என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    பேட்ரிக் பள்ளியில் குழந்தைகள் தின விழா
    X

    விழாவில் மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கிய காட்சி.

    பேட்ரிக் பள்ளியில் குழந்தைகள் தின விழா

    • புதுவை புனித பேட்ரிக் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் குழந்தைகள் தின விழா கொண்டாடப்பட்டது.

    புதுச்சேரி:

    புதுவை புனித பேட்ரிக் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் குழந்தைகள் தின விழா கொண்டாடப்பட்டது.

    5-ம் வகுப்பு மாணவி அபிகைல், மைக்கேல், நிரேன் வரவேற்றார். குழந்தைகள் தின சிறப்புகள் பற்றி 4-ம் வகுப்பு மாணவர் ஆதித்தியா ஆங்கிலத்திலும், மாணவி ஹென்சிகா தமிழிலும் பேசினர். பள்ளி ஆலோசனை குழு உறுப்பினர் பங்குதந்தை ஜோசப்பால் தலைமை தாங்கினார்.

    பத்மாவதி மருத்துவமனை இயக்குனர் இளங்கோவன், பள்ளியின் முன்னாள் மாணவர் ராஜராஜன் சிவராஜ் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர்.

    பள்ளி தாளாளர் பிரடெரிக் விருந்தினர்களை அறிமுகப்படுத்தி, வாழ்த்தி பேசினார்.

    விழாவில் மாநில அளவில் நடந்த ஒவியப்போட்டியில் முதல் பரிசாக ரூ.50 ஆயிரம் பெற்ற மாணவி தேஜஸ்வினி, ஆறுதல் பரிசு ரூ.7,500 பெற்ற மாணவர் கிரித்திஸ்வர், அமலோறபவம் வினாடி-வினா போட்டியில் சுழற்கேடயம் வென்ற மாணவர்கள் கிருஷ்ணா, விஷ்ணு பிரசாத், லோகேஷ்வரன், அரவிந்தன் ஆகியோர் கவுரவிக்கப்பட்டனர்.

    பள்ளியின் மருத்துவ இயக்குனர் ஜீட்டா பிரெடரிக், முதல்வர் அல்போன்ஸ் ஹில்டா உள்ளிட்டோர்கலந்து கொண்டனர்.

    5-ம் வகுப்பு மாணவர்கள் சர்வேஷ், காயத்திரி சாய்ராம் ஆகியோர் விழாவை தொகுத்து வழங்கினர்.

    மாணவி ஜனனி நன்றி கூறினார்.

    Next Story
    ×