என் மலர்
புதுச்சேரி
- புதுவை கதிர்காமம் கதிர்வேல் சுவாமி தேவஸ்தானத்தில் பைரவர் ஜென்மாஷ்டமி விழா நடந்தது. விழாவையொட்டி யாக பூஜைகள் நடந்தது.
- இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு பைரவரை தரிசித்தனர். தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
புதுச்சேரி:
புதுவை கதிர்காமம் கதிர்வேல் சுவாமி தேவஸ்தானத்தில் பைரவர் ஜென்மாஷ்டமி விழா நடந்தது.
விழாவையொட்டி யாக பூஜைகள் நடந்தது. பைரவருக்கு தயிர், பால், இளநீர், சந்தனம், தேன் உள்ளிட்ட பல்வேறு திரவியங்களை கொண்டு மகா அபிஷேகம் நடந்தது.
தொடர்ந்து பூர்ணா ஹூதி, கலசாபிஷேகம் நடைபெற்றன. பின்னர் பைரவருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. முதல்-அமைச்சர் ரங்கசாமி பைரவருக்கு தீபாராதனை காண்பித்து சாமி தரிசனம் செய்தார்.
இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு பைரவரை தரிசித்தனர். தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
- திருக்கனூர் அருகே உள்ள கூனிச்சம்பட்டு ஆஞ்சநேயர் கோவில் வீதியை சேர்ந்தவர் கலியபெருமாள் (வயது 62). விவசாயியான இவர் திடீரென இறந்து போனார்.
- தானம் பெறப்பட்ட அவரது கண்கள் புதுவை அரவிந்தர் கண் மருத்துவமனை வசம் ஒப்படைக்கப்பட்டது.
திருக்கனூர்:
திருக்கனூர் அருகே உள்ள கூனிச்சம்பட்டு ஆஞ்சநேயர் கோவில் வீதியை சேர்ந்தவர் கலியபெருமாள் (வயது 62). விவசாயியான இவர் திடீரென இறந்து போனார்.
இதுகுறித்து தகவல் அறிந்த திருக்கனூர் லயன்ஸ் சங்க மாவட்ட தலைவர் பரந்தாமன் முயற்சியின் பேரில் திருக்கனூர் லயன்ஸ் சங்க தலைவர் தமிழ்மணி, செயலாளர் அசாருதீன், பொருளாளர் இளங்கோவன் மற்றும் நிர்வாகிகள் விவசாயி கலியபெருமாள் குடும்பத்தினரை சந்தித்து கண் தானம் குறித்து வலியுறுத்தினர்.
அவர்களது குடும்பத்தினரும் கலிய பெருமாளின் கண்களை தானம் அளிக்க சம்மதித்தனர்.
அவர்களது குடும்பத்தி னரின் சம்மதத்தின் பேரில் திருக்கனூர் லயன்ஸ் சங்கம் சார்பில் கலிய பெருமாளின் கண்கள் தானம் பெறப்பட்டது.
தானம் பெறப்பட்ட அவரது கண்கள் புதுவை அரவிந்தர் கண் மருத்துவமனை வசம் ஒப்படைக்கப்பட்டது. ஏற்கனவே இதே பகுதியைச் சேர்ந்த ராஜம் அம்மாள் என்பவரின் கண்கள் தானம் பெறப்பட்டது. தற்போது 2-வதாக கலிய பெருமாளின் கண்கள் திருக்கனூர் லயன்ஸ் சங்கம் சார்பில் தானம் பெறப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
- கோடியக்கரை தென்கிழக்கு கடலில் மீன்பிடித்தபோது இலங்கை கடற்படையினர் அங்கு வந்தனர்.
- மீனவர்கள் சென்ற படகும் பறிமுதல் செய்யப்பட்டது.
