என் மலர்
புதுச்சேரி
- புதுவை தந்தை பெரியார் நகரில் அமைந்துள்ள நியூ லிட்டில் கிட்ஸ் மழலையர் பள்ளியின் குழந்தைகள் தின விழா முத்துரத்தினம் அரங்கம் மேல்நிலைப்பள்ளி உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்றது.
- நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக மழலையர்கள் தேசத் தலைவர்களை போன்று மாறுவேடமிட்டு பார்வையாளர்கள் அனை வரையும் கவர்ந்தனர்.
புதுச்சேரி:
புதுவை தந்தை பெரியார் நகரில் அமைந்துள்ள நியூ லிட்டில் கிட்ஸ் மழலையர் பள்ளியின் குழந்தைகள் தின விழா முத்துரத்தினம் அரங்கம் மேல்நிலைப்பள்ளி உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்றது.
விழாவிற்கு பள்ளி தாளாளர் டாக்டர் ரத்தின ஜனார்த்தனன் தலைமை தாங்கினார் . தலைமை விருந்தினராக குற்றப் புலனாய்வு போலீஸ் சூப்பிரண்டு வீரவல்லபன் கலந்து கொண்டு போட்டியில் வெற்றி பெற்ற மழலையர்களுக்கு பரிசுகள் வழங்கி கவுரவித்தார்.
சிறப்பு விருந்தினராக டாக்டர் ரத்தினவேல் காமராஜர் கலந்து கொண்டு மழலையர்களின் கலை நிகழ்ச்சிகளை கண்டு களித்தார். புதுவை மாநில கோஜூரியோ கராத்தே சங்க மாநில செயலாளர் கராத்தே சுந்தர்ராஜன் கலந்து கொண்டு மழலையர்களுக்கு குழந்தைகள் தின வாழ்த்துக்களை தெரிவி த்தார்.
பள்ளி முதல்வர் கவிதா சுந்தர்ராஜன் மூத்த அலுவலக அதிகாரி மரிய ஸ்டெல்லா ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக மழலையர்கள் தேசத் தலைவர்களை போன்று மாறுவேடமிட்டு பார்வையாளர்கள் அனை வரையும் கவர்ந்தனர். பின்பு அனைவருக்கும் இனிப்பு மற்றும் எழுதும் உபகரணங்கள் பரிசாக வழங்கப்பட்டது.
விழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் நியூ லிட்டில் கிட்ஸ் மழலையர் பள்ளி ஆசிரியர்கள் லட்சுமி பிரியா , மகாலட்சுமி , சோனியா , சித்ரா ஆகியோர் செய்திருந்தனர்.
- நிர்வாக சீர்திருத்த துறையின் இந்த அதிரடி நடவடிக்கை, தாமதமாக வரும் அரசு ஊழியர்களின் மத்தியில் கலக்கத்தையும், அரசு துறைகளில் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.
- அரசு அதிகாரிகள், ஊழியர்களை கண்காணிக்க நிர்வாக சீர்திருத்த துறை தனிப்படையை அமைத்துள்ளது.
புதுச்சேரி:
புதுவை அரசில் 54 துறைகள் உள்ளன.
இதில் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பணி புரிந்து வருகின்றனர். அரசு ஊழியர்கள் காலை 8.45 மணி முதல் மாலை 5.45 மணி வரை பணியாற்ற வேண்டும். மதியம் ஒரு மணி முதல் 2 மணி வரை உணவு நேரம். பல துறைகளில் ஊழியர்கள் சரியான நேரத்துக்கு பணிக்கு வருவதில்லை. நிர்வாக சீர்திருத்த துறை பல முறை எச்சரிக்கை விடுத்தும் பலனில்லை.
அரசு அதிகாரிகள், ஊழியர்களை கண்காணிக்க நிர்வாக சீர்திருத்த துறை தனிப்படையை அமைத்துள்ளது. இந்த தனிப்படையினர் நேற்று உள்ளாட்சித்துறையில் அதிரடியாக ஆய்வு நடத்தினர். அப்போது 50 சதவீத ஊழியர்கள் மட்டுமே காலை 9.15 மணிக்குள் வந்திருந்தனர்.
