் சுகுமாரன், செயலாளர் டாக்டர் நாராயணசாமி கேசவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மயிலம் நர்சிங் கல்லூரி முதல்வர் தமிழ்ச்செல்வி வரவேற்று பேசினார். கல்லூரி இயக்குனர் செந்தில் சிறப்புரை ஆற்றினார். விழாவில் மயிலம் என்ஜினீயரிங் கல்லூரி முதல்வர் ராஜப்பன் மற்றும் மயிலம் கல்விகுழுமத்தின் அனைத்து துறை தலைவர்களும் பேராசிரியர்களும் கலந்து கொண்டனர். முடிவில் மயிலம் நர்சிங் கல்லூரி துணை முதல்வர் அருணா நன்றி கூறினார்.
- புதுவை மாநில அ.தி.மு.க. சார்பில் ஜிப்மர் நிர்வா கத்தில் வேலை வாய்ப்பில் புதுவை மாநிலத்திற்கு தனி இட ஒதுக்கீடு வழங்க வலியுறுத்தி மாநில செயலாளர் அன்பழகன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
- தொகுதி செயலாளர்கள் சிவகுமார், பொன்னுசாமி ஆறுமுகம்,பாஸ்கர், துரை, கருணாநிதி,ராஜா,சம்பத், நடேசன், கமல்தாஸ், குண சேகர், கிருஷ்ணன், வேலவன், கோபால், சண்முகதாஸ் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
புதுச்சேரி:
புதுவை மாநில அ.தி.மு.க. சார்பில் ஜிப்மர் நிர்வா கத்தில் வேலை வாய்ப்பில் புதுவை மாநிலத்திற்கு தனி இட ஒதுக்கீடு வழங்க வலியுறுத்தி மாநில செயலாளர் அன்பழகன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்டத்தில் புதுவை கிழக்கு மற்றும் மேற்கு மாநில நிர்வாகிகள் அவைத் தலைவர் அன்பானந்தம், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் பாஸ்கர், நடராஜன், ராஜாராமன், நிர்வாகிகள் வீரம்மாள், மகாதேவி, கணேசன், திருநாவுக்கரசு, மாநில பொருளாளர் ரவிபாண்டுரங்கன், அன்பழக உடையார், எம்.ஏ.கே. கருணாநிதி, கணேசன், வி.கே.மூர்த்தி, குணசேகரன், கிருஷ்ண மூர்த்தி, காந்தி, நாகமணி, சேரன், மணவாளன், குமுதன், சித்தானந்தம், பாண்டுரங்கன், சிவாலயா இளங்கோ, மருத மலையப்பன், பாப்புசாமி, மகளிர் அணி செயலாளர் விஜயலட்சுமி,
மாணவர் அணி செயலா ளர் பிரதீப், ராமலிங்கம், மீனவரணி செயலாளர் ஞானவேல், விவசாய அணி செயலாளர் சக்கரவர்த்தி, மாநில இலக்கிய அணி செயலாளர் ராமசாமி, மாநில அமைப்பு சாரா ஓட்டுநர்கள் அணிச் செயலாளர் செல்வம் ,மாநில வர்த்தக அணி செயலாளர் முத்துராஜீலு மாநில தொழில்நுட்ப பிரிவு செயலாளர் தினேஷ் குமார், நகர தலைவர்கள் செல்வகுமார், கணேஷ், சிவா,
தொகுதி செயலாளர்கள் சிவகுமார், பொன்னுசாமி ஆறுமுகம்,பாஸ்கர், துரை, கருணாநிதி,ராஜா,சம்பத், நடேசன், கமல்தாஸ், குண சேகர், கிருஷ்ணன், வேலவன், கோபால், சண்முகதாஸ் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
புதுச்சேரி:
புதுவை தருமாபுரி வழுதாவூர் சாலை பகுதியை சேர்ந்தவர் மாறன் (57). இவருக்கு சாந்தி என்ற மனைவியும், 3 மகள்கள் உள்ளனர். இவருக்கும், இவரது சகோதரிக்கும் இடையே சொத்து பிரச்சினை இருந்து வந்தது. இந்த பிரச்சினை தொடர்பாக மாறன் மீது அவரது சகோதரி வழக்கு தொடர்ந்துள்ளார்.
இது தொடர்பாக இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்படுவது வழக்கம். இந்நிலையில், மாறன் தனது சகோதரியிடம் சமாதானமாக செல்ல முடிவு செய்தார். இதற்காக அவர் தனது சகோதரி வீட்டிற்கு சென்றார். அப்போது மாறனை அவரது சகோதரி வீட்டிற்குள் அனுமதிக்காமல் விரட்டியதாக கூறப்படுகிறது.
மேலும் தகாத வார்த்தைகளால் திட்டியதாக தெரிகிறது.இதனால் மாறன் மன வேதனை அடைந்தார். இதுகுறித்து தனது மனைவி மற்றும் மகள்களிடம் கூறி மனம் வருத்தப்பட்டுள்ளார். இதனையடுத்து மனஉளைச்சல் அதிகமாக இருந்ததால் மது அருந்திவிட்டு வருவதாக மாறன் குடும்பத்தினரிடம் கூறிவிட்டு சென்றார்.