காரைக்கால்:
காரைக்கால் அருகே உள்ள கோட்டுச்சேரிமேடு பகுதியை சேர்ந்தவர் மீனவர் செல்வமணிக்கு சொந்தமான விசைப்படகில் மீனவர்கள் தினேஷ்குமார், சிவக்குமார், கிஷோர், ஜெகதாபட்டினத்தை சேர்ந்த அசோக், அழகர் உள்ளிட் 16 பேர் கடந்த 15-ந் தேதி மீன்பிடிக்க சென்றனர். இவர்கள் கோடியக்கரை தென்கிழக்கு கடலில் மீன்பிடித்தபோது இலங்கை கடற்படையினர் அங்கு வந்தனர்.
அவர்களை சுற்றி வளைத்த இலங்கை கடற்படையினர் எல்லைதாண்டி மீன்பிடித்ததாக கூறி 16 பேரையும் கைது செய்தனர். மீனவர்கள் சென்ற படகும் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த தகவல் கோட்டுச்சேரி கிராம மீனவர்களுக்கு எட்டியது. அவர்கள் அதிர்ச்சியடைந்தனர். உடனே காரைக்கால் மாவட்ட கலெக்டர், மீன்வளத்துறை அதிகாரியை சந்தித்து மனு கொடுத்தனர்.
அப்போது மீனவர்கள் மற்றும் படகை மீட்டுத்தருமாறு வலியுறுத்தியுள்ளனர்.
- மருத்துவக் கல்வி பயில வேண்டும் என்ற எண்ணம் புதுவை மாணவர்களின் கனவுகள் ஒவ்வொரு ஆண்டும் அரசின் அலட்சியத்தால் சிதைக்கப்பட்டு வருகிறது.
- மக்களுக்காக, மாணவர்களின் நலனுக்காக செயல்பட வேண்டிய அரசும், ஆட்சியாளர்களும் தனியார் கல்லூரி நிர்வாகத்துக்கு சாதகமாக செயல்பட்டு, அவர்கள் தரும் இடங்களை பெறுவதை பெரும் ஆனந்தமாக கருதி செயல்படுகின்றனர்.
புதுச்சேரி:
புதுவை மாநில அ.தி.மு.க. துணை செயலாளர் வையாபுரி மணிகண்டன் வெளியிட்டுள்ள அறிக்கை யில் கூறியிருப்பதாவது:-
மருத்துவக் கல்வி பயில வேண்டும் என்ற எண்ணம் புதுவை மாணவர்களின் கனவுகள் ஒவ்வொரு ஆண்டும் அரசின் அலட்சியத்தால் சிதைக்கப்பட்டு வருகிறது. தனியார் மருத்துவக்கல்லூரி நிர்வாகத்துக்கு ஆதர வாகவே ஆட்சியா ளர்கள் செயல்படுவதால் ஒவ்வொரு ஆண்டும் அரசு ஒதுக்கீட்டு இடங்கள் தாரை வார்க்கப்பட்டு வருகின்றன.
ஏற்கனவே 3 தனியார் மருத்துவ கல்லூரிகள் நிகர்நிலை பல்கலைக்கழகங்களாக மாற்றி கொண்டுள்ளன. இந்த கல்லூரிகளில் இருந்து ஒரு இடம்கூட புதுவை அரசின் ஒதுக்கீடாக பெறாதது பெரும் வெட்கக்கேடான விஷயம்.
இந்த நிலையில் எஞ்சியுள்ள 3 மருத்துவ கல்லூ ரிகளும் ஆண்டுதோறும் பிச்சையிடுவது போல எம்.பி.பி.எஸ். இடங்களை அரசுக்கு ஒதுக்கீடு செய்து வருகிறது. இந்த ஆண்டு கடந்த ஆண்டை விட குறைவான இடங்களை அரசு ஒதுக்கீடாக வழங்கியுள்ளனர்.
மக்களுக்காக, மாணவர்களின் நலனுக்காக செயல்பட வேண்டிய அரசும், ஆட்சியாளர்களும் தனியார் கல்லூரி நிர்வாகத்துக்கு சாதகமாக செயல்பட்டு, அவர்கள் தரும் இடங்களை பெறுவதை பெரும் ஆனந்தமாக கருதி செயல்படுகின்றனர். மாணவர்களின் நலனுக்காக காமராஜர் போன்ற பல தலைவர்கள் தங்கள் வாழ்வில் மிகப்பெரும் போராட்டத்தை சந்தித்து நற்பெயர் பெற்றுள்ளனர்.