இதையடுத்து வருகை பதிவேட்டை ஜெராக்ஸ் எடுத்துக்கொண்ட தனிப்படையினர் அங்கிருந்து கிளம்பிச்சென்றனர். தகவலறிந்த ஊழியர்கள் அவசரகதியில் அலுவலகம் திரும்பினர். தொடர்ச்சியாக ஒவ்வொரு துறையாக திடீர் ஆய்வு நடத்தி, அறிக்கை தாக்கல் செய்ய தனிப்படைக்கு நிர்வாக சீர்திருத்த துறை உத்தரவிட்டுள்ளது.
இதற்காக தனி வாகனமும் தலைமை செயலகத்தில் ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்த ஆய்வில், ஒரு ஊழியர் தொடர்ந்து 3 நாள் தாமதமாக வந்தால், அவரின் தற்செயல் விடுப்பில் அரை நாள் கழிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. பணிக்கு தாமதமாக வருபவர்களின் பட்டியலை மாதம் தோறும் நிர்வாக சீர்திருத்தத்துறைக்கு சமர்பித்திட அந்தந்த துறை இயக்குநர்கள் மற்றும் செயலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும் சம்மந்தப்பட்ட ஊழியருக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் வழங்கவும், அந்த விளக்கம் திருப்தி அளிக்காத பட்சத்தில் அவரை சஸ்பெண்டு செய்யவும் முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளது. நிர்வாக சீர்திருத்த துறையின் இந்த அதிரடி நடவடிக்கை, தாமதமாக வரும் அரசு ஊழியர்களின் மத்தியில் கலக்கத்தையும், அரசு துறைகளில் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.
- புதுவை கூட்டுற வுத்துறை சார்பில் 69-வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழா மற்றும் கண்காட்சி திறப்புவிழா கடற்கரை சாலை காந்தி திடலில் நடந்தது.
- ஆனால் தற்போதைய நிலை என்ன? புதுவையில் அனைத்து கூட்டுறவு நிறுவனங்கள் அனைத்தும் லாபகரமாக இயங்கியது.
புதுச்சேரி:
புதுவை கூட்டுற வுத்துறை சார்பில் 69-வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழா மற்றும் கண்காட்சி திறப்புவிழா கடற்கரை சாலை காந்தி திடலில் நடந்தது.
கண்காட்சியை முதல்-அமைச்சர் ரங்கசாமி குத்துவிளக்கேற்றி திறந்து வைத்து முதல் விற்பனையை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் கலெக்டர் வல்லவன், கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் யஷ்வந்தையா உட்பட பலர் கலந்து கொண்ட னர்.
விழாவில் முதல்-அமைச்சர் ரங்கசாமி பேசியதாவது:-
புதுவையில் பாண்டெக்ஸ் தயாரிப்பு பொருட்களுக்கு தனி மவுசு இருந்தது. சர்க்கரை ஆலை லாபகரமாக இயங்கியது. தனியார் அதிக லாபம் ஈட்டக்கூடிய பெட்ரோல் பங்க், மதுபான கடைகள் ஆரம்பிக்க பாப்ஸ்கோ நிறுவனத்துக்கு அனுமதி வழங்கப்பட்டது.
தனியார் மதுபான கடைகள் அதிகளவில் லாபம் ஈட்டுகின்றனர். ஆனால் அருகில் உள்ள அரசு மதுபான கடைகள் தொடர்ந்து நஷ்டத்தில் இயங்கியது. இதனால்தான் மதுபான கடைகளை தனியாரிடம் வழங்க அரசு முடிவு செய்துள்ளது. காரைக்கால் ஜெயபிரகாஷ் நாராயணன் மில் சிறப்பாக இயங்கி வந்தது.
