என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    பா.ஜனதா நிர்வாகிகளுக்கு தேசிய பொதுச்செயலாளர்  அறிவுறுத்தல்
    X

    பா.ஜனதா நிர்வாகிகள் பொதுக்கூட்டத்தில் தேசிய பொது செயலாளர் அருண்சிங் பேசிய காட்சி.

    பா.ஜனதா நிர்வாகிகளுக்கு தேசிய பொதுச்செயலாளர் அறிவுறுத்தல்

    • பா.ஜனதா புதுவை நகரமாவட்ட ஆலோசனை கூட்டம் அண்ணாசாலையில் உள்ள தனியார் ஓட்டலில் நடை பெற்றது. கூட்டத்திற்கு நகர மாவட்ட தலைவர் அசோக் பாபு எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார்.
    • மேலும் புதுவை மாநிலத்தின் தற்போதைய அரசியல் நிலை குறித்து கட்சி நிர்வாகி களிடம் கேட்டறிந்தார். கட்சியை பலப்படுத்த தேவை யான அறிவுரை களை வழங்கினார்.

    புதுச்சேரி:

    பா.ஜனதா புதுவை நகரமாவட்ட ஆலோசனை கூட்டம் அண்ணாசாலையில் உள்ள தனியார் ஓட்டலில் நடை பெற்றது.

    கூட்டத்திற்கு நகர மாவட்ட தலைவர் அசோக் பாபு எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக பா.ஜனதா தேசிய பொதுச்செயலாளர் அருண் சிங் கலந்துகொண்டு பேசினார். அவர் பேசியதாவது:-

    மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து கிளைகளையும் பலப்படுத்த வேண்டும். பிரதமர் மோடி கொண்டு வந்துள்ள அனை த்து திட்டங்களையும் மக்களுக்கு தெரிவிக்கவேண்டும். புதுவை மாநிலத்தின் செயல்பாடுகளை பிரதமர் மோடி கண்காணித்து வருகிறார். இவ்வாறு அவர் பேசினார்.

    மேலும் புதுவை மாநிலத்தின் தற்போதைய அரசியல் நிலை குறித்து கட்சி நிர்வாகி களிடம் கேட்டறிந்தார். கட்சியை பலப்படுத்த தேவை யான அறிவுரை களை வழங்கினார்.

    கூட்டத்தில் பா.ஜனதா மாநில தலைவர் சாமிநாதன், அமைச்சர்கள் நமச்சிவாயம், சாய்.ஜெ.சரவணன்குமார், செல்வகணபதி எம்.பி., எம்.எல். ஏ.க்கள் ரிச்சர்ட் ஜான்குமார், வி.பி.ராமலிங்கம், வெங்கடேசன், கட்சியின் பொதுச்செயலாளர் மோகன் குமார், நகரமாவட்ட பொறுப்பாளர் ரத்னவே ல் உள்பட பலர் கலந்து கொண்டனர். மாவட்ட பொது செயலாளர் ஆனந்த கண்ணன் வரவேற்புரை நிகழ்த்தினார். நிகழ்ச்சி க்கான ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகிகள் விஜயரங்கம், விஜய், விமலா, ஜெயக்குமார், ஆறுமுகம் ஆகியோர் செய்து இருந்தனர்.

    Next Story
    ×