என் மலர்
புதுச்சேரி
- ஏ.ஐ.டி.யூ.சி. புதுவை லோடு கேரியர் டிரைவர் சங்க ஆண்டு பேரவை கூட்டம் பாக்கமுடையான்பட்டு காரல் மார்க்ஸ் படிப்பகத்தில் நடந்தது.
- மாநில செயல் தலைவர் அபிஷேகம், பொதுச்செயலாளர், சேதுசெல்வம் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
புதுச்சேரி:
ஏ.ஐ.டி.யூ.சி. புதுவை லோடு கேரியர் டிரைவர் சங்க ஆண்டு பேரவை கூட்டம் பாக்கமுடையான்பட்டு காரல் மார்க்ஸ் படிப்பகத்தில் நடந்தது.
கூட்டத்திற்கு செந்தில் முருகன், முருகன், மணி ஆகியோர் தலைமை தாங்கினார்.
ஏ.ஐ.டி.யு.சி. மாநில செயல் தலைவர் அபிஷேகம், பொதுச்செயலாளர், சேதுசெல்வம் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். தலைவராக செந்தில் முருகன், செயலாளராக மாரிமுத்து, பொருளாளராக மருதாச்சலம், துணை தலைவர்களாக முருகன், மணி, அண்ணாதுரை, துணை செயலாளர்களாக, வேல் முருகன்,ரங்கநாதன், மாயகிருஷ்ணன் கமிட்டி உறுப்பினர்களாக பாலு, ஜெயராஜ், கோபால், நடராஜ், சரவணன், வின்சென்ட், ஜான்பீட்டர், காசிநாதன், ராமமூர்த்தி, ஆறுமுகம், வேல்முருகன், ஆனந்த், ராமஜெயம், ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.
- மதகடிப்பட்டு மணக்குள விநாயகர் என்ஜினீயரிங் கல்லூரியில் பி.டெக். பயோ மெடிக்கல் என்ஜினீயரிங் துறையில் 3-ம் ஆண்டு படிக்கும் மாணவர்கள் நிவேதா, ேஹமசந்திரன், சூர்யா ஆகியோர் புதுவை மண்டல அளவில் நடைபெற்ற சி.ஐ.ஐ. ஸ்டார்டப் சமீட் 2022-ன் இன்னோவேஷன் போட்டியில் கலந்து கொண்டு ரூ.10 ஆயிரம் பரிசு தொகை பெற்றனர்.
- தேர்வு கட்டுப்பாட்டாளர் ஜெயக்குமார், அகாடமிக் டீன் அன்பு மலர் மற்றும் அனைத்து துறை டீன்கள், துறை தலைவர்கள், பேராசிரியர்கள் பாராட்டினர்.
புதுச்சேரி:
மதகடிப்பட்டு மணக்குள விநாயகர் என்ஜினீயரிங் கல்லூரியில் பி.டெக். பயோ மெடிக்கல் என்ஜினீயரிங் துறையில் 3-ம் ஆண்டு படிக்கும் மாணவர்கள் நிவேதா, ேஹமசந்திரன், சூர்யா ஆகியோர் புதுவை மண்டல அளவில் நடைபெற்ற சி.ஐ.ஐ. ஸ்டார்டப் சமீட் 2022-ன் இன்னோவேஷன் போட்டியில் கலந்து கொண்டு ரூ.10 ஆயிரம் பரிசு தொகை பெற்றனர்.
இந்நிகழ்ச்சியை அமைச்சர் நமச்சிவாயம் தொடங்கி வைத்தார். அமைச்சர் சந்திரபிரியங்கா முன்னிலை வகித்தார். மணக்குள விநாயகர் என்ஜினீயரிங் கல்லூரி இயக்குனர் மற்றும் முதல்வர் வெங்கடாசலபதி, அகாடமிக் டீன் அறிவழகர் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு துறையின் டீன் வேல்முருகன், வேலை வாய்ப்பு துறை அதிகாரி கைலாசம், மின்னணு மற்றும் தகவல் தொடர்பு துறை தலைவர் ராஜா, பயோ மெடிக்கல் துறை தலைவர் விஜயலட்சுமி ஆகியோர் வெற்றி பெற்ற மாணவர்களை வாழ்த்தினர்.