ஆனால் தற்போதைய நிலை என்ன? புதுவையில் அனைத்து கூட்டுறவு நிறுவனங்கள் அனைத்தும் லாபகரமாக இயங்கியது. ஆனால் தற்போது கூட்டுறவு நிறுவனங்கள் பெரும் நஷ்டத்திற்கு சென்றுள்ளன. இதற்கு ஊழியர்கள் தங்கள் பணியினை சரிவர செய்யாததுதான் காரணம்.
அரசு ஊழியர் என நாம் நினைக்கக்கூடாது. நாம் வேலைபார்த்தால்தான் நிறுவனம் சரியாக செயல்படும் என கருத வேண்டும். பல நிறுவன ஊழியர்கள் இப்போது ஏதாவது சம்பளம் கொடுங்கள் என கேட்கின்ற னர். வயிறு காய்ந்தவுடன் வேலை செய்ய வேண்டும் என்ற எண்ணம் வருகிறது.
அரசு நிதி ஒதுக்கி, லாபத்தில் இயங்கியபோதே நன்றாக வேலை செய்திரு ந்தால் கூட்டுறவு நிறுவ னங்களுக்கு இந்தநிலை ஏற்பட்டி ருக்காது. கூட்டுறவு நிறுவனம், சங்கங்களை சேர்ந்தவர்கள் பொறுப்பை உணர்ந்து பணியாற்ற வேண்டும். பொறுப்பை உணர்ந்து செயல்படாவிட்டால் நிறுவனத்தை நன்றாக செயல்படுத்த முடியாது.
நிறுவனம் நன்றாக செயல்படா விட்டால் 30 மாதம், 40 மாதம் சம்பள பாக்கி ஏற்படத்தான் செய்யும். நிறுவனங்களின் இந்த செயல்பாடால் கூட்டுறவு வங்கிகளும் நலிவடைந்துள்ளன. ஊழியர்களும், நிர்வாக த்திற்கு வருபவர்களும் இணைந்து சிறப்பாக செயல்பட்டால்தான் கூட்டுறவு நிறுவனங்களை செயல்படுத்த முடியும்.
சிறப்பாக செயல்பட்ட பாண்லே நிர்வாகத்திலும் இதே நிலை ஏற்பட்டுள்ளது. கூட்டுறவு நிறுவனங்களை சிறப்பாக கொண்டுவர முடியும். இதற்கு அதிகாரிகள், ஊழியர்கள் ஒத்துழைப்பு கொடுத்து பணியாற்ற வேண்டும். நான் சொல்வது சிலருக்கு வருத்தமாக இருக்கலாம்.
ஆனால் உண்மை நிலையை அனைவரும் அறிந்துகொள்ள வேண்டும். ஊழியர்கள் தங்கள் நிறுவனங்களை உழைப்பால் உயர்த்தி க்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
- முதலியார் பேட்டை தொகுதி துலுக்கானத்தம்மன் நகரில் முதலியார் பேட்டை தொகுதி எம்.எல்.ஏ. சம்பத் தனது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.28 லட்சத்தை ஒதுக்கி புதிதாக வாய்க்கால் வசதி அமைக்க புதுச்சேரி நகராட்சி மூலம் நடவடிக்கை எடுத்துள்ளார்.
- அதற்கான பூமி பூஜை துலுக்கானத்தம்மன் நகர் 8-வது குறுக்கு தெருவில் சம்பத் எம்.எல்.ஏ. தலைமையில் நடந்தது.
புதுச்சேரி:
முதலியார் பேட்டை தொகுதி துலுக்கானத்தம்மன் நகரில் முதலியார் பேட்டை தொகுதி எம்.எல்.ஏ. சம்பத் தனது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.28 லட்சத்தை ஒதுக்கி புதிதாக வாய்க்கால் வசதி அமைக்க புதுச்சேரி நகராட்சி மூலம் நடவடிக்கை எடுத்துள்ளார்.
அதற்கான பூமி பூஜை துலுக்கானத்தம்மன் நகர் 8-வது குறுக்கு தெருவில் சம்பத் எம்.எல்.ஏ. தலைமையில் நடந்தது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடு களை புதுவை நகராட்சி செயற்பொறியாளர் சிவபாலன், உதவி பொறி யாளர் வெங்கடாஜலபதி, இளைநிலை பொறியாளர் ரமேஷ் ஆகியோர் செய்திருந்தனர்.விழாவில் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
- ரமணா ரூ.10 லட்சத்தை அந்த நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளார். ஆனால், அவர்கள் கூறியபடி, 12 ஆயிரம் அமெரிக்க டாலர் இவரது கணக்கில் வரவில்லை.
