search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    முதியவர் கொலை
    X

    கோப்பு படம்.

    முதியவர் கொலை

    புதுவை தருமாபுரி வழுதாவூர் சாலை பகுதியை சேர்ந்தவர் மாறன் (57). இவருக்கு சாந்தி என்ற மனைவியும், 3 மகள்கள் உள்ளனர்.

    புதுச்சேரி:

    புதுவை தருமாபுரி வழுதாவூர் சாலை பகுதியை சேர்ந்தவர் மாறன் (57). இவருக்கு சாந்தி என்ற மனைவியும், 3 மகள்கள் உள்ளனர். இவருக்கும், இவரது சகோதரிக்கும் இடையே சொத்து பிரச்சினை இருந்து வந்தது. இந்த பிரச்சினை தொடர்பாக மாறன் மீது அவரது சகோதரி வழக்கு தொடர்ந்துள்ளார்.

    இது தொடர்பாக இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்படுவது வழக்கம். இந்நிலையில், மாறன் தனது சகோதரியிடம் சமாதானமாக செல்ல முடிவு செய்தார். இதற்காக அவர் தனது சகோதரி வீட்டிற்கு சென்றார். அப்போது மாறனை அவரது சகோதரி வீட்டிற்குள் அனுமதிக்காமல் விரட்டியதாக கூறப்படுகிறது.

    மேலும் தகாத வார்த்தைகளால் திட்டியதாக தெரிகிறது.இதனால் மாறன் மன வேதனை அடைந்தார். இதுகுறித்து தனது மனைவி மற்றும் மகள்களிடம் கூறி மனம் வருத்தப்பட்டுள்ளார். இதனையடுத்து மனஉளைச்சல் அதிகமாக இருந்ததால் மது அருந்திவிட்டு வருவதாக மாறன் குடும்பத்தினரிடம் கூறிவிட்டு சென்றார்.

    அப்போது மாறன் மதுபானக்கடைக்கு 2 பேருடன் சென்றதாக கூறப்படுகிறது. அவர்களுடன் மது அருந்திக் கொண்டிருந்தபோது, திடிரென அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதில் மாறனுடன் மது அருந்திக் கொண்டிருந்தவர்கள் மாறனை தகாத வார்த்தைகளால் திட்டி, கீழே தள்ளினர். கீழே விழுந்த மாறனுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு, ரத்தம் கொட்டியது. இதனை பார்த்ததும் அவருடன் மது குடித்த 2 பேரும் தலைமறைவாகி விட்டனர்.

    இதுகுறித்து மதுக்கடை ஊழியர்கள் ரெட்டியார்பாளையம் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். இன்ஸ்பெக்டர் ஜெய்சங்கர், மற்றும் போலீசார் விரைந்து சென்று பார்த்தபோது, ரத்த வெள்ளத்தில் மாறன் மயங்கி கிடந்தார். உடனே அவரை ஆம்புலன்ஸ் மூலம் கதிர்காமம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

    அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே மாறன் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து அவரது மகள் மதனி கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மதுக்கடையில் மாறனுடன் அமர்ந்து மது அருந்திய 2 பேர் அவரது நண்பர்களா? அல்லது சொத்து தகராறில் சமாதானம் பேச வந்தவர்களா என விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதனிடையே இந்த சம்பவம் தொடர்பாக 2 பேரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது.

    Next Story
    ×