என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    • புதுவை தலைமை செயலகத்தை முற்றுகையிட போவதாக தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணி கட்சிகள் அறிவித்திருந்தது.
    • ஊர்வலத்தில் எதிர்க்கட்சி தலைவர் சிவா, முன்னாள் முதல்-அமைச்சர் நாராணயசாமி மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    புதுச்சேரி:

    பொருளாதாரத்தில் பின் தங்கிய முற்பட்ட வகுப்பினருக்கான இ.டபிள்யூ.எஸ். 10 சதவீத இடஒதுக்கீட்டை புதுவை மாநிலத்தில் அமுல்படுத்த கூடாது என தி.மு.க. காங்கிரஸ் கூட்டணி கட்சிகள் அறிவித்துள்ளது. இது தொடர்பாக முதல்-அமைச்சர் ரங்கசாமியை சந்தித்து வலியுறுத்தினார்கள்.

    ஆனால் இப்போது அரசு வெளியிட்டுள்ள பணி தேர்வு அறிவிப்புகளில் இடஒதுக்கீடு அறிவிக்கப்பட்டுள்ளது. முற்பட்ட வகுப்பினருக்கான 10 சதவீத இடஒதுக்கீட்டை புதுவை மாநிலத்தில் நடைமுறைப்படுத்த கூடாது என்பதை வலியுறுத்தி புதுவை தலைமை செயலகத்தை முற்றுகையிட போவதாக தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணி கட்சிகள் அறிவித்திருந்தது.

    அதன் படி இன்று (வெள்ளிக்கிழமை) முற்றுகை போராட்டம் நடைபெற்றது. முன்தாக அண்ணாசிலையில் இருந்து தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சியினர் ஊர்வலமாக புறப்பட்டு சென்றனர். ஊர்வலத்தில் எதிர்க்கட்சி தலைவர் சிவா, முன்னாள் முதல்-அமைச்சர் நாராணயசாமி மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    ஊர்வலம் அண்ணாசாலை, நேருவீதி வழியாக தலைமை செயலகம் நோக்கி சென்றது. ஆம்பூர் சாலை, கொசக்கடை வீதி சந்திப்பில் ஊர்வலத்தை போலீசார் பேரிக்கார்டுகளை வைத்து தடுத்தி நிறுத்தினர். இதனால் போலீசாருக்கும், தி.மு.க. கூட்டணி கட்சியினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. ஒருசிலர் பேரிக்கார்டை தாண்டி செல்ல முயன்றனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர்.

    அங்கு தி.மு.க. கூட்டணி கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட எதிர்க்கட்சி தலைவர் சிவா, முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி மற்றும் தி.மு.க. கூட்டணி கட்சியினர் 500-க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.

    • புதுவையில் செல்போன், இணையதளம், செயலிகள் மூலம் பணம் அனுப்புவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
    • இதற்காக 4 ஆயிரம் சதுர அடியில் 3 மாடி கட்டடம் கட்டப்பட்டுள்ளது. போலீஸ் நிலையத்தை முதல்-அமைச்சர் ரங்கசாமி ரிப்பன் வெட்டி தொடங்கி வைத்தார்.

    புதுச்சேரி:

    புதுவையில் செல்போன், இணையதளம், செயலிகள் மூலம் பணம் அனுப்புவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

    அதேநேரத்தில் சைபர் கிரைம் எனப்படும் இணையதள குற்றங்களும் அதிகரித்துள்ளது. ஏ.டி.எம். 

    கார்டு புதுப்பிப்பதாக கூறி, மொபைல் அல்லது லேண்ட் லைனில் அழைத்து ஓ.டி.பி. பெறுகின்றனர்.

    இதில் வங்கி விவரங்களை பெற்று பணத்தை திருடுகின்றனர். பிரபல நிறுவனத்தில் 50 சதவீத தள்ளுபடியில் பொருட்களை வாங்கலாம் என ஆசைவார்த்தை கூறியும் பணம் பறிக்கின்றனர்.