- ரமணா இதுகுறித்து புதுவை சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார்.
புதுச்சேரி:
சமூக வளைதளத்தில் டிஜிட்டல் முறையில் மேற்கொள்ளப்படும் பணமில்லா பணம் பரிவர்த்தனை என்ற அடிப்படையில் கிரிப்போ கரண்சி, பிட்காயின் என்ற திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு, நடைமுறையில் உள்ளன.
இதில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என்ற அறிவிப்புகள் வெளியிடப்படுவதை, நம்பி, அதில் ஏராளானோர் தங்களது பணத்தை இழந்து வருகின்றனர்.
இந்த நிலையில், புதுவை ஜிப்மர் மருத்துவமனையில், பயிற்சி மருத்துவர் ஒருவர் இந்த முறையில் ரூ.10 லட்சத்தை இழந்துள்ளார். தெலங்கானாவை சேர்ந்தவர் தர்மிரெட்டி வெங்கட். இவரது மகன் வெங்கட்ட ரமணா என்ற ரமணா (வயது 36) புதுவை கோலாஸ் நகரில் தங்கி, ஜிப்மரில் எம்.டி. படித்து வருகிறார்.
இவரது இணைய தளத்தில் குஜராத்தை சேர்ந்த ஒரு நிறுவனம் ரூ.10 லட்சம் முதலீடு செய்தால், பிட்காயின் திட்டத்தில் ரூ.12 ஆயிரம் அமெரிக்க டாலர் கிடைக்கும் என தெரிவித்திருந்தது.
அந்த நிறுவனத்தை அவர் தொடர்பு கொண்ட போது, மொகுப், ஹரிஷ்பாபு பாய் ஆகியோர் அவரிடம் பேசி, பணத்தை முதலீடு செய்யுமாறு ஆசை வார்த்தை கூறியுள்ளளனர்.
உடனே, ரமணா ரூ.10 லட்சத்தை அந்த நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளார். ஆனால், அவர்கள் கூறியபடி, 12 ஆயிரம் அமெரிக்க டாலர் இவரது கணக்கில் வரவில்லை. உடனே அவர்களை தொடர்பு கொள்ள முயன்றபோது, செல்போன் அணைத்து வைக்கப்பட்டிருந்தது. தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த ரமணா இதுகுறித்து புதுவை சைபர்க்ரைம் போலீசில் புகார் அளித்தார். இன்ஸ்பெக்டர் மனோஜ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
முதல் கட்ட விசாரணையில், அந்த இருவரும் ரமணா அனுப்பிய பணத்தை, அடுத்தடுத்து 2, 3 வங்கி கணக்குகளுக்கு மாற்றியுள்ளனர்.மேலும், அவர்கள் பிட்காயினில் போலியான அக்கவுண்ட் வைத்திருந்ததும் தெரியவந்தது.
இதனையடுத்து அவர்கள் இருவரையும் கைது செய்ய சைபர் கிரைம் போலீசார் குஜராத் விரைந்துள்ளனர். புதுவையில் சைபர் கிரைம் தனியாக தொடங்கிய பிறகு போடப்பட்ட முதல் வழக்கு இது என்பது குறிப்பிடதக்கது.
- ஏம்பலம் தொகுதி கிருமாம்பாக்கத்தில் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி பிறந்தநாள் விழா காங்கிரஸ் கட்சி சார்பில் கொண்டாடப்பட்டது.
- சிறப்பு விருந்தினராக முன்னாள் அமைச்சர் கந்தசாமி கலந்துகொண்டு திருமாம்பாக்கம் இந்திரா காந்தி சிறுவர் பூங்கா திடலில் உள்ள இந்திரா காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
புதுச்சேரி:
ஏம்பலம் தொகுதி கிருமாம்பாக்கத்தில் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி பிறந்தநாள் விழா காங்கிரஸ் கட்சி சார்பில் கொண்டாடப்பட்டது.
