என் மலர்
புதுச்சேரி
- அரசின் கலை விழா 2 ஆண்டுகள் இடைவெளிக்குப் பிறகு நடைபெறும் நிலையில் பல மாநில கலைஞர்கள் ஏனாமிற்கு வந்துள்ளனர்.
- கடை அடைப்பு போராட்டம் கலைஞர்களையும், மக்களின் இயல்பு வாழ்க்கையையும் பாதித்துள்ளது.
புதுச்சேரி:
புதுவை ஏனாம் பிராந்தியம் ஆந்திர மாநிலம் கோதாவரி ஆற்று பகுதியில் உள்ளது. கடந்த சட்டமன்ற தேர்தலில் தட்டாஞ்சாவடி மற்றும் ஏனாம் தொகுதிகளில் முதல்-அமைச்சர் ரங்கசாமி போட்டியிட்டார்.
ஏனாமில் அவர் தோல்வியுற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட சுயேட்சை வேட்பாளர் கொல்ல பள்ளி ஸ்ரீநிவாஸ் அசோக் வெற்றி பெற்றார். இருப்பினும் அவர் பா.ஜனதா-என்.ஆர்.காங்கிரஸ் கூட்டணி அரசுக்கு ஆதரவு தெரிவித்து வருகிறார்.
இந்த நிலையில் அவர் கடந்த மாதம் 7-ந் தேதி சட்டமன்றம் வளாகத்தில் திடீர் தர்ணாவில் ஈடுபட்டார். அவருடன் முதல்-அமைச்சர் ரங்கசாமி பேச்சுவார்த்தை நடத்தி 15 கோரிக்கைகளை விரைந்து நிறைவேற்றுவதாக உறுதி அளித்தார்.
இந்த கோரிக்கைகள் இன்னும் நிறைவேற்றப்படவில்லை. இதற்கிடையே ஏனாம் எம்.எல்.ஏ. கொல்லப்பள்ளி ஸ்ரீநிவாஸ் அசோக் முதல்-அமைச்சர் ரங்கசாமி குறித்து அவதூறாக பேசியதாக சமூகவலைதளத்தில் பரவியது. இதனால் கொதித்தெழுந்த புதுவை என்.ஆர். காங்கிரசார் ஏனாம் எம்.எல்.ஏ.வை கண்டித்து பல்வேறு இடங்களில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
மேலும் முதல்-அமைச்சர் ரங்கசாமியை அவதூறாக பேசிய ஏனாம் எம்.எல்.ஏ. மீது நடவடிக்கை எடுக்க கோரி அரசு கொறடா ஏ.கே.டி. ஆறுமுகம் தலைமையில் என்.ஆர். காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் சபாநாயகர் ஏம்பலம் செல்வத்திடமும், போலீஸ் டி.ஜி.பி.யிடமும் மனு அளித்தனர்.
இன்றும் என்.ஆர். காங்கிரசார் ஏனாம் எம்.எல்.ஏ.வை கண்டித்து புதுவையில் பல்வேறு இடங்களில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதற்கிடையே கோரிக்கைகளை வலியுறுத்தியும் முதல்-அமைச்சரை கண்டித்தும் நேற்று ஸ்ரீநிவாஸ் அசோக் எம்.எல்.ஏ. மண்டல அதிகாரி அலுவலகம் முன்பு உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கினார்.
மேலும் ஏனாமில் அமைச்சர் லட்சுமி நாராயணன் தொடங்கி வைத்த அரசின் 19-வது ஆண்டு கலை விழாவை எம்.எல்.ஏ. கொல்லப்பள்ளி ஸ்ரீநிவாஸ் அசோக் புறக்கணித்தார்.
இன்று 2-வது நாளாக உண்ணாவிரதம் தொடர்ந்தது. இன்று ஏனாமில் கடையடைப்பு போராட்டம் நடத்தப்படும் என ஸ்ரீநிவாஸ் அசோக் எம்.எல்.ஏ. அறிவித்திருந்தார். இதன்படி இன்று ஏனாமில் கடையடைப்பு போராட்டம் நடந்தது. ஏனாமில் காலை முதல் அனைத்து கடைகளும் மூடப்பட்டுள்ளன.