    இதுபோல பல்வேறு செயலிகள் மூலம் குற்றங்கள் நடக்கிறது. அமைச்சர்கள் பெயரிலேயே முகநூலில் பதிவிட்டு பணம் பறிக்கவும் முயற்சித்துள்ளனர். படிக்காதவர்களை விட படித்தவர்கள் பலரும் இதில் பாதிக்கப்படுகின்றனர்.

    எனவே சைபர் குற்றங்களை தடுக்க தனி போலீஸ் நிலையம் அமைக்கப்படும் என முதல்-அமைச்சர் ரங்கசாமி அறிவித்திருந்தார்.

    இதன்படி கோரிமேடு ஆயுதப்படை வளாகத்தில் புதுவையின் முதல் சைபர் கிரைம் போலீஸ் நிலையம் தொடங்கப்பட்டது.

    இதற்காக 4 ஆயிரம் சதுர அடியில் 3 மாடி கட்டடம் கட்டப்பட்டுள்ளது. போலீஸ் நிலையத்தை முதல்-அமைச்சர் ரங்கசாமி ரிப்பன் வெட்டி தொடங்கி வைத்தார். உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் குத்துவிளக்கேற்றி வைத்தார். நிகழ்ச்சியில் அரசு கொறடா ஏ.கே.டி.ஆறுமுகம், டி.ஜி.பி. மனோஜ்குமார்லால், ஏ.டி.ஜி.பி. ஆனந்தமோகன், ஐ.ஜி. சந்திரன் மற்றும் போலீசார் பலர் கலந்துகொண்டனர்.

    ஏற்கனவே சி.பி.சி.ஐ.டி. பிரிவின் கீழ் சைபர் கிரைம் பிரிவு செயல்பட்டு வந்தது. இனிமேல் சைபர் கிரைம் போலீஸ் நிலையத்தில் தனியாக வழக்குகள் பதிவு செய்யப்படும். சைபர் போலீஸ் நிலையத்தில் ஒரு போலீஸ் சூப்பிரண்டு, 2 இன்ஸ்பெக்டர்கள், ஒரு சப்-இன்ஸ்பெக்டர், 12 போலீசார் முதல்கட்டமாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

    சைபர் குற்றங்கள் மூலம் பணத்தை இழந்தவர்கள் உடனடியாக 1930 என்ற எண்ணை தொடர்புகொண்டு புகார் தெரிவிக்கலாம். புதிய சைபர் கிரைம் போலீஸ் நிலையத்துக்கு குற்றங்களை கண்டறிய ரூ.2 கோடி மதிப்பிலான அதி நவீன கருவிகளும் வாங்கப்பட்டுள்ளன.

    • புதுவை ரெட்டியார்பாளையம் போலீஸ் நிலையம் நீண்ட நாட்களாக வாடகை கட்டிடத்தில் இயங்கி வருகிறது. ரெட்டியார்பாளையம் போலீஸ் நிலையத்திற்கு ரூ.2 கோடியே 95 லட்சம் மதிப்பீட்டில், 2 அடுக்கு மாடி கொண்ட புதிய கட்டிடம் கட்டப்பட உள்ளது.
    • கூடுதல் போலீசார் நியமிக்கப்பட உள்ளனர். காவல்துறையின் அனைத்து காலி பணியிடங்கள் நிரப்பப்படும்.

    புதுச்சேரி:

    புதுவை ரெட்டியார்பாளையம் போலீஸ் நிலையம் நீண்ட நாட்களாக வாடகை கட்டிடத்தில் இயங்கி வருகிறது.

    ரெட்டியார்பாளையம் போலீஸ் நிலையத்திற்கு ரூ.2 கோடியே 95 லட்சம் மதிப்பீட்டில், 2 அடுக்கு மாடி கொண்ட புதிய கட்டிடம் கட்டப்பட உள்ளது.இதற்கான அடிக்கல் நாட்டு விழா  நடைபெற்றது.