அவர்களின் பெயரை பயன்படுத்தி புதுவையில் அரசியல் ஆதாயம் தேடுபவர்கள் மாணவ சமுதாயத்திற்கு மாபெரும் துரோகத்தை இழைத்து வருவது அநீதி, அக்கிரமத்தின் உச்சம்.புதுவையில் எஞ்சியுள்ள 3 மருத்துவ கல்லூரிகளில் ஒன்றையும் நிகர்நிலை பல்கலைக்கழகமாக மாற்ற உச்சகட்ட அதிகாரம் படைத்தவர் அனுமதியளித்து தனியார் மருத்துவ கல்லூரி மீதான தனது விசுவாசத்தை காட்டியுள்ளார்.
இதேநிலை நீடித்தால் வரும்காலத்தில் புதுவையில் அரசு மருத்துவ கல்லூரியை தவிர வேறு எந்த கல்லூரியிலும் புதுவை மாணவர்களுக்கு அரசு ஒதுக்கீடு இடங்கள் கிடைக்காது. ஏழை, எளிய, நடுத்தர குடும்பத்தை சேர்ந்த மாணவர்களின் மருத்துவக்கல்வி என்ற கனவு கானல் நீராகவே மாறிவிடும்.
ஆட்சியாளர்கள் தங்கள் தவறை உணர்ந்து, மாணவர்களின் நலன் கருதி தனியார் மருத்துவ கல்லூரிகளில் 50 சதவீத இடங்களை பெற வேண்டும்.
இவ்வாறு வையாபுரி மணிகண்டன் அறிக்கையில் கூறியுள்ளார்.
- உப்பளம் தொகுதிக்கு உட்பட்ட நேதாஜி நகர் 3-ல்அறப்பணிஅவ்வை தோட்டத்தில் 40 வருடத்திற்கு முன்பு ஏழை எளிய மக்கள் பயன்படும் வகையில் இருந்த மண்டபம் பழுதடைந்து இடிந்து விழுந்தது.
- அதனை நகராட்சியை சட்டரீதியாக அணுகி துரிதமான முறையில் ஆக்கிரமிப்புகளை அப்புறப்படுத்த கென்னடி எம்.எல்.ஏ. நடவடிக்கை மேற்கொண்டார்.
புதுச்சேரி:
உப்பளம் தொகுதிக்கு உட்பட்ட நேதாஜி நகர் 3-ல்அறப்பணிஅவ்வை தோட்டத்தில் 40 வருடத்திற்கு முன்பு ஏழை எளிய மக்கள் பயன்படும் வகையில் இருந்த மண்டபம் பழுதடைந்து இடிந்து விழுந்தது. தற்போது அங்கு அரசமரம் வளர்ந்து அருகில் சிலர் ஆக்கிரமிப்பு செய்து வந்தனர்.
அவ்விடத்தில் ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில் திருமண மண்டபம் அனிபால் கென்னடி எம்.எல்.ஏ. முயற்சியால் வர இருக்கிறது.
அதனை நகராட்சியை சட்டரீதியாக அணுகி துரிதமான முறையில் ஆக்கிரமிப்புகளை அப்புறப்படுத்த கென்னடி எம்.எல்.ஏ. நடவடிக்கை மேற்கொண்டார்.