- முதல்-அமைச்சர் ரங்கசாமி குறித்து அவதூறாக பேசிய ஏனாம் ஏனாம் தொகுதி எம்.எல்.ஏ. கொல்லப் பள்ளி ஸ்ரீநிவாஸ் அசோக்கை கண்டித்து முன்னாள் எம்.எல்.ஏ. சுகுமார் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
- இந்தப் போராட்டத்தில் என்.ஆர்.காங்கிரஸ் பிரமுகர்கள் மங்கலம் சங்கர் என்ற ராதாகிருஷ்னன், கோட்டைமேடு கதிர், கணுவாபேட்டை ஆனந்த சங்கர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
புதுச்சேரி:
முதல்-அமைச்சர் ரங்கசாமி குறித்து அவதூறாக பேசிய ஏனாம் ஏனாம் தொகுதி எம்.எல்.ஏ. கொல்லப் பள்ளி ஸ்ரீநிவாஸ் அசோக்கை கண்டித்து முன்னாள் எம்.எல்.ஏ. சுகுமார் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
வில்லியனூர் அடுத்த மங்கலம் தொகுதிக்குட்பட்ட கோட்டைமேடு பகுதியில் நடந்த கண்டன ஆர்ப்பா ட்டத்தில் கொல்லப்பள்ளி ஸ்ரீநிவாஸ் அசோக் எம்.எல்.ஏ. உருவ பொம்மைக்கு செருப்பு மாலை அணிவித்து உருவபொம்மையை எரித்து கோஷங்கள் எழுப்பினர். இந்தப் போராட்டத்தில்
என்.ஆர்.காங்கிரஸ் பிரமுகர்கள் மங்கலம் சங்கர் என்ற ராதாகிருஷ்னன், கோட்டைமேடு கதிர், கணுவாபேட்டை ஆனந்த சங்கர், பொன் சுகுமார், தேவா, ஆச்சார்யாபுரம் மணிகண்டன், உறுவையாறு அழகர், திருகாஞ்சிபேட் அங்கப்பன், கலியமூர்த்தி, முருகேசன், ஆனந்தபுரம் ராஜாராம், அரியூர் பிரபா, திருமலைவாசன், பாரதி, ராஜேஷ், மகளிர் அணி பிரபாவதி, ஹேமாவதி மற்றும் தொகுதி மக்கள் கலந்து கொண்டனர்.
- புதுவை மாநில அ.தி.மு.க. செயலாளர் ஓம்சக்திசேகர் வெளியிட்டுள்ள அறிக்கை யில் கூறியிருப்பதாவது:-
- ஒரு கட்சியின் தலைவராகவும், மாநிலத்தின் மூத்த அரசியல்வாதியாகவும் உள்ள முதல்-அமைச்சர் குறித்து அவதூறாக பேசியிருப்பது மிகவும் கண்டிக்கத்தக்க ஒன்று.
புதுச்சேரி:
புதுவை மாநில அ.தி.மு.க. செயலாளர் ஓம்சக்திசேகர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
மக்கள் பிரதிநிதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஒருவர், பெற்ற பதவியை கொண்டு பொதுமக்களுக்கும் தனது தொகுதி மக்களுக்கும் தேவையான நலத்திட்டங்களை அரசிடமும், அரசு அதிகாரி களிடமும் போராடி, வாதாடி நியாயமான முறையிலே சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு பணியாற்ற வேண்டும். இதை விடுத்து மிரட்டல் விடுப்பது, கொச்சை வார்த்தைகளை பயன்படுத்துவது, கலவரங்களை ஏற்படுத்து வது போன்று பேசுவது போன்ற செயல்பாடுகள் மக்கள் பிரதிநிதிகளின் மாண்புக்கு நல்லதல்ல.
முதன்முறையாக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏ. தேவையில்லாத கருத்துக்களை கூறுவதும் ஒரு மாநிலத்தில் 4 முறை முதல் -அமைச்சராகவும், ஒரு கட்சியின் தலைவராகவும், மாநிலத்தின் மூத்த அரசியல்வாதியாகவும் உள்ள முதல்-அமைச்சர் குறித்து அவதூறாக பேசியிருப்பது மிகவும் கண்டிக்கத்தக்க ஒன்று.