மணக்குள விநாயகர் கல்வி அறக்கட்டளைத் தலைவர் மற்றும் மேலாண் இயக்குனர் தனசேகரன், துணைத் தலைவர் சுகுமாறன், செயலாளர் டாக்டர் நாராயணசாமி கேசவன், கல்லூரி பதிவாளர் அப்பாஸ் மொய்தீன், தேர்வு கட்டுப்பாட்டாளர் ஜெயக்குமார், அகாடமிக் டீன் அன்பு மலர் மற்றும் அனைத்து துறை டீன்கள், துறை தலைவர்கள், பேராசிரியர்கள் பாராட்டினர்.
- படுகை அணை உடைந்து நவம்பர் 20-ந் தேதியுடன் ஓராண்டாகிறது.
- படுகை அணை படத்துடன், அடையாளம் கொடுத்தவன் நீ, தாகம் தீர்த்தாய் தண்ணீராக, என்றும் இருப்பாய் கண்ணீராக என குறிப்பிட்டுள்ளனர்.
புதுச்சேரி:
புதுவை திருக்கனூரை அடுத்த செல்லிப்பட்டு கிராமத்தில் 1905-ல் பிரெஞ்சு ஆட்சியில் படுகை அணை கட்டப்பட்டது.
இதனால் 20-க்கும் மேற்பட்ட கிராம மக்களின் விவசாயம், குடிநீர் தேவை பூர்த்தியானது. போதிய பராமரிப்பின்றி 2016-ல் படுகை அணை நடுப்பகுதியில் சிறிய உடைப்பு ஏற்பட்டது. அதிகாரிகள் சீரமைப்பு செய்யாமல், மணல் மூட்டைகளை அடுக்கி வைத்தனர்.
கடந்த ஆண்டு கனமழையின்போது பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு அணையின் நடுப்பகுதியில் 140 மீட்டர் தூரம் உடைந்தது. இதனால்தண்ணீர் முழுமையாக வெளியேறி கடலில் கலந்து வீணானது. படுகை அணை உடைந்து நவம்பர் 20-ந் தேதியுடன் ஓராண்டாகிறது.
இதையடுத்து அப்பகுதி இளைஞர்கள் செல்லிப்பட்டு படுகை அணைக்கு முதலாம் ஆண்டு நினைவஞ்சலி என போஸ்டர் தயாரித்து சமூகவலைதளங்களில் வெளியிட்டுள்ளனர்.
அதில் படுகை அணை படத்துடன், அடையாளம் கொடுத்தவன் நீ, தாகம் தீர்த்தாய் தண்ணீராக, என்றும் இருப்பாய் கண்ணீராக என குறிப்பிட்டுள்ளனர். இது தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
- ஜிப்மர் மருத்துவமனை எதிரில் அ.தி.மு.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.
- புதுவையில் போராட்டம் நடத்துவேன் எனக் கூறும் தி.மு.க. அமைப்பாளர் புதுவையை ஒட்டிய தமிழக பகுதியான கோட்டக்குப்பத்தில் போராட்டம் நடத்துவாரா?
புதுச்சேரி:
புதுவை கிழக்கு மாநில அ.தி.மு.க. செயலாளர் அன்பழகன் நிருபர்களிடம் கூறியதாவது:-
ஜிப்மரில் மருத்துவப் படிப்பில் 26.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்குவது போல் வேலை வாய்ப்பிலும் 26 சதவீத இட ஒதுக்கீட்டை புதுவை இளைஞர்களுக்கு வழங்க வேண்டும் என வலியுறுத்தி 9-30 மணியளவில் ஜிப்மர் மருத்துவமனை எதிரில் அ.தி.மு.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும். மாநிலத்தின் உரிமையை மீட்டெடுக்கும் இந்த போராட்டத்தில் அனைத்து தரப்பு மக்களும், அ.தி.மு.க. தொண்டர்களும், நிர்வாகிகளும் கலந்து கொள்ள வேண்டும்.