இதில் அப்பகுதியை சுற்றியுள்ள ஊர் பஞ்சாயத்து நிர்வாகிகள், தொகுதி செயலாளர் சக்திவேல், அவைத்தலைவர் ரவி, ஆதிதிராவிடர் துணை அமைப்பாளர் தங்கவேல், மாநில இளைஞரணி துணை அமைப்பாளர் ராஜி, மாநில மீனவர் அணி துணை அமைப்பாளர் விநாயகமூர்த்தி, தி.க. காளி, விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
- நெட்டப்பாக்கத்தில் அமைந்துள்ள கருணாலயம் கிராம நலச்சங்க திட்ட அலுவலகத்தில் வில்லியனூரில் அமைந்துள்ள கஸ்தூரி பாய் சமூகவியல் கல்லூரியில் இருந்து 2-ம் ஆண்டு சமூக வியல் படிக்கும் மாணவிகள் கலப்பணி முகாமிற்கு வந்திருந்தனர்.
- முன்னதாக நிகழ்ச்சிக்கு வந்திருந்த விருந்தினர்களையும் மாணவர்களையும் கர்ணாலயம் கிராம நலச்சங்கதின் திட்ட அலுவலர் சித்ரா வரவேற்று பேசினார்.
புதுச்சேரி:
நெட்டப்பாக்கத்தில் அமைந்துள்ள கருணாலயம் கிராம நலச்சங்க திட்ட அலுவலகத்தில் வில்லியனூரில் அமைந்துள்ள கஸ்தூரி பாய் சமூகவியல் கல்லூரியில் இருந்து 2-ம் ஆண்டு சமூக வியல் படிக்கும் மாணவிகள் கலப்பணி முகாமிற்கு வந்திருந்தனர்.
கலப்பணி முகாமை கருணாலயம் கிராம நலச்சங்க இயக்குனர் அங்காளன் பணிகள், திட்டங்கள், செயல்பாடுகள் குறித்து விளக்கமாக எடுத்து கூறினார். இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக டெல்லியில் இருந்து வந்த மத்திய சமூக நல வாரிய இணை இயக்குனர் லோகேஷ் கலந்து கொண்டு மத்திய அரசின் திட்டங்கள், செயல்பாடுகள் குறித்து விளக்கி பேசினார்.
இந்நிகழ்ச்சியில் அரியாங்குப்பம் குழந்தைகள் மேம்பாட்டு நலத்திட்ட அதிகாரி செல்வகுமார், அரசு கஸ்தூரி பாய் கல்லூரி பேராசிரியர் அபிராமன் கருணாலயம் கிராம நலசங்க இணை இயக்குனர் புஷ்பவள்ளி ஆகியோர் கலந்து கொண்டு மாணவர்களை வாழ்த்தி பேசினர். முன்னதாக நிகழ்ச்சிக்கு வந்திருந்த விருந்தினர்களையும் மாணவர்களையும் கர்ணாலயம் கிராம நலச்சங்கதின் திட்ட அலுவலர் சித்ரா வரவேற்று பேசினார்.
முடிவில் கருணாலயம் கிராம சங்க குடும்ப ஆலோசகர் அபிராமி நன்றி கூறினார்.
- மதச்சார்பற்ற முற்போக்கு கட்சிகள் மற்றும் சமூக அமைப்புகளின் ஆலோசனை கூட்டம் முதலியார்பேட்டையில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது.
- பொருளாதாரத்தில் நலிந்த பிரிவினருக்கு இடஒதுக்கீடை அமல்படு த்தக்கூடாது என முதல்-அமைச்சர் ரங்கசாமியை நேரில் சந்தித்து கூறினோம்.
புதுச்சேரி:
பொருளாதாரத்தில் பின்தங்கிய முற்பட்ட வகுப்பினருக்கான இ.டபிள்.யூ.எஸ். 10 சதவீத இட ஒதுக்கீட்டை புதுவை மாநிலத்தில் நடைமுறைப்படுத்த கூடாது என்பதை வலியுறுத்தி எதிர்கால போராட்ட நடவடிக்கைகளை திட்ட மிடுவதற்கான மதச்சார்பற்ற முற்போக்கு கட்சிகள் மற்றும் சமூக அமைப்புகளின் ஆலோசனை கூட்டம் முதலியார்பேட்டையில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது.