எனவே ஏனாம் சுயேட்சை எம்.எல்ஏ. தனது கருத்துக்களை வாபஸ் பெற வேண்டும். முதல்-
அ மைச்சரிடம் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லாவிட்டால் அவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- சுவாமி விவேகானந்தர் பிறந்தநாள் மற்றும் புதுவையில் ஜி20 மாநாடு நடைபெறுவதை முன்னிட்டும் புதுவை சுவாமி விவேகானந்தர் சேவை மையம் சார்பில் முதலியார்பேட்டை அர்ஜுனன் சுப்பராய நாயக்கர் அரசு உயர்நிலைப்பள்ளி மற்றும் உழந்தைக் கீரப்பாளையம் அரசு நடுநிலைப்பள்ளி மாணவ- மாணவிகளுக்கு மினி மராத்தான் போட்டி நடைபெற்றது.
- மினி மராத்தான் கடலூர் ரோடு, ஏ.எப்.டிரோடு, புவன்கரே வீதி கடலூர் ரோடு வழியாக பள்ளியில் முடிந்தது.
புதுச்சேரி:
சுவாமி விவேகானந்தர் பிறந்தநாள் மற்றும் புதுவையில் ஜி20 மாநாடு நடைபெறுவதை முன்னிட்டும் புதுவை சுவாமி விவேகானந்தர் சேவை மையம் சார்பில் முதலியார்பேட்டை அர்ஜுனன் சுப்பராய நாயக்கர் அரசு உயர்நிலைப்பள்ளி மற்றும் உழந்தைக் கீரப்பாளையம் அரசு நடுநிலைப்பள்ளி மாணவ- மாணவிகளுக்கு மினி மராத்தான் போட்டி நடைபெற்றது.
போட்டியை முதலியார்பேட்டை- கடலூர் சாலையில் அமைந்துள்ள அர்ஜுன சுப்பராய நாயக்கர் அரசு உயர்நிலை பள்ளியில் சுவாமி விவேகானந்தர் சேவை மையத்தின் தலைவர் டாக்டர் க.வெற்றிச்செல்வம் தொடங்கி வைத்தார்.
பள்ளி தலைமையாசிரியர் பாரி கந்தசாமி முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினர்களாக ஜோதி சிலம்பம் சத்திரிய குருகுலம் மற்றும் சத்திரிய சேனா சேவக நிறுவனர் டாக்டர் ஜோதி செந்தில் கண்ணன், வல்லுநர் டாக்டர் கருணாகரன், விவேகானந்தர் சேவை மைய செயலாளர் செல்வம், பொருளாளர் கார்த்திகேயன், பயிற்சியாளர் ஆனந்தராஜ், டாக்டர் புகழேந்தி, முனியப்பன், கவுதம், கலந்து கொண்டனர். மினி மராத்தான் கடலூர் ரோடு, ஏ.எப்.டிரோடு, புவன்கரே வீதி கடலூர் ரோடு வழியாக பள்ளியில் முடிந்தது.
மினி மராத்தான் போட்டியில் வெற்றி பெற்ற ஆண்கள், பெண்கள் என இரு பிரிவினருக்ககும் ரொக்கப் பரிசுகள், கேடயம் மற்றும் கலந்து கொண்ட அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்படுகிறது. நிகழ்ச்சியை சுவாமி விவேகானந்தர் சேவை மையத்தில் நிர்வாகிகளும் தேசிய நல்லாசிரியர் விருது பெற்ற ஆசிரியர் அரவிந்தன் , ஆசிரியர் பாலா உள்ளிட்ட ஊழியர்கள் ஒருங்கிணைத்தனர்.
- புதுவை தொழில் வணிகத்துறை, மாவட்ட தொழில் மையம் இணைந்து கடற்கரை சாலை காந்தி திடலில் நடத்திய கைவினை பொருள் கண்காட்சியை 14 நாட்கள் நடந்தது.
- கண்காட்சி நிறைவு விழாவில் சபாநாயகர் ஏம்பலம் செல்வம், அமைச்சர் நமச்சிவாயம் ஆகியோர் கைவினை கலைஞர்களுக்கு பரிசுகளை வழங்கினர்.
புதுச்சேரி:
புதுவை தொழில் வணிகத்துறை, மாவட்ட தொழில் மையம் இணைந்து கடற்கரை சாலை காந்தி திடலில் நடத்திய கைவினை பொருள் கண்காட்சியை 14 நாட்கள் நடந்தது.
இதில் கலைஞர்களின் பொம்மை கள், தோல் பொருட்கள், மரப்பொ ருட்கள் என ரூ.84 லட்சம் மதிப்பிலான பொருட்கள் விற்பனையாகியுள்ளன.