    முதல்-அமைச்சர் ரங்கசாமி, அமைச்சர் நமச்சிவாயம் ஆகியோர் அடிக்கல் நாட்டினர். சிவசங்கரன் எம்.எல்.ஏ., டி.ஜி.பி. மனோஜ் குமார் லால், ஐ.ஜி. சந்திரன் மற்றும் போலீஸ் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

    நிகழ்ச்சிக்கு பிறகு முதல்-அமைச்சர் ரங்சாமி நிருபர்களிடம் கூறியதாவது:-

    புதிய போலீஸ் நிலையம் கட்ட அடிக்கல் நாட்டியுள்ளோம். ரூ.3 கோடியில் கட்டப்படும் இந்த கட்டிடம் 8 மாதத்தில் கட்டி முடிக்கப்படும். சைபர் க்ரைமில் ஆயிரத்து 500-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளது. இதில் 500 வழக்குகள் முடிக்கப்பட்டுள்ளது.

    இன்னும் ஆயிரம் வழக்கு உள்ளது. அவற்றை கண்டுபிடிக்க புதிய தொழில்நுட்பங்கள் தேவைப்படுகிறது. இதனால் புதிய தொழில் நுட்பங்களுடன் சைபர் க்ரைம் அலுவலகம் அமைக்கப்பட்டுள்ளது.

    விரைவில் குற்றங்கள் கண்டுபிடிக்கப்படும். கூடுதல் போலீசார் நியமிக்கப்பட உள்ளனர். காவல்துறையின் அனைத்து காலி பணியிடங்கள் நிரப்பப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    தொடர்ந்து அமைச்சர் நமச்சிவாயம் கூறியதாவது:-

    புதுவை மாநிலத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி அரசானது பல்வேறு நடவடிக்கைகளை தொடர்ந்து எடுத்து வருகிறது. பிரதமர் நரேந்திர மோடி, புதுவைக்கு வந்தபோது பெஸ்ட் புதுவையாக்குவோம் என உறுதி அளித்தார். அந்த அடிப்படையில் பல்வேறு திட்டங்களை அரசு நிறைவேற்றி வருகிறது.

    கடந்த 2, 3 மாதத்திற்கு முன்பாக லாஸ்பேட்டை போலீஸ் நிலையத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டது. இதனை தொடர்ந்து காவலர் பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளது, மேலும் 60 சப்-இன்ஸ்பெக்டர் பதவி நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

    அதுமட்டும் அல்லாது வெகு விரைவாக, காவல் துறை டிரைவர்களுக்கான பணியிட அறிவிப்பு வர உள்ளது.

    26-ந் தேதி 356 காவலர் பணியிடங்களை நிரப்ப அரசாணை வெளியிடப்பட உள்ளது.

    சைபர் க்ரைமில் நிலுவையில் உள்ள வழக்குகள் அனைத்திலும் குற்றவாளிகள் கண்டு பிடிக்கப்படுவர். சட்டம் ஒழுங்கை கட்டுப்படுத்துவதிலும், போதை பொருட்களை கட்டுப்படுத்துவதிலும் காவல் துறை அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது.

    காவல்துறையில் எம்.பி.சி. இடஒதுக்கீட்டை நிறைவேற்ற அரசு நடவடிக்கையை எடுத்து வருகிறது. அனைத்து சாலைகளையும் புதிதாக போட நடவடிக்கை எடுத்துள்ளோம். எதிர்கா லத்தில் பெஸ்ட் புதுவையை உருவாக்குவோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • வில்லியனூர் அருகே பள்ளி மாணவர்களுக்கு கஞ்சா விற்ற 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.
    • இதை தொடர்ந்து அவர்களிடமிருந்து 80 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்து விசாரணை நடத்தினர்.

    புதுச்சேரி:

    வில்லியனூர் அருகே பள்ளி மாணவர்களுக்கு கஞ்சா விற்ற 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.

    வில்லியனூர் அருகே அரசூர் பகுதியில் பள்ளி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக வில்லியனூர் போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று கண்காணித்தனர்.