மத்திய அரசின் நிதியுதவி புதுவைக்கு படிப்படியாக குறைந்த நிலையில் மக்களுக்கு பாதிப்பில்லாத வகையில் வரி போடப்படும் என கவர்னர் அறிவித்ததற்கு தி.மு.க. போராட்டம் நடத்துவோம் என மிரட்டல் விடுக்கிறது. வரி உயர்வைப் பற்றி பேசுவதற்கு திமுகவிற்கு எந்த தார்மீக உரிமையும் இல்லை.
தமிழகத்தில் வரி உயர்த்தாமல் 5 ஆண்டு நல்லாட்சி நடத்தியவர் எடப்பாடி பழனிசாமி. பொய்யான வாக்குறுதியை கொடுத்து தமிழகத்தில் ஆட்சி அமைத்த தி.மு.க. மின் கட்டணம், சொத்து வரி, பால் விலை, பஸ் கட்டணம் உள்ளிட்ட அனைத்திற்கும் வரியை உயர்த்தி வாக்களித்த மக்களுக்கு மிகப் பெரிய துரோகத்தை இழைத்து வருகிறது.
புதுவையில் போராட்டம் நடத்துவேன் எனக் கூறும் தி.மு.க. அமைப்பாளர் புதுவையை ஒட்டிய தமிழக பகுதியான கோட்டக்குப்பத்தில் போராட்டம் நடத்துவாரா?
இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின் போது புதுவை கிழக்கு மாநில அவைத் தலைவர் அன்பானந்தம், மாநில பொருளாளர் ரவி பாண்டுரங்கன், மாநில துணைச் செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, அண்ணா தொழிற்சங்கப்பேரவை செயலாளர் பாப்புசாமி, தொகுதி செயலாளர் கமல்தாஸ் ஆகியோர் உடனிருந்தனர்.
- புதுவை எம்.வி.ஆர். மருத்துவ மையத்தில் சிறப்பு இருதய பரிசோதனை முகாம் நடைபெற்றது.
- பொது பணித்துறை உதவி பொறியாளர் வாசு, டாக்டர் ஜெய்சங்கருக்கு சிறப்பு விருது வழங்கினார்.
புதுச்சேரி:
புதுவை எம்.வி.ஆர். மருத்துவ மையத்தில் சிறப்பு இருதய பரிசோதனை முகாம் நடைபெற்றது. முகாமில் சென்னையின் பிரபல இருதய நோய் நிபுணரும், மெட்வே இருதய மருத்துவமனையின் தலைமை இருதய மருத்துவருமான ஜெய்சங்கர் தலைமையில் மருத்துவ குழுவினர் சிறப்பு சிகிச்சை அளித்தனர்.
இதில் 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பயன் அடைந்தனர். முகாமில் எம்.வி.ஆர். மருத்துவ மையத்தின் தலைமை மருத்துவர் டாக்டர் வித்யா கலந்து கொண்டு பேசினார். பொது பணித்துறை உதவி பொறியாளர் வாசு, டாக்டர் ஜெய்சங்கருக்கு சிறப்பு விருது வழங்கினார்.
முகாம் ஏற்பாடுகளை தேவநாதன் வாசு, வரதராஜன் வாசு, நிர்வாக மேலாளர் தேவதாஸ் ஆகியோர் செய்திருந்தனர்.
- புதுவையில் சூதாட்டத்தை தடுக்கம் வகையில் போலீசார் பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
- இதனை அடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர். அப்போது அங்கு சூதாடிக்கொண்டிருந்த கும்பல் போலீசாரை ஆபாசமாக திட்டி தாக்கி விட்டு தப்பியோட முயன்றனர்.
புதுச்சேரி:
புதுவையில் சூதாட்டத்தை தடுக்கம் வகையில் போலீசார் பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
இந்நிலையில், கிருமாம்பாக்கம் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் விஜயக்குமார், உதவி சப் இன்ஸ்பெக்டர் லூர்துநாதன் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது, வண்ணாங்குளம் பகுதியில் ஒரு கும்பலம் சூதாட்டத்தில் ஈடுபட்டு வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதனை அடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர். அப்போது அங்கு சூதாடிக்கொண்டிருந்த கும்பல் போலீசாரை ஆபாசமாக திட்டி தாக்கி விட்டு தப்பியோட முயன்றனர்.
