என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Kaviarangam"

    • புதுவை சிந்தனையாளர்கள் பேரவை சார்பில் 117-வது சிந்தனையரங்கம் ஜோதி கண் மருத்துவமனை அரங்கில் நடைபெற்றது.
    • விழாவுக்கு தலைவர். கவிஞர் கோ.செல்வம் தலைமை தாங்கினார். துணைச்செயலர் ராஜாராம் மற்றும் செயற்குழுவினர் முன்னிலை வகித்தனர்.

    புதுச்சேரி:

    புதுவை சிந்தனையாளர்கள் பேரவை சார்பில் 117-வது சிந்தனையரங்கம் ஜோதி கண் மருத்துவமனை அரங்கில் நடைபெற்றது.

    இதில் புதுவை இந்திராகாந்தி அரசு தலைமை மருத்துவமனை கண்காணிப்பாளர் கலந்து கொண்டு "குடல் நோய்கள்" தொடர்பாக விளக்கம் குறித்து உரையாற்றினார். தொடர்ந்து கேள்வி பதில் அரங்கம் நடைபெற்றது.

    முன்னதாக "பண்டிகையும் பண்பாடும்" எனும் தலைப்பில் பொதுச்செயலர் கலியபெருமாள் தலைமையில் கவியரங்கம் நடைபெற்றது. பங்கேற்றோருக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

    விழாவுக்கு தலைவர். கவிஞர் கோ.செல்வம் தலைமை தாங்கினார். துணைச்செயலர் ராஜாராம் மற்றும் செயற்குழுவினர் முன்னிலை வகித்தனர். முடிவில் மன்னர் மன்னன் படைப்பாளர்கள் அறக்கட்டளை நடத்திய கவிதைப்போட்டியில் வெற்றி பெற்றோருக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. பொருளாளர் சரஸ்வதி வைத்தியநாதன் நன்றி கூறினார்.

    ×