கண்காட்சி நிறைவு விழாவில் சபாநாயகர் ஏம்பலம் செல்வம், அமைச்சர் நமச்சிவாயம் ஆகியோர் கைவினை கலைஞர்களுக்கு பரிசுகளை வழங்கினர்.
தொழில்துறை இயக்கு னர் யாசம்ரெட்டி வரவேற்றார். துணை இயக்குனர் மோகன்குமார் நன்றிகூறினார். நிகழ்ச்சி ஏற்பாடுகளை மாவட்ட தொழில் மைய துணை இயக்க மேலாளர் அரங்கநாதன், ஜெயராமன், உதவி இயக்குனர்கள் முத்துகிருஷ்ணன், தனகோவிந்த் ஆகியோர் செய்திருந்தனர்.
- உப்பளம் ராஜீவ்கா ந்தி உள்விளையாட்டு அரங்கத் தில் தேசிய அளவிலான கராத்தே , கிக் பாக்சிங், தே க்வாண்டோ போட்டிகள் 3 நாட்கள் நடக்கிறது. இதன் தொடக்கவிழா நடந்தது.
- இந்த போட்டிகளில் நூற்றுக்கணக்கான வீரர்கள், வீராங்கனைகள் பங்கேற்கிறார்கள்.
புதுச்சேரி:
உப்பளம் ராஜீவ்காந்தி உள்விளையாட்டு அரங்கத் தில் தேசிய அளவிலான கராத்தே , கிக் பாக்சிங், தேக்வாண்டோ போட்டிகள் 3 நாட்கள் நடக்கிறது. இதன் தொடக்கவிழா நடந்தது.
புதுவை மாநில அனைத் து விளையாட்டு வீரர்களின் நலச்சங்க தலைவர் இளங்கோவன் தலைமை தாங்கினார். அமைச்சர் நமச்சிவாயம் கலந்துகொண்டு போட்டிகளை தொடங்கி வைத் தார். நிகழ்ச்சியில் ரிச்சர்ட் எம்.எல்.ஏ., விளையாட்டு சங்க கவுரவத்தலைவர் திருவேங்கடம், பா.ஜனதா பிரமுகர் பாஸ்கரன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
இந்த போட்டிகளில் நூற்றுக்கணக்கான வீரர்கள் , வீராங்கனை கள் பங்கே ற்கிறார்கள். போட்டிகள் சப்-ஜூனியர், ஜூனியர், சீனியர் மற்றும் பொதுப்பிரிவுகளில் நடக்கிறது. போட்டிகளில் வெ ற்றி பெ றுபவர்களுக்கு பரிசளிப்பு விழா 4 மணிக்கு நடக்கிறது. போலீஸ் ஐ.ஜி. சந்திரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பரிசுகளை வழங்குகிறார்.
- புதுவை பா.ஜனதா தலைமை அலுவலகத்தில் மாநில நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. மாநில தலைவர் சாமிநாதன் தலைமை தாங்கினார்.
- இக்கூட்டத்தில், பா.ஜனதா மாநில தலைவர் பேசும்போது வருகிற 16 மற்றும் 17-ம் தேதிகளில் டெல்லியில் நடைபெற உள்ள தேசிய அளவிலான நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்து கொள்ள உள்ள தாகவும், மாநிலத்தில் உள்ள அனைத்து கிளைக ளிலும் கூட்டம் நடத்த வேண்டும்.
புதுச்சேரி:
புதுவை பா.ஜனதா தலைமை அலுவலகத்தில் மாநில நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. மாநில தலைவர் சாமிநாதன் தலைமை தாங்கினார். செல்வகணபதி
எம்.பி., பொதுச் செயலாளர் மோகன் குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் அசோக்பாபு எம்.எல்.ஏ. பா.ஜனதா நிர்வாகிகள் தங்க. விக்ரமன், செல்வம், முருகன், அருள்முருகன் மற்றும் மாநில செயலாளர்கள், மாவட்ட தலைவர்கள், அணி தலைவர்கள் உள்பட 50-க்கும் மேற்பட்டோர் கலந்து ெகாண்டனர்.
