என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    கவர்னர் மாளிகை நோக்கி விவசாயிகள் ஊர்வலம்
    X

    விவசாய முன்னணி கூட்டம் நடைபெற்ற காட்சி.

    கவர்னர் மாளிகை நோக்கி விவசாயிகள் ஊர்வலம்

    • இந்திய கம்யூனிஸ்டு தலைமை அலுவலகத்தில் ஐக்கிய விவசாயிகள் முன்னணி கூட்டம் நடந்தது.
    • கூட்டத்தில், டெல்லி போராட்டத்தில் உயிரிழந்த விவசாயிகளுக்கு நிவாரண உதவி வழங்கி, நினைவுச் சின்னம் அமைக்க வேண்டும்.

    புதுச்சேரி:

    இந்திய கம்யூனிஸ்டு தலைமை அலுவலகத்தில் ஐக்கிய விவசாயிகள் முன்னணி கூட்டம் நடந்தது.

    புதுவை விவசாயிகள் சங்க மாநில தலைவர் கீதநாதன் தலைமை தாங்கினார். காங்கிரஸ் விவசாய அணி தலைவர் செல்லகணபதி, தி.மு.க. விவசாய அணி செயலாளர் செந்தில்குமார், அகில இந்திய விவசாயிகள் சங்க செயலாளர் சங்கர், பாகூர். சரவணன், முருகையன், அகில இந்திய விவசாயிகள் மகா சபா சார்பில் தலைவர்.புருஷோத்தமன், மக்கள் அதிகாரம் சார்பில் சாந்தகுமார், புதுவை விவசாயிகள் சங்க பொதுச்செயலாளர் டி. பி. ரவி சிறப்பு தலைவர் மாசிலாமணி, துணைத் தலைவர்கள் ராஜா, ராமமூர்த்தி, பொருளாளர் கலியமூர்த்தி, செயலாளர்கள் பெருமாள், டி.பி .பிரகாஷ், .மாநிலக் குழு உறுப்பினர் பெருமாள் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில், டெல்லி போராட்டத்தில் உயிரிழந்த விவசாயிகளுக்கு நிவாரண உதவி வழங்கி, நினைவுச் சின்னம் அமைக்க வேண்டும். போராடிய விவசாயிகள் மீதான வழக்குகளை திரும்ப பெற வேண்டும்.விவசாய விளை பொருளுக்கு குறைந்தபட்ச ஆதார விலை சட்டம் இயற்ற வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி புதுவையிலும் கவர்னர் மாளிகை நோக்கி பழைய பஸ் நிலையம் அருகில் இருந்து 26-ந் தேதி ஊர்வலம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.

    Next Story
    ×