    அப்போது சந்தேகப்படும் படி நின்றிருந்த 2 வாலிபர்களை பிடித்து அவர்களது சட்டை பையில் சோதனை நடத்திய போது சிறு சிறு பொட்ட லங்களாக கஞ்சா பதுக்கி வைத்திருந்தது தெரி யவந்தது. இதை தொடர்ந்து அவர்களிடமிருந்து 80 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்து விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் அவர்கள் வில்லியனூர் ஜி.என்.பாளையம் நடராஜன் நகரை சேர்ந்த ராஜேஷ் (வயது 22) மற்றும் மணிகண்டன் (20) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

    • தவளகுப்பம் அருகே விவசாயி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
    • அப்போது குழந்தை வேலு விவசாயத்துக்கு பயன்படுத்தும் பூச்சி கொல்லி மருந்தை (விஷம்) குடித்து மயங்கி கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

    புதுச்சேரி:

    தவளகுப்பம் அருகே விவசாயி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

    தவளகுப்பம் அருகே பூரணாங்குப்பம் அங்காளம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் குழந்தை வேலு. (வயது 53) விவசாயி. இவருக்கு ரதி என்ற மனைவியும் 2 மகன்களும் உள்ளனர். மூத்த மகனுக்கு திருமணமாகி குடும்பத்துடன் தனியாக வசித்து வருகிறார். இளையமகன் கவிதாசன் தவளகுப்பத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியராக பணி புரிந்து வருகிறார்.

    கடந்த 3 ஆண்டுகளாக குழந்தைவேலு ரத்த அழுத்த நோயால் பாதிக்கப்பட்டு இருந்தார்.

    இதனால் அவருக்கு அடிக்கடி மயக்கம் வரும். இதற்காக அவருக்கு நேரம் தவறாமல் அவரது மனைவி ரதி சாப்பாடு தாயாரிப்பது வழக்கம். இந்த நிலையில் சம்பவத்தன்று இரவு குழந்தை வேலு தனது மனைவியிடம் சாப்பாடு கேட்டார். அதற்கு ரதி சாப்பாடு தயாராவதாகவும் சற்று பொறுமையாக இருக்கும் படி கேட்டுக்கொண்டார்.

    இதனால் மனைவியிடம் கோபித்துக்கொண்ட குழந்தைவேலு வீட்டை விட்டு வெளியே சென்றார். வெகு நேரமாக குழந்தை வேலு வீடு திரும்பாததால் சந்தேகமடைந்த அவரது குடும்பத்தினர் அருகில் உள்ள விவசாய நிலத்துக்கு சென்று பார்த்தனர்.

    அப்போது குழந்தை வேலு விவசாயத்துக்கு பயன்படுத்தும் பூச்சி கொல்லி மருந்தை (விஷம்) குடித்து மயங்கி கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனே அவரை சிகிச்சைகாக ஜிப்மர் ஆஸ்பத்தியில் அனுமதித்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி குழந்தைவேலு பரிதாபமாக இறந்து போனார்.

    இது குறித்து அவரது இளைய மகன் கவிதாசன் கொடுத்த புகாரின் பேரில் தவளகுப்பம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ. பிறந்த நாளை முன்னிட்டு சின்ன பாபு சமுத்திரம் ஊராட்சியில் பொது மருத்துவ முகாம் நடைபெற்றது.
    • இந்நிகழ்ச்சியில் தி.மு.க. கிளைச் செயலாளர்கள் கருணாநிதி, தாஸ், சிவம், முருகன், மற்றும் தி.மு.க. நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    புதுச்சேரி:

    உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ. பிறந்த நாளை முன்னிட்டு சின்ன பாபு சமுத்திரம் ஊராட்சியில் பொது மருத்துவ முகாம் நடைபெற்றது.

    மருத்துவ முகாமிர்க்கு கண்டமங்கலம் ஒன்றிய குழு துணை தலைவரும் கவுன்சிலருமான நஜிரா பேகம் தமின் தலைமை தாங்கினார். வட்டார மருத்துவ அதிகாரி ஆர்த்தி மருத்துவ முகாமினை தொடங்கி வைத்தார்.

    விழுப்புரம் மத்திய மாவட்ட வர்த்தக அணி துணை அமைப்பாளர் டி.என்.ஏ. தமின் முன்னிலை வகித்தார்.  முகாமில் ரத்த பரிசோதனை, உயர் ரத்த அழுத்த பரிசோதனை, பொது மருத்துவ பரிசோதனை நடைபெற்றது. கர்ப்பிணி பெண்களுக்கு இரும்பு சத்து மாத்திரைகள், மருத்துவ முகாமில் இலவசமாக வழங்கப்பட்டது.