இக்கூட்டத்தில், பா.ஜனதா மாநில தலைவர் பேசும்போது வருகிற 16 மற்றும் 17-ம் தேதிகளில் டெல்லியில் நடைபெற உள்ள தேசிய அளவிலான நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்து கொள்ள உள்ள தாகவும், மாநிலத்தில் உள்ள அனைத்து கிளைக ளிலும் கூட்டம் நடத்த வேண்டும் என்றும், மாத தோறும் நடைபெறும் பிரதமர் மோடியின் மனதின் குரல் நிகழ்ச்சியை மாநிலம் முழுவதும் உள்ள அனைவரும் பார்ப்பதற்கான முயற்சியை மேற்கொள்ள வேண்டும் என கேட்டுக் கொண்டார்.
- புதுவை மாநிலத்தில் பல்வேறு திட்டங்கள் இந்த என்.ஆர்.பா.ஜனதா கூட்டணி அரசு அறிவித்து செயல்படுத்த முடியாமல் திணறி வருகிறது.
- ஏனாம் எம்.எல்.ஏ. இத்தகைய செயலை மாநிலத்தில் எந்த கட்சியும், பொதுமக்களும் ஏற்க மாட்டார்கள்.
புதுச்சேரி:
புதுவை மாநில பா.ம.க. அமைப்பாளர் கணபதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியி ருப்பதாவது:-
புதுவை மாநிலத்தில் பல்வேறு திட்டங்கள் இந்த என்.ஆர்.பா.ஜனதா கூட்டணி அரசு அறிவித்து செயல்படுத்த முடியாமல் திணறி வருகிறது. இது அனைத்து பொது மக்களுக்கும் தெரியும். அதற்கான தீர்வை அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களும் இணைந்து முதல்-அமைச்சர் கைகோர்த்து மத்தியிலே தேவையான நிதிகளை பெற்று மக்களுக்கு பணி செய்ய வேண்டிய ஏனாம் எம்.எல்.ஏ. கொல்ல பள்ளி ஸ்ரீநிவாஸ் அசோக் ஒரு மாநிலத்தின் முதல்-அமைச்சர் என்று கூட பார்க்காமல் அநாகரிமாக மக்கள் மத்தியில் பேசி இருப்பது மிகவும் கண்டிக்க த்தக்கது.
ஏனாம் எம்.எல்.ஏ. இத்தகைய செயலை மாநிலத்தில் எந்த கட்சியும், பொதுமக்களும் ஏற்க மாட்டார்கள். அரசாங்க பணிகள் நடக்கவில்லை என்று சொன்னால் யூனியன் பிரதேசத்தில் அரசின் தலைமை பொறுப்பில் உள்ள கவர்னர், முதல்-அமைச்சர், அமைச்சர்களும், துறை சார்ந்த அதிகாரிகளும் தான் பொறுப்பாவார்கள்.
தனிப்பட்ட விரோதத்தை மனதில் வைத்துக் கொண்டு வயது வித்தியாசம் கூட பார்க்காமல் , அரசியல் முதிர்ச்சி இல்லாமல் பேசி இருக்கும் செயலை புதுவை பா.ம.க. வன்மையாக கண்டிக்கிறது. உடனடியாக ஏனாம் எம்.எல்.ஏ. முதல்-அமைச்சரை நேரில் சந்தித்து தான் பேசிய செயலுக்கு வருத்தம் தெரிவித்து.மற்ற அரசு சார்ந்த விஷயங்களை முதல்-அமை்ச்சரை அலுவலகத்தில் பேசி தீர்த்துக் கொள்ள வேண்டும்.
இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
- ரூ.12.50 லட்சம் மதிப்பீட்டில் 3 ஸ்டார் நகரில் புதியதாக மின்சார டிரான்ஸ்பார்மர் அமைக்கப்பட்டு அதன் இயக்க நிகழ்ச்சி நடந்தது.
- இந்த நிகழ்ச்சியில், மின்துறை உதவி பொறியாளர்கள் முருகேசன், பாலமுருகன் மற்றும் தி.மு.க. நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
புதுச்சேரி:
வில்லியனூர் தொகுதிக்கு ட்பட்ட சுல்தான்பேட்டை புது மேட்டுத்தெரு விரிவாக்கம், அப்துல்கலாம் நகர், 3 ஸ்டார் நகர், 5 ஸ்டார் நகர், ஜாக்கீர் உசேன் நகர், சஃபா நகர், ரஹ்மத் நகர் ஆகிய பகுதியில் நிலவி வந்த குறைந்த மின் சப்ளை மற்றும் அடிக்கடி ஏற்படும் மின் தடை பற்றாக்குறையை போக்கிட ரூ.12.50 லட்சம் மதிப்பீட்டில் 3 ஸ்டார் நகரில் புதியதாக மின்சார டிரான்ஸ்பார்மர் அமைக்கப்பட்டு அதன் இயக்க நிகழ்ச்சி நடந்தது.
