என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    குழந்தைகள் தின விழா
    X

    போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு கோப்பை வழங்கிய காட்சி.

    குழந்தைகள் தின விழா

    • புதுவை தந்தை பெரியார் நகரில் அமைந்துள்ள நியூ லிட்டில் கிட்ஸ் மழலையர் பள்ளியின் குழந்தைகள் தின விழா முத்துரத்தினம் அரங்கம் மேல்நிலைப்பள்ளி உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்றது.
    • நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக மழலையர்கள் தேசத் தலைவர்களை போன்று மாறுவேடமிட்டு பார்வையாளர்கள் அனை வரையும் கவர்ந்தனர்.

    புதுச்சேரி:

    புதுவை தந்தை பெரியார் நகரில் அமைந்துள்ள நியூ லிட்டில் கிட்ஸ் மழலையர் பள்ளியின் குழந்தைகள் தின விழா முத்துரத்தினம் அரங்கம் மேல்நிலைப்பள்ளி உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்றது.

    விழாவிற்கு பள்ளி தாளாளர் டாக்டர் ரத்தின ஜனார்த்தனன் தலைமை தாங்கினார் . தலைமை விருந்தினராக குற்றப் புலனாய்வு போலீஸ் சூப்பிரண்டு வீரவல்லபன் கலந்து கொண்டு போட்டியில் வெற்றி பெற்ற மழலையர்களுக்கு பரிசுகள் வழங்கி கவுரவித்தார்.

    சிறப்பு விருந்தினராக டாக்டர் ரத்தினவேல் காமராஜர் கலந்து கொண்டு மழலையர்களின் கலை நிகழ்ச்சிகளை கண்டு களித்தார். புதுவை மாநில கோஜூரியோ கராத்தே சங்க மாநில செயலாளர் கராத்தே சுந்தர்ராஜன் கலந்து கொண்டு மழலையர்களுக்கு குழந்தைகள் தின வாழ்த்துக்களை தெரிவி த்தார்.

    பள்ளி முதல்வர் கவிதா சுந்தர்ராஜன் மூத்த அலுவலக அதிகாரி மரிய ஸ்டெல்லா ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக மழலையர்கள் தேசத் தலைவர்களை போன்று மாறுவேடமிட்டு பார்வையாளர்கள் அனை வரையும் கவர்ந்தனர். பின்பு அனைவருக்கும் இனிப்பு மற்றும் எழுதும் உபகரணங்கள் பரிசாக வழங்கப்பட்டது.

    விழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் நியூ லிட்டில் கிட்ஸ் மழலையர் பள்ளி ஆசிரியர்கள் லட்சுமி பிரியா , மகாலட்சுமி , சோனியா , சித்ரா ஆகியோர் செய்திருந்தனர்.

    Next Story
    ×