    இந்நிகழ்ச்சியில் தி.மு.க. கிளைச் செயலாளர்கள் கருணாநிதி, தாஸ், சிவம், முருகன், மற்றும் தி.மு.க. நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். மருத்துவ முகாமிற்கான ஏற்பாட்டினை டி.என்.ஏ. தமின் செய்திருந்தார்.

    • புதுவை உப்பளம் தொகுதி நேதாஜி நகர் அசோகன் வீதியில் மழை காலங்களில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. இதற்கு தீர்வு காண அப்பகுதி மக்கள் தொகுதி எம்.எல்.ஏ. அனிபால் கென்னடியிடம் கோரிக்கை வைத்தனர்.
    • இதற்கான பூமி பூஜையில் அனிபால் கென்னடி எம்.எல்.ஏ. கலந்து கொண்டுபணிகளை தொடங்கி வைத்தார்.

    புதுச்சேரி:

    புதுவை உப்பளம் தொகுதி நேதாஜி நகர் அசோகன் வீதியில் மழை காலங்களில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. இதற்கு தீர்வு காண அப்பகுதி மக்கள் தொகுதி எம்.எல்.ஏ. அனிபால் கென்னடியிடம் கோரிக்கை வைத்தனர்.

    இதையடுத்து புதுவை நகராட்சி மூலம் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.16 லட்சம் செ லவில் அசோ கன் வீதியில் சிமெண்டு சாலையாக மேம்படுத்தப்படுகிறது. இதற்கான பூமி பூஜையில் அனிபால் கென்னடி எம்.எல்.ஏ. கலந்து கொண்டுபணிகளை தொடங்கி வைத்தார்.

    இதில் நகராட்சி செயற்பொறியாளர் சிவபாலன், உதவி பொறியாளர் பிரபாகரன், இளநிலை பொறியாளர் சண்முகசுந்தரம், தி.மு.க. தொகுதி செயலாளர் சக்திவேல், அவைத்தலைவர் ரவி மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

    • தேக்வாண்டோ பெடரேசன் ஆப் இந்தியாவின் அகில இந்திய நிர்வாகிகளுக்கான தேர்தல் டெ ல்லியில் உள்ள இந்தியன் ஒலிம்பிக் சங்க வளாகத்தில் நடந்தது.
    • இந்த தேர்தலில் புதுவை தேக்வாண்டோ விளையாட்டு சங்க தலைவர் ஸ்டாலின் போட்டியிட்டு, அகில இந்திய செயற்குழு உறுப்பினராக வெற்றி பெற்றார்.

    புதுச்சேரி:

    தேக்வாண்டோ பெடரேசன் ஆப் இந்தியாவின் அகில இந்திய நிர்வாகிகளுக்கான தேர்தல் டெ ல்லியில் உள்ள இந்தியன் ஒலிம்பிக் சங்க வளாகத்தில் நடந்தது.

    இதில் புதுவை தேக்வாண்டோ விளையாட்டு தலைவர் ஸ்டாலின், பொதுச்செயலாளர் பஞ்சநாதன் ஆகியோர் கலந்து கொண்டு வாக்களித்தனர். இந்த தேர்தலில் புதுவை தேக்வாண்டோ விளையாட்டு சங்க தலைவர் ஸ்டாலின் போட்டியிட்டு, அகில இந்திய செயற்குழு உறுப்பினராக வெற்றி பெற்றார். அவர் புதுவை முதல்-அமைச்சர் ரங்கசாமியை சந்தித்து வாழ்த்து பெற்றார்.

    • புதுச்சேரி அரசின் பள்ளிக்கல்வி இயக்குனரகம், மாநில பயிற்சி மையம், மின்துறை அமைச்சகம் மற்றும் எரிசக்தி திறன் பணியகம் ஆகியவை இணைந்து ‘ஆற்றலை பாதுகாத்தல்’ என்ற தலைப்பில் தே சிய விழிப்புணர்வு பிரசார ஓவியப்போட்டியை நடத்தியது.
    • போட்டியில் வெற்றி பெற்ற மாணவி லத்திகாவை கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் பாராட்டி, ரூ.30 ஆயிரத்துக்கான காசோலையை வழங்கினார்.