அப்போது மாறன் மதுபானக்கடைக்கு 2 பேருடன் சென்றதாக கூறப்படுகிறது. அவர்களுடன் மது அருந்திக் கொண்டிருந்தபோது, திடிரென அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதில் மாறனுடன் மது அருந்திக் கொண்டிருந்தவர்கள் மாறனை தகாத வார்த்தைகளால் திட்டி, கீழே தள்ளினர். கீழே விழுந்த மாறனுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு, ரத்தம் கொட்டியது. இதனை பார்த்ததும் அவருடன் மது குடித்த 2 பேரும் தலைமறைவாகி விட்டனர்.
இதுகுறித்து மதுக்கடை ஊழியர்கள் ரெட்டியார்பாளையம் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். இன்ஸ்பெக்டர் ஜெய்சங்கர், மற்றும் போலீசார் விரைந்து சென்று பார்த்தபோது, ரத்த வெள்ளத்தில் மாறன் மயங்கி கிடந்தார். உடனே அவரை ஆம்புலன்ஸ் மூலம் கதிர்காமம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே மாறன் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து அவரது மகள் மதனி கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மதுக்கடையில் மாறனுடன் அமர்ந்து மது அருந்திய 2 பேர் அவரது நண்பர்களா? அல்லது சொத்து தகராறில் சமாதானம் பேச வந்தவர்களா என விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதனிடையே இந்த சம்பவம் தொடர்பாக 2 பேரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது.
- கடலூர் மாவட்டம் வீராணத்தை சேர்ந்தவர் முரசொலி. இவரது மனைவி இலக்கியா (வயது 19).நிறைமாத கர்ப்பிணியான இவருக்கு பிரசவவலி ஏற்பட்டது.
- ஜிப்மர் அருகே வந்த போது அவர்களை வழிமறித்து மோட்டார் சைக்கிளில் 3 பேர் வருவதாக கூறி போக்குவரத்து போலீசார் ரூ. 1000 அபராதம் விதித்துள்ளனர்.
புதுச்சேரி:
கடலூர் மாவட்டம் வீராணத்தை சேர்ந்தவர் முரசொலி. இவரது மனைவி இலக்கியா (வயது 19).நிறைமாத கர்ப்பிணியான இவருக்கு பிரசவவலி ஏற்பட்டது.
இதனால் உள்ளூர் மருத்துவமனைக்கு சென்றார். அங்கிருந்த டாக்டர்கள் பிரசவ நாள் என்பதால் ஏற்கனவே சிகிச்சை பெறும் ஜிப்மருக்கு செல்ல அறிவுருத்தினர்.
அப்போது வாகனம் கிடைக்காததால் மோட்டார் சைக்கிளில் முரசொலி, இலக்கியா, உறவினர் கலையரசி ஆகியோர் ஜிப்மருக்கு வந்துகொண்டிருந்தனர்.
ஜிப்மர் அருகே வந்த போது அவர்களை வழிமறித்து மோட்டார் சைக்கிளில் 3 பேர் வருவதாக கூறி போக்குவரத்து போலீசார் ரூ. 1000 அபராதம் விதித்துள்ளனர்.
அவர்களிடம் பணம் இல்லாததால் கட்ட முடியவில்லை. இதனால் மோட்டார் சைக்கிளின் சாவியை அங்கிருந்த போக்குவரத்து சப் -இன்ஸ்பெக்டர் பறித்து கொண்டதாக கூறப்படுகிறது. கர்ப்பிணி பெண்ணும் அவரது கணவரும் எவ்வளவோ கெஞ்சியும் சாவியை தர சப்- இன்ஸ்பெக்டர் மறுத்து விட்டதாக தெரிகிறது.
இதனால், சுமார் 2 மணி நேரம் வரையில் அங்கு கர்ப்பிணி பெண் தவித்தப்படி நின்றிருந்தார். அங்கிருந்தோர் அதை பார்த்து பாதுகாப்பு பணிக்கு வந்த உயர் அதிகாரிகளிடம் தெரிவித்தனர். இதையடுத்து சப் -இன்ஸ்பெக்டர் எடுத்து வைத்திருந்த வாகன சாவியை அளித்தார். இதன் பிறகு முரசொலி மனைவியை மருத்துவமனையில் சேர்க்க ஜிப்மருக்கு அழைத்து சென்றார்.
- திருவண்டார் கோவிலில் உள்ள அவின்ஸ்ரீ சர்வதேச பள்ளியில் மாறுவேடப்போட்டி நடைபெற்றது. நிகழ்ச்சியை பள்ளி தாளாளர் வாசுதேவன் குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார்.
- மாறு வேட போட்டியில் தேச தலைவர்கள், விலங்குகள, காய்கறிகள், பழங்கள், விழிப்பு ணர்வு கொண்ட உருவங்களை மாறு வேடங்களாக அணிந்து தங்களுடைய திறமைகளை வெளிப்படுத்தினர்.
