என் மலர்
நீங்கள் தேடியது "Democratic Front demand"
- சிறப்பு கூறு நிதியில் பாட்கோ நிறுவனத்துக்கு ரூ.25 கோடி ஒதுக்க வேண்டும் என்று தலித் இயக்கங்களின் ஜனநாயக முன்னணி முதல்-அமைச்சர் ரங்கசாமியிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
- இதனால் ஏழை ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியின மக்கள் எவ்வித கடனும், மாநில உதவியும் பெறமுடியவில்லை.
புதுச்சேரி:
சிறப்பு கூறு நிதியில் பாட்கோ நிறுவனத்துக்கு ரூ.25 கோடி ஒதுக்க வேண்டும் என்று தலித் இயக்கங்களின் ஜனநாயக முன்னணி முதல்-அமைச்சர் ரங்கசாமியிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
புதுவை தலித் இயக்கங்களின் ஜனநாயக முன்னணி சார்பில் அதன் நிர்வாகிகள் முதல்-அமைச்சர் ரங்கசாமியை சந்தித்தது ஒரு கோரிக்கை மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-
புதுவை மாநிலத்தில் தங்களது தலைமையிலான அரசு ஆதி திராவிடர்கள் மற்றும் பழங்குடியின மக்களுக்கு பல்வேறு வளர்ச்சி திட்டங்களை செயல்படுத்தி நலத்திட்டங்களை வழங்கி வருவதற்கு பாராட்டு தெரிவித்துக்கொள்கிறோம்.
அதேவேளையில் புதுவை அரசு ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் மேம்பாட்டிற்காக மத்திய அரசின் வழிகாட்டுதலின் படி சிறுப்புகூறு நிதியை அரசு பட்ஜெட்டில் ஒதுக்கி வருகிறது.
நடப்பாண்டு ரூ.396 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு 20 துறைகளுக்கு பிரித்து அளிக்கப்படுகிறது. ஆனால் கடந்த 5 ஆண்டுகளாக ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியின மேம்பாட்டு கழகத்துக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை.
இதனால் ஏழை ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியின மக்கள் எவ்வித கடனும், மாநில உதவியும் பெறமுடியவில்லை. மேலும் சிறப்பு கூறு நிதியை பல்வேறு துறைகள் கடந்த அக்டோபர் மாதம் வரை 30 சதவீதம் மட்டுமே செலவு செய்தது.
எனவே துறைகளில் செலவிடப்படாமல் உள்ள சிறப்பு கூறு நிதியில் ரூ.25 கோடி நிதியை பாட்கோ நிறுவனத்தின் வளர்ச்சி திட்டங்களுக்கு ஒதுக்கி தரவேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறியிருந்தனர்.
இந்த சந்திப்பின் போது நிர்வாகிகள் பாலசுந்தரம், சிவகுமார், வீரமுத்து, தவமணி, சுப்பிரமணியன், பாஸ்கர், சேகர், தண்டபாணி, மணிபாலன், அன்புசெல்வன், சிவசங்கரன் மற்றும் பலர் உடன் இருந்தனர்.