    புதுச்சேரி:

    புதுச்சேரி அரசின் பள்ளிக்கல்வி இயக்குனரகம், மாநில பயிற்சி மையம், மின்துறை அமைச்சகம் மற்றும் எரிசக்தி திறன் பணியகம் ஆகியவை இணைந்து 'ஆற்றலை பாதுகாத்தல்' என்ற தலைப்பில் தே சிய விழிப்புணர்வு பிரசார ஓவியப்போட்டியை நடத்தியது. கோரிமேடு அன்னை தெரசா கல்வி நிறுவனத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் குரூப்-பி (8 முதல் 10-ம் வகுப்பு) பிரிவில் புதுவை

    அமலோற்பவம் லூர்து அகாடமி பள்ளி மாணவி லத்திகா 2-வது இடம் பெற்றார். மேலும் அவர் தே சிய அளவிலான ஓவிய போட்டிக்கும் தகுதி பெ ற்றார்.

    போட்டியில் வெற்றி பெற்ற மாணவி லத்திகாவை கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் பாராட்டி, ரூ.30 ஆயிரத்துக்கான காசோலையை வழங்கினார். விழாவில் செ ல்வகணபதி எம்.பி., அரசு செயலர் அருண், பள்ளிக்கல்வித்துறை இணை இயக்குனர் சிவகாமி மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

    தே சிய அளவிலான போட்டிகள் அடுத்த மாதம் (டிசம்பர்) 12-ந் தேதி புதுடெல்லியில் நடக்கிறது. இதில் பங்கேற்கவிருக்கும் மாணவி லத்திகாவை பள்ளியின் நிறுவனர், தாளாளர் மற்றும் முதுநிலை முதல்வருமான லூர்துசாமி பாராட்டினார்.

    • பெண்கள் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் விதமாக புதுவையில் யுவர் பேக்கர்ஸ் பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
    • மேலும் அந்த பெண்களின் முன்னேற்றத்திற்கு தானும் உறுதுணையாக இருப்பேன் என்றும் உறுதி அளித்தார்.

    புதுச்சேரி:

    பெண்கள் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் விதமாக புதுவையில் யுவர் பேக்கர்ஸ் பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

    அதன் ஒரு பகுதியாக 400-க்கும் மேற்பட்ட பெண்கள் யுவர் பேக்கர்ஸ் மூலம் சிறகுகள் எனும் குழு அமைத்து தற்சார்பு வாழ்வியல் நிபுணர் பிரியதர்ஷினியிடம் பயிற்சி பெற்று சுயதொழில் செய்து லாபம் ஈட்டி வருகின்றனர்.

    இதேபோல் மற்றொரு யுவர் பேக்கர்ஸ் மகளிர் குழுவினர் பொம்மைகள் வடிவமைப்பாளர் ஆர்த்தி தலைமையில் பயிற்சி பெற்று பொம்மைகள் செய்து அதனை விற்று லாபம் ஈட்டி வருகின்றனர்.

    இந்நிலையில் யுவர் பேக்கர்சின் முதுகெலும்பாக துணை நிற்கும் ரமேஷ் என்கிற செந்தில் யுவர் பேக்கர்ஸ் அலுவலகத்தில் இந்த இரு குழுவினரையும் சந்தித்து அவர்களின் சுயதொழில் குறித்து கேட்டறிந்து கலந்துரையாடினார்.

    மேலும் அந்த பெண்களின் முன்னேற்றத்திற்கு தானும் உறுதுணையாக இருப்பேன் என்றும் உறுதி அளித்தார். இதில் சிறகுகள் தற்சார்பு வாழ்வியல் குழுவினர் மற்றும் பொம்மை வடிவமைக்கும் பெண்கள் குழுவினர் கலந்து கொண்டனர்.

    • உலக நீரிழிவு நோய் தினத்தை முன்னிட்டு எம்.வி.ஆர். மருத்துவ மையம், புதுவை காஸ்மோபாலிட்டன் லயன் சங்கம் மற்றும் புதுவை அய்யப்ப சேவா சங்கம் ஆகியவை இணைந்து நடத்திய நீரிழிவு நோய் குறித்தான விழிப்புணர்வு மற்றும் பரிசோதனை முகாம் புதுவை கோவிந்தசாலையில் அமைந்துள்ள அய்யப்பன் கோவில் வளாகத்தில் நடைபெற்றது.
    • இம்முகாமில் கலந்து கொண்டவர்களுக்கு நீரிழிவு நோய் குறித்த கையேடு, உணவு குறிப்புகள் வழங்கப்பட்டது.

