என் மலர்
புதுச்சேரி

கோப்பு படம்.
முதல் அமைச்சர் ரங்கசாமி மீது ஏ.ஐ.டி.யூ.சி. குற்றச்சாட்டு
- கூட்டுறவு மற்றும் அரசு சார்ந்த நிறுவனங்கள் அனைத்தும் நஷ்டத்தில் இயங்க ஊழியர்களே காரணம் என முதல்- அமைச்சர் ரங்கசாமி குற்றம் சாட்டியுள்ளார்.
- ஆட்சி பொறுப்பில் கூட்டுறவு இலாக்காவை தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்த முதல்-அமைச்சர் தனது பொறுப்பை உணராமல் பேசியது கண்டனத்து க்குறியது.
புதுச்சேரி:
ஏ.ஐ.டி.யூ.சி. மாநில பொதுச்செயலாளர் சேதுசெல்வம் வெளியி ட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
கூட்டுறவு மற்றும் அரசு சார்ந்த நிறுவனங்கள் அனைத்தும் நஷ்டத்தில் இயங்க ஊழியர்களே காரணம் என முதல்- அமைச்சர் ரங்கசாமி குற்றம் சாட்டியுள்ளார். ஆட்சி பொறுப்பில் கூட்டுறவு இலாக்காவை தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்த முதல்-அமைச்சர் தனது பொறுப்பை உணராமல் பேசியது கண்டனத்து க்குறியது.
கூட்டுறவு நிறுவனங்களில் ரங்கசாமி தன்னுடைய தொகுதியை சார்ந்தவர்களை வேலைக்கு அமர்த்தி பெரும் சுமையை ஏற்படுத்தினார். அதிகாரிகளும், முதல்- அமைசரின் உத்தரவை கேட்டு அனுப்பிய ஆட்களை எல்லாம் பணியில் அமர்த்தி அலுவலகத்தில் இடம் இல்லாமல் மரத்தடியிலும், படிக்கட்டுகளிலும் உட்காரவைத்து சம்பளம் வழங்கினர்.
மேலும், கொள்முதல் செய்த பொருட்களுக்கு உரிய பணத்தை வழங்காமல் இழுத்ததடித்தது யார்.?
வாரியத் தலைவர்கள் நியமித்து அலுவலக செலவு, சம்பளம், கார் மற்றும் பெட்ரோல், டி.ஏ. என கொடுத்து அழகு பார்த்தது யார்? பல்வேறு வகையில் நஷ்டத்தை ஏற்படுத்தி நிறுவனங்களை முடக்கியது யார்?
கூட்டுறவு மற்றும் அரசு துறை நிறுவனங்களின் அவலநிலைக்கு ரங்கசாமி மற்றும் அதிகாரிகளின் நிர்வாக திறமையின்மையே காரணம் என்பது தான் நிதர்சனமான உண்மை. இவைகளை எல்லாம் மறைப்பதற்கு ஊழியர்களின் மீது குற்றம் சுமத்துவதை வன்மையாக கண்டிக்கிறோம்.
இவ்வாறு சேதுசெல்வம் அறிக்கையில் கூறியுள்ளார்.