புதுச்சேரி:
திருவண்டார் கோவிலில் உள்ள அவின்ஸ்ரீ சர்வதேச பள்ளியில் மாறுவேடப்போட்டி நடைபெற்றது. நிகழ்ச்சியை பள்ளி தாளாளர் வாசுதேவன் குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார்.
பள்ளியின் செயலாளர் ஆனந்தகுமார் முன்னிலை வைத்தார். முதல்வர் அலமேலு மங்கை அனைவரையும் வரவேற்று பேசினார். மாறு வேட போட்டியில் தேச தலைவர்கள், விலங்குகள, காய்கறிகள், பழங்கள், விழிப்பு ணர்வு கொண்ட உருவங்களை மாறு வேடங்களாக அணிந்து தங்களுடைய திறமைகளை வெளிப்படுத்தினர். இதில் சிறந்த மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. இந்த நிகழ்ச்சியில் பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள், அவர்க ளின் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.
- புதுவை சிந்தனையாளர்கள் பேரவை சார்பில் 117-வது சிந்தனையரங்கம் ஜோதி கண் மருத்துவமனை அரங்கில் நடைபெற்றது.
- விழாவுக்கு தலைவர். கவிஞர் கோ.செல்வம் தலைமை தாங்கினார். துணைச்செயலர் ராஜாராம் மற்றும் செயற்குழுவினர் முன்னிலை வகித்தனர்.
புதுச்சேரி:
புதுவை சிந்தனையாளர்கள் பேரவை சார்பில் 117-வது சிந்தனையரங்கம் ஜோதி கண் மருத்துவமனை அரங்கில் நடைபெற்றது.
இதில் புதுவை இந்திராகாந்தி அரசு தலைமை மருத்துவமனை கண்காணிப்பாளர் கலந்து கொண்டு "குடல் நோய்கள்" தொடர்பாக விளக்கம் குறித்து உரையாற்றினார். தொடர்ந்து கேள்வி பதில் அரங்கம் நடைபெற்றது.
முன்னதாக "பண்டிகையும் பண்பாடும்" எனும் தலைப்பில் பொதுச்செயலர் கலியபெருமாள் தலைமையில் கவியரங்கம் நடைபெற்றது. பங்கேற்றோருக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
விழாவுக்கு தலைவர். கவிஞர் கோ.செல்வம் தலைமை தாங்கினார். துணைச்செயலர் ராஜாராம் மற்றும் செயற்குழுவினர் முன்னிலை வகித்தனர். முடிவில் மன்னர் மன்னன் படைப்பாளர்கள் அறக்கட்டளை நடத்திய கவிதைப்போட்டியில் வெற்றி பெற்றோருக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. பொருளாளர் சரஸ்வதி வைத்தியநாதன் நன்றி கூறினார்.
- வில்லியனூர் அருகே உள்ள லட்சுமி நாராயணா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையும், புதுவை ரியல் என் ஜி. ஓ. நிறுவனமும் இணைந்து, திருபுவனை அரசு பள்ளி வளாகத்தில் இலவச பொதுநல மருத்துவ முகாமினை நடத்தினர்.
- இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சுகாதா ரத்துறை ஆய்வாளர் உதய குமார், சுய உதவி குழுக்களின் ஒருங்கிணைப்பாளர் கலியுகராணி ஆகியோர் செய்து இருந்தனர்.
புதுச்சேரி:
வில்லியனூர் அருகே உள்ள லட்சுமி நாராயணா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையும், புதுவை ரியல் என் ஜி. ஓ. நிறுவனமும் இணைந்து, திருபுவனை அரசு பள்ளி வளாகத்தில் இலவச பொதுநல மருத்துவ முகாமினை நடத்தினர். இந்த முகாமிற்கு ரியல் என் .ஜி. ஓ. இயக்குனர் லாரன்ஸ் தலைமை தாங்கி மருத்துவ முகாமினை தொடங்கி வைத்தார். மேலாளர் குமார், திட்ட அதிகாரி முருகேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
முகாமில் மழைக்கால பேரிட தொற்று நோய்களை கட்டுப்படுத்தும் வகையில், பொது மக்களுக்கு உடல் ரீதியான மருத்துவ ஆலோசனைகள் அளித்து மருந்துகள்-மாத்திரைகள் வழங்கப்பட்டது. இதில் ரத்த அழுத்தம், சக்கரை நோய், இருதயம், கண்கள் மற்றும் பல்வேறு உடல் நோய்க்கான பரிசோதனைகள் செய்யப்பட்டு மேல் சிகிச்சைக்காக மருத்து வர்கள் பரிந்துரை செய்தனர்.
இந்த மருத்துவ முகாமில் பொதுநல மருத்துவர் டாக்டர் சசிதரன், குழந்தைகள் நல மருத்துவர் தொனி, பூஜா, கண் மருத்துவர் ஷோபனா மற்றும் செவிலியர்கள் கலந்து கொண்டு சிகிச்சை அளித்தனர்.
இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சுகாதா ரத்துறை ஆய்வாளர் உதய குமார், சுய உதவி குழுக்களின் ஒருங்கிணைப்பாளர் கலியுகராணி ஆகியோர் செய்து இருந்தனர்.






