என் மலர்
நீங்கள் தேடியது "Amalolpavam school girl feat"
- புதுச்சேரி அரசின் பள்ளிக்கல்வி இயக்குனரகம், மாநில பயிற்சி மையம், மின்துறை அமைச்சகம் மற்றும் எரிசக்தி திறன் பணியகம் ஆகியவை இணைந்து ‘ஆற்றலை பாதுகாத்தல்’ என்ற தலைப்பில் தே சிய விழிப்புணர்வு பிரசார ஓவியப்போட்டியை நடத்தியது.
- போட்டியில் வெற்றி பெற்ற மாணவி லத்திகாவை கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் பாராட்டி, ரூ.30 ஆயிரத்துக்கான காசோலையை வழங்கினார்.
புதுச்சேரி:
புதுச்சேரி அரசின் பள்ளிக்கல்வி இயக்குனரகம், மாநில பயிற்சி மையம், மின்துறை அமைச்சகம் மற்றும் எரிசக்தி திறன் பணியகம் ஆகியவை இணைந்து 'ஆற்றலை பாதுகாத்தல்' என்ற தலைப்பில் தே சிய விழிப்புணர்வு பிரசார ஓவியப்போட்டியை நடத்தியது. கோரிமேடு அன்னை தெரசா கல்வி நிறுவனத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் குரூப்-பி (8 முதல் 10-ம் வகுப்பு) பிரிவில் புதுவை
அமலோற்பவம் லூர்து அகாடமி பள்ளி மாணவி லத்திகா 2-வது இடம் பெற்றார். மேலும் அவர் தே சிய அளவிலான ஓவிய போட்டிக்கும் தகுதி பெ ற்றார்.
போட்டியில் வெற்றி பெற்ற மாணவி லத்திகாவை கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் பாராட்டி, ரூ.30 ஆயிரத்துக்கான காசோலையை வழங்கினார். விழாவில் செ ல்வகணபதி எம்.பி., அரசு செயலர் அருண், பள்ளிக்கல்வித்துறை இணை இயக்குனர் சிவகாமி மற்றும் பலர் கலந்துகொண்டனர்.
தே சிய அளவிலான போட்டிகள் அடுத்த மாதம் (டிசம்பர்) 12-ந் தேதி புதுடெல்லியில் நடக்கிறது. இதில் பங்கேற்கவிருக்கும் மாணவி லத்திகாவை பள்ளியின் நிறுவனர், தாளாளர் மற்றும் முதுநிலை முதல்வருமான லூர்துசாமி பாராட்டினார்.