ஆனால், போலீசார் அந்த கும்பலை மடக்கி பிடித்து விசாரணை நடத்தினார். விசாரணையில், அவர்கள் வண்ணாங்குளம் புது தெருவை சேர்ந்த காண்டீபன் (வயது40) வம்பாபேட் பிரபு(40), மஞ்சக்குப்பம் அனீப்தீன் (37) கடலுார் எஸ்.புதுக்குப்பம் ஆறுமுகம்(39) என்பது தெரியவந்தது. பின்னர் 4பேரையும் கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்து ரூ.14, 380 பறிமுதல் செய்தனர்.
மேலும் வழக்கு பதிவு செய்து அவர்களை புதுவை கோர்ட்டில் ஆஜர் படுத்தி பின்னர் காலாப்பட்டு சிறையில் அடைத்தனர்.
- புதுவை அய்யா மாரியப்பனார் -சுந்தராம்பாள் அறக்கட்டளை மற்றும் நண்பர்கள் தோட்டம் சார்பில் பட திறப்பு, நல உதவிகள் வழங்கல், நூல்கள் வெளியீடு, பொது தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் மற்றும் சாதனையாளர்களுக்கு விருது வழங்கும் விழா பாக்கமுடையான்பட்டு பார்வதி திருமண மண்டபத்தில் நடந்தது.
- இதனைதொடர்ந்து தட்டச்சு மாணவர்களுக்கு சான்றிதழ்களையும், பொது தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளையும் கலெக்டர் வல்லவன் வழங்கி பாராட்டி பேசினார்.
புதுச்சேரி:
புதுவை அய்யா மாரியப்பனார் -சுந்தராம்பாள் அறக்கட்டளை மற்றும் நண்பர்கள் தோட்டம் சார்பில் பட திறப்பு, நல உதவிகள் வழங்கல், நூல்கள் வெளியீடு, பொது தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் மற்றும் சாதனையாளர்களுக்கு விருது வழங்கும் விழா பாக்கமுடையான்பட்டு பார்வதி திருமண மண்டபத்தில் நடந்தது.
நிகழ்ச்சிக்கு அறக்கட்ளை நிறுவனர் மாரியப்பன் தலைமை தாங்கினார். புதுவை யுகபாரதி வரவேற்புரையாற்றி னார். புதுவை நாடார் உறவின் முறை சங்க தலைவர் ராஜசேகரன், ஊர் பெரியவர்கள் சபாநாயகம், சோழன், ரவி, ஜீவானந்தபுரம் நாடார் உறவின்முறை சங்க தலைவர் ராமச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நண்பர்கள் தோட்டம் தலைவர் திருநாவுக்கரசு நோக்க உரையாற்றினார். அய்யா மாரியப்பனார்-சுந்தராம்பாள் திருவுருவ படத்தை துரைமாலிறையன் திறந்து வைத்தார். புதுவை மாவட்ட கலெக்டர் வல்லவன் கலந்து கொண்டு யுவபாரதி, திருமுருகன் மற்றும் தொரசாமி ஆகியோர் எழுதிய நூல்களை வெளியிட்டார். அதனை தேன்மொழி, டாக்டர் யுகபாரதி ஹரிகிருஷ்ணன் மற்றும் என்ஜினீயர் தமிழ் அமுது ஆகியோர் பெற்று கொண்டனர்.
இதனைதொடர்ந்து தட்டச்சு மாணவர்களுக்கு சான்றிதழ்களையும், பொது தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளையும் கலெக்டர் வல்லவன் வழங்கி பாராட்டி பேசினார். மேலும் சாதனையாளர்களுக்கு விருதுகளையும் வழங்கி கவுரவித்தார்.
நிகழ்ச்சியில் தமிழ்சங்க செயலாளர் சீனுமோகன்தாஸ், புதுவை குழந்தைகள் கலை இலக்கிய வளர்ச்சி கழக தலைவர் உசேன், சாகித்திய அகாடெமியின் பொதுக்குழு உறுப்பினர் சுந்தரமுருகன், கலை இலக்கிய பெருமன்ற தலைவர் எல்லை.சிவக்குமார், உலக தமிழ் பேரியக்க தலைவர் தமிழ்மணி, இப்டா தலைவர் ஆதிவர்மன், பிரெஞ்சு பேராசிரியர் வெங்கடசுப்புராய நாயக்கர் ஆகியோர் வாழ்த்தி பேசினார்கள். முடிவில் தேன்மொழி நன்றி கூறினார்.
