என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "price of milk"

    • புதுவை மாநில அனைத்து கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்க நிர்வாகிகள் கலெக்டர் வல்லவனை சந்தித்து மனு அளித்தனர்.
    • புதுவையில் பால் கொள்முதல் விலை ரூ.32 ஆக உள்ளது.

    புதுச்சேரி:

    புதுவை மாநில அனைத்து கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்க நிர்வாகிகள் கலெக்டர் வல்லவனை சந்தித்து மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    புதுவையில் பால் கொள்முதல் விலை ரூ.32 ஆக உள்ளது. இந்த விலையை ரூ.10 உயர்த்தி வழங்க வேண்டும். அரசு வழங்கும் தீவன மானியத்தை உறுப்பினர்களின் வங்கி கணக்கில் ரொக்கமாக செலுத்த வேண்டும். பிரதம பால் உற்பத்தியாளர் சங்கங்களின் பால் பண பட்டுவாடாவை 15 நாட்களுக்கு ஒருமுறை தவறாமல் வழங்க வேண்டும்.

    இந்த கோரிக்கைகளை வருகிற 27-ந் தேதிக்குள் நிறைவேற்றாவிட்டால் 28-ந் தேதி பாகூர், 29-ந் தேதி கரிக்கலாம்பாக்கம், 30-ந் தேதி வில்லியனூர் சப்-கலெக்டர் அலுவலகம் ஆகியவற்றில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும். இவ்வாறு அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

    ×