    புதுச்சேரி:

    உலக நீரிழிவு நோய் தினத்தை முன்னிட்டு எம்.வி.ஆர். மருத்துவ மையம், புதுவை காஸ்மோபாலிட்டன் லயன் சங்கம் மற்றும் புதுவை அய்யப்ப சேவா சங்கம் ஆகியவை இணைந்து நடத்திய நீரிழிவு நோய் குறித்தான விழிப்புணர்வு மற்றும் பரிசோதனை முகாம் புதுவை கோவிந்தசாலையில் அமைந்துள்ள அய்யப்பன் கோவில் வளாகத்தில் நடைபெற்றது.

    முகாமில் கலந்து கொண்ட வர்களுக்கு தலைமை நீரிழிவு நோய் மருத்துவ நிபுணர் டாக்டர் எம்.ஆர்.வித்யா நீரிழிவு நோய் வராமல் காப்பதற்கான வழிமுறைகள் மற்றும் வந்தபின் அதை கட்டுக்குள் வைத்து நீண்ட நாட்கள் வாழும் வழிமுறைகள் குறித்து உரையாற்றினார்.

    முகாமில் கலந்து க்கொண்டவர்களுக்கு இலவசமாக ரத்தத்தில் சர்க்கரை அளவு, ரத்த அழுத்தப் பரிசோதனைகள் செய்து பயனாளிகளுக்கு எம்.ஆர்.வித்யா, இணை மருத்துவ இயக்குனர் தேவநாதன் வாசு, மருத்துவ அதிகாரி பாலாஜி, ஆகியோர் இலவச மருத்துவ ஆலோசனை வழங்கினர்.

    இம்முகாமில் கலந்து கொண்டவர்களுக்கு நீரிழிவு நோய் குறித்த கையேடு, உணவு குறிப்புகள் வழங்கப்பட்டது.

    • புதுவை கவுண்டன்பாளையம் முத்து ரத்தினம் அரங்கம் மேல் நிலைப்பள்ளியில் குழந்தைகள் தின விழா கொண்டாடப்பட்டது.
    • விழாவில் பள்ளி முதல்வர் கவிதா சுந்தர்ராஜன், மூத்த அலுவலக அதிகாரி மரிய ஸ்டெல்லா, ஆலோசகர் ரத்தின பிரபா ஆகியோர் கலந்து கொண்டனர்.

    புதுச்சேரி

    புதுவை கவுண்டன்பாளையம் முத்து ரத்தினம் அரங்கம் மேல் நிலைப்பள்ளியில் குழந்தைகள் தின விழா கொண்டாடப்பட்டது. பள்ளி உள்விளையாட்டு அரங்கில் நடந்த இவ்விழாவுக்கு பள்ளி தாளாளர் டாக்டர் ரத்தின ஜனார்த்தனன் தலைமை தாங்கினார்.

    சிறப்பு விருந்தினராக அன்னை தெரசா பட்ட மேற்படிப்பு ஆராய்ச்சி நிறுவனத்தின் செவிலியர் பள்ளி முதல்வர் பிரமிளா தமிழ்வாணன் கலந்து கொண்டு பல்வேறு போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கி கவுரவித்தார். டாக்டர் ரங்கநாயகி ரத்தினவேல், காமராஜன், ஊர் தலைவர் ஜெகதீஸ்வரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    புதுவை மாநில கோஜூரியோ கராத்தே சங்க மாநில செயலாளர் கராத்தே சுந்தர்ராஜன் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார்.

    விழாவில் பள்ளி முதல்வர் கவிதா சுந்தர்ராஜன், மூத்த அலுவலக அதிகாரி மரிய ஸ்டெல்லா, ஆலோசகர் ரத்தின பிரபா ஆகியோர் கலந்து கொண்டனர்.

    பள்ளியில் மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்று இனிப்புகள் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை பள்ளி ஆசிரியர்கள் செய்திருந்தனர்.

    ×