இந்த நிகழ்ச்சிக்கு கிழக்குப் பகுதி ஏம்பலம் தொகுதி வட்டார காங்கிரஸ் தலைவர் பாப்பையா தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக முன்னாள் அமைச்சர் கந்தசாமி கலந்துகொண்டு திருமாம்பாக்கம் இந்திரா காந்தி சிறுவர் பூங்கா திடலில் உள்ள இந்திரா காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
இதில் மேற்கு பகுதி வட்டார காங்கிரஸ் தலைவர் மண்ணாங்கட்டி வேல்ஸ் ரெஸ்டாரண்ட் உரிமையாளர் சக்கரவர்த்தி கிராமணி, தணிகைவேல், கோவிந்தன் நாயுடு, செந்தில்குமார், பாலாஜி, வக்கீல் பக்கிரி, செல்வநாதன், பாலகுரு ரெட்டியார், துலுக்காணம், திருமாறன், சுப்பிரமணி, பூபாலன், பாலு, பரமன், நரசிங்கம், ஏ.ஆர் ராஜாராமன், டி. ஆறுமுகம், கோபு, கோபதி, பாண்டுரங்கன், ராஜேந்திரன், ஜெயவேல், மோகன், முருகையன், மணிமாறன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
- மணவெளி தொகுதிக்குட்பட்ட தானம்பாளையம் சப்தகிரி நகர், வெங்கடேஸ்வரா நகர், சரஸ்வதி நகர் ஆகிய பகுதிகளில் தொகுதி எம்.எல்.ஏ.வும், சபாநாயகருமான ஏம்பலம் செல்வம் தலைமையில் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
- சபாநாயகர் ஏம்பலம் செல்வம் துரித நடவடிக்கைகளுக்கு அப்பகுதி மக்கள் பாராட்டு தெரிவித்தனர்.
புதுச்சேரி:
மணவெளி தொகுதிக்குட்பட்ட தானம்பாளையம் சப்தகிரி நகர், வெங்கடேஸ்வரா நகர், சரஸ்வதி நகர் ஆகிய பகுதிகளில் தொகுதி எம்.எல்.ஏ.வும், சபாநாயகருமான ஏம்பலம் செல்வம் தலைமையில் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் அப்பகுதி மக்கள் தெரிவித்த குறைகளையும் கருத்துக்களையும் சபாநாயகர் ஏம்பலம் செல்வம் கேட்டறிந்தார்.
குறிப்பாக இப்பகுதிகளில் கழிவுநீர் வாய்க்காலுடன் கூடிய சாலை வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என பகுதி மக்கள் கோரிக்கை வைத்தனர். சபாநாயகர் ஏம்பலம் செல்வம் இப்பகுதிகளுக்கு கழிவுநீர் வாய்க்காலுடன் கூடிய தார் சாலை அமைப்பதற்கான ஒப்பந்த புள்ளி கோரப்பட்டு ஒப்பந்தம் விடப்பட்டுள்ளது எனவும் மழைக்காலம் முடிந்தவுடன் கழிவு நீர் வாய்க்கால் வசதி மற்றும் தார் சாலை வசதி அமைத்து தரப்படும் என உறுதி அளித்தார்.
மேலும் தானாம்பாளை யம் சப்தகிரி நகர் பகுதியில் குடிநீர் கலங்களாக வருவதாக பொதுமக்கள் தெரிவித்த புகாரை அடுத்து சம்பந்தப்பட்ட அதிகாரியை தொடர்பு கொண்டு உடனடியாக அப்பகுதியில் ஆய்வு செய்து சுகாதாரமான குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டார். சபாநாயகர் ஏம்பலம் செல்வம் துரித நடவடிக்கைகளுக்கு அப்பகுதி மக்கள் பாராட்டு தெரிவித்தனர்.