இதில் சட்டமன்ற எதிர்கட்சி தலைவரும், தொகுதி எம்.எல்.ஏ.வுமான சிவா கலந்து கொண்டு புதிதாக அமைக்கப்பட்ட மின்சார டிரான்ஸ்பார்மரை மக்கள் பயன்பாட்டிற்கு இயக்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில், மின்துறை உதவி பொறியாளர்கள் முருகேசன், பாலமுருகன் மற்றும் தி.மு.க. நிர்வாகிகள், கூட்டணி கட்சித் தலைவர்கள், பள்ளிவாசல் நிர்வாகிகள், ஜமாத் முக்கிய ஸ்தர்கள், ஊர் பொதுமக்கள் வியாபார சங்க நிர்வாகிகள், வியாபாரிகள் கலந்து கொண்டனர்.
- உப்பளம் தொகுதிக்கு உட்பட்ட அவ்வை நகரில் உள்ள ஆதிதிராவிட நலத்துறை சமுதாய கூடத்தை அப் பகுதியில் உள்ள மக்கள் பயன் பெறும் வகையில் சமுதாய நலக்கூடத்தின் சாவியை அங்குள்ள பஞ்சாயத்தில் ஒப்படைக்கும் படி அனிபால் கென்னடி எம்.எல்.ஏ., நகராட்சி ஆணையர் சிவக்குமாரை நேரில் சந்தித்து வலியுறுத்தினார்.
- 5 குடும்பத்தை அங்கு தங்க வைக்க ஏற்பாடுகள் செய்வதற்காக நகராட்சி கழிப்பிடத்தில் உள்ள இடத்தை பிரித்து கொடுக்கும் படியும் கேட்டிருந்தார்.
புதுச்சேரி:
உப்பளம் தொகுதிக்கு உட்பட்ட அவ்வை நகரில் உள்ள ஆதிதிராவிட நலத்துறை சமுதாய கூடத்தை அப் பகுதியில் உள்ள மக்கள் பயன் பெறும் வகையில் சமுதாய நலக்கூடத்தின் சாவியை அங்குள்ள பஞ்சாயத்தில் ஒப்படைக்கும் படி அனிபால் கென்னடி எம்.எல்.ஏ., நகராட்சி ஆணையர் சிவக்குமாரை நேரில் சந்தித்து வலியுறுத்தினார்.
மேலும் அட்லே சாந்தியில் உள்ள 16 குடும்பங்களுக்கு பட்டா வழங்குவது சம்பந்தமாக சர்வே அதிகாரியிடம் கென்னடி எம்.எல்.ஏ., மனு அளித்திருந்தார். அதன் நிலை குறித்து நகராட்சி ஆணையரிடம் கேட்டார். அதற்கு தடையில்லா சான்றிதழ அளித்து விட்டோம் என ஆணையர் தெரிவித்தார்.
இதனை தொடர்ந்து நேதாஜி நகர் 3 அறப்பணி அவ்வை தோட்டத்தில் உள்ள பழைய கழிப்பிடத்தை அகற்றி கல்யாண மண்டபம் வர இருக்கும் இடத்தில் வசித்து வரும் 5 குடும்பத்தை அங்கு தங்க வைக்க ஏற்பாடுகள் செய்வதற்காக நகராட்சி கழிப்பிடத்தில் உள்ள இடத்தை பிரித்து கொடுக்கும் படியும் கேட்டிருந்தார்.
கென்னடி எம்.எல்.ஏ. கோரிக்கையை ஏற்று செய்து தருவதாக நகராட்சி ஆணையர் உறுதி அளித்தார். அப்போது தொகுதி செயலாளர் சக்திவேல், மாநில இளைஞர் அணி ராஜி, நேதாஜி நகர் 3 பஞ்சாயத்தார்கள் மற்றும் தி.மு.க. நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
- புதுவை முதல்- அமைச்சர் ரங்கசாமி பற்றி அவதூறாக பேசிய ஏனாம் எம்.எல்.ஏ. கொல்லப்பள்ளி ஸ்ரீநிவாஸ் அசோக்கை கண்டித்து வில்லியனூரில் என்.ஆர்.காங்கிரசார் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
- ஆர்ப்பாட்டத்துக்கு முன்னாள் எம்.எல்.ஏ. சுகுமாரன் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் கொல்லப்பள்ளி ஸ்ரீநிவாஸ் அசோக்கின் உருவபடம் தீவைத்து கொளுத்தப்பட்டது.