- வில்லியனூர்-நெட்டப்பாக்கம் பகுதியில் குடிபோதையில் ரகளை செய்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
- விசாரணையில் தமிழக பகுதியான சொரப்பூர் அம்பேத்கர் தெருவை சேர்ந்த ஜீவகன்(35) என்பது தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்தனர்.
புதுச்சேரி:
வில்லியனூர்-நெட்டப்பாக்கம் பகுதியில் குடிபோதையில் ரகளை செய்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
வில்லியனூர் பைபாஸ் ரோட்டில் தனியார் திருமண நிலையம் எதிரே நடுரோட்டில் ஒரு வாலிபர் மது அருந்தி கொண்டு அவ்வழியே செல்லும் பொதுமக்களை ஆபாச வார்த்தைகளால் திட்டி ரகளை செய்து கொண்டிருந்தார்.
அப்போது ரோந்து வந்த வில்லியனூர் போலீசார் அந்த வாலிபரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் கொம்பாக்கம் பேட் மாதாகோவில் வீதியை சேர்ந்த எழிலரசன்(வயது35) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.
இதுபோல் நெட்டப்பாக்கம் போலீசார் அப்பகுதியில் உள்ள வடகொல்லி ரோடு பகுதியில் ரோந்து சென்ற போது அங்கு ஒரு வாலிபர் மது குடித்து விட்டு ரகளை செய்து கொண்டிருந்ததை கண்டனர். இதைடுத்து அந்த வாலிபரை பிடித்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் தமிழக பகுதியான சொரப்பூர் அம்பேத்கர் தெருவை சேர்ந்த ஜீவகன்(35) என்பது தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்தனர். மேலும் மடுகரை தொந்தி ரெட்டிபாளையம் ரோட்டில் மது குடித்து விட்டு ரகளை செய்த வளவனூரை அடுத்த ஆலயாம்பாளையம் பகுதியை சேர்ந்த பிரகாஷ்(30) என்பவரை மடுகரை புறகாவல்நிலைய போலீசார் கைது செய்தனர்.
புதுவை அரியாங்குப்பம் மணவெளி மந்தை தெருவில் ஒரு வாலிபர் பொதுமக்களுக்கு இடையூறாக ரகளை செய்து கொண்டிருந்தார். இதுபற்றி தகவல் அறிந்ததும் அரியாங்குப்பம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று அந்த வாலிபரை மடக்கி பிடித்தனர்.
விசாரணையில் அவர் அரியாங்குப்பம் ஓடைவெளி மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த சக்திமுருகன் (26) என்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து போலீசார் அவரை கைது செய்தனர்.
- பாதாள வடிகால் அடிக்கடி நிரம்பி வழிந்து 3 நாட்களுக்கு ஒருமுறை தொடர்ச்சியாக பிரச்சினை வருவதாக அப்பகுதி பொதுமக்கள் தொகுதி எம்.எல்.ஏ. அனிபால் கென்னடியிடம் நேரில் சென்று சந்தித்து புகார் தெரிவித்தனர்.
- அதன் தொடர்ச்சியாக அப்பகுதியில் உள்ள பாதாள வடிகால் முழுமையாக சுத்தம் செய்யும் பணியை தீவிரமாக மேற்கொள்ளப் படும் என்று எம்.எல்.ஏ. அதிகாரிகள் உறுதியளித்தனர்.
புதுச்சேரி:
உப்பளம் தொகு திக்குட்பட்ட வம்பாக்கீர பாளையம் தெப்பக்குளம் சாலை 1 மற்றும் 3-வது தெரு சிமெண்ட் சாலை ஏழை மாரியம்மன் கோவில் வீதி, அங்களாம்மன் கோவில் வீதிகளில் பாதாள வடிகால் அடிக்கடி நிரம்பி வழிந்து 3 நாட்களுக்கு ஒருமுறை தொடர்ச்சியாக பிரச்சினை வருவதாக அப்பகுதி பொதுமக்கள் தொகுதி எம்.எல்.ஏ. அனிபால் கென்னடியிடம் நேரில் சென்று சந்தித்து புகார் தெரிவித்தனர்.