கூட்டத்துக்கு இந்திய கம்யூனிஸ்டு மாநில செயலாளர் சலீம் தலைமை தாங்கினார். தி.மு.க. மாநில அமைப்பாளரும், எதிர்க்கட்சி தலைவருமான சிவா, இந்திய கம்யூனிஸ்டு சார்பில் முன்னாள் எம்.எல்.ஏ. நாரா.கலைநாதன், சேதுசெல்வம், தினேஷ் பொன்னையா, சுப்பையா, காங்கிரஸ் சார்பில் மணவாளன், லெனினிஸ்ட் கம்யூனிஸ்டு புருஷோத்தமன் தி.க. சிவ.வீரமணி, மாணவர் கூட்டமைப்பு சுவாமிநாதன், மக்கள் உரிமை கூட்டமைப்பு சுகுமாரன், தந்தை பெரியார் திராவிடர் கழகம் வீர.மோகன்,இந்திய யூனியன் முஸ்லிம் லீக் முகமது உமர் பாரூக், சமூக நீதிப் பேரவை கீதநாதன், மனிதநேய மக்கள் கட்சி இஸ்மாயில், தமிழ் மீனவர் விடுதலை வேங்கைகள் மங்கையர் செல்வன், தமிழர் களம் அழகர், மனித உரிமைகள் மற்றும் நுகர்வோர் கூட்டமைப்பு முருகானந்தம், பெரியார் சிந்தனையாளர் இயக்கம் தீனா, திராவிடர் விடுதலைக் கழகம் லோகு அய்யப்பன், இந்திய தேசிய இளைஞர் முன்னணி கலைப் பிரியன், அம்பேத்கர் தொண்டர் படை பாவாடைராயன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தின் முடிவில் தி.மு.க. அமைப்பாளர் சிவா, இந்தியகம்யூனிஸ்டு மாநில செயலாளர் சலீம் ஆகியோர் நிருபர்களிடம் கூறியதாவது:-
பொருளாதாரத்தில் நலிந்த பிரிவினருக்கு இடஒதுக்கீடை அமல்படு த்தக்கூடாது என முதல்-அமைச்சர் ரங்கசாமியை நேரில் சந்தித்து கூறினோம். அப்போது அதிகாரிகள், இடஒதுக்கீடை நடைமுறைப்படுத்த மாட்டோம் என கூறினர். ஆனால் இப்போது அரசு வெளியிட்டுள்ள பணி தேர்வு அறிவிப்புகளில் இடஒதுக்கீடு அறிவிக்கப்பட்டுள்ளது. அதிகாரிகள் தன்னிச்சையாக செயல்படுகின்றனர். முதல்-அமைச்சர், அமைச்சர்களின் உத்தரவுகளை மீறி செயல்படுவதாக தெரிகிறது. இதை கண்டித்து நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) தலைமை செயலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த உள்ளோம்.
இவ்வாறு அவர்கள் கூறினார்.
- விடுதலை சிறுத்தைகள் கட்சியின் முற்போக்கு மாணவர் கழகம் சார்பில் சுதேசி மில் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு மாநில செயலாளர் தமிழ்வாணன் தலைமை வகித்தார்.
- மருத்துவ கல்வியில் புதுவை அரசு பள்ளி மாணவர்களுக்கு 10 சதவீத உள்ஒதுக்கீடு வழங்க வேண்டும்.
புதுச்சேரி:
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் முற்போக்கு மாணவர் கழகம் சார்பில் சுதேசி மில் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்டத்துக்கு மாநில செயலாளர் தமிழ்வாணன் தலைமை வகித்தார். துணை செயலாளர் தொல்காப்பியன் வரவேற்றார். நிர்வாகிகள் ஆதிரை, உதயபாஸ்கர், சிவசந்திரன், அமுதகுமார், கல்யாணசுந்தரம், பாவலன், அனுசியா, விக்னராஜ் முன்னிலை வகித்தனர்.