புதுச்சேரி:
புதுவை என்.ஆர்.காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் அரசு கொறடா ஏ.கே.டி. ஆறுமுகம், கே.எஸ்.பி. ரமேஷ், பாஸ்கர், லட்சுமி காந்தன் ஆகியோர் காவல்துறை தலைமை அலுவலகத்தில் ஐ.ஜி. சந்திரனை சந்தித்து புகார் மனு கொடுத்தனர்.
இதுதொடர்பாக அரசு கொறடா ஏ.கே.டி. ஆறுமுகம் நிருபர்களிடம் கூறியதாவது:-
முதல்-அமைச்சர் ரங்கசாமி குறித்து, ஏனாம் தொகுதி எம்.எல்.ஏ. கொல்லப்பள்ளி ஸ்ரீநிவாஸ் அசோக் பொது இடத்தில் தகாத வார்த்தைகளால் அவரது மாண்பை சீர்குலைக்கும் வகையில் பேசியுள்ளார். இதனால் புதுவையில் சட்டம்-ஒழுங்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அவர் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்க காவல்துறையில் புகார் மனு அளித்துள்ளோம். சபாநாயகரிடம் புகார் மனு கொடுக்கப்பட்டுள்ளது. தேவைப்பட்டால் சபாநாயகரிடம் உரிமை மீறல் புகார் அளிக்கப்படும்.
கொல்லப்பள்ளி ஸ்ரீநிவாஸ் அசோக் சட்டசபைக்கு வரும் போதும் நாங்கள் எதிர்ப்பை தெரிவிப்போம்.
இவ்வாறு அவர் கூறினார்.
புதுவை முதல்- அமைச்சர் ரங்கசாமி பற்றி அவதூறாக பேசிய ஏனாம் எம்.எல்.ஏ. கொல்லப்பள்ளி ஸ்ரீநிவாஸ் அசோக்கை கண்டித்து வில்லியனூரில் என்.ஆர்.காங்கிரசார் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்துக்கு முன்னாள் எம்.எல்.ஏ. சுகுமாரன் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் கொல்லப்பள்ளி ஸ்ரீநிவாஸ் அசோக்கின் உருவபடம் தீவைத்து கொளுத்தப்பட்டது.
மேலும் அவருக்கு எதிராக கண்டன கோஷம் எழுப்பப்பட்டது. ஆர்ப்பாட்டத்தில் என்.ஆர்.காங்கிரஸ் நிர்வாகிகள் மங்கலம் சங்கர் என்ற ராதாகிருஷ்னன், கதிர், சங்கர், பொன்.சுகுமார், தேவா, மணிகண்டன், உறுவையாறு அழகர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
- புதுவையில் 28-ம் ஆண்டு சர்வதேச யோகா திருவிழா காமராஜர் மணிமண்டபத்தில் தொடங்கி நடந்து வருகிறது.
- மங்களம் தொகுதிக்கு உட்பட்ட திருக்காஞ்சியில் உள்ள கங்கைவராக நிதீஸ்வரர் கோவிலில் சர்வதேச யோகா திருவிழா இன்று நடைபெற்றது.
புதுச்சேரி:
புதுவையில் 28-ம் ஆண்டு சர்வதேச யோகா திருவிழா காமராஜர் மணிமண்டபத்தில் தொடங்கி நடந்து வருகிறது.
மங்களம் தொகுதிக்கு உட்பட்ட திருக்காஞ்சியில் உள்ள கங்கைவராக நிதீஸ்வரர் கோவிலில் சர்வதேச யோகா திருவிழா இன்று நடைபெற்றது. தொகுதி எம்.எல்.ஏ.வும், வேளாண்துறை அமைச்சருமான தேனீ.ஜெயக்குமார் யோகா திருவிழாவை தொடங்கி வைத்தார். இதில் பள்ளி மாணவர்கள், ஊர் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டு யோகா பயிற்சி செய்தனர்.