அதனைத் தொடர்ந்து பொதுமக்களையும் பொதுப்பணித் துறை அலுவலகத்திற்கு தன்னுடன் அழைத்துச் சென்ற
எம்.எல்.ஏ. உதவி பொறியாளர் வைத்தி யநாதன் மற்றும் இளநிலை பொறியாளர் சங்கர் ஆகியோரை நேரில் சந்தித்து இது குறித்து ஆலோசனை மேற்கொண்டார்.
அதன் தொடர்ச்சியாக அப்பகுதியில் உள்ள பாதாள வடிகால் முழுமையாக சுத்தம் செய்யும் பணியை தீவிரமாக மேற்கொள்ளப் படும் என்று எம்.எல்.ஏ. அதிகாரிகள் உறுதியளித்தனர்.
அப்பணியை கென்னடி எம்.எல்.ஏ.நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார் அதனை தொடர்ந்து பாதிக்கப் பட்ட பல இடங்களில் தூய்மைப்படுத்தும் பணியை மேற்கொண்டார்.
- புதுவை புனித பேட்ரிக் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் குழந்தைகள் தின விழா கொண்டாடப்பட்டது.
புதுச்சேரி:
புதுவை புனித பேட்ரிக் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் குழந்தைகள் தின விழா கொண்டாடப்பட்டது.
5-ம் வகுப்பு மாணவி அபிகைல், மைக்கேல், நிரேன் வரவேற்றார். குழந்தைகள் தின சிறப்புகள் பற்றி 4-ம் வகுப்பு மாணவர் ஆதித்தியா ஆங்கிலத்திலும், மாணவி ஹென்சிகா தமிழிலும் பேசினர். பள்ளி ஆலோசனை குழு உறுப்பினர் பங்குதந்தை ஜோசப்பால் தலைமை தாங்கினார்.
பத்மாவதி மருத்துவமனை இயக்குனர் இளங்கோவன், பள்ளியின் முன்னாள் மாணவர் ராஜராஜன் சிவராஜ் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர்.
பள்ளி தாளாளர் பிரடெரிக் விருந்தினர்களை அறிமுகப்படுத்தி, வாழ்த்தி பேசினார்.
விழாவில் மாநில அளவில் நடந்த ஒவியப்போட்டியில் முதல் பரிசாக ரூ.50 ஆயிரம் பெற்ற மாணவி தேஜஸ்வினி, ஆறுதல் பரிசு ரூ.7,500 பெற்ற மாணவர் கிரித்திஸ்வர், அமலோறபவம் வினாடி-வினா போட்டியில் சுழற்கேடயம் வென்ற மாணவர்கள் கிருஷ்ணா, விஷ்ணு பிரசாத், லோகேஷ்வரன், அரவிந்தன் ஆகியோர் கவுரவிக்கப்பட்டனர்.
பள்ளியின் மருத்துவ இயக்குனர் ஜீட்டா பிரெடரிக், முதல்வர் அல்போன்ஸ் ஹில்டா உள்ளிட்டோர்கலந்து கொண்டனர்.
5-ம் வகுப்பு மாணவர்கள் சர்வேஷ், காயத்திரி சாய்ராம் ஆகியோர் விழாவை தொகுத்து வழங்கினர்.
மாணவி ஜனனி நன்றி கூறினார்.
- இந்திய கம்யூனிஸ்டு தலைமை அலுவலகத்தில் ஐக்கிய விவசாயிகள் முன்னணி கூட்டம் நடந்தது.
- கூட்டத்தில், டெல்லி போராட்டத்தில் உயிரிழந்த விவசாயிகளுக்கு நிவாரண உதவி வழங்கி, நினைவுச் சின்னம் அமைக்க வேண்டும்.
புதுச்சேரி:
இந்திய கம்யூனிஸ்டு தலைமை அலுவலகத்தில் ஐக்கிய விவசாயிகள் முன்னணி கூட்டம் நடந்தது.
