என் மலர்
நீங்கள் தேடியது "Student Entrepreneurship"
புதுச்சேரி:
புதுவை கலிதீர்த்தாள் குப்பதில் உள்ள மணக்குள விநாயகர் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி கல்லூரி (எம்.ஐ.டி. கல்லூரி), பாண்டிச்சேரி என்ஜினீயரிங் கல்லூரி அடல் தொழில் அபிவிருத்தி, ஊக்குவிப்பு மற்றும் ஆதரவு மைய (இன்குபேஷன் சென்டர்) அறக்கட்டளையுடன் இணைந்து கல்லூரி மாணவர்களுக்கான "தொழில் அதிபர் ஆக விருப்பப்படுங்கள்" எனும் தலைப்பில் தொழில் முனைவோர் ஊக்குவிப்பு நிகழ்ச்சி நடந்தது.
நிகழ்ச்சியில் தலைமை விருந்தினராக பாண்டிச்சேரி என்ஜினீயரிங் கல்லூரி அடல் தொழில் அபிவிருத்தி மைய தலைமை நிர்வாக அதிகாரி விஷ்ணுவர்தன், கலந்து கொண்டார்.
நிகழ்ச்சியில் பாண்டிச்சேரி என்ஜினீயரிங் கல்லூரி அடல் தொழில் அபிவிருத்தி மையத்தின் ஆதரவுடன் செயல்படும் ஸ்டார்ட்டப் நிறுவனங்கள் எக்ஸார் ரோபோயிக்ஸ் நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி அருணன்,, கார்க்கி மொபிலிட்டி சர்வீசஸ் நிறுவனர் அப்துல்லா மற்றும் முதலீட்டாளர் பத்ரி நாராயணன் ஆகியோர் கலந்துரையாடினர்.
நிகழ்ச்சிக்கு கல்லூரி தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் தனசேகரன், துணை தலைவர் சுகுமாறன், மற்றும் செயலாளர் டாக்டர். நாராயணசாமி கேசவன் ஆகியோர் தலைமை தாங்கினர்.
நிகழ்ச்சியில் முன்னதாக எம்.ஐ.டி. கல்லூரி முதல்வர் மலர்க்கண், வரவேற்புரை ஆற்றினார். கல்லூரி தொழில் முனைவோர் மேம்பாட்டு துறை ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் வைத்தீஸ்வரன், கல்லூரி தொழில் முனைவோர் மேம்பாட்டு துறையின் செயல்பாடுகள் பற்றி விளக்கவுரை வாசித்தார். கல்லூரி டெக்னாலஜி பிசினஸ் இன்குபேட்டர் ஒருங்கிணைப்பாளர் மெய்யப்பன், அந்த துறையின் செயல்பாடுகள் பற்றி விளக்கினார்.
முடிவில் இயற்பியல் துறை பேராசிரியர் ஆனந்த் நன்றியுரை ஆற்றினார்.
இந்த நிகழ்ச்சியில் அனைத்து துறை தலைவர்கள் மற்றும் பேராசிரியர்கள் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சி ஏற்பாடுகளை அடல் தொழில் அபிவிருத்தி மைய இன்குபேஷன் மேலாளர் காமேஸ்வரன் மற்றும் கல்லூரி தொழில் முனைவோர் மேம்பாட்டுத் துறை பேராசிரியர்கள் செய்திருந்தனர்.