இந்த மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் பா.ஜனதா மாநில விவசாய அணி பொறுப்பாளர் ராமு, கிருஷ்ணமூர்த்தி ரெட்டி யார், தொடக்க வேளாண் கூட்டுறவு சங்க இயக்குனர் சக்திவேல் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.
- இந்தியா கிக்பாக்ஸிங் பெடரேஷன் மற்றும் சர்வதேச கிக்பாக்ஸிங் பெடரேஷன் இணைந்து டெல்லியில் உள்ள டல்கோத்ரா உள்விளையாட்டு அரங்கத்தில் நவம்பர் 2-ந் தேதி முதல் 6-ந் தேதி வரை சர்வதேச கிக்பாக்ஸிங் போட்டி நடைபெற்றது.
- இவர் இதற்கு முன்பு தேசிய அளவில் ஜூலை மாதம் மேற்கு வங்காளத்தில் நடைபெற்ற சப்-ஜூனியர் போட்டியில் 1 தங்கப்பதக்கமும், 1 வெங்கலப் பதக்கமும் பெற்றுள்ளார் .
புதுச்சேரி:
இந்தியா கிக்பாக்ஸிங் பெடரேஷன் மற்றும் சர்வதேச கிக்பாக்ஸிங் பெடரேஷன் இணைந்து டெல்லியில் உள்ள டல்கோத்ரா உள்விளையாட்டு அரங்கத்தில் நவம்பர் 2-ந் தேதி முதல் 6-ந் தேதி வரை சர்வதேச கிக்பாக்ஸிங் போட்டி நடைபெற்றது.
போட்டியில் சப்-ஜூனியர் பிரிவில், 34 நாடுகளைச் சேர்ந்த வீரர் மற்றும் வீராங்கணைகள் கலந்து கொண்டனர் அதில் புதுவை விவேகானந்தா மேல்நிலைப் பள்ளி மாணவன் பவித்ரன் கலந்து ெகாண்டு சப்-ஜூனியர் பிரிவில் 1 தங்க பதக்கமும், 1 வெங்கலப் பதக்கமும் பெற்று புதுவைக்கு பெருமை சேர்த்துள்ளார்.
இவர் இதற்கு முன்பு தேசிய அளவில் ஜூலை மாதம் மேற்கு வங்காளத்தில் நடைபெற்ற சப்-ஜூனியர் போட்டியில் 1 தங்கப்பதக்கமும், 1 வெங்கலப் பதக்கமும் பெற்றுள்ளார் .
இதனை கவுரவிக்கும் வகையில் விவேகானந்தா மேல்நிலைப் பள்ளியின் தாளாளர் மற்றும் எம்.பி.யுமான செல்வகணபதி, முதன்மை முதல்வர் பத்மா ஆகியோர் மாணவன் பவித்ரனை பாராட்டினார்கள்.
- வில்லியனூரில் கட்டிட காண்டிராக்டர் மயங்கி விழுந்து இறந்து போனார்.
- ஒரு மாதமாக கவுரி பெங்களூரில் வசிக்கும் தனது மகள் வீட்டில் இருந்து வருகிறார்.
புதுச்சேரி:
வில்லியனூரில் கட்டிட காண்டிராக்டர் மயங்கி விழுந்து இறந்து போனார்.
வில்லியனூர் தில்லை நகரை சேர்ந்தவர் செல்வராஜ் (வயது65). கட்டிட காண்டிராக்டர். இவருக்கு கவுரி என்ற மனைவியும், கார்த்திகேயன் என்ற மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர்.
இருவருக்கும் திருமணமாகி விட்டது. கார்த்திகேயனும் கட்டிட காண்டிராக்டராக தொழில் செய்து வருகிறார்.
செல்வராஜ் தனது மனைவி கவுரியுடன் வீட்டின் கீழ்தளத்திலும், வீட்டின் மாடியில் கார்த்திகேயன் தனது மனைவி மற்றும் மகனுடன் வசித்து வருகிறார்கள்.
இதற்கிடையே கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு செல்வராஜூக்கு இருத நோய் சம்பந்தமாக அறுவை சிகிச்சை செய்து கொண்டார்.
