என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Empalam Selvam"

    • மணவெளி தொகுதிக்குட்பட்ட தானம்பாளையம் சப்தகிரி நகர், வெங்கடேஸ்வரா நகர், சரஸ்வதி நகர் ஆகிய பகுதிகளில் தொகுதி எம்.எல்.ஏ.வும், சபாநாயகருமான ஏம்பலம் செல்வம் தலைமையில் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
    • சபாநாயகர் ஏம்பலம் செல்வம் துரித நடவடிக்கைகளுக்கு அப்பகுதி மக்கள் பாராட்டு தெரிவித்தனர்.

    புதுச்சேரி:

    மணவெளி தொகுதிக்குட்பட்ட தானம்பாளையம் சப்தகிரி நகர், வெங்கடேஸ்வரா நகர், சரஸ்வதி நகர் ஆகிய பகுதிகளில் தொகுதி எம்.எல்.ஏ.வும், சபாநாயகருமான ஏம்பலம் செல்வம் தலைமையில் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

    இந்த மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் அப்பகுதி மக்கள் தெரிவித்த குறைகளையும் கருத்துக்களையும் சபாநாயகர் ஏம்பலம் செல்வம் கேட்டறிந்தார்.

    குறிப்பாக இப்பகுதிகளில் கழிவுநீர் வாய்க்காலுடன் கூடிய சாலை வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என பகுதி மக்கள் கோரிக்கை வைத்தனர். சபாநாயகர் ஏம்பலம் செல்வம் இப்பகுதிகளுக்கு கழிவுநீர் வாய்க்காலுடன் கூடிய தார் சாலை அமைப்பதற்கான ஒப்பந்த புள்ளி கோரப்பட்டு ஒப்பந்தம் விடப்பட்டுள்ளது எனவும் மழைக்காலம் முடிந்தவுடன் கழிவு நீர் வாய்க்கால் வசதி மற்றும் தார் சாலை வசதி அமைத்து தரப்படும் என உறுதி அளித்தார்.

    மேலும் தானாம்பாளை யம் சப்தகிரி நகர் பகுதியில் குடிநீர் கலங்களாக வருவதாக பொதுமக்கள் தெரிவித்த புகாரை அடுத்து சம்பந்தப்பட்ட அதிகாரியை தொடர்பு கொண்டு உடனடியாக அப்பகுதியில் ஆய்வு செய்து சுகாதாரமான குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டார். சபாநாயகர் ஏம்பலம் செல்வம் துரித நடவடிக்கைகளுக்கு அப்பகுதி மக்கள் பாராட்டு தெரிவித்தனர்.

    இந்த மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் பா.ஜனதா மாநில விவசாய அணி பொறுப்பாளர் ராமு, கிருஷ்ணமூர்த்தி ரெட்டி யார், தொடக்க வேளாண் கூட்டுறவு சங்க இயக்குனர் சக்திவேல் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

    • புதுவை சட்டசபையில் பேனர், பதாகைகளை எடுத்துவரக்கூடாது என உறுப்பினர்களுக்கு சபாநாயகர் ஏம்பலம் செல்வம் தடை விதித்திருந்தார்.
    • உங்களிடம் விளக்கம் கேட்கப்படும் என்றார் அப்போது நேரு எம்.எல்.ஏ. குறுக்கிட்டு, ஜனநாயகப்படி பேனர் காட்டுவது அனைத்து சட்டமன்றத்திலும் உள்ளது என்றார்.

    புதுச்சேரி:

    புதுவை சட்டசபையில் பேனர், பதாகைகளை எடுத்துவரக்கூடாது என உறுப்பினர்களுக்கு சபாநாயகர் ஏம்பலம் செல்வம் தடை விதித்திருந்தார். இந்நிலையில் கூடிய பட்ஜெட் உரையின்போது சுயேச்சை எம்.எல்.ஏ. நேரு பேனரை எடுத்து வந்து காட்டினார்.

    பின்னர் வெளிநடப்பு செய்தார். பின்னர் 15 நிமிடம் கழித்து மீண்டும் சபைக்கு திரும்பினார். கவர்னர் உரை முடிந்ததும் அவரை சபாநாயகர் ஏம்பலம் செல்வம் வழியனுப்பி வைத்துவிட்டு மீண்டும் சபைக்கு வந்தார்.

    அப்போது நேரு எம்.எல்.ஏ. எழுந்து, நான் பதவியில் இருக்கிறேனோ? இல்லையா? நான் சபையில் இருக்க வேண்டுமா? வெளியேற வேண்டுமா? மாநில உரிமைக்காக என் கருத்தை தெரிவித்தேன் என கூறினார். அப்போது சபாநாயகர் ஏம்பலம் செல்வம், கடந்த சட்டசபை கூட்டத்தின்போதே, சபைக்குள் பேனர், பதாகை போன்றவற்றை எடுத்து வரக்கூடாது என கூறினோம். அனைத்து எம்.எல்.ஏ.க்களுக்கும் இது பொருந்தும்.

    சட்டசபைக்கு ஒரு மாண்பு உள்ளது. அதை மீறினால் கண்டிப்பாக நடவடிக்கை எடுப்போம். உங்களிடம் விளக்கம் கேட்கப்படும் என்றார் அப்போது நேரு எம்.எல்.ஏ. குறுக்கிட்டு, ஜனநாயகப்படி பேனர் காட்டுவது அனைத்து சட்டமன்றத்திலும் உள்ளது எனறார்.

    அதற்கு சபாநாயகர் ஏம்பலம் செல்வம், தமிழக சட்டசபையில் ஒரு பேப்பரை கிழித்ததற்கு பதவிநீக்கமே செய்துள்ளனர். உங்களுக்கென தனியாக சட்டம் கிடையாது, விளக்கம் திருப்தியளிக்காவிட்டால் கண்டிப்பாக நடவடிக்கை எடுப்போம் என தெரிவித்தார்.

    ×