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் முதன்மை செயலாளர் தேவபொழிலன் கண்டன உரையாற்றினார். மாநில செயலாளர் இளவரசன், தமிழக மாணவர் கழக துணை செயலாளர் நீதிவள்ளல், பல்வேறு அமைப்பு நிர்வாகிககள் மணிமாறன், எழிலன், கல்யாணசுந்தரம், பிரவீன், ராகுல் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
மருத்துவ கல்வியில் புதுவை அரசு பள்ளி மாணவர்களுக்கு 10 சதவீத உள்ஒதுக்கீடு வழங்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி. மாணவர்களிடம் தனியார் பள்ளிகள் கட்டணம் வசூலிப்பதை நிறுத்த வேண்டும். கட்டணமில்லா கல்வி திட்டத்தை விரிவுபடுத்த வேண்டும்.
மருத்துவ கல்லூரிகளில் 50 சதவீத இடங்களை அரசுக்கு பெற வேண்டும். நிகழ்நிலை பல்கலைக்கழகங்கள் மீதும் நடவடிக்கை எடுக்காத பா.ஜனதா அரசு, கூட்டணி வகிக்கும் என்.ஆர்.காங்கிரசை கண்டித்து இந்த போராட்டம் நடந்தது.
- புதுவையை அடுத்த வில்லியனூர் பகுதிகளில் சட்டத்திற்கு புறம்பாக பறவைகளை பிடித்து சில நபர்கள் விற்பனை செய்தனர்.
- பச்சைக்கிளிகள் வனவிலங்கு பாதுகாப்பு சட்டத்தில் பட்டியல் 3-ல் உள்ளதால் வீடுகளில் வளர்ப்பது சட்டப்படி குற்றமாகும்.
புதுச்சேரி:
புதுவையை அடுத்த வில்லியனூர் பகுதிகளில் சட்டத்திற்கு புறம்பாக பறவைகளை பிடித்து சில நபர்கள் விற்பனை செய்தனர்.
இதனை அறிந்த வனத்துறை அதிகாரிகள் விற்பனைக்கு வைத்திருந்த ரெக்கைகள் வெட்டப்பட்ட. கிளிகள் மற்றும் அதன் குஞ்சிகளை அதிரடியாக மீட்டனர். அவற்றை வனத்துறை பாதுகாப்பு மற்றும் மீட்பு மையத்தில் வைத்து பராமரித்து வந்தனர்.
2 மாதங்களுக்கு பிறகு கிளிகளின் இறக்கைகள் நன்கு வளர்ந்த நிலையில் அவைகளை வெளியில் பறக்க விட முடிவு செய்தனர். அமைச்சர் தேனீ.ஜெயக்குமார் உசுட்டேரி சரணாலயப் பகுதியில் 50-க்கும் மேற்பட்ட கிளிகளை சுதந்திரமாக பறக்க விட்டார்.
பச்சைக்கிளிகள் வனவிலங்கு பாதுகாப்பு சட்டத்தில் பட்டியல் 3-ல் உள்ளதால் வீடுகளில் வளர்ப்பது சட்டப்படி குற்றமாகும். அதற்கு 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும்.
ஆகையால் பச்சைக் கிளிகளை விற்பது வாங்குவது வளர்ப்பது தண்டனைக்குரிய குற்றமாகும் என வனத்துறை அதிகாரிகள் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்தனர்.
நிகழ்ச்சியில் வனத்துறை அதிகாரி வஞ்சனவள்ளி, வனத்துறை அலுவலர் பிரபாகரன் மற்றும் ஊழியர்கள் கலந்து கொண்டனர்.
- புதுவை கோபாலன்கடை விவேகானந்தா சி.பி.எஸ்.இ. பள்ளியில் கண்காட்சி நடந்தது. முதன்மை முதல்வர் பத்மா தலைமை தாங்கினார்.
- இதில் பள்ளியின் முதல்வர் சரண்யா , இணை முதல்வர் கீதா, பிரீத்தி மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
புதுச்சேரி:
புதுவை கோபாலன்கடை விவேகானந்தா சி.பி.எஸ்.இ. பள்ளியில் கண்காட்சி நடந்தது. முதன்மை முதல்வர் பத்மா தலைமை தாங்கினார். பள்ளி தாளாளரும், எம்.பி.யுமான செல்வகணபதி கண்காட்சியை தொடங்கி வை த்து பார்வையிட்டார்.