ஒரு மாதமாக கவுரி பெங்களூரில் வசிக்கும் தனது மகள் வீட்டில் இருந்து வருகிறார். செல்வராஜிக்கு அவரது மகன் கார்த்திகேயன் உணவு கொடுத்து கவனித்து வந்தார்.
இந்த நிலையில் வழக்கம் போல் செல்வராஜ் சாப்பிட்டு விட்டு படுக்கை அறைக்கு சென்றார். கார்த்திகேயன் தந்தையை பார்க்க சென்ற போது அங்கு செல்வராஜ் நெற்றியில் அடிப்பட்டு மயங்கிய நிலையில் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
பின்னர் தனது உறவினர்கள் உதவியுடன் தந்தையை சிகிச்சைக்காக வில்லியனூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கொண்டு சென்றார். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே செல்வராஜ் இறந்து விட்டதாக தெரிவித்தனர். திடீர் நெஞ்சுவலியால் செல்வராஜ் இறந்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து அவரது மகன் கார்த்திகேயன் கொடுத்த புகாரின் பேரில் வில்லியனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- புதுவையில் பல்வேறு மக்கள்பணிகளை யுவர்பே க்கர்ஸ் நிறுவனம் செய்து வருகிறது.
- அவர்களை ஊக்குவிக்கும் விதமாக யுவர்பே க்கர்ஸ் சார்பில் சீருடை வழங்கப்பட்டது.
புதுச்சேரி:
புதுவையில் பல்வேறு மக்கள்பணிகளை யுவர்பே க்கர்ஸ் நிறுவனம் செய்து வருகிறது. இந்த நிலையில் புதுவை டென்னிஸ் பால் கிரிக்கெட் அசோசியேசன் நடத்தும் மாநில அளவிலான கிரிக்கெட் போட்டியில் மதகடிப்பட்டை சேர்ந்த அணியினர் கலந்து கொள்கின்றனர். அவர்களை ஊக்குவிக்கும் விதமாக யுவர்பே க்கர்ஸ் சார்பில் சீருடை வழங்கப்பட்டது. யுவர் பேக்கர்ஸ் நிறுவனர் கிருஷ்ணராஜூ வீரர்களுக்கு சீருடைகளை வழங்கி வாழ்த்து கூறினார்.
- உப்பளம் தொகுதிக்குட்பட்ட மகாத்மா காந்தி சாலை சின்ன மணி கூண்டு அருகில் ப-வடிவ வாய்க்கால்களை தூர்வாரி சுத்தம் செய்து கொடுக்கும்படி அப்பகுதியை சார்ந்த வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் அனிபால் கென்னடி எம்.எல்.ஏ.விடம் கோரிக்கை வைத்தனர்.
- எம்.எல்.ஏ.வின் கோரிக்கையை ஏற்று அப்பகுதிகளில் வாய்க்கா ல்கள் தூர்வாரப்பட்டது.
புதுச்சேரி:
உப்பளம் தொகுதிக்குட்பட்ட மகாத்மா காந்தி சாலை சின்ன மணி கூண்டு அருகில் ப-வடிவ வாய்க்கால்களை தூர்வாரி சுத்தம் செய்து கொடுக்கும்படி அப்பகுதியை சார்ந்த வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் அனிபால் கென்னடி எம்.எல்.ஏ.விடம் கோரிக்கை வைத்தனர்.
அதனைத் தொடர்ந்து பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் வல்லவன், உதவி பொறி யாளர்கள் பார்த்தசாரதி, சந்திரகுமார், பன்னீர் மற்றும் இளநிலை பொறியாளர் வேல்முருகன் ஆகியோரை அணுகி வர இருக்கும் கன மழைக்குள் ப-வடிவ வாய்க்காலை தூர்வாரி சுத்தம் செய்து கொடுக்கும்படி அறிவுறுத்தினார்.
எம்.எல்.ஏ.வின் கோரிக்கையை ஏற்று அப்பகுதிகளில் வாய்க்கா ல்கள் தூர்வாரப்பட்டது. அதனை கென்னடி எம்.எல்.ஏ. ஆய்வு செய்தார்.