புதுவை விவசாயிகள் சங்க மாநில தலைவர் கீதநாதன் தலைமை தாங்கினார். காங்கிரஸ் விவசாய அணி தலைவர் செல்லகணபதி, தி.மு.க. விவசாய அணி செயலாளர் செந்தில்குமார், அகில இந்திய விவசாயிகள் சங்க செயலாளர் சங்கர், பாகூர். சரவணன், முருகையன், அகில இந்திய விவசாயிகள் மகா சபா சார்பில் தலைவர்.புருஷோத்தமன், மக்கள் அதிகாரம் சார்பில் சாந்தகுமார், புதுவை விவசாயிகள் சங்க பொதுச்செயலாளர் டி. பி. ரவி சிறப்பு தலைவர் மாசிலாமணி, துணைத் தலைவர்கள் ராஜா, ராமமூர்த்தி, பொருளாளர் கலியமூர்த்தி, செயலாளர்கள் பெருமாள், டி.பி .பிரகாஷ், .மாநிலக் குழு உறுப்பினர் பெருமாள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில், டெல்லி போராட்டத்தில் உயிரிழந்த விவசாயிகளுக்கு நிவாரண உதவி வழங்கி, நினைவுச் சின்னம் அமைக்க வேண்டும். போராடிய விவசாயிகள் மீதான வழக்குகளை திரும்ப பெற வேண்டும்.விவசாய விளை பொருளுக்கு குறைந்தபட்ச ஆதார விலை சட்டம் இயற்ற வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி புதுவையிலும் கவர்னர் மாளிகை நோக்கி பழைய பஸ் நிலையம் அருகில் இருந்து 26-ந் தேதி ஊர்வலம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.
- புதுவை மணக்குள விநாயகர் இன்ஸ்டிட்யூட் ஆப் டெக்னாலஜி கல்லூரியும், அவர் ஹோல்டர்ஸ் பவுண்டேசன் அமைப்பும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.
- வேலை வாய்ப்புத் துறை அதிகாரி ஜெயகுமார் மற்றும் துறை பேராசிரியர்கள் முன்னிலை வகித்தனர்.
புதுச்சேரி:
புதுவை மணக்குள விநாயகர் இன்ஸ்டிட்யூட் ஆப் டெக்னாலஜி கல்லூரியும், அவர் ஹோல்டர்ஸ் பவுண்டேசன் அமைப்பும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.
அவர் ஷோல்டர்ஸ் பவுண்டேசன்' அமைப்பு கூகுள் 'கிரோவ் வித் கூகுள்' தலைப்பில் மாணவர்களின் தனித்திறமையை வெளிகொணர்தல், திறன் மேம்படுத்தல் உள்ளிட்ட விஷயங்களை செய்வ தற்கான ஒப்பந்தமாகும்.
இந்த ஒப்பந்த நோக்கம், பொறியியல், மேலாண்மை துறை மாணவர்களுக்கு மதிப்பு கூட்டப்பட்ட படிப்புகள், திறன், வேலை வாய்ப்பு மேம்பாட்டு பயிற்சி, வேலைவாய்ப்பு உருவாக்கி தருவதாகும்.
வேலை வாய்ப்புக்கு தேவையான திறன் சார்ந்த ஆன்லைன் சர்டிபிகேஷன் மற்றும் உதவித்தொகை பெறும் வசதிகளை நாஸ்காமோடு இணைந்து சேவை வழங்கப்படுகிறது.
இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் நிகழ்ச்சிக்கு மணக்குள விநாயகர் குழும தலைவர் தனசேகரன், துணை தலைவர் சுகுமாரன், செயலாளர் டாக்டர் நாராயணசாமி கேசவன் ஆகியோர் தலைமை தாங்கினார்.
வேலை வாய்ப்புத் துறை அதிகாரி ஜெயகுமார் மற்றும் துறை பேராசிரியர்கள் முன்னிலை வகித்தனர். எம்.ஐ.டி., கல்லூரி முதல்வர் மலர்கண், அவர் ஷோல்டர்ஸ் பவுண்டேசன் அமைப்பு சார்பில் மாணிக்கபாரதி, பிரேம் ஆனந்த், எஸ்.எஸ்.டி. இன்போ சொல்யூசன் உரிமையாளர் புகழேந்தி ஆகியோர் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் பரிமாறி கொள்ளப்பட்டது.