இந்த கண்காட்சியில் பொம்மை உலகம், விஞ்ஞான அரங்கம் உள்ளிட்ட மாணவர்களின் பல்வேறு படை ப்புகள் இடம் பெற்றிருந்தன. இதில் பள்ளியின் முதல்வர் சரண்யா , இணை முதல்வர் கீதா, பிரீத்தி மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினரின் எந்த விதமான தரவுகள் இல்லாத நிலையில் அதனை அமல்படுத்தக்கூடாது என்று முதல்-அமைச்சரிடம் தி.மு.க. கூட்டணி கட்சிகள் நேரடியாக வேண்டுகோள் வைத்தோம்.
- புதுவை அரசு தலைமை செயலக அதிகாரிகள் கட்டுப்பாட்டில் உள்ளதாக தெரிகிறது. தலைமை செயலக அதிகாரிகள் சமூக நீதிக்கு எதிராக செயல்படுகிறார்கள்.
புதுச்சேரி:
புதுவை மாநில தி.மு.க . துணை அமைப்பாளர் அனி பால் கென்னடி எம்.எல்.ஏ. விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
சமீப காலமாக முதல்-அமைச்சர் எடுக்கும் முடிவுகளுக்கு மாறாக அரசின் நிர்வாகம் சென்று கொண்டுள்ளது. பொருளாதாரத்தின் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினர் இடஒதுக்கீடு, மின்துறை தனியார் மயம், மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீடு உள்ளிட்ட பிரச்சினைகளில் மாநில நலன் சார்ந்த கொள்கை முடிவுகளில் அரசின் கைகள் கட்டப்பட்டுள்ளதாக மக்கள் நினைக்கின்றனர்.
பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினரின் எந்த விதமான தரவுகள் இல்லாத நிலையில் அதனை அமல்படுத்தக்கூடாது என்று முதல்-அமைச்சரிடம் தி.மு.க. கூட்டணி கட்சிகள் நேரடியாக வேண்டுகோள் வைத்தோம். அதிகாரிகளை அழைத்து பேசியும் இதுவரை தீர்வு எதுவும் காணப்படவில்லை என்பது ஏற்றுக்கொள்ள முடியாதது.
என்.ஆர்.காங்கிரஸ்-பா.ஜனதா கூட்டணியில் அங்கம் வகிக்கும் பா.ம.க. உள்ளிட்ட அமைப்புகள் கோரிக்கை விடுத்தும் அரசு நிர்வாகம் செவிசாய்க்கவில்லை என்பது துரதிஷ்டவ சமானது.
தமிழகத்தில் தி.மு.க. அரசின் முதல்-அமைச்சர் மு .க. ஸ்டாலின் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு, நூற்றாண்டு கால சமூகநீதி போராட்டத்திற்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது என அனைத்து கட்சி கூட்டத்தில் சொல்லிய தோடு நில்லாமல் மாநில அரசின் வேலை வாய்ப்புகளில் ஒருபோதும் இந்த இட ஒதுக்கீடு முறை கொண்டு வரப்படாது என திட்டவட்டமாக கூறி விட்டார்.
புதுவை அரசு தலைமை செயலக அதிகாரிகள் கட்டுப்பாட்டில் உள்ளதாக தெரிகிறது. தலைமை செயலக அதிகாரிகள் சமூக நீதிக்கு எதிராக செயல்படுகிறார்கள். இடஒதுக்கீட்டு உரிமையை பறிப்பது நியாயமா? பா.ஜனதா கூட்டணி அரசு மக்களுக்கு நன்மை செய்யவில்லை என்றாலும் துரோகம் செய்யாமல் இருந்தால் போதும்.
பொருளாதாரத்தில் பின் தங்கிய முற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீடு பா.ஜனதா ஆட்சி செய்யும் கர்நாடக மாநிலத்தின் அரசு வேலை வாய்ப்பில் அமல் படுத்தப்படவில்லை.
சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பிலும் மாநிலங்கள் இதனை அமல்படுத்த வேண்டும் என்று கட்டாய உத்தரவும் பிறப்பிக்கவில்லை. புதுவை மாநிலத்தில் ஏழை என்பவர்கள் ஆண்டுக்கு ரூ.72 ஆயிரம் வருமானம் உள்ளவர்கள் என்று அரசு நிர்ணயித்துள்ளது.
ஆனால் மத்திய அரசோ முன்னேறிய வகுப்பினருக்கு மட்டும் ஏழைகள் என்பவர்கள் ரூ.8 லட்சம் வருமானம் உள்ளவர்கள் என்று புதுவிதமான கணக்கினை வகுத்துள்ளது. இந்த கணக்கை மாநில அரசு அமல்படுத்திட முடியுமா?
எனவே முதல்-அமைச்சர் கடந்த 4-ந் தேதி அனைத்து கட்சி தலைவர்களிடம் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும். இல்லாவிட்டார் பெரும்பான்மை மக்களின் கோபத்துக்கு இந்த அமைச்சரவை ஆளாக நேரிடும்.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
- புதுவை அரசு கூட்டுறவு நிறுவனமான பாண்லே கடந்த காலங்களில் நல்ல லாபத்தில் இயங்கி வந்தது. இங்கு ஆயிரம் ஊழியர்கள் வேலை செய்கின்றனர்.
- வெளிமாநில நிர்வாக ங்களுக்கு பணம் தராததால் பால் வழங்குவதை நிறுத்திவிட்டனர். பால் பொருட்கள் உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி:
ஏ.ஐ.டி.யூ.சி. புதுவை மாநில பொதுச்செயலாளர் சேது செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
புதுவை அரசு கூட்டுறவு நிறுவனமான பாண்லே கடந்த காலங்களில் நல்ல லாபத்தில் இயங்கி வந்தது. இங்கு ஆயிரம் ஊழியர்கள் வேலை செய்கின்றனர். நாள் ஒன்றுக்கு ஒரு லட்சத்து 5 ஆயிரம் லிட்டர் பால் தேவை. 50 ஆயிரம் லிட்டர் புதுவை கூட்டுறவு சங்கம் மூலமும், மீதமுள்ள பால் வெளிமாநிலத்திலும் கொள்முதல் செய்யப்படுகிறது.
கூட்டுறவு நிறுவனத்தில் ரூ.32-க்கு வாங்கப்படும் பால், வெளிமா நிலத்தில் ரூ.42-க்கு வாங்கப்படுகிறது. கூடுதல் செலவுடன் ரூ.48 அடக்கம் ஆகிறது. இந்த பாலை ரூ.44-க்கு விற்பனை செய்கிறது. இதனால் பாண்லே நிர்வாகத்துக்கு மாதம் ரூ.2.25 கோடி நஷ்டம் ஏற்படுகிறது. அரசு நிதி வழங்காததால் வங்கிகளில் நிர்வாகம் கடன் பெற்றுள்ளது.
வெளிமாநில நிர்வாக ங்களுக்கு பணம் தராததால் பால் வழங்குவதை நிறுத்திவிட்டனர். பால் பொருட்கள் உற்பத்தி கடுமையாக பாதிக்கப் பட்டுள்ளது. ஊழியர்கள் வேலைநேரம் குறைக்கப்பட்டுள்ளது. இந்த நிலை தொடர்ந்தால் பாண்லே நிறுவனம் பெரும் நஷ்டத்தை சந்தித்து நடத்தமுடியாத நிலை ஏற்படும்.
முதல்-அமைச்சர் இதை வேடிக்கை பார்க்காமல், பாண்லே நிறுவனத்துக்கு ஏற்படும் இழப்பீடை ஈடு கட்ட தேவையான நிதியை வழங்கி காப்பாற்ற வேண்டும்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.