இதில் அப்பகுதி வியாபாரிகள், தொகுதி செயலாளர் சக்திவேல், அவைத்தலைவர் ரவி, தி.மு.க. பிரமுகர் நோயல், மாநில இளைஞ ரணி ராஜி, மாநில மீனவர் அணி விநாயகம், கிளை செயலாள ர்கள் காந்தி,செல்வம், காலப்பன், மணிகண்டன், அசோக் மற்றும் ராகேஷ் கவுதமன், தேசீர், பீட்டர், பாலாஜி, லாரன்ஸ், ரகுமான், மோரிஸ்,சிரஞ்சீவி, மதி ஆகியோர் கலந்து கொண்டனர்.
- அகில இந்திய டென்னிக்காய்ட் பெடரேஷன் ஆதரவுடன் ஹரியானா மாநில டென்னிக்காய்ட் சங்கம் 46-வது தேசிய டென்னிக்காய்ட் சாம்பியன்ஷிப் போட்டியை 10-ந் தேதி முதல் 14-ந் தேதி வரை ஹரியானா மாநிலம் சோனியத்தில் நடத்தியது.
- ஆண்கள் ஒற்றையர் பிரிவில் கோவிந்தராஜன், 3-ம் இடம் பிடித்து வெண்கலப்பதக்கம் வென்றார். மகளீர் ஒற்றையர் பிரிவில் பழனியம்மா, 3-ம் இடம் பிடித்து வெண்கலப்பதக்கம் பெற்றார்.
புதுச்சேரி:
அகில இந்திய டென்னிக்காய்ட் பெடரேஷன் ஆதரவுடன் ஹரியானா மாநில டென்னிக்காய்ட் சங்கம் 46-வது தேசிய டென்னிக்காய்ட் சாம்பியன்ஷிப் போட்டியை 10-ந் தேதி முதல் 14-ந் தேதி வரை ஹரியானா மாநிலம் சோனியத்தில் நடத்தியது.
இப்போட்டியில் புதுவை மாநிலத்தின் சார்பில் ஆண்கள் அணியில் கோவிந்தராஜன், தமிழ்வேந்தன், கலைவாணன், ஜெயகுமார், தேவேந்திரன் மற்றும் தாமரைச்செல்வன் ஆகியோர் கலந்து ெகாண்டு 3-ம் இடம் பிடித்து வெண்கலப்பதக்கம் வென்றனர்.
மகளீர் அணியில் பழனியம்மாள் மகேஸ்வரி, கற்பகம், ஜெயப்ரதா, திவ்யா மற்றும் ராகவி ஆகியோர் கலந்துகொண்டு 2-ம் இடம் பிடித்து வெள்ளிபதக்கம் வென்றனர்.
ஆண்கள் ஒற்றையர் பிரிவில் கோவிந்தராஜன், 3-ம் இடம் பிடித்து வெண்கலப்பதக்கம் வென்றார். மகளீர் ஒற்றையர் பிரிவில் பழனியம்மா, 3-ம் இடம் பிடித்து வெண்கலப்பதக்கம் பெற்றார்.
இவர்களுடன் பயிற்சி யாளராக கரிகாலன் மற்றும் செல்வக்குமார் ஆகியோரும் மேலாளர்களாக வழக்கறிஞர் தினேஷ்குமார் அகில இந்திய நடுவராக அருள்பிரகாசம் மற்றும் சதீஷ்குமார் ஆகியோரும் உடன் சென்றனர்.
பதக்கம் வென்று புதுவை திரும்பிய வீரர்-வீராங்கணை களை பாகூர் முன்னாள் பஞ்சாயத்து தலைவரும் புதுவை மாநில அமெச்சூர் டென்னிக்காய்ட் சங்கத்தின் தலைவருமான ராமு நாயக்கர், விரிவுரையாளர் சுப்ரமணியன் வெற்றி பெற்ற வீரர்களை வாழ்த்தி வரவேற்